PHPWord

 

 

مَا لَا يَسَعُ المُسْلِمَ جَهْلُهُ

 

ஒவ்வொரு முஸ்லிம் அவசியம் அறிந்திருக்கவேண்டிய விடயங்கள்

 

اللَّجْنَةُ العِلْمِيَّةُ

بِرِئَاسَةِ الشُّؤُونِ الدِّينِيَّةِ بِالمَسْجِدِ الحَرَامِ وَالمَسْجِدِ النَّبَوِيِّ

 

மஸ்ஜிதுல் ஹராம் மற்றும் மஸ்ஜிதுன் நபவியின் மத விவகாரங்களுக்கான தலைமைத்துவத்தின் அறிவியல் குழு

 


بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

வ்வொரு முஸ்லிம் அவசியம் அறிந்திருக்கவேண்டிய விடயங்கள்

முன்னுரை

புகழனைத்தும் அகிலங்களின் இரட்சகனான அல்லாஹ்வுக்கே உரித்தாகட்டுமாக. ஸலாத்தும் ஸலாமும் உலகத்தாருக்கே அருளாக அனுப்பப்பட்டவரான நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும், அவர்களின் வழிமுறைகளைப் பின்பற்றியோர் மற்றும் அவர்களின் வழிகாட்டல்களைப் பின்பற்றியோர் மீதும் மறுமை நாள் வரை உண்டாவதாக. 

இந்நூலானது முஸ்லிம்கள் தமது அகீதா, வழிபாடுகள், மற்றும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பாக அறிந்திருக்க வேண்டிய முக்கியமான விடயங்களை உள்ளடக்கிய சுருக்கமான தொகுப்பாகும். இதனை ஹரமைன் புனித தளங்களை பார்வையிடும் ஆண்கள், பெண்கள் அனைவரும் அவர்களின் மார்க்க விடயங்களை தெளிவாக அறிந்துகொள்ள உதவும் நோக்கில் தொகுத்துள்ளோம். இதன் மூலம் அல்லாஹ் பயன் அளித்து, இதனை நல்லதாக்கி, அவருக்கே உகந்ததாக ஆக்குவானாக. நிச்சயமாக அவன் வேண்டப்படுவோரில் மிகச்சிறந்தவனாகவும் , ஆதரவு வைக்கப்படுவோரில் மிகத் தயாளனாகவும் உள்ளன்.

மஸ்ஜிதுல் ஹராம் மற்றும் மதீனாப் பள்ளிவாயிலின் மார்க்க விவகாரங்களின் தலைமையகத்தில் உள்ள கல்விக் குழு 

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஆரம்பிக்கின்றேன்)

 

 

 


பகுதி ஒன்று:

இஸ்லாமியஅடிப்படைக் கொள்கை தொடர்பானவை

முதலாவது ஆய்வு: இஸ்லாத்தின் அர்த்தமும், அதன் தூண்களும்:

இஸ்லாம் என்பது : ஏகத்துவப்படுத்துவதன் மூலம் அல்லாஹ்வுக்கு முழுமையாக சரணடைவதும், வழிபடுவதன் மூலம் அவனுக்கு கட்டுப்படுவதும், இணைவைத்தல் மற்றும் இணைவைப்பாளர்களை விட்டும் முழுமையாக விலகி இருப்பதுமாகும்.

அதன் தூண்கள் ஐந்து:

முதலாவது: உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சியம் கூறுதல்.

இரண்டாவது : தொழுகையை நிலைநாட்டுதல்

மூன்றாவது : ஸகாத் கொடுத்தல்.

நான்காவது : ரமழான் மாதத்தில் நோன்பு நோற்றல்.

ஐந்தாவது : சக்தி பெற்றவர்கள் அல்லாஹ்வின் புனித ஆலயத்தை தரிசித்து ஹஜ் செய்தல்.

ஓரிறைக் கொள்கையின் முக்கியத்துவம் :

அறிந்துகொள்! அல்லாஹ் படைப்புக்களைப் படைத்தது, அவனை மாத்திரம், இணைகற்பிக்காத நிலையில்  வணங்குவதற்கே,  அல்லாஹ் கூறுகிறான்:

﴿وَمَا خَلَقۡتُ ٱلۡجِنَّ وَٱلۡإِنسَ إِلَّا لِيَعۡبُدُونِ 56﴾

ஜின்களையும் மனிதர்களையும் - அவர்கள் என்னை வணங்குவதற்கே தவிர - நான் படைக்கவில்லை. (அத்தாரியாத் : 56). இந்த வணக்க வழிபாடுகளை அறிவது கற்பதின் மூலமேயன்றி முடியாது, அல்லாஹ் கூறுகிறான்:

﴿فَٱعۡلَمۡ أَنَّهُۥ لَآ إِلَٰهَ إِلَّا ٱللَّهُ وَٱسۡتَغۡفِرۡ لِذَنۢبِكَ وَلِلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِۗ وَٱللَّهُ يَعۡلَمُ مُتَقَلَّبَكُمۡ وَمَثۡوَىٰكُمۡ 19﴾

ஆக, (நபியே!) “நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை” என்பதை நன்கறிந்து கொள்வீராக! இன்னும், உமது தவறுகளுக்காகவும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்காகவும், நம்பிக்கை கொண்ட பெண்களுக்காகவும் பாவமன்னிப்பு கோருவீராக! நீங்கள் (பகலில்) சுற்றுகிற இடங்களையும் (இரவில் தூங்குவதற்காக நீங்கள் ஒதுங்குகிற) உங்கள் தங்குமிடங்களையும் அல்லாஹ் நன்கறிவான். (உங்கள் காலை, மாலை, இரவு என எதுவும் அல்லாஹ்விற்கு மறைந்தவை அல்ல.) (முஹம்மத் : 19). சொல் மற்றும் செயலுக்கு முன் அறிவைக் கொண்டு அல்லாஹ் ஆரம்பித்துள்ளான்  முஸ்லிம் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமானத அம்சம், அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதாகும்; ஏனெனில் அதுவே மார்க்கத்தின் அடிப்படையும் அஸ்திவாரமும் ஆகும். தவ்ஹீத் இல்லாமல் மார்க்கம் நிலைநாட்டப்படாது. இது முஸ்லிமின் மீதான முதல் கடமையாகும், மேலும் இறுதி கடமையாகவும் உள்ளது. ஓரிறைக்கொள்கை என்பது இஸ்லாத்தின் தூண்களில் முதலாவது தூணாகும். இவை ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்து அதன்படி செயல்பட வேண்டியவை ஆகும். இவை ஐந்து தூண்களாகும். ஒரு ஹதீஸில் அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறுகின்றார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுவதை நான் செவிமடுத்தேன்: 

«بُنِيَ الإسْلَامُ عَلَى خَمْسٍ: شَهَادَةِ أنْ لَا إلَهَ إلَّا اللَّهُ وأنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَإقَامِ الصَّلَاةِ، وَإيتَاءِ الزَّكَاةِ، وَحَجِّ البَيْتِ، وصَوْمِ رَمَضَانَ».

''இஸ்லாம் ஐந்து தூண்கள் மீது நிறுவப்பட்டுள்ளது: உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சியம் கூறுதல், தொழுகையை நிறைவேற்றுதல், ஸகாத் வழங்குதல், ஹஜ் செய்தல், ரமழானில் நோன்பு நோற்றல்''1.

முஸ்லிம்கள் தவ்ஹீத் என்றால் என்ன என்பதை கற்றுக்கொள்வது அவசியமாகும்; அதாவது, அது அல்லாஹ்வை வணக்க வழிபாடுகளில் ஒருமைப்படுத்துவதாகும் . அவனுக்கு இணையாக வணக்கத்தில் யாரையும் சேர்க்கக் கூடாது; அது (அல்லாஹ்வுக்கு) நெருக்கமான மலக்காகவோ, அனுப்பப்பட்ட நபியாகவோ இருக்கலாம்.

«லாஇலாக இல்லல்லாஹ்» என்ற சாட்சியத்தின் பொருள்:

அல்லாஹ்வைத் தவிர உண்மையாக வணங்கப்படக்கூடிய இறைவன் வேறு எவரும் இல்லை என்பதை அடியான் மிக உறுதியாக நம்பிக்கையுடன் ஏற்றுக் கொள்வதாகும்.  அல்லாஹ்வை மட்டுமே வணங்கி வழிபட வேண்டும், பிரார்த்தனை, பயம், நம்பிக்கை, சார்ந்திருத்தல் மற்றும் இதர வணக்கங்கள் அனைத்தையும் அவனுக்கு மாத்திரமே செலுத்த வேண்டும்.  

சாட்சியம் சரியாக நிறைவேற இரு தூண்கள் அவசியமாகும்:

முதலாவது : அல்லாஹ்வைத் தவிர மற்ற எல்லா இணைகளும், தெய்வங்களும், தாகூத்துகளும் வணக்கத்திற்கும் வழிபாட்டிற்கும் தகுதியற்றவை என நிராகரித்தல்.

இரண்டாவது: இறைமையும் உண்மையான வணக்கமும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது; வேறு யாருக்குமல்ல என உறுதிப்படுத்தல்  அல்லாஹ் கூறுகிறான்:

﴿‌وَلَقَدۡ بَعَثۡنَا فِي كُلِّ أُمَّةٖ رَّسُولًا أَنِ ٱعۡبُدُواْ ٱللَّهَ وَٱجۡتَنِبُواْ ٱلطَّٰغُوتَۖ...﴾

“அல்லாஹ்வை வணங்குங்கள்; இன்னும், ஷைத்தானை விட்டும் விலகுங்கள்” என்று (போதிப்பதற்காக) ஒவ்வொரு சமுதாயத்திலும் திட்டவட்டமாக ஒரு தூதரை அனுப்பினோம். (அன்நஹ்ல் : 36)

(லாஇலாஹ இல்லல்லாஹ்) எனும் கலிமாவின் நிபந்தனைகளாவன:

முதலாவது : அறிவின்மையை மறுக்கும் அறிவு.

இரண்டாவது: சந்தேகத்திற்கு இடமில்லாத உறுதி.

மூன்றாவது: இணைவைப்பிற்கு மாறான உளத்தூய்மை.

நான்காவது: பொய்க்குப் புறம்பான உண்மை.

ஐந்தாவது: வெறுப்பிற்கு மாறான நேசம்.

ஆறாவது: புறக்கணிப்புடன் முரண்படும் கீழ்ப்படிதல்.

ஏழாவது: மறுப்பிற்கு மாறான ஏற்றுக்கொள்ளுதல்.

எட்டாவது: அல்லாஹ் அல்லாமல் வணங்கப்படுபவற்றை நிராகரித்தல்.

இந்த நிபந்தனைகள் கட்டாயமாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும், இவை பின்வரும் இரு கவிதை வரிகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன:

அறிவுடன் அகத்திடமும் உளத்தூய்மையுமாம் அன்பு கொண்டு உண்மைப்படுத்தி அதற்குள் அடங்கி ஏற்று வாழலுமாம்

அல்லாஹ்வை அன்றி வணங்குபடுவை நிராகரித்து வாழ்வது இவைகளுள் எட்டாவதாம்

இந்த சாட்சியம், அல்லாஹ்வை மாத்திரம்,  இணைகற்பிக்காது வணங்குவதிலும், வணக்கத்தை அல்லாஹ்வுக்கு மாத்திரமே உளத்தூய்மையாக செய்வதிலுமே இருக்கிறது. எனவே அவர், அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் அழைக்கக்கூடாது, அல்லாஹ்விடம் மாத்திரம்தான் தவக்குல் வைக்க வேண்டும், அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமும் எதிர்பார்க்கக் கூடாது, தொழுகையை  அல்லாஹ்வுக்கே மாத்திரம் செய்யவேண்டும், அறுத்துப் பலியிடுவதும் அல்லாஹ் ஒருவனுக்கே மாத்திரம் செய்யப்பட வேண்டும்.

சிலர் மண்ணறைகளை வலம் வருவதும், அவற்றில் உள்ளவர்களிடம் உதவி தேடுவதும், அல்லாஹ்வை விட்டு,  அவர்களிடம் பிரார்த்திப்பதும், வணக்கத்தில் இணைவைப்பாகும். அதிலிருந்து எச்சரிக்கையாக இருத்தலும், அதனை எச்சரித்தலும் அவசியமாகும். ஏனெனில், இது, அல்லாஹ்வை அன்றி வணங்கப்படுகின்ற சிலைகள், கற்கள், மரங்கள் போன்றவற்றை வணங்கும் இணைவைப்பாளர்கள் செய்யும் செயல்களைப் போன்றதாகும்.   இந்த இணைவைப்பைத் தடுக்கவே வேதங்கள் அருளப்பட்டன; தூதர்கள் அனுப்பப்பட்டார்கள் 

முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என சாட்சி பகர்வதன் அர்த்தம்:

அவர்களின் கட்டளைகளை ஏற்று நடத்தல், அவர்கள் அறிவித்தவற்றை உண்மைபடுத்தல், அவர்கள் தடுத்தவற்றை தவிர்ந்து நடப்பது, மேலும் அவர்கள் மார்க்கமாக காட்டித்தந்ததன் அடிப்படையில் அல்லாஹ்வை வணங்குதல் என்பனவாகும்.  எனவே ஒரு முஸ்லிம், முஹம்மத் பின் அப்துல்லாஹ் அல் குரஷி ஹாஷிமி அவர்கள் ஜின், மனிதர்கள் என அனைத்து படைப்புகளுக்கும் அல்லாஹ்வின் தூதராக அனுப்பப்பட்டவர்கள் என்பதை ஒப்புக்கொள்வார். அல்லாஹ் கூறுகிறான்:

﴿قُلۡ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِنِّي رَسُولُ ٱللَّهِ إِلَيۡكُمۡ جَمِيعًا...﴾

(நபியே!) கூறுவீராக: “மனிதர்களே! நிச்சயமாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதர் ஆவேன்". (அல் அஃராப் : 158)

அல்லாஹ் தன் மார்க்கத்தை எடுத்துரைக்கவும், படைப்புகளை நல்வழிப்படுத்தவும் அவரை (தூதரை) அனுப்பினான் (என்றும் ஏற்றுக்கொள்வார்)  அல்லாஹ் கூறுகிறான்:

﴿‌وَمَآ أَرۡسَلۡنَٰكَ إِلَّا كَآفَّةٗ لِّلنَّاسِ بَشِيرٗا وَنَذِيرٗا وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَعۡلَمُونَ28﴾

(நபியே!) மக்கள் அனைவருக்கும் நற்செய்தி சொல்பவராகவும் எச்சரிப்பவராகவும் தவிர நாம் உம்மை அனுப்பவில்லை. என்றாலும் மக்களில் அதிகமானவர்கள் (நீர் உண்மையான தூதர் என்பதை) அறியமாட்டார்கள். (ஸபஃ : 28) மேலும் அல்லாஹ் கூறுகின்றான்:

﴿‌وَمَآ أَرۡسَلۡنَٰكَ إِلَّا رَحۡمَةٗ لِّلۡعَٰلَمِينَ 107﴾

(நபியே!) உம்மை அகிலத்தார்களுக்கு ஓர் அருளாகவே தவிர நாம் அனுப்பவில்லை. (அல் அன்பியா: 107)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இறைமைக் கோட்பாட்டில்  உரிமையோ, பிரபஞ்சத்தில் அதிகாரமோ, அல்லது வணக்கத்தில் உரிமையோ உண்டு என நம்பிக்கை கொள்ளாமல் இருப்பது இந்த சாட்சியத்தின் தேட்டங்களில் ஒன்றாகும்  மாறாக, அன்னார் வணங்கப்படாத ஒரு அடியார் மற்றும் பொய்ப்பிக்கப்படாத ஒரு தூதர் ஆவார். அல்லாஹ் நாடியவற்றைத் தவிர, தனக்கோ பிறருக்கோ எந்த நன்மையையும் தீமையையும் செய்வதற்கு அவர்களுக்கு அதிகாரம் இல்லை.    அல்லாஹ் கூறுகிறான்:

﴿‌قُل لَّآ أَقُولُ لَكُمۡ عِندِي خَزَآئِنُ ٱللَّهِ وَلَآ أَعۡلَمُ ٱلۡغَيۡبَ وَلَآ أَقُولُ لَكُمۡ إِنِّي مَلَكٌۖ إِنۡ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَىٰٓ إِلَيَّ...﴾

(நபியே!) கூறுவீராக: ”அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் என்னிடம் உள்ளன” என்று நான் உங்களுக்குக் கூறமாட்டேன். இன்னும், நான் மறைவானவற்றை அறிய மாட்டேன். நிச்சயமாக நான் ஒரு வானவர் என்றும் உங்களுக்கு கூறமாட்டேன். எனக்கு வஹ்யி அறிவிக்கப்படுவதைத் தவிர நான் பின்பற்றமாட்டேன்... (அல் அன்ஆம் : 50)

இரண்டாம் பகுதி: ஈமான் (நம்பிக்கை) மற்றும் அதன் அடிப்படைகள்:

ஈமான் என்பது: உள்ளத்தால் உண்மைப்படுத்தி, நாவால் மொழிந்து, உள்ளத்தாலும் உடல் உறுப்புக்களாலும் செயற்படுத்துவது ஆகும். இறைவனுக்கு கீழ்ப்படிதலால் ஈமான் அதிகரிக்கிறது, மாறு செய்வதால் அது குறைந்து விடும்.

ஈமான் என்பது வணக்கங்கள் செல்லுபடியாகவும் ஏற்றுக் கொள்ளப் படுவதற்கும் ஒரு நிபந்தனையாகும். மேலும், இணைவைப்பும் குப்ரும் அனைத்து வணக்கங்களையும் அழித்து விடுகின்றன, மேலும், வுழூ இன்றி தொழுகையை அல்லாஹ் ஏற்காதது போல, ஈமான் இன்றி வணக்கத்தையும் அல்லாஹ் ஏற்க மாட்டான், அல்லாஹ் கூறுகிறான்:

﴿وَمَن يَعۡمَلۡ مِنَ ٱلصَّٰلِحَٰتِ مِن ذَكَرٍ أَوۡ أُنثَىٰ وَهُوَ مُؤۡمِنٞ فَأُوْلَٰٓئِكَ يَدۡخُلُونَ ٱلۡجَنَّةَ وَلَا يُظۡلَمُونَ نَقِيرٗا 124﴾

இன்னும், எவர்கள் நம்பிக்கை கொண்டு நன்மைகளில் இருந்து (முடிந்தளவு) செய்வார்களோ, அவர்கள் ஆண்களோ அல்லது பெண்களோ அவர்கள்தான் சொர்க்கத்தில் பிரவேசிப்பார்கள். இன்னும், ஒரு (பேரீத்தங் கொட்டையின்) கீறல் அளவும் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள். (அந்நிஸாஃ : 124).

இணைவைப்பு நற்செயல்களை அழித்து விடும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளான்,  அல்லாஹ் கூறுகிறான்:

﴿وَلَقَدۡ أُوحِيَ إِلَيۡكَ وَإِلَى ٱلَّذِينَ مِن قَبۡلِكَ لَئِنۡ أَشۡرَكۡتَ لَيَحۡبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ ٱلۡخَٰسِرِينَ 65﴾

திட்டவட்டமாக உமக்கும் உமக்கு முன்னுள்ளவர்களுக்கும் வஹ்யி அறிவிக்கப்பட்ட(தாவ)து: “நீர் இணைவைத்தால் உமது அமல்கள் நாசமாகிவிடும். இன்னும், நீர் நஷ்டவாளிகளில் ஆகிவிடுவீர்.” (அஸ்ஸுமர் : 65)

ஈமானின் தூண்கள் ஆறு: அல்லாஹ்வையும், அவனின் மலக்குகளையும், அவனது வேதங்களையும், அவனது தூதர்களையும், மறுமை நாளையும், நன்மை தீமைகள் அனைத்தும் அல்லாஹ்வின் விதிப்படி நடைபெறும் என்பதையும் நம்பிக்கை கொள்வதாகும்.

 

 

 

 

 

1) அல்லாஹ்வை ஈமான் கொள்வது மூன்று விடயங்களை உள்ளடக்கியுள்ளது:

1- அவனின் ருபூபிய்யத்தை நம்பிக்கை கொள்வது:

இது படைத்தல், வாழ்வாதாரமளித்தல், உயிர்ப்பித்தல், மரணித்தல் போன்ற அல்லாஹ்வின் பிரத்தியேகமான செயல்களைக் கொண்டு அவனை ஒருமைப்படுத்தல். எனவே படைப்பாளன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை, வாழ்வாதரமளிப்பவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை, உயிர் கொடுப்பவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை, மரணிக்கச் செய்பவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை, இப்பிரபஞ்சத்தில் அனைத்தையும் நிர்வகிப்பவன், துதிக்கப்படுபவனும் உயர்ந்தவனுமாகிய அவனே ஆவான்.

பெருமையடித்து, தான் கூறுவதை உள்ளத்தால் நம்பிக்கை கொள்ளாதவனைத் தவிர வேறு யாரும் அல்லாஹ்வின் பரிபாலணக் கோட்பாட்டை மறுத்ததாக வரலாற்றில் அறியப்படவில்லை, உதாரணமாக, பிர்அவ்ன் தனது சமூகத்தவரிடம் இவ்வாறு கூறினான் : 

﴿‌...أَنَا ‌رَبُّكُمُ ‌الْأَعْلَى﴾

"நான்தான் மிக உயர்வான உங்கள் இறைவன்" (அந்நாஸிஆத் : 24). ஆனால், உள்ளத்தால் நம்பிக்கை கொண்டு அதனை அவன் கூறவில்லை. மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறியதாக அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான் :  

﴿‌قَالَ لَقَدۡ عَلِمۡتَ مَآ أَنزَلَ هَٰٓؤُلَآءِ إِلَّا رَبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ بَصَآئِرَ وَإِنِّي لَأَظُنُّكَ يَٰفِرۡعَوۡنُ مَثۡبُورٗا 102﴾

(மூஸா) கூறினார்: “வானங்கள் இன்னும் பூமியின் இறைவனைத் தவிர (வேறு எவரும்) தெளிவான அத்தாட்சிகளாக இவற்றை இறக்கி வைக்கவில்லை என்பதை திட்டவட்டமாக நீ அறிந்தாய். ஃபிர்அவ்னே! நிச்சயமாக நான் உன்னை அழிந்துவிடுபவனாக கருதுகிறேன்” (அல்இஸ்ராஃ : 102), மேலும் அல்லாஹ் கூறுகின்றான் :

﴿‌وَجَحَدُوا بِهَا وَاسْتَيْقَنَتْهَا أَنْفُسُهُمْ ظُلْمًا وَعُلُوًّا... ﴾

(அவர்கள் அவற்றை அநியாயமாகவும் பெருமையாகவும் மறுத்தனர். அவர்களுடைய ஆன்மாக்களோ அவற்றை உறுதிகொண்டிருந்தன...) (அந் நம்லு : 14).

ஏனெனில், இந்தப் படைப்புகளுக்கு ஒரு படைப்பாளன் அவசியமாக இருக்க வேண்டும், ஏனெனில் எந்தவொன்றும் தன்னைத் தானே உருவாக்க முடியாது; ஏனெனில் எந்தவொன்றும் தன்னைத் தானே படைக்காது, இயற்கையாகத் திடீரென உருவாகவும் முடியாது; ஏனெனில் புதிதாக உருவாகும் ஒவ்வொன்றுக்கும் அதனை உருவாக்கியவன் ஒருவன் இருப்பது அவசியமாகும், இந்த அற்புதமான ஒழுங்கில், பொருத்தமான இணக்கமாக அமைந்துள்ள அதன் இருப்பு, தற்செயலாக உருவான இயற்கை நிகழ்வாக இது இருப்பதை அடியோடு மறுக்கின்றன, எனவே அவற்றை உருவாக்கிய ஒருவன் இருந்தே ஆக வேண்டுமென்பது குறிப்பாகிறது. அவன்தான் அகிலத்தாரைப் படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ்வாகும். அல்லாஹ் கூறுகிறான்:

﴿‌أَمۡ خُلِقُواْ مِنۡ غَيۡرِ شَيۡءٍ أَمۡ هُمُ ٱلۡخَٰلِقُونَ 35 أَمۡ خَلَقُواْ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَۚ بَل لَّا يُوقِنُونَ 36﴾

ஏதும் இன்றி (-தாய், தந்தை யாரும் இல்லாமல்) இவர்கள் படைக்கப்பட்டார்களா? அல்லது, இவர்களே (தங்களை சுயமாக) படைத்து கொண்டார்களா?

அல்லது, இவர்கள் வானங்களையும் பூமியையும் படைத்தார்களா? (இல்லையே! இவர்களோ படைக்கப்பட்டவர்கள், படைப்பவர்கள் அல்ல. பிறகு, ஏன் படைத்தவனின் கட்டளையை நிராகரிக்கிறார்கள்?) மாறாக, (அல்லாஹ்வின் அத்தாட்சிகளை) அவர்கள் உறுதி கொள்ள மாட்டார்கள். ( அத்தூர் : 35-36)

மக்கா நகர் இணைவைப்பாளர்கள் அவனது பரிபாலணக் கோட்பாட்டை ஏற்கக்கூடியவர்களாக இருந்தனர். அதேநேரம், அல்லாஹ்வின் இறைமையில் அவனுக்கு இணைவைத்துக் கொண்டிருந்தார்கள். எனவே, அவர்கள் இஸ்லாத்தில் நுழைந்தவர்களாக இருக்கவில்லை.  நபி (ஸல்) அவர்கள், அவர்களுடன் போரிட்டார்கள்; அவர்களுடைய உயிர்களையும், உடமைகளையும் - அவர்கள் இணைவைத்து வணங்கியதானால் -  ஹலால் ஆக்கினார்கள்.  ஏனெனில், அவர்கள் அல்லாஹ்வுடன்,   சிலைகள், கற்கள், மலக்குகள் போன்றவற்றை வணங்கினார்கள். 

2- அவனின் உலூஹிய்யத்தை ஈமான் கொள்வது:

அவனின் உலூஹிய்யத்தை ஈமான் கொள்வது; அதாவது அவன் ஒருவன்தான் உண்மையான வணங்கப்படத் தகுதியானவன், அவனுக்கு எந்த இணையாளனும் கிடையாது என்பதாகும். (அல் இலாஹ்) என்பது (அல் மஃலூஹ்) எனும் பொருளில், அதாவது நேசம், மகத்துவம் மற்றும் பணிவுடன் உண்மையாக வணங்கப்படுபவன் என்று அர்த்தம் தரும் 

அல்லாஹ் கூறுகிறான்:

﴿‌وَإِلَٰهُكُمۡ إِلَٰهٞ وَٰحِدٞۖ لَّآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلرَّحۡمَٰنُ ٱلرَّحِيمُ 163﴾

இன்னும், (மனிதர்களே! நீங்கள் உண்மையில் வணங்கத் தகுதியான) உங்கள் இறைவன் ஒரே ஓர் இறைவன்தான். பேரருளாளன், பேரன்பாளனாகிய அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. (அல்பகரா : 163).

அல்லாஹ்வுடன் அவனல்லாது வணங்கப்படுவதற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட அனைத்து கடவுள்களின் இறைமையும் பொய்யான இறைமையாகும். அல்லாஹ் கூறுகிறான்:

﴿ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ هُوَ ٱلۡحَقُّ وَأَنَّ مَا يَدۡعُونَ مِن دُونِهِۦ هُوَ ٱلۡبَٰطِلُ وَأَنَّ ٱللَّهَ هُوَ ٱلۡعَلِيُّ ٱلۡكَبِيرُ 62﴾

அது ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையானவன். இன்னும், அவனையன்றி அவர்கள் அழைக்கின்றவை பொய்யானவையாகும். இன்னும், நிச்சயமாக அல்லாஹ்தான் மிக உயர்ந்தவன், மகா பெரியவன். (அல் ஹஜ் : 62)

இதற்காகவே நுஹ் முதல் முஹம்மது ﷺ வரை உள்ள தூதர்கள் தங்கள் சமூகங்களை, அல்லாஹ்வை ஏகத்துவப்படுத்தி, அவனல்லாத எவரையும் வணங்காமல் அவனை மாத்திரம் வணங்குவதற்கான அழைப்பை விடுத்தார்கள், இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வுடன் அவனல்லாதோரை வணங்கி உதவியும் பாதுகாப்பும் தேடும் கடவுள்களை எடுத்துக் கொண்டதை அல்லாஹ் இரண்டு பகுத்தறிவு ஆதாரங்களின் மூலம் பொய்ப்பித்துள்ளான் :

முதலாவது : அவர்கள் எடுத்துக் கொண்ட இந்தக் கடவுள்களிடம் இறைமைக்குரிய எந்தவொரு சிறப்பம்சங்களும் இல்லை, இவை படைக்கப்பட்டவையே தவிர படைக்கக் கூடியவையல்ல, தம்மை வணங்குவோருக்கு எந்த பயனையும் அளிக்கவும் முடியாது, எந்தத் தீங்கையும் தடுக்கவும் முடியாது, உயிர் கொடுக்கவோ, மரணிக்கச் செய்யவோ, உயிர் கொடுத்து எழுப்பவோ முடியாது. அல்லாஹ் கூறுகிறான்:

﴿وَٱتَّخَذُواْ مِن دُونِهِۦٓ ءَالِهَةٗ لَّا يَخۡلُقُونَ شَيۡـٔٗا وَهُمۡ يُخۡلَقُونَ وَلَا يَمۡلِكُونَ لِأَنفُسِهِمۡ ضَرّٗا وَلَا نَفۡعٗا وَلَا يَمۡلِكُونَ مَوۡتٗا وَلَا حَيَوٰةٗ وَلَا نُشُورٗا 3﴾

அ(ந்த இணைவைப்ப)வர்கள் அவனை அன்றி (பல) கடவுள்களை (வழிபாடுகளுக்கு) ஏற்படுத்திக் கொண்டனர். அந்த கடவுள்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களோ (மனிதர்களால்) செய்யப்படுகிறார்கள். இன்னும், அவர்கள் தங்களுக்குத் தாமே தீமை செய்வதற்கும் நன்மை செய்வதற்கும் சக்தி பெற மாட்டார்கள். இன்னும், (பிறரின்) இறப்பிற்கும் வாழ்விற்கும் மீண்டும் உயிர்த்தெழச் செய்வதற்கும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (அல் ஃபுர்கான் : 3)

இரண்டாவது : இந்த இணைவைப்பாளர்கள் அல்லாஹ் ஒருவனே படைத்துப் பரிபாலிக்கும் ஒருவனாக இருப்பதை ஏற்றுக் கொண்டு தான் இருந்தார்கள். இது அவர்கள் அல்லாஹ்வின் பரிபாலனத்தில் அவனை ஒருமைப்படுத்தியது போன்றே இறைமையிலும் அவனை ஒருமைப்படுத்துவதைக் அவர்களுக்குக் கட்டாயமாக்குகின்றது. அல்லாஹ் கூறுகிறான்:

﴿قُل لِّمَنِ ٱلۡأَرۡضُ وَمَن فِيهَآ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ 84 سَيَقُولُونَ لِلَّهِۚ قُلۡ أَفَلَا تَذَكَّرُونَ85 قُلۡ مَن رَّبُّ ٱلسَّمَٰوَٰتِ ٱلسَّبۡعِ وَرَبُّ ٱلۡعَرۡشِ ٱلۡعَظِيمِ 86 سَيَقُولُونَ لِلَّهِۚ قُلۡ أَفَلَا تَتَّقُونَ 87 قُلْ مَنْ بِيَدِهِ مَلَكُوتُ كُلِّ شَيْءٍ وَهُوَ يُجِيرُ وَلَا يُجَارُ عَلَيْهِ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ 88 سَيَقُولُونَ لِلَّهِ قُلْ فَأَنَّى تُسْحَرُونَ 89﴾

(நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: பூமியும் அதில் உள்ளவர்களும் யாருக்கு உரிமையானவர்கள்? நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் (இதற்கு பதில் சொல்லுங்கள்)!

அல்லாஹ்விற்கே உரிமையானவர்கள் என்று அவர்கள் கூறுவார்கள். ஆக, (நபியே! அவர்களிடம்) கூறுவீராக! நீங்கள் நல்லறிவு பெற வேண்டாமா?

(நபியே!) கூறுவீராக: ஏழு வானங்களின் இறைவன் யார்? இன்னும், மகத்தான அர்ஷின் இறைவன் யார்?

அவர்கள் கூறுவார்கள்: “(அவை அனைத்தும்) அல்லாஹ்விற்கே உரியவையாகும்.” நீர் கூறுவீராக: ஆக, நீங்கள் (அந்த அல்லாஹ்வை) அஞ்ச மாட்டீர்களா?

(நபியே!) கூறுவீராக: யாருடைய கரத்தில் (பிரபஞ்சம்) எல்லாவற்றின் பேராட்சி இருக்கிறது? இன்னும், அவன் பாதுகாப்பு அளிக்கிறான். அவனுக்கு எதிராக (யாரும் யாருக்கும்) பாதுகாப்பு அளிக்க முடியாது, நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் (இதற்கு பதில் கூறுங்கள்).

அவர்கள் கூறுவார்கள்: “(அவற்றின் பேராட்சி) அல்லாஹ்விற்கு உரியதே!” (நபியே!) நீர் கூறுவீராக: “ஆக, நீங்கள் (அந்த உண்மையை நம்பிக்கை கொள்வதிலிருந்து) எவ்வாறு திசை திருப்பப்படுகிறீர்கள்!”.  (அல்முஃமினூன் : 84-89). அவர்கள் தவ்ஹீதுர் ரபூபிய்யாவை ஏற்றுக் கொண்டால், அவனுக்கு மாத்திரமே வணக்கங்களைச் செலுத்தி, அவனுக்கு இணையாக எவரையும் வணக்கத்தில் சேர்க்கக் கூடாது.

3- அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகளை விசுவாசம் கொள்ளல்.

அதாவது, அல்லாஹ் தனது அல்குர்ஆனில், தனக்கு இருப்பதாகக்கூறியுள்ள,  அல்லது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது ஹதீஸ்களில், அல்லாஹ்வுக்கு இருப்பதாகக் கூறியுள்ள  பெயர்களையும், பண்புகளையும் அல்லாஹ்வுக்குப் பொருத்தமான விதத்தில்,  திரிபுபடுத்தாமலும் கருத்துநீக்கம் செய்யாமலும்,  உருவகப்படுத்தாமலும், உவமைப்படுத்தாமலும் ஏற்றுக்கொள்வதாகும்.  அல்லாஹ் கூறுகிறான்:

﴿‌وَلِلَّهِ ٱلۡأَسۡمَآءُ ٱلۡحُسۡنَىٰ فَٱدۡعُوهُ بِهَاۖ وَذَرُواْ ٱلَّذِينَ يُلۡحِدُونَ فِيٓ أَسۡمَٰٓئِهِۦۚ سَيُجۡزَوۡنَ مَا كَانُواْ يَعۡمَلُونَ 180﴾

அல்லாஹ்விற்கே உரிய மிக அழகிய பெயர்கள் உண்டு. ஆகவே, அவற்றின் மூலம் அவனை அழையுங்கள். இன்னும், அவனுடைய பெயர்களில் தவறிழைப்பவர்களை விட்டுவிடுங்கள். அவர்கள் செய்துகொண்டிருந்ததற்கு (தகுந்த) கூலி கொடுக்கப்படுவார்கள். (அல்அஃராப் : 180) மேலும் அல்லாஹ் கூறுகின்றான் :

﴿‌...لَيۡسَ كَمِثۡلِهِۦ شَيۡءٞۖ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلۡبَصِيرُ﴾

அவனைப் போன்று எதுவும் இல்லை. அவன்தான் நன்கு செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான். (அஷ்ஷூரா :11)

ஷிர்க் (இணைவைப்பு) மூன்று வகைகளாகும் :

1- பெரிய ஷிர்க்.

2- சிறிய ஷிர்க்.

3- மறைவான ஷிர்க்

1- பெரிய ஷிர்க் :

அதன் வரையறையாவது: அல்லாஹ்வின் தனித்துவமான பண்புகளில் வேறு எவரையாவது அவனுடன் சமமாக்குதல்,  அல்லாஹ் கூறுகிறான்:

﴿‌إِذۡ نُسَوِّيكُم بِرَبِّ ٱلۡعَٰلَمِينَ 98﴾

உங்களை அகிலங்களின் இறைவனுக்கு சமமாக ஆக்கி (வணங்கி)யபோது. (அஷ்ஷுஅராஃ : 98).

இது, அல்லாஹ் அல்லாதவருக்கு வணக்க வழிபாடுகளை செலுத்துதல், அல்லது, பிரார்த்தனை, இரட்சிக்கத் தேடல், நேர்ச்சை, அறுத்துப் பலியிடல் போன்ற, அவற்றில் சிலவற்றை செலுத்துதல் போன்றவற்றை உள்ளடக்கும் 

மேலும், அல்லாஹ் ஹராமாக்கியதை ஹலாலாகக் கருவது,  அல்லது அவன் ஹலாலாக்கியதை  ஹராமாக்குவது, அல்லது அவன் கடமையாக்கியதை கடமையற்றதாக்குவது போன்றவற்றையும் உள்ளடக்கும்  உதாரணமாக, விபச்சாரம், மது, பெற்றோரை துன்புறுத்தல், வட்டி போன்ற மார்க்கத்தில்  தெளிவாகத் தடைசெய்யப்பட்ட விஷயங்களை அனுமதிக்கப்பட்டதாக நம்புதல். 

அல்லது அல்லாஹ் அனுமதித்த நல்லவற்றை  ஹராமாக்குவது, அல்லது அல்லாஹ் கடமையாக்கியதை கடமையற்றதாகக் கருதுதல்,  உதாரணமாக, தொழுகை கடமையல்ல, அல்லது நோன்பு கடமையல்ல, அல்லது ஸகாத் கடமையல்ல என்று நம்புதல்.

பெரிய இணைவைப்பானது நல்லறங்களை அழித்து விடுவதோடு, அதனோடு மரணித்தவருக்கு நிரந்தர நரகத்தை கட்டாயப்படுத்திவிடும், அல்லாஹ் கூறுகிறான்:

﴿‌...وَلَوۡ أَشۡرَكُواْ لَحَبِطَ عَنۡهُم مَّا كَانُواْ يَعۡمَلُونَ﴾

இன்னும், அவர்கள் இணைவைத்தால் அவர்கள் செய்து கொண்டிருந்தவை அவர்களை விட்டு அழிந்துவிடும். (அல் அன்ஆம் : 88)

மேலும் யார் இணைவைத்த நிலையில் மரணித்துவிடுகிறானோ அவனது பாவங்களை அல்லாஹ் மன்னிக்கமாட்டான், அவனுக்கு சுவர்க்கம் ஹராமாகி விட்டது, அல்லாஹ் கூறுகிறான்:

﴿‌إِنَّ ٱللَّهَ لَا يَغۡفِرُ أَن يُشۡرَكَ بِهِۦ وَيَغۡفِرُ مَا دُونَ ذَٰلِكَ لِمَن يَشَآءُ...﴾

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்க மாட்டான். இன்னும், அதைத் தவிர மற்றதை அவன், தான் நாடியவருக்கு மன்னிப்பான்... (அந்நிஸா : 48) மேலும் அல்லாஹ் கூறுகின்றான் :

﴿...إِنَّهُۥ مَن يُشۡرِكۡ بِٱللَّهِ فَقَدۡ حَرَّمَ ٱللَّهُ عَلَيۡهِ ٱلۡجَنَّةَ وَمَأۡوَىٰهُ ٱلنَّارُ...﴾

நிச்சயமாக எவர் அல்லாஹ்விற்கு இணைவைக்கிறாரோ அவர் மீது திட்டமாக, அல்லாஹ் சொர்க்கத்தை தடுத்து விடுகிறான். இன்னும் அவருடைய தங்குமிடம் நரகம்தான்... (அல்மாஇதா : 72).

2- சிறிய ஷிர்க் :

இது குர்ஆன், ஸுன்னாவில் ஷிர்க் என்று குறிப்பிடப்பட்டு இருப்பினும், பெரிய ஷிர்க்கின் அளவிற்கு செல்லாதது ஆகும். இதுவே சிறிய ஷிர்க் என்று அழைக்கப்படுகிறது; உதாரணமாக, அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்வது,  அதாவது, கஃபா, நபிமார்கள், அமானிதம், ஒருவரின் வாழ்க்கை போன்றவற்றின் மீது சத்தியம் செய்வது நபி (ஸல்) கூறுகிறார்கள் :

«مَنْ حَلَفَ بِغَيرِ اللهِ فَقَدْ كَفَرَ أَو أَشرَكَ».

'யார் அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்கிறாரோ அவர் நிராகரித்து அல்லாஹ்வுக்கு இணைவைத்துவிட்டார்'.2

அவனது உள்ளத்தில் அவற்றிருக்கு இருக்கும் பெறுமனாத்திற்கு ஏற்ப, அது பெரிய இணைவைப்பாக மாறலாம்.   நபியைக் கொண்டு அல்லது குறித்த ஒரு மகானைக் கொண்டு சத்தியம் செய்பவரின் இதயத்தில் அவர்கள் அல்லாஹ்வுக்கு இணையாக இருக்கிறார்கள், அல்லது அல்லாஹ்வை விடுத்து, அவர்களிடம் பிரார்த்திக்கலாம் அல்லது அவர்கள் பிரபஞ்சத்தில் செயலாற்றுகிறார்கள் என்ற எண்ணம் இருந்தால், அது பெரியவகை ஷிர்க்காகும். எனினும், அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்தவர் இதனை நோக்கமாகக் கொள்ளாமல், பழக்கத்தினால் அவரின் நாவிலிருந்து இவ்வாறு வெளிப்பட்டிருந்தால், அது சிறிய வகை ஷிர்க்காகும். இது சில இடங்களில் அடிக்கடி நிகழ்கிறது, எனவே இதில் விழிப்புடன் இருப்பதுடன், தவ்ஹீதை (ஏகத்துவத்தை) பாதுகாக்கும் நோக்கில், இதை எச்சரிப்பதும் அவசியம்.

3-மறைவான இணைவைப்பு:

இது, உள்ளங்களில் இருக்கும் முகஸ்துதியாகும் உதாரணமாக, மக்கள் தம்மைப் பார்க்க வேண்டும் என்பதற்காக ஓதுபவர் அல்லது தொழுபவர்,  அல்லது அவர்கள் தம்மைப் பாராட்டவேண்டும் என்பதற்காக  தஸ்பீஹ் அல்லது தர்மம் செய்பவர் . இது, அல்லாஹ்வுக்காக உளத்தூய்மையுடன் செய்யப்பட்ட செயல்களை அன்றி மற்றவர்களுக்கு காட்டுவதற்காகச் செய்யப்பட்ட செயல்களை அழித்து விடும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

«الشِّرْكُ فِي هَذِهِ الْأُمَّةِ أَخْفَى مِنْ دَبِيبِ النَّمْلَةِ السَّودَاءِ عَلَى الصَّفَاةِ السَّودَاءِ فِي ظُلْمَةِ اللَّيْلِ، وَكَفَّارَتُهُ أَنْ يَقُولَ: "اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أُشْرِكَ بِكَ شَيْئًا وَأَنَا أَعْلَمُ، وَأَسْتَغْفِرُكَ مِنَ الذَّنْبِ الَّذِي لَا أَعْلَمُ».

இந்த உம்மத்தில் (முஸ்லிம் சமுதாயத்தில்) இணைவைப்பு, இரவு நேரத்தின் இருளில் கருமை நிறைந்த கல்லின் மீது கருமை நிறைந்த எறும்பு நடப்பதை விட மறைந்ததாகும். இதற்கான பரிகாரம்: 'இறைவா! நான் உனக்கு இணைவைப்பதை அறிந்தே செய்வதை விலக்கி விடுவாயாக. அறியாமல் செய்த பாவத்திற்கும் உன்னிடம்  மன்னிப்பு கேட்கிறேன்' என்று கூறுவதாகும்.3

குஃப்ரின் (இறைமறுப்பு) வகைகள் :

முதல் வகை: பெரிய இறை மறுப்பு:

இது நரகத்தில் நிரந்தரமாக தங்க வைக்கும் காரணமாகும், இது ஐந்து வகைப்படும் :

1. பொய்ப்பித்து நிராகரித்தல் :

அதாவது, இறைத் தூதர்கள் பொய் உரைப்பதாக நம்புதல். நிராகரிப்பாளர்களில் இது மிகக் குறைவாகவே உள்ளது; ஏனெனில் அல்லாஹ் தனது தூதர்களை தெளிவான ஆதாரங்களின் மூலம் பலப்படுத்தியுள்ளான்  ஆனால், பொய்ப்பித்துக் கொண்டிருக்கும் இவர்களது நிலை அல்லாஹ் பின்வருமாறு கூறியுள்ளது போன்றதாகும் : 

﴿‌وَجَحَدُوا ‌بِهَا ‌وَاسْتَيْقَنَتْهَا أَنْفُسُهُمْ ظُلْمًا وَعُلُوًّا...﴾

"அவர்கள் அவற்றை அநியாயமாகவும் பெருமையாகவும் மறுத்தனர். அவர்களுடைய ஆன்மாக்களோ அவற்றை உறுதிகொண்டிருந்தன". (அன்நம்ல் : 14)

2- அடிபணியாமை மற்றும் பெருமையினால் விளையும் நிராகரிப்பு. 

இது இப்லீஸின் நிராகரிப்பைப் போன்றதாகும். அவன் இறைவனின் கட்டளையை மறுக்கவோ, நிராகரிக்கவோ இல்லை; மாறாக, அவன் அதை அடிபணியாமை மற்றும் பெருமையைக் கொண்டு எதிர் கொண்டான். அல்லாஹ் கூறுகிறான்:

﴿وَإِذۡ قُلۡنَا لِلۡمَلَٰٓئِكَةِ ٱسۡجُدُواْ لِأٓدَمَ فَسَجَدُوٓاْ إِلَّآ إِبۡلِيسَ أَبَىٰ وَٱسۡتَكۡبَرَ وَكَانَ مِنَ ٱلۡكَٰفِرِينَ 34﴾

"இன்னும் (நபியே!) ஆதமுக்கு சிரம் பணியுங்கள் என வானவர்களுக்கு நாம் கூறிய சமயத்தை நினைவுகூர்வீராக! ஆக, இப்லீஸைத் தவிர (மற்ற அனைவரும்) சிரம் பணிந்தார்கள். அவன் மறுத்தான். இன்னும், பெருமையடித்தான். இன்னும், நிராகரிப்பாளர்களில் அவன் ஆகிவிட்டான்". (அல்பகரா : 34).

3. புறக்கணிப்பின் விளைவாக ஏற்படும் நிராகரிப்பு :

அதாவது, தனது செவியையும், இதயத்தையும் உண்மையைப் பின்பற்றுவதிலிருந்து விலக்கி, அதனை நோக்காமலும், கவனம் செலுத்தாமலும் இருத்தல். அல்லாஹ் கூறுகிறான்:

﴿وَمَنۡ أَظۡلَمُ مِمَّن ذُكِّرَ بِـَٔايَٰتِ رَبِّهِۦ ثُمَّ أَعۡرَضَ عَنۡهَآۚ إِنَّا مِنَ ٱلۡمُجۡرِمِينَ مُنتَقِمُونَ22﴾

"தனது இறைவனின் வசனங்களினால் அறிவுரைக் கூறப்பட்டு, பிறகு அவற்றை புறக்கணித்த ஒருவனை விட பெரிய அநியாயக்காரன் யார்? நிச்சயமாக நாம் குற்றவாளிகளிடம் பழிவாங்குவோம்". (அஸ்ஸஜ்தா : 22).

ஆனால் பகுதியளவிலான புறக்கணிப்பு, பாவமே தவிர, நிராகரிப்பாகமாட்டாது. உதாரணமாக, நோன்பு அல்லது ஹஜ் போன்ற சில மார்க்கக் கடமைகளைக் கற்றுக்கொள்ளாது புறக்கணித்தல்.

4- சந்தேகத்தின் விளைவாக ஏற்படும் நிராகரிப்பு :

அதாவது, சத்தியத்தை உறுதியாகக் கூறாமல், தயக்க நிலையில்  அதில் சந்தேகம் கொள்கின்றார், அல்லாஹ் கூறுகின்றான்:

﴿وَدَخَلَ جَنَّتَهُ وَهُوَ ظَالِمٌ لِنَفْسِهِ قَالَ مَا أَظُنُّ أَنْ تَبِيدَ هَذِهِ أَبَدًا 35 وَمَا أَظُنُّ السَّاعَةَ قَائِمَةً وَلَئِنْ رُدِدْتُ إِلَى رَبِّي لَأَجِدَنَّ خَيْرًا مِنْهَا مُنْقَلَبًا 36﴾

"அவனோ (இறைவனுக்கு நன்றி செலுத்தாமல்) தனக்குத் தானே தீங்கிழைத்தவனாக தனது தோட்டத்தில் (பெருமையோடு) நுழைந்தான். "இது அழியும் என்று ஒருபோதும் நான் எண்ணவில்லை" என்று கூறினான்".

இன்னும், “மறுமை நிகழும் என்றும் நான் எண்ணவில்லை. நான் என் இறைவனிடம் திரும்பக் கொண்டுவரப்பட்டாலும் இதைவிட சிறந்த (இடத்)தை (எனக்கு) மீளுமிடமாக நிச்சயம் நான் பெறுவேன்” என்றும் கூறினான்". 36 (அல்கஹ்ஃப் : 35-36)

5- நயவஞ்சகத்தன நிராகரிப்பு :

இது, நாக்கினால் ஈமானை வெளிப்படுத்தி, உள்ளத்தில் மறுத்தலை (தற்கொண்டு) மறைத்துக் கொள்வதாகும். அல்லாஹ் கூறுகிறான்:

﴿وَمِنَ ٱلنَّاسِ مَن يَقُولُ ءَامَنَّا بِٱللَّهِ وَبِٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَمَا هُم بِمُؤۡمِنِينَ 8﴾

"இன்னும், “நாங்கள் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டோம்” எனக் கூறுபவர்களும் மக்களில் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் நம்பிக்கையாளர்களே இல்லை". (அல் பகரா : 8)

இவையே மார்க்கத்திலிருந்து வெளியேற்றும் மிகப் பெரும் இறை மறுப்பின் வகைகள் ஆகும்.

இரண்டாவது வகை: சிறிய நிராகரிப்பு:

இவ்வகை நரகத்தில் நிரந்தரமாக தங்கிவிடுதலை ஏற்படுத்திடமாட்டது, இது அல்குர்ஆனிலும் ஸுன்னாவிலும் 'நிராகரிப்பு' என குறிப்பிடப்பட்டுள்ள போதும், 'அல்' என்ற வரையறையுடன் அல்லாமல், பொதுவாக  குறிப்பிடப்பட்டிருக்கும்.  இதற்கான உதாரணங்கள் அதிகம் காணப்படுகின்றன, அவற்றில் சில: அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

«اثْنَتَانِ فِي النَّاسِ هُمَا بِهِمْ كُفْرٌ: الطَّعْنُ فِي النَّسَبِ، وَالنِّيَاحَةُ عَلَى المَيِّتِ».

மக்களிடம் நிராகரிப்பை ஏற்படுத்தும் இரண்டு விஷயங்கள் உள்ளன: ஒருவரது பரம்பரையை குறைசொல்வது, மற்றும் இறந்தவர்களுக்காக சத்தமிட்டு அழுவது.4

2- மலக்குகளை நம்புதல் (ஈமான் கொள்ளுதல்) :

அவர்கள் ஒரு மறைவான உலகத்தினர் ஆகும். அல்லாஹ் அவர்களை ஒளியினால் படைத்துள்ளான். அவர்கள் அல்லாஹ்வை வணங்குகிறவர்கள், இறைமைக்குரிய எந்தவொரு சிறப்பம்சங்களும் அவர்களுக்கு இல்லை, அவர்கள் அல்லாஹ் தமக்கு கட்டளையிட்டவற்றில் அவனுக்கு மாறு செய்யமாட்டார்கள், அவர்கள் தங்களுக்கு இடப்பட்ட கட்டளையையே செய்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் அதிக எண்ணிக்கை கொண்டவர்கள், அவர்களது தொகையை அல்லாஹ்வைத் தவிர யாரும் மட்டிட முடியாது.

மலக்குகளை நம்புவதென்பது நான்கு விடயங்களை உட்பொதிந்துள்ளது :

1. அவர்களது இருப்பை நம்புதல்.

2. ஜிப்ரீல் (அலை), மீகாயீல் (அலை), இஸ்ராபீல் (அலை) போன்ற அவர்களுடைய பெயர்களில் நாம் அறிந்தவர்களை நம்புதல். பெயர் அறியாதோரைப் பொதுவாக நம்ப வேண்டும்.

3. குர்ஆனிலும், ஸுன்னாவிலும் இடம்பெற்றுள்ள, நாமறிந்துள்ள மலக்குகளின் பண்புகளை ஈமான் கொள்ளுதல்; உதாரணமாக  ஜிப்ரீல் (அலை) அவர்களின் தோற்றத்தைப் போன்று. நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீலை அவர்களது உண்மைத் தோற்றத்தில் கண்டதாகவும், வானை அடைக்குமளவு அவர்களுக்கு அறுநூறு இறக்கைகள் இருப்பதாகவும் நபியவர்கள் கூறியுள்ளார்கள்.

4. அவர்கள் மேற்கொள்ளும் செயல்களில் நாம் அறிந்தவற்றை நம்புதல்; உதாரணமாக அல்லாஹ்வைத் துதித்தல், சடைவின்றி, இடைவிடாமல் இரவு, பகலாக அவனை வணங்குதல் போன்றவற்றைக் கூறலாம்.

உதாரணமாக : வஹியின் நம்பிக்கையாளரான ஜிப்ரீல் (அலை).

ஸூர் ஊத நியமிக்கப்பட்டுள்ள இஸ்ராபீல் (அலை) அவர்கள். 

உயிர்களைக் கைப்பற்றும் பொறுப்புக்கு சாட்டப்பட்டுள்ள மலகுல் மௌத். 

நரகத்தின் காவலராக  நியமிக்கப்பட்டுள்ள  மாலிக் (அலை) அவர்கள். சுவர்க்கத்தின் காவலராக  நியமிக்கப்பட்டுள்ள  ரிழ்வான் (அலை) அவர்கள் போன்றவர்கள்.

3- வேதங்களை நம்புதல் (ஈமான் கொள்ளுதல்) :

வேதங்கள் என்பது: அல்லாஹ் தனது தூதர்களுக்கு இறக்கி அருளிய வானுலக வேதங்களாகும், இது மனிதகுலத்திற்கான நேர்வழிகாட்டியாகவும், அவர்களுக்கு அருளாகவும் இருக்கிறது, இதனால் அவர்கள் இரு உலகங்களிலும் மகிழ்ச்சியை அடைய முடியும்.

வேதங்களை நம்புவது நான்கு விடயங்களை உள்ளடக்கியிருக்கிறது :

1. இவை அல்லாஹ்விடமிருந்து உண்மையாகவே இறக்கப்பட்டவை என நம்புதல்.

2. அவற்றில் நாம் பெயர் அறிந்தவற்றை அந்தப் பெயர்களுடன் நம்ப வேண்டும். உதாரணமாக : அல்குர்ஆன் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும்,  தவ்ராத் வேதம்  மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும், இன்ஜீல் வேதம் ஈஸா (அலை) அவர்களுக்கும்,  ஸபூர் வேதம்தாவூத் (அலை) அவர்களுக்கும் அருளப்பட்டதை நம்ப வேண்டும்.  

பெயர் அறியாதவற்றை பொதுவாக நம்ப வேண்டும்.

3- அவற்றில் கூறப்பட்டுள்ள செய்திகளை உண்மை என ஏற்றுக்கொள்ளுதல்; அல்குர்ஆனின் தகவல்களையும், அதற்கு முன்னருள்ள வேதங்களின் தகவல்கள் மாற்றப்படாமலோ, திருத்தப்படாமலோ இருப்பின் அவற்றையும் உண்மை என ஏற்க வேண்டும்.

4. அது கூறக்கூடிய சட்டங்கள் மாற்றப்படாமல் இருப்பின் அவற்றை செயல்படுத்த வேண்டும். மேலும் அச்சட்டங்களின் நோக்கம் நமக்கு புரிந்தாலும், புரியாவிடினும் அவற்றை உள்ளத்தால் பொருந்தி பூரணமாக அவற்றிற்கு கட்டுப்படவும் வேண்டும். முந்தைய அனைத்து வேதங்களும் அல்குர்ஆனின் வருகையால் மாற்றப்பட்டே உள்ளன. முன்னைய வேதங்களின் எந்தவொரு சட்டத்தையும் அது ஆதாரபூர்வமானதாகவும், அல்குர்ஆன் அல்லது ஸுன்னா அங்கீகரித்ததாகவும் இருக்கும் பட்சத்தில்தான் அதனை அமுல்படுத்த முடியும்.

4. இறைத்தூதர்களை நம்புதல் :

“ருஸுல்” என்பது, "ரஸூல்" என்பதன் பன்மை; மார்க்கம் கொடுக்கப்பட்டு, அதனை எத்திவைக்கும் படி ஏவப்பட்ட மனிதர்களே தூதர்கள் ஆகும்.  அவர்களில் முதலாமவர் நூஹ் (அலை) ஆகும்.  இறுதியானவர் முஹம்மத் (ஸல்) அவர்களாகும்.  அவர்கள் படைக்கப்பட்ட மனிதர்களாகும். இறைமைக்குரிய மற்றும் வணக்கம் சார்ந்த எந்தவொரு சிறப்பம்சங்களும் அவர்களுக்கு இல்லை.

இறைத்தூதர்களை இறைவிசுவாசிப்பது உட்பொதிந்துள்ள அம்சங்களாவன:

1. அவர்கள் கொண்டு வந்த தூது அல்லாஹ்விடமிருந்து உண்மையாக அருளப்பட்டது என ஈமான் கொள்ளல். அவர்களில் ஒருவரின் தூதை மறுத்தாலும் அனைத்து தூதர்களையும் மறுத்தவராவார்.

2. அவர்களில் முஹம்மத் (ஸல்), இப்றாஹீம் (அலை), மூஸா (அலை), ஈஸா (அலை), நூஹ் (அலை) போன்ற பெயர் குறிப்பிடப்பட்டவர்களை அவர்களுடைய பெயர்களுடன் ஈமான் கொள்ளல் வேண்டும். மேற்கூறிய ஐவரும் உறுதியான இறைத்தூதர்களாகும்.

அவர்களில் நாம் பெயரறியாதோரைப் பொதுப்படையாக நம்ப வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்:

﴿‌وَلَقَدۡ أَرۡسَلۡنَا رُسُلٗا مِّن قَبۡلِكَ مِنۡهُم مَّن قَصَصۡنَا عَلَيۡكَ وَمِنۡهُم مَّن لَّمۡ نَقۡصُصۡ عَلَيۡكَ...﴾

திட்டவட்டமாக உமக்கு முன்னர் பல தூதர்களை நாம் அனுப்பினோம். அவர்களில் சிலரை(ப் பற்றிய வரலாறுகளை) நாம் உமக்கு விவரித்தோம். இன்னும், அவர்களில் சிலரை(ப் பற்றிய வரலாறுகளை) நாம் உமக்கு விவரிக்கவில்லை. (ஃகாபிர் :78)

3- அவர்கள் தொட்டும் வந்துள்ள செய்திகளில் ஆதாரபூர்வமானதை உண்மை என ஏற்றுக்கொள்ள வேண்டும்.

4. அவர்களில் எமக்கு அனுப்பப்பட்ட தூதர் கொணடு வந்த சட்டத்தின் (ஷரீஆவின்) படியே நாம் செயல்பட வேண்டும். அவர்தான் அனைத்து மக்களுக்கும் அனுப்பப்பட்ட இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்களாவர்.

 

 

 

 

5) இறுதி நாளை விசுவாசம் கொள்ளுதல் (மறுமை நாளை நம்புதல்) :

அது விசாரணைக்காகவும், கூலி வழங்கப்படுவதற்காகவும் மக்கள் மீளெழுப்பப்படும் மறுமை நாளாகும். சுவனவாதிகள் தமது இருப்பிடங்களிலும், நரக வாதிகள் தமது இருப்பிடங்களிலும் நிலையாகத் தங்கும் அந்நாளிற்குப் பிறகு வேறு நாளில்லை என்பதனாலேயே இறுதி நாள் எனப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இறுதி நாளை ஈமான் கொள்வது மூன்று அம்சங்களை உட்பொதிந்துள்ளது:

1. மீள எழுப்பப்படுவதை ஈமான் கொள்ளல்.

அதாவது, இரண்டாவது ஸூர் ஊதப்பட்டதும் இறந்தவர்களுக்கு மீண்டும் உயிரளிக்கப்படுவதையே இது குறிக்கின்றது. அந்நாளில் மனிதர்கள் உலகத்தாரின் இறைவன் முன், பாதணியற்றவர்களாகவும், நிர்வாணமானவர்களாகவும், கத்னா செய்யப்படாதவர்களாகவும் எழுந்து நிற்பார்கள். அல்லாஹ் கூறுகிறான்:

﴿كَمَا بَدَأْنَا أَوَّلَ خَلْقٍ نُعِيدُهُ ‌وَعْدًا ‌عَلَيْنَا إِنَّا كُنَّا فَاعِلِينَ 104﴾

"படைப்புகளை முதல் முறையாக நாம் படைத்தது போன்றே அவர்களை மீண்டும் உருவாக்குவோம். இது நம்மீது கடமையான வாக்காகும். நிச்சயமாக நாம் (இதை) செய்(து முடிப்)பவர்களாகவே இருக்கிறோம்". (அல்அன்பியாஃ : 104).

ஆ- விசாரணை மற்றும் கூலி வழங்குவதை ஈமான் கொள்ளல்:

அதாவது, அடியான் தனது செயல்களுக்காக விசாரணை செய்யப்படுவான், அதற்கேற்ப கூலி வழங்கப்படும். இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான் :

﴿إِنَّ إِلَيۡنَآ إِيَابَهُمۡ 25 ثُمَّ إِنَّ عَلَيۡنَا حِسَابَهُم 26

"நிச்சயமாக அவர்களின் திரும்புதல் நம் பக்கம்தான் இருக்கிறது.

பிறகு, நிச்சயமாக அவர்களை விசாரிப்பது நம் மீதே பொறுப்பாக இருக்கிறது". (அல் gஃகாஷியா : 25-26)

இ-  சுவனம் மற்றும் நரகத்தை நம்புதல்.

அவை படைப்புகளின் நிரந்தர முடிவாகும்; சுவர்க்கம், அல்லாஹ் இறையச்சத்துடன் வாழும் நல்லடியார்களுக்காக, அவனுக்கும் அவனது தூதருக்கும் ﷺ கட்டுப்பட்டு வாழ்ந்தவர்களுக்காக தயார் செய்து வைத்துள்ள இன்ப வீடாகும். அங்கு கண்கள் காணாத, காதுகள் கேட்டிராத, எந்த மனிதனின் சிந்தையிலும் தோன்றியிராதவை உள்ளன.

நரகைப் பொறுத்தவரை,  அது வேதனைக்குரிய இடமாகும், இது, அல்லாஹ்வை நிராகரித்து அவனது தூதர்களுக்கு மாறுசெய்து அநீதி இழைத்துக் கொண்டிருந்த நிராகரிப்பாளர்களுக்கு தயார் செய்யப்பட்டுள்ள இடமாகும். அதில் உள்ள பல்வகை வேதனைகளும் தண்டனைகளும் எந்த மனிதனின் சிந்தையிலும் தோன்றாதவையாக இருக்கும்.

6- நன்மை தீமை இறைவிதியின் படியே நடக்கும் என்பதை நம்புதல் :

விதியால் குறிக்கப்படுவது : அல்லாஹ்வின் முன்னைய அறிவின் படியும், அவனது மதிநுட்பத்திற்கமையவும், நிகழவிருக்கும் விடயங்களை அவன் நிர்ணயித்துவிட்டான் என நம்புதல்.

விதியை விசுவாசிப்பது நான்கு விடயங்களை உட்பொதிந்துள்ளது :

1- அறிவு: அதாவது அல்லாஹ்வின் அறிவில் ஈமான் கொள்ளுதல். அவன் நிகழ்ந்தவற்றையும் நிகழப் போகின்றவற்றையும் அவை எவ்வாறு நிகழும் என்பதையும் சிறிய பெரிய விடயங்கள் அனைத்தையும் பொதுவாகவும் விவரமாகவும், ஆதியிலிருந்தே என்றென்றும் நன்கறிகிறான் என நம்புதல். அவன் தூய்மையானவன், நிகழாத ஒன்று நிகழ்ந்திருந்தால் அது எவ்வாறு இருக்கும் என்பதை அறிந்தவன். அல்லாஹ் கூறுகின்றான் :

﴿‌وَلَوۡ رُدُّواْ لَعَادُواْ لِمَا نُهُواْ عَنۡهُ ...﴾

"(அவர்கள் உலகத்திற்கு) திருப்பி அனுப்பப்பட்டால், அவர்கள் எதை விட்டு தடுக்கப்பட்டார்களோ அதற்கே திரும்புவார்கள்". (அல்அன்ஆம்: 28).

2- எழுதுதல்: மறுமை நாள்வரையில் நிகழும் அனைத்து விடயங்களின் அளவுகளை அல்லாஹ் எழுதி வைத்துள்ளான், அல்லாஹ் கூறுகிறான்:

﴿أَلَمۡ تَعۡلَمۡ أَنَّ ٱللَّهَ يَعۡلَمُ مَا فِي ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِۚ إِنَّ ذَٰلِكَ فِي كِتَٰبٍۚ إِنَّ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٞ﴾

"(நபியே!) நிச்சயமாக அல்லாஹ், வானத்திலும் பூமியிலும் உள்ளவற்றை நன்கறிவான் என்பதை நீர் அறியவில்லையா? நிச்சயமாக இவை (அனைத்தும்) ‘லவ்ஹுல் மஹ்பூல்’ எனும் பதிவேட்டில் இருக்கிறது. நிச்சயமாக இது அல்லாஹ்விற்கு மிக சுலபமானதே!". (அல் ஹஜ் : 70)

3. நாட்டம்: இந்த பிரபஞ்சத்தில் அல்லாஹ் தஆலா நாடியவையே நிகழும் என ஈமான் கொள்வது. அல்லாஹ் கூறுகிறான்:

﴿وَرَبُّكَ يَخۡلُقُ مَا يَشَآءُ وَيَخۡتَارُ ...﴾

"இன்னும், உமது இறைவன் தான் நாடுவதை படைக்கிறான். இன்னும், (தான் விரும்பியவர்களை நேர்வழிக்கு) தேர்ந்தெடுக்கிறான்". (அல்கஸஸ் : 68). மனிதனுக்கு ஒரு நாட்டம் உண்டு, ஆனால் அது அல்லாஹ்வின் நாட்டத்திற்குப் புறம்பாக அமையாது, அல்லாஹ் கூறுகின்றான் :

﴿وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّ ٱلۡعَٰلَمِينَ 29

"அகிலத்தார்களின் இறைவனான அல்லாஹ் நாடினால் தவிர, (நீங்கள் நல்லறிவு பெற) நாடமாட்டீர்கள்". (தக்வீர் : 29).

4. படைப்பு : அல்லாஹ் அனைத்து படைப்புகளையும், நன்மையும் தீமையும் உட்பட அவற்றின் செயல்களையும் படைத்தான் என்பதையும் நம்புதல். அல்லாஹ் கூறுகிறான்:

﴿ٱللَّهُ خَٰلِقُ كُلِّ شَيۡءٖۖ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ وَكِيلٞ 62

"அல்லாஹ்தான் எல்லாவற்றுக்கும் படைப்பாளன் ஆவான். அவன்தான் எல்லாவற்றையும் (கண்காணித்து) பாதுகாப்பவன் ஆவான்". ( அஸ்ஸுமர் : 62)

இந்த படித்தரங்கள் பின்வரும் கவிதை வரியில் உள்ளடக்கப்பட்டுள்ளன:

அறிவு, பதிவும், நம் இறைவனின் நாட்டமும், படைப்பும் அவனது உருவாக்கமும் ஆகும்.

மூன்றாம் பகுதி : அல் இஹ்ஸான்:

இஹ்ஸான்: அது ஒரே ஒரு அடிப்படையாகும்; அதாவது, அல்லாஹ்வை நீ பார்ப்பது போல் வணங்குவதாகும். நீ அவனைப் பார்க்காவிட்டாலும் அவன் உன்னைப் பார்க்கிறான்.

அதாவது, ஒருவன் அல்லாஹ்வுக்கு செய்யும் வணக்கங்களை, அவன் அல்லாஹ்வின் முன்னிலையில் நிற்கின்றது போல் செய்வதாகும், அது, அவனுக்கு முழுமையாக அஞ்சி, அவனிடம் மீள்வதைக் கட்டாயப்படுத்தும். நபி (ஸல்) அவர்களின் ஸுன்னாவின் பிராகாரம் வணக்கத்தை நிறைவேற்றுவதையும் வேண்டி நிற்கும்.

இஹ்ஸான் எனும் பண்பிற்கு இரண்டு படி நிலைகள் உண்டு. இந்த இஹ்ஸான் எனும் பண்பில் அதற்குரியவர்கள் இரண்டு மாறுபட்ட நிலைகளில் உள்ளனர் :

முதலாவது பகுதி : இது உயர்ந்தது, காணும் நிலை; அதாவது, அடியான் தன் உள்ளத்தில் அல்லாஹ்வை நேரடியாகப் பார்ப்பது போல் செயல்படவேண்டும், இதனால் உள்ளம் ஈமான் மூலம் ஒளிவீசும், மறைநிலையை நேரடியாகப் பார்ப்பது போல் ஆகிவிடும்.

இரண்டாம் நிலை: உளத்தூய்மை மற்றும் அல்லாஹ் கண்காணிக்கின்றான் என்ற உணர்வு, அதாவது, அடியான் அல்லாஹ் தன்னை எப்போதும் பார்த்துக்கொண்டிருக்கின்றான், தன்னுடைய செயல்களை அவன் அறிந்திருக்கின்றான் என்பதை மனதில் கொண்டு செயல்படவேண்டும். இதனை மனதில் கொண்டு செயல்பட்டால், அவன் அல்லாஹ்விற்கு உண்மையானவனாக இருக்கின்றான்என்பது அர்த்தமாகும்.

நான்காவது பகுதி: அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்தின் அடிப்படைக் கோட்பாடுகளின் சுருக்கம்:

முதலாவது : குர்ஆன் மற்றும் ஸுன்னாவில் கூறப்பட்டவற்றை உள்ரங்கமாகவும் வெளிப்படையாகவும் பின்பற்றுதல், மேலும், மனிதர்களின் வார்த்தைகளை அல்லாஹ்வின் வார்த்தைகளுக்கும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வார்த்தைகளுக்கும் மேலாக வைக்காதிருத்தல்.

இரண்டாவது: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தோழர்கள் விடயத்தில் உள்ளங்களும் நாவுகளும் தூய்மையானவையாக இருப்பது, அவர்கள் நபியவர்களின் பின்னரான கலீபா அபூபக்கர், பின்னர் உமர், பின்னர் உஸ்மான், பின்னர் அலி (ரழியல்லாஹு அன்ஹும்) ஆகியோராவார்கள் என்று கருதுகிறார்கள்.

மூன்றாவதாக : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது குடும்பத்தாரின் மீது அன்பு கொள்ளல், அவர்களை ஆதரித்தல், குறிப்பாக அவர்களுள் நல்லவர்களை.

நான்காவது: தலைவர்களும் ஆட்சியாளர்களும் அநியாயம் செய்தாலும். அவர்களுக்கெதிராக கிளர்ச்சி செய்யாமலிருத்தல், அவர்கள் நல்லவர்களாகவும், ஆரோக்கியமானவர்களாகவும் இருக்க துஆ செய்யப்படவேண்டும்,  அவர்களுக்கெதிராக துஆ செய்யப்படக்கூடாது.  அவர்கள் பாவத்தைச் செய்யுமாறு கட்டளையிடாதவரை, அவர்களுக்கு கீழ்ப்படிவது அல்லாஹ்விற்கு கீழ்ப்படிவது போன்ற ஒரு கடமையாகும், அவர்கள் பாவத்தைச் செய்யுமாறு கட்டளையிட்டால், அதில் அவர்களுக்குக் கட்டுப்படமுடியாது.  அதுவல்லாத ஏனைய நல்ல விடயங்களில் அவர்களுக்கு கட்டுப்பட்டு நடப்பது தொடர வேண்டும்.

ஐந்தாவது: இறைநேசர்களின் அற்புதங்களை நம்புதல், அல்லாஹ் அவர்களின் கைகளில் நிகழ்த்தும் வழமைக்கு மாறான சில விடயங்களே அவையாகும். 

ஆறாவது: ஒரே கிப்லாவை நோக்கித்  தொழுபவர்களை, சாதாரண பாவங்கள் மற்றும் பெரும் பாவங்களுக்காக காபிர்களாகக் கருதமாட்டார்கள், அவ்வாறு செய்பவர்கள் அல் ஹவாரிஜ்கள் ஆகும் ஆனால் பாவங்களுடன் கூட ஈமானிய சகோதரத்துவம் நிலைத்திருக்கிறது, அவர்கள் பாவியைக் குறித்து இவ்வாறு கூறுவார்கள்: அவன் தனது ஈமானால் நம்பிக்கையாளர், ஆனால் தனது பெரும் பாவத்தால் தீயவர்.

 


இரண்டாவது அத்தியாயம்: வணக்க வழிபாடுகளுடன் தொடர்புடையவை

முதலாவது ஆய்வு : சுத்தம் :

மொழியில் சுத்தம் என்பது: புலப்படக்கூடிய மற்றும் மறைமுகமான அசுத்தங்களிலிருந்து தூய்மையாகவும் பரிசுத்தமாகவும் இருப்பதாகும்.

மார்க்கத்தில் சுத்தம் என்பது: தொடக்கை நீக்கி, நஜிஸை அகற்றுதல் ஆகும்.  சுத்தமானது தொழுகையின் திறவுகோளாகும். எனவே, இதனை கற்றுக்கொள்வது, ஒவ்வொரு முஸ்லிமும் கற்றுக்கொள்ள வேண்டிய, போதிய கவனம் செலுத்த வேண்டிய  மார்க்க விடயங்களில் மிக முக்கியமான ஒன்றாகும்.

முதலாவது : நீரின் வகைகள் :

1- பரிசுத்தமானது; இதனைக் கொண்டு சுத்தம் செய்து கொள்ளலாம் அது, தனது அடிப்படை நிலைமையில் தொடர்ந்து இருந்தாலும் சரி,  (உதாரணமாக, மழை அல்லது நதிகள் அல்லது கடல்கள் போன்றவற்றின் நீர்) அல்லது அதன் அடிப்படை நிலையை மாற்றாத, அதன் பெயரை நீக்கிவிடாத அளவு சுத்தமான பொருள் அதனுடன் கலந்தாலும் சரியே! 

2- அசுத்தமானது; அதனைப் பயன்படுத்த அனுமதிக்கப்படாதது, எனவே, அது தொடக்கை அகற்றாது, அசுத்தத்தையும் நீக்காது, இது, நிறம், அல்லது மனம் அல்லது சுவை நஜீஸால் மாற்றமடைந்ததாகும்

இரண்டாவது : நஜாசத் (அழுக்கு)

நஜாஸா: இது ஒரு குறிப்பிட்ட அழுக்காகும், அது போன்றவை தொழுகை நிறைவேறுவதைத் தடை செய்கிறது; உதாரணமாக, சிறுநீர், மலம், இரத்தம் மற்றும் இதர அசுத்தங்கள் போன்றவை. இவை உடல், இடம் மற்றும் ஆடையில் இருக்கக்கூடும்.

அனைத்துப் பொருட்களும் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டது, தூய்மையானது என்பதே அடிப்படை விதியாகும். எந்தவொரு பொருளும் அசுத்தமானது எனக் கூறுபவர் அதற்கான ஆதாரத்தை வழங்க வேண்டும். காரல், மனிதனின் வியர்வை, கழுதையின் வியர்வை ஆகியவை அசுத்தமானவை அல்ல. அவை அறுவறுப்பாக இருந்தாலும் தூய்மையானவையே. அசுத்தம் அனைத்தும் அறுவறுப்பானதே; ஆனால் அறுவறுப்பான அனைத்தும் அசுத்தமானவை அல்ல.

அசுத்தம் மூன்று நிலைகளாகப் பிரிக்கப்படுகிறது:

முதலாவது : மிகுந்த அசுத்தம்;

இதற்கு உதாரணம் : நாய் நக்கிய அசுத்தம், அதை சுத்தம் செய்யும் முறையாவது: ஏழு தடவைகள் கழுவ வேண்டும், அதில் முதலாவது தடவை மண்ணைப் பயண்படுத்தல் வேண்டும்.

இரண்டாவது : இலகுவான நஜாஸத்:

உதாரணமாக, உடை போன்றவற்றில் படும், பால் மாத்திரம் அருந்தும் சிறுகுழந்தையின் சிறுநீர். அதனை சுத்தமாக்கும் முறை : அவ்விடம் முழுமையாக நீரில் நனையும் வரை தண்ணீர் தெளிக்க வேண்டும், பிழிந்துவிடுவதோ, சுரண்டிவிடுவதோ கட்டாயமல்ல. 

மூன்றாவது : மிதமான அசுத்தம்:

உதாரணமாக, மனிதனின் சிறுநீர் மற்றும் மலம் போன்றவை. பெரும்பாலான அசுத்தங்கள், நிலம் அல்லது உடை போன்றவற்றில் படும் போது இந்த நிலையில் தான் அடங்கும்.  அதனை சுத்தம் செய்யும் முறை: நஜீஸின் 'அசுத்தத்தின்' அடையாளத்தை அகற்றி, அதன் இடத்தை தண்ணீர் அல்லது பிற சுத்திகரிப்பு முறைகளால் சுத்தம் செய்வது.

ஆதாரங்கள் அடிப்படையில் அசுத்தமானவை என அறியப்பட்ட சில  :

1- மனிதனின் சிறுநீர் மற்றும் சலம்.

2- மதீ மற்றும் வதி5.

3- உண்ணப்படாத மிருகத்தின் மலம்.

4- மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தம்.

5- நாயின் உமிழ்நீர்.

6. தானாக செத்தவை, இதிலிருந்து பின்வருவனவை விலக்கப்படும்:

அ. இறந்த மனிதன்.

ஆ. இறந்த மீனும், வெட்டுக்கிளியும்.

இ - ஓடும் இரத்தமற்ற இறந்த பிராணிகள். உதாரணமாக, ஈ, எறும்பு, தேனீ போன்றவை.

ஈ. தானாக செத்தவையின் எலும்புகள், கொம்புகள், நகங்கள், முடிகள், இறகுகள் ஆகியவை.

நஜிஸ் 'அழுக்கை' சுத்தம் செய்யும் முறை :

1- தண்ணீர், இதுவே நஜாஸத்தை சுத்தம் செய்வதில் அடிப்படையாகும். அதற்கு மாற்றாக வேறு எதையும் பயன்படுத்தக் கூடாது.

2- நஜிஸான பொருட்களை அல்லது நஜிஸானவையாக மாறிய பொருட்களை சுத்தம் செய்வதற்கான மார்க்க விதிகள் :

1) - இறந்த பிராணியின் தோலை பதனிடுவதன் மூலம் சுத்தமாக்கலாம்.

2) நாய் (வாய்விட்ட) நக்கிய பாத்திரத்தை சுத்தம் செய்ய; ஏழு தடவைகள் கழுவ வேண்டும்; அதில் முதலாவது தடவை மண்ணைப் பயன்படுத்தல் வேண்டும்.

3) மாதவிடாய் இரத்தம் உடையில் படிந்தால், முதலில் அதை தேய்த்துவிட்டு, பின்னர் தண்ணீரால் பிழிந்து, பின் தெளிக்க வேண்டும்; இதற்குப் பிறகும் அடையாளம் இருந்தால் அது பாதிக்காது.

4) பெண்களின் உடையின் கீழ் நுனிகள்,  அவர்கள் அடுத்து மிதிக்கும் தூய்மையான நிலத்தின் மூலம் சுத்தமாகும்.

5) பால் மாத்திரம் அருந்தும் சிறிய ஆண்குழந்தையின் சிறுநீரை விட்டும் ஆடையை, நீரைத் தெளிப்பது கொண்டும், அவ்வாறான பெண்குழந்தையின் சிறுநீரை விட்டும் ஆடையை, கழுவுவது கொண்டும் சுத்தம் செய்தல். 

6) உடையை மதியை விட்டும் சுத்தப்படுத்த, தண்ணீரை அந்த இடத்தில் தெளிக்க வேண்டும்.

7) பாதத்தின் அடிப்பகுதியை தூய்மையான நிலத்தில் துடைத்து சுத்தப்படுத்திக் கொள்ளல் .

8) நிலத்தில் உள்ள அசுத்தத்தை, அந்த இடத்தில் ஒரு வாளி தண்ணீரை ஊற்றுவது கொண்டு, அல்லது சூரியன் அல்லது காற்றால் உலர்வதற்கு அதை விடுவது கொண்டு சுத்தம் செய்யலாம். நஜீஸின் அடையாளம் நீங்கியவுடன் அது சுத்தமாகும்.

மூன்றாவது : தொடக்கு ஏற்பட்டுள்ள நிலையில் செய்யத் தடைசெய்யப்பட்ட செயல்கள் :

சிறு தொடக்கு அல்லது பெரு தொடக்கு  ஏற்பட்டவருக்கு தடைசெய்யப்பட்டவை:

1) கடமையான அல்லது உபரியான தொழுகைகள்; நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள் :

«لَا يَقْبَلُ اللَّهُ صَلَاةً بِغَيْرِ طُهُورٍ».

“வுழூ இன்றி தொழுகையை அல்லாஹ் ஏற்க மாட்டான்".6

2- அல்குர்ஆனைத் தொடுதல்; அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அம்ரு பின் ஹஸ்ம் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் வருவதாவது :

«لَا يَمَسُّ الْقُرْآنَ إِلَّا طَاهِرٌ».

“சுத்தமானவர்களைத் தவிர குர்ஆனைத் தொட வேண்டாம்".7

3- கஃபாவை தவாப் செய்தல்; நபி (ஸல்) கூறுகிறார்கள் :

«الطَّوَافُ بِالْبَيْتِ صَلَاةٌ، إِلَّا أَنَّ اللَّهَ أَبَاحَ فِيهِ الْكَلَامَ».

«கஃபாவை தவாப் செய்தல் ஒரு தொழுகையாகும். ஆனால் அதில் பேசுவதற்கு அல்லாஹ் அனுமதி அளித்துள்ளான்»8. நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தவாஃப்பிற்காக வுழூ செய்தார்கள், நபி (ஸல்) அவர்கள் மாதவிடாய் உள்ள பெண்கள் தூய்மையடையும் வரை கஃபாவை வலம் வருவதை தடுத்துள்ளார்கள் என்பது ஆதாரப் பூர்வமாக வந்துள்ளது.

 பெருந்தொடக்கு ஏற்பட்டவருக்கு மாத்திரம் ஹராமானவை:

1- அல்குர்ஆன் ஓதுதல்; அலீ ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள் :  ஜனாபாவைத் (குளிப்புக் கடமையான நிலை) தவிர வேறு எதுவும், நபி (ஸல்) அவர்களுக்கு குர்ஆனை ஓதத் தடையாக இருக்காது.9

2. வுழூ இல்லாமல் பள்ளிவாசலில் தங்குதல்; அல்லாஹ் கூறியுள்ளான் :

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَقۡرَبُواْ ٱلصَّلَوٰةَ وَأَنتُمۡ سُكَٰرَىٰ حَتَّىٰ تَعۡلَمُواْ مَا تَقُولُونَ وَلَا جُنُبًا إِلَّا عَابِرِي سَبِيلٍ حَتَّىٰ تَغۡتَسِلُواْ...﴾

"நம்பிக்கையாளர்களே! நீங்கள் போதையுற்றவர்களாக இருக்கும் போது நீங்கள் கூறுவதை தெளிவாக அறிகின்ற (சுதாரிப்பு நிலைக்கு நீங்கள் வருகின்ற) வரை தொழுகையை நெருங்காதீர்கள். இன்னும், (நீங்கள் பெருந்தொடக்குள்ள) முழுக்காளிகளாக இருக்கும் போதும் நீங்கள் குளிக்கும் வரை (தொழுகையை நெருங்காதீர்கள்)...". (அந்நிஸா : 43).

எனவே, பெருந்தொடக்குள்ளவராக இருப்பவர் குளித்து வுழூச் செய்தால் பள்ளிவாயலில் தங்குவதற்கு அனுமதி உண்டு; அதேபோல, பெருந்தொடக்குடையவராக இருப்பவர் பள்ளிவாயிலில் உட்காராமல்  கடந்து செல்வதற்கு அனுமதி உண்டு.

நான்காவது: இயற்கை தேவைகளை நிறைவேற்றுவதன் ஒழுங்குகள் :

மலசலம் கழிக்கும் போது விரும்பத்தக்கவை:

1- கழிப்பிடத்தில் மக்கள் பார்வையை விட்டு தூரமாகவும் மறைந்தும் இருத்தல்.

2- நுழையும் போது ஓத வேண்டிய பின்வரும் துஆவை ஓதுதல்.

«اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبْثِ وَالْخَبَائِثِ».

அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக மினல் குப்ஸி வல் கபாஇஸ்".10 (பொருள் : யாஅல்லாஹ் ! ஆண் பெண் ஷைத்தான்களை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்).

மலசலம் கழிக்கையில் கடைப்பிடிக்க வேண்டியவை:

1- சிறுநீரிலிருந்து சரியாக சுத்தம் செய்துகொள்ளல்.

2- உடலில் அவசியம் மறைக்க வேண்டிய பகுதியை மறைத்தல்.

மலசலம் கழிக்கையில் தடை செய்யப்பட்டவை:

1- கிப்லாவை முன்னோக்குதல் அல்லது பின்னோக்குதல்.

2- மக்கள் நடந்துசெல்லும் பாதைகள் மற்றும் அவர்களது பொது இடங்களில் மலசலம் கழிப்பது.

3. தேங்கி நிற்கும் நீரில் சிறுநீர் கழித்தல்.

மலசலம் கழிக்கும் போது விரும்பத்தகாதவை:

1- மலசலம் கழிக்கும் போது வலது கையால் ஆணுறுப்பை தொடுதல்.

2- நீரினாலும் கற்களாலும் சுத்தம் செய்யும் போது வலது கையைப் பயன்படுத்தல்.

3- மலசலம் கழிக்கும் போது பேசுவது, குறிப்பாக அல்லாஹ்வை நினைவுகூர்வது விரும்பத்தக்கதல்ல.

ஐந்தாவது: நீரினாலும் கற்களாலும் சுத்தம் செய்வதற்கான சட்டங்கள்:

இஸ்தின்ஜா: சிறுநீர் கழித்த பின் நீரைப் பயன்படுத்தி அதன் அடையாளத்தை அகற்றுதல்.

இஸ்திஜ்மார்: முன், பின் துவாரத்திலிருந்து வெளியேறுபவற்றை  நீர் அல்லாத கல், திஷூக்கள் போன்றவற்றால் அகற்றுதல்.

இஸ்திஜ்மாருக்காகப் பயன்படுத்தப்படும் பொருளின் நிபந்தனைகள் :

1- அனுமதிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும்.

2- தூய்மையானதாக இருத்தல் வேண்டும்.

3- சுத்தப்படுத்தக்கூடியதாக இருத்தல் வேண்டும்.

4- அது எலும்பாகவோ விட்டையாகவோ இருக்கக் கூடாது.

5- அல்லாஹ்வின் நாமம் உள்ள பத்திரங்கள் போன்ற, மதிக்கத்தக்கவற்றைக் கொண்டு  செய்யக்கூடாது.

இஸ்திஜ்மார் மாத்திரம் செய்வதற்கு பின்வரும் இரண்டு நிபந்தனைகளும் அவசியமாகும்: 

1- வெளியேறும் சிறுநீர் வழக்கமான இடத்தை மீறாதிருத்தல்.

2- இஸ்திஜ்மாரானது சுத்திகரிக்கும் மூன்று கற்களால் அல்லது அதற்கு மேல் செய்யப்பட வேண்டும்.

ஆறாவது : வுழூவின் சட்டங்கள்:

மூன்று வழிபாடுகளுக்கு வுழு கட்டாயம்:

1) பர்ழான அல்லது சுன்னத்தான தொழுகைகள்

2) அல்குர்ஆனை தொடுதல்.

3- தவாப்.

வுழூவின் நிபந்தனைகள்:

1- முஸ்லிமாக இருத்தல்.

2- புத்தி சுவாதீனமுள்ளவராக இருத்தல்

3- நல்லதையும் கெட்டததையும் பிரித்தறிந்து விளங்கும் பருவத்தை அடைந்திருத்தல்.

4- நிய்யத் : அதன் இடம் உள்ளமாகும், அதை வாயால் கூறுவது பித்அத் ஆகும்  வுழூ செய்ய விரும்பும் யாரும் நிய்யத் வைத்துவிட்டார் என்பது அர்த்தமாகும், வுழூ உறுப்புகளை, குளிர்ச்சி பெரும் நோக்கில்  அல்லது சுத்தம் செய்யும் நோக்கத்துடன் கழுவுதல் வுழூ அல்ல.

5- வுழுவை முழுமையாக நிறைவேற்றும் வரை அதை நிறுத்துவதை நோக்கமாகக் கொள்ளாமலிருத்தல்.

6- வுழு கடமையாக்கும் காரணம் நிற்றல்.  இதிலிருந்து விதிவிலக்கப்படுபவர்கள்: தொடரான சிறுநீர் வெளியேறும் நபர், மற்றும் இஸ்திஹாழா (தொடர் உதிரப்போக்கு) கொண்ட பெண். 

7- மலசலம் கழித்தவர் நீரைக் கொண்டோ, கற்கள் போன்றவற்றைக் கொண்டோ சுத்தம் செய்திருத்தல். 

8- நீர் தூய்மையானதாகவும் மற்றும் அனுமதிக்கப்பட்டதாகவும் இருத்தல் .

9- நீர் தோலுக்கு செல்வதைத் தடுக்கக்கூடியதை அகற்றுதல்.

10- நிரந்தரத் தொடக்கு கொண்டிருப்பவர் தொழுகைக்குரிய நேரத்தை அடைந்திருத்தல், 

வுழூவின் பர்ழுகள் (கடமைகள்):

1- முகத்தைக் கழுவுதல். அதில்: வாய்கொப்பளித்தல், நாசிக்கு நீர் செலுத்தல் போன்றவை அடங்கும்.

2- முழங்கை உட்பட இரு கைகளையும் கழுவுதல்.

3- இரு காதுகள் உட்பட தலை முழுவதையும் மஸ்ஹு செய்தல்.

4- கரண்டைக்கால் உட்பட இரு கால்களையும் கழுவுதல்.

5- வுழூ உறுப்புக்களில் ஒழுங்கை பேணுதல்.

6- தொடராகச் செய்தல்: உறுப்புகளுக்கிடையில் நீண்ட இடைவெளி இருக்கக் கூடாது.

வுழூ செய்யும் முறை:

1- பிஸ்மில்லாஹ் கூறுதல்.

2- இரு கைகளையும் மணிக்கட்டு வரை மூன்று முறை கழுவுதல்.

3- முகத்தை மூன்று முறை கழுவுதல். அதில் வாய்கொப்பளித்தல், நாசிக்கு நீர் செலுத்தல் போன்றவை அடங்கும்.

4- முதலில் வலது கை, பின்னர் இடது கை என இரு கைகளையும் முழங்கை வரை மூன்று முறை கழுவ வேண்டும், 

5- இரு காதுகளுடன் சேர்த்து தலை முழுவதையும் மஸ்ஹு செய்தல்.

6- கணுக்கால் வரை முதலில் வலது காலையும், பின்னர் இடது காலையும் மூன்று முறை கழுவுதல்.

வுழூவை முறிக்கக் கூடியவை:

1- முன் பின் துவராரங்களிலிருந்து எதாவது வெளியேறுதல், இதில் சிறுநீர், காற்று, மலம் போன்றவை அடங்கும்.

2- உடலிலிருந்து அதிகளவு வெளிப்படும்  அசுத்தம்.

3- தூக்கம் அல்லது பிறவற்றால் புத்தி நீங்குதல்.

4- முன் பின் துவாரங்களை கையால் திரையின்றி தொடுதல்.

5- ஒட்டக இறைச்சி சாப்பிடுல்.

6- இஸ்லாத்தை துறந்து செல்லல், (அல்லாஹ் நம்மையும் முஸ்லிம்களையும் அதிலிருந்து காப்பாற்றுவானாக.)

ஏழாவது: பாதணி மற்றும் காலுரை (சொக்ஸ்) மீது மஸ்ஹ் செய்வதற்கான விதிகள்:

1. 'ஹுப்' என்பது: தோல் மற்றும் அதற்கு ஒத்த பொருட்களால் கால்களில் அணியப்படும் பாதணிகளை குறிக்கும்.

2- 'ஜவ்ரப்' என்பது காலில் அணிவதற்கு கம்பளி அல்லது பருத்தி போன்றவற்றால் செய்யப்பட்ட காலுரையாகும்.

அவற்றின் மீது மஸ்ஹ் செய்வதற்கான நிபந்தனைகள்:

1- முழுமையான தூய்மையான நிலையில் அவை அணியப்பட்டிருத்தல் வேண்டும்.

2- கணுக்கால்கள் உட்பட இரு கால்களையும் மூடிக் கொள்ளும் வகையில் மறைக்க வேண்டும்.

3-அப்பாதணிகள் தூய்மையானதாக இருத்தல் வேண்டும்.

4- மஸ்ஹ் செய்வது குறிப்பிடப்பட்ட காலப்பகுதிக்குள் இருக்க வேண்டும்.

5- வுழுவுக்கு பதிலாக மாத்திரமே மஸ்ஹ் செய்தல் வேண்டும், குளிப்புக்காக அல்ல.

6- ஹுப் போன்றவை அனுமதிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அபகரிக்கப்பட்டதாக அல்லது ஆண்களைப் பொறுத்தவரை பட்டால் ஆனதாக இருந்தால், அதன்மீது மஸ்ஹு செய்வது அனுமதிக்கப்படாது, ஏனெனில் ஹராமானவற்றின் மூலம் சலுகையை அனுபவிப்பது அனுமதிக்கப்படாது.

மஸ்ஹ் செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட காலம்:

ஊர்வாசிக்கு: ஒரு நாள், பிரயாணிக்கு: மூன்று நாட்கள்

மஸ்ஹு செய்யும் முறை:

கையை தண்ணீரில் நனைத்து, காலுறை அல்லது பாதணியின் மேல் பகுதியை, பாத விரல்களிலிருந்து கெண்டைக் கால்வரை, ஒரு தடவை மாத்திரம் மஸ்ஹு செய்ய வேண்டும்.

மஸ்ஹை முறிக்கும் காரியங்கள்:

1- மஸ்ஹின் காலம் முடிவடைதல்.

2- காலுறைகள் இரண்டையும் அல்லது ஒன்றைக் கழற்றுதல்

3. பெருந்தொடக்கு ஏற்படல்.

காலணி (ஹுப்பின்) மீது மஸ்ஹ் செய்வதன் சட்டம் :

இது ஒரு சலுகையாகும். மேலும் பாதணிகளை அகற்றி கால்களைக் கழுவுவதற்கு பதிலாக இதைச் செய்வது சிறந்ததாகும்; அல்லாஹ் வழங்கியுள்ள சலுகையை ஏற்றுக்கொள்வதாகவும், நபி ﷺ அவர்களைப் பின்பற்றுவதாகவும், புதுமைகளை அறிமுகப் படுத்துவோருக்கு மாறு செய்வதாகவும் இது அமையும்.

3- காயக்கட்டுகள், கட்டுக்கள் மற்றும் பிளாஸ்டர்களில் மஸ்ஹு செய்தல் :

'ஜபீரா' –( bandage) என்பது முறிவுகள் மீது கட்டப்படும் ப்லாஸ்டர் அல்லது குச்சிகள் போன்றவை.

'அஸ்ஸாயிப்' என்பது காயம், அடிபட்ட இடம் அல்லது எரிந்த இடத்தில் கட்டப்படும் துணி போன்றவற்றைக் குறிக்கிறது.

'லசூக்' –( plaster) என்பது காயங்கள் அல்லது புண்கள் குணமடைய ஒட்டப்படும் பொருள்.

அதன் மீது மஸ்ஹ் செய்வதன் சட்டம் :

தேவை இருக்கும் போது, அவை இருக்கும் காலம் வரை அனுமதிக்கப்படும், ஆனால் தேவையின் இடத்தை மீறக்கூடாது.

தேவை முடிந்தவுடன் அல்லது அதை அகற்றுவதால் எந்தவித சிரமம் அல்லது பாதிப்பு ஏற்படாதபோது அனுமதிக்கப்படாது.

அதன் மீது மஸ்ஹ் செய்யும் முறை:

அதனைச் சூழாகக் கழுவி, அனைத்து பக்கங்களிலும் தடவ வேண்டும். வுழூவின் பகுதிகளைத் தாண்டி எதையும் மஸ்ஹு செய்யக் கூடாது.

எட்டாவதாக : தயம்மும் பற்றிய விதிகள்:

தயம்மும் என்பது : சுத்தமாகிக்கொள்ளல் என்ற நிய்யத்துடன் மண்ணினால் முகத்தையும், இரு உள்ளங்கைகளையும் ஒரு குறிப்பிட்ட முறையில் (மஸ்ஹு செய்தல்) தடவிக்கொள்வதாகும்.

அதன் சட்டம் :

நீர் கிடைக்காத போது, அல்லது அதை பயன்படுத்த முடியாத போது வுழூ மற்றும் குளிப்புக்குப் பதிலாக தயம்மும் செய்வது கடமையாகும்.

அது மார்க்கமாக்கப்பட்டிருப்பதன் நோக்கம்   :

தயம்மும் நபியவர்களின் சமூகத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று, இது முந்தைய சமூகங்களில் அறியப்படாததாக இருந்தது, இது இச்சமூகத்திற்கு அல்லாஹ் வழங்கியுள்ள விசாலமும், பரோபகாரமும் ஆகும்.

தயம்மும் செய்வதற்கு ஷரீஆ அனுமதித்த சந்தர்ப்பங்கள் :

1. தண்ணீர் இல்லாத நிலையில், அது ஊரில் இருக்கும் நிலையில் கிடைக்காது போனாலும், பயணத்தில் இருக்கும் போது தேடிக் கிடைக்காமல் போனாலும் சரியே.

2. அவனிடம் குடிப்பதற்கோ சமைப்பதற்கோ தேவையான தண்ணீர் இருந்து, அதனை சுத்தம் செய்வதற்காக பயன்படுத்தினால் அவனது தேவைக்கு பாதிப்பாக இருக்கும் என்ற நிலையில்.  அதாவது, தனக்கோ, மதிக்கப்படவேண்டிய மற்றொரு மனிதருக்கோ அல்லது மிருகத்திற்கோ தாகம் ஏற்படலாம் என அஞ்சும் சந்தர்ப்பத்தில்.

3. தண்ணீரைப் பயன்படுத்துவதால் உடலில் நோயின் காரணமாக பாதிப்பு ஏற்படலாம் என அஞ்சும், அல்லது குணமடைவதில் தாமதம் ஏற்படலாம் என்ற நிலையிலுள்ளவர்.

4. நோயின் காரணமாக நகர முடியாத நிலையில் நீரைப் பயன்படுத்த முடியாத பட்சத்தில், வுழூச் செய்ய உதவக்கூடிய யாரும் இல்லாமல் தொழுகையின் நேரம் தவறிவிடும் என்று பயந்தால்.

5. தண்ணீரைப் பயன்படுத்துவதால் குளிர் ஏற்படலாம் என அஞ்சும் நிலையில், அதை சூடாக்க எதுவும் இல்லாதபோது, மண்ணின் மூலம் தயம்மும் செய்து தொழலாம்.

தயம்மும் செய்யும் முறை:

தனது விரல்களைப் பிரித்து, இரு கைகளாலும் மண்ணை அடித்து, பின்னர் முகத்தை உள்ளங்கைகளால் தடவிக் கொள்ள வேண்டும். இரு மணிக்கட்டுகளையும் உள்ளங்கைகளால் மஸ்ஹு செய்ய வேண்டும். முகத்தையும் மணிக்கட்டையும் முழுமையாக மஸ்ஹு செய்ய வேண்டும்.

தயம்முமை முறிக்கும் காரியங்கள்:

1- தயம்மும் தண்ணீர் இல்லாத காரணத்தால் செய்யப்பட்டிருந்தால், நீர் கிடைத்தால் அது முறிந்து விடும்.  நீரைப் பயன்படுத்துவதற்கு சக்தி இல்லாத போது, தயம்மும் செய்திருந்தால், அதைப் பயன்படுத்துவதற்கு சக்திபெற்றதுடன் முறிந்துவிடும்.

2- வுழுவை முறிக்கும் காரியங்களில் ஏதேனும் ஒன்று அல்லது பெருந்தொடக்கு, மாதவிடாய், பிரசவ தீட்டு போன்ற குளிப்பை கடமையாக்கும் காரியங்களில் ஏதேனும் ஒன்று நிகழும் போது. 

நீர் மற்றும் தயம்முமைப் பயன்படுத்த முடியாதவருக்கான சட்டம் : 

நீர் மற்றும் மண் எதுவும் கிடைக்காத நிலை, அல்லது நீர் அல்லது மண்ணைத் தொட முடியாத நிலை ஏற்பட்டால், அவர் தனது நிலைக்கு ஏற்ப வுழூவும் தயம்மும் இன்றி தொழ வேண்டும்; ஏனெனில் அல்லாஹ் ஒருவருக்கு அவரின் சக்திக்கு அப்பாற்பட்டதை சுமத்துவதில்லை.  பின்னர் தண்ணீர் மற்றும் மண் கிடைத்தாலும் அல்லது அவற்றைப் பயன்படுத்த முடியுமாக இருந்தாலும், அவர் தொழுததை மீண்டும் தொழவேண்டியதில்லை; ஏனெனில் அவர் கட்டளையிடப்பட்டதை நிறைவேற்றியுள்ளார். அல்லாஹ் கூறியுள்ளான் :

﴿...فَٱتَّقُواْ ٱللَّهَ مَا ٱسۡتَطَعۡتُمۡ...﴾

"ஆக, உங்களுக்கு முடிந்தளவு அல்லாஹ்வை அஞ்சுங்கள்!". (அத்தஃகாபுன் : 16). மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,

«إِذَا أَمَرْتُكُمْ بِأَمْرٍ فَأْتُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ».

"நான் உங்களுக்கு ஏவியுள்ள விஷயத்தில் உங்களால் முடியுமன அளவு செய்யுங்கள்".11

குறிப்பு: குளிப்புக் கடமையினால் தயம்மும் செய்து, பின் தண்ணீர் கிடைத்தால், அவர் குளிக்க வேண்டும்.

ஒன்பதாவது : மாதவிடாய் மற்றும் நிபாஸுக்குரிய சட்டங்கள்:

முதலாவது : மாதவிடாய்

இது இயற்கையாக குறிப்பிட்ட காலங்களில் கருப்பையின் அடிப்பகுதியில் இருந்து வெளிப்படும் இரத்தமாகும். பொதுவாக ஒவ்வொரு மாதமும் ஆறு அல்லது ஏழு நாட்கள் இது வெளியேறும். சிலவேளை கூடவோ குறையவோ செய்யலாம்.  அல்லாஹ் பெண்ணில் வைத்துள்ள இயல்புகளுக்கு ஏற்ப, மாதம் நீளவோ குறையவோ வாய்ப்புள்ளது.  

மாதவிடாய் உள்ளவருக்குரிய சட்டங்கள் :

1- மாதவிடாய் ஏற்பட்ட பெண் அவ்வேளையில் தொழுவதும், நோன்பு நோற்பதும் அனுமதிக்கப்பட்டதல்ல, அவ்வாறு அவள் நிறைவேற்றினாலும் அது நிறைவேறாது.

2- மாதவிடாயிலிருந்து சுத்தமாகியவுடன் நோன்பை மட்டும் கழா செய்வாள், தொழுகையை அல்ல.

3- கஃபாவை தவாப் செய்வது அவளுக்கு அனுமதிக்கப்படமாட்டாது.  அல்குர்ஆனை ஓதாமாட்டாள் பள்ளியில் உட்காரமாட்டாள்  4. மாதவிடாய்  நின்று குளிக்கும் வரை கணவர் அவளுடன் உடலுறவு கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.

5. மாதவிடாய் ஏற்பட்ட மனைவியிடமிருந்து, பென்குறியில் உடலுறவு தவிர்த்து, கட்டியணைத்தல், இச்சையோடு தொடுதல் போன்றவற்றின் மூலம் இன்பம் அனுபவிப்பது அனுமதிக்கப்பட்டதாகும்.

6. ஒரு கணவர் தனது மனைவியை மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் வேளையில் விவாகரத்து செய்வது அனுமதிக்கப்படாது.

சுத்தம் என்பது இரத்தம் நிற்றல் ஆகும். இரத்தம் நின்றுவிட்டால், அவள் சுத்தமடைந்து, அவளின் மாதவிடாய் காலம் முடிந்ததாகும். ஆகவே அவள் குளிப்பது கடமையாகும். பின்னர் மாதவிடாய் காரணமாகத் தடை செய்யப்பட்டவற்றை அவள் செய்யத் தொடங்குவாள்.

தூய்மையடைந்த பின்னர் பழுப்பு அல்லது மஞ்சள் நிற நீரை அவள் கண்டால்; அவற்றைப் பொருட்படுத்த வேண்டியதில்லை.

இரண்டாவது : நிபாஸ் :

இது பிரசவத்தின் போதும் அதன் பின்பும் கர்ப்பப்பையில் இருந்து  வெளிப்படும்  இரத்தமாகும். இது கர்ப்ப காலத்தில் தேங்கியிருந்த இரத்தத்தின் மீதமுள்ள பகுதியாகும்.

அனுமதிக்கப்படும் அம்சங்களில் நிபாஸ், மாதவிடாயைப் போலவே. உதாரணமாக, பெண்ணின் பிறப்புறுப்பைத் தவிர்த்து மற்ற எல்லா வகையிலும் அனுபவிக்க அனுமதிக்கப்படுகிறது.

தடுக்கப்பட்டவற்றிலும் மாதவிடாயைப் போன்றதுதான்.  உதாரணமாக,  முன் புறத்தில் உடலுறவு கொள்ளுதல், நோன்பு, தொழுகை, தலாக், தவாஃப், குர்ஆன் ஓதுதல், பள்ளிவாசலில் தங்குதல் ஆகியவை தடை செய்யப்படல். மாதவிடாய்ப் பெண்ணைப் போலவே, இரத்தம் நின்றுவிட்டால் குளிப்பது கடமையாகும்.

அவள் நோன்பை மட்டும் கழாச்செய்தாக வேண்டும், மாதவிடாய் பெண்ணைப் போன்றே அவளும் தொழுகையை கழாச்செய்ய வேண்டியதில்லை.

அதற்குரிய அதிகபட்ச காலம் நாற்பது நாட்கள் ஆகும், நாற்பது நாட்களுக்கு முன் பிரசவ இரத்தப் போக்கு நின்றுவிட்டால், அவளது நிபாஸ் காலம் முடிந்துவிட்டது. அவள் குளித்து, தொழுகை நிறைவேற்றி, நிபாஸ் காரணமாகத் தடை செய்யப்பட்டவற்றை மீண்டும் செய்யத் தொடங்குவாள்.

இரண்டாம் ஆய்வு: தொழுகை:

முதலாவதாக : அதானும் இகாமத்தும் பற்றிய சட்ட திட்டங்கள் :

நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்த முதல் ஆண்டில் அதான் சட்டமாக்கப்பட்டது, இது சட்டமாக்கப்பட்ட காரணமாவது, அவர்களுக்கு நேரங்களை அறிந்து கொள்வது கடினமானபோது, அதற்கான ஒரு அடையாளத்தை நிறுவுவதற்கு அவர்கள் ஆலோசனை செய்தனர்.  அப்போது, அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரழி) அவர்களுக்கு கனவில் இந்த அதான் காண்பிக்கப்பட்டு, அதை வஹி -இறைச்செய்தி- உறுதிப்படுத்தியது.

அதான் என்பது தொழுகையின் நேரம் நுழைந்துவிட்டமைக்கான அறிவிப்பாகும்.  இகாமத்: தொழுகையை நிலைநாட்டுவதை அறிவித்தல்.

அதானும் இகாமத்தும் கடமையான தொழுகைகளை ஆண்கள் ஜமாஅத்தாக நிறைவேற்றுவதற்காக வேண்டி கடமையாக்கப்பட்ட பர்ளு கிபாயாக்களாகும் இவ்விரண்டும் இஸ்லாத்தின் வெளிப்படையான சின்னங்களாகும். அவற்றை செயலிழக்கச் செய்வது அனுமதிக்கப்படமாட்டாது.

அதானின் நிபந்தனைகள் :

1. முஅத்தின் ஆண் ஆக இருக்க வேண்டும்.

2. அதான் ஒழுங்குமுறைப்படியாக இருக்க வேண்டும்.

3- அதான் தொடர்ச்சியாக இருக்க வேண்டும்.

4- தொழுகைக்குரிய நேரத்தை அடைந்த பிறகு அதான் கூறுதல், பஜ்ர் மற்றும் ஜும்ஆவின் முதல் அதான் இதில் இருந்து விதிவிலக்களிக்கப்படும். 

அதானின் ஸுன்னாக்கள் :

1- இரு விரல்களையும் காதுகளில் வைத்துக் கொள்ளல்.

2. தொழுகையின் ஆரம்ப நேரத்தில் அஃதான் கூறல் 

3- ஹய்ய அலஸ் ஸலாஹ் மற்றும்  ஹய்ய அலல் பலாஹ் ஆகியவற்றின் போது தலையை வலப்பக்கமாகவும் இடப்பக்கமாகவும் திருப்புதல்.

4- அழகான குரல்வளம் உடையவராக இருத்தல் 

5- அதிகமாக நீட்டிக்கொள்ளாமல் அதானின் சொற்களை மெதுவாகச் சொல்லுதல்.

6- அதானில் உள்ள ஒவ்வொரு வாக்கியதிலும்  நிறுத்துதல்.

7- கிப்லாவை முன்னோக்கி اذان (அதான்) சொல்லுதல்.

அதான் பதினைந்து வாக்கியங்களைக் கொண்டது. அவ்வாறுதான், பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் முன்னிலையில் அதான் கூறியுள்ளார்கள் 

அதானின் சொற்கள் :

"அல்லாஹு அக்பர்" நான்கு தடவைகள்.

'அஷ்ஹது அன்லாஇலாஹ இல்லல்லாஹ்' என்று இருமுறை.

அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ்  என்று இருமுறை. 

“ஹய்ய அலஸ் ஸலாஹ்” என இரு முறை

“ஹய்ய அலல் பலாஹ்” என இரண்டு தடவைகள்.

பின் இரண்டு முறை (அல்லாஹு அக்பர்) என்று கூறுவார்.

பிறகு 'லாஇலாஹ இல்லல்லாஹ்' (உண்மையான வணங்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை) என்று ஒருமுறை கூறி முடிக்கப்படும்.

பஜ்ர் தொழுகையில் ஹய்யா அல்-பலாஹ் என்பதற்குப் பிறகு: அஸ்ஸலாது கைருன் மினந் நவ்ம் (தொழுகை தூக்கத்தை விட சிறந்தது) என இரண்டு முறை கூறவேண்டும்.  ஏனெனில் இது பொதுவாக மக்கள் தூங்கும் நேரமாகும்.

இகாமத் பதினொரு வாக்கியங்களைக் கொண்டது, அதனை விரைவாகக் கூறவேண்டும்; ஏனெனில் அது அருகிலுள்ளவர்களுக்கு அறிவிக்கப்படுவதற்காகவே. எனவே, அதனை ஆறுதலாகக் கூறவேண்டியதில்லை. 

அதன் வடிவம் பின்வருமாறு :

(الله أكبر): இரண்டு தடவைகள்.

அஷ்ஹது அன்லாஇலாஹ இல்லல்லாஹு' என்று ஒரு முறை.

அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ்  (நிச்சயமாக முஹம்மது (ஸல்) அல்லாஹ்வின் தூதராவார் என்று சாட்சி பகர்கின்றேன்)  என்று ஒரு முறை.

“ஹய்ய அலஸ் ஸலாஹ்” (தொழுகையின்பால் விரைந்து வாருங்கள்) என்று ஒரு முறை.

“ஹய்ய அலல் பலாஹ்” (வெற்றியின் பால் விரைந்து வாருங்கள்) என்று ஒரு முறை.

கத் காமதிஸ் ஸலாஹ் (தொழுகை நிறைவேற்றப்படுகின்றது) என்று இரண்டு முறை.

(الله أكبر): இரண்டு தடவைகள்.

'லாஇலாஹ இல்லல்லாஹு' : ஒருமுறை.

அதானைச் செவிமடுத்தவர், அதனைக் கேட்கும் போது, முஅத்தின் கூறுவது போன்று கூறுதல் விரும்பத்தக்கது. ஆனால், (ஹய்ய அலஸ் ஸலாஹ்), (ஹய்ய அலல் பலாஹ்) என்ற வார்த்தைகளில் மட்டும் 'லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்' எனக் கூறுதல் வேண்டும். பின்னர் நபி (ஸல்லல்லாஹு அலைவஸல்லம்) அவர்களின் மீது ஸலவாத்து கூறுவார். பின்னர் பின்வருமாறு கூற வேண்டும்:

«اللهمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ، وَالصَّلَاةِ القَائِمَةِ، آتِ مُحَمَّدًا الوَسِيلَةَ وَالفَضِيلَةَ، وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ، إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ».

அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஃவதித் தாம்மா, வஸ்ஸலாதில் காஇமா, ஆதி முஹம்மதனில் வஸீலத வல்பழீலத, வப்அஸ்ஹு மகாமன் மஹ்மூதனில்லதீ வஅத்தஹு, இன்னக லா துஹ்லிபு(f)ல் மீஆத்12.பொருள் : இறைவா!  இந்த  முழுமையான அழைப்பிற்கும்,  நிலையான தொழுகைக்கும்  சொந்தக்காரனே!  முஹம்மத்  (ஸல்)  அவர்களுக்கு (சொர்க்கத்தின்  மிக  உயர்ந்த  பதவியான)  வஸீலா  எனும்  பதவியினையும்,  சிறப்பையும்  வழங்குவாயாக!  நீ அவர்களுக்காக  வாக்களித்த புகழப்பட்ட இடத்தில்  அவர்களை எழுப்புவாயாக!

மேலும் பின்வருமாறுகூற வேண்டும் :

«رَضِيتُ بِاللَّهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ ﷺ نَبِيًّا».

“ரழீது பில்லாஹி ரப்பா, வபில் இஸ்லாமி தீனா, வபிமுஹம்மதின் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம) நபிய்யா” பொருள் : நான் அல்லாஹ்வை ரப்பாகவும், (இரட்சகனாகவும்) இஸ்லாத்தை மார்க்கமாகவும், முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை நபியாகவும் பொருந்திக் கொண்டேன்."13

அதான் கூறப்பட்ட பின், நியாயமான காரணமின்றி அல்லது திரும்பி வருவதற்கான நோக்கமின்றி பள்ளிவாசலிலிருந்து வெளியேறுவது ஹராமாகும்.

இரண்டு தொழுகைகளை சேர்த்து தொழும் போது ஒரு தடவை அதான் கூறுவது  போதுமானதாக இருக்கும். ஒவ்வொரு தொழுகைக்கும் இகாமத் கூறவேண்டும். 

இரண்டாவதாக : தொழுகையின் நிலை மற்றும் சிறப்பு :

இரு சாட்சியங்களுக்கு அடுத்து, தொழுகையே இஸ்லாத்தின் மிக உறுதியான தூணாகும். அதற்கு விஷேட சிறப்பிடம் உண்டு, ஏனெனில், இதை அல்லாஹ் தனது தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு மிஃராஜ் இரவில் வானில் கடமையாக்கினான். எனவே இது, அதன் மகத்துவத்தையும் அது மிக முக்கியமான கடமையாக இருப்பதையும் அல்லாஹ்விடம் அதற்குள்ள  சிறப்பையும் உறுதிப்படுத்துகிறது.

இதன் சிறப்பையும், ஒவ்வொருவருக்கும் இது கடமையாக இருப்பதையும் உணர்த்தும் பல ஹதீஸ்கள் வந்துள்ளன. இது கடமையென்பது இஸ்லாத்தில் மிக உறுதியாக அறியப்பட்ட ஒன்றாகும். 

இது இன்றியமையாமையாத கடமை என்பதை, அல்குர்ஆன் மற்றும் ஸுன்னாவின் பல்வேறு ஆதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. அவற்றுள் சில :

1. அல்லாஹ் கூறுகிறான் :

﴿...إِنَّ ٱلصَّلَوٰةَ كَانَتۡ عَلَى ٱلۡمُؤۡمِنِينَ كِتَٰبٗا مَّوۡقُوتٗا﴾

“நிச்சயமாகத் தொழுகை நம்பிக்கையாளர்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக இருக்கிறது.” (அந்நிஸாஃ : 103). அதாவது நபி (ஸல்) அவர்கள் விளக்கிக் கூறிய நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

2. மேலும் அல்லாஹ் கூறுகின்றான் :

﴿وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ وَيُقِيمُوا الصَّلَاةَ...﴾

“அவர்கள் வழிபாட்டை அவனுக்கு மட்டும் தூய்மைப்படுத்தியவர்களாக, இணைவைப்பை விட்டு விலகியவர்களாக இருக்கும் நிலையில் அல்லாஹ்வை வணங்குவதற்கும், தொழுகையை நிலைநிறுத்துவதற்கும் மாத்திரமே ஏவப்பட்டுள்ளார்கள்”. (அல்பய்யினாஃ : 5).

3. மேலும் அல்லாஹ் கூறுகின்றான் :

﴿فَإِنْ تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ...﴾

“ஆக, அவர்கள் (தங்கள் குற்றங்களில் இருந்து) திருந்தி (அல்லாஹ்வின் பக்கம் திரும்பி மன்னிப்புக் கோரி) தொழுகையை நிலைநிறுத்தி, ஸகாத்தையும் கொடுத்தால் (அவர்கள்) மார்க்கத்தில் உங்கள் சகோதரர்கள் ஆவார்கள்...” தவ்பா : 11

4. நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் :

«إِنَّ بَيْنَ الرَّجُلِ وَبَيْنَ الشِّرْكِ وَالْكُفْرِ تَرْكُ الصَّلَاةِ».

'நல்ல மனிதருக்கும், இணைவைப்பு, இறைநிராகரிப்பு ஆகியவற்றுக்கும் இடையிலான வேறுபாடு தொழுகையை விடுவதாகும்'.14

5. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக புரைதா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்:

«العَهْدُ الَّذِي بَيْنَنَا وَبَيْنَهُمُ الصَّلَاةُ، فَمَن تَرَكَهَا فَقَدْ كَفَرَ».

(முஸ்லிம்களாகிய) எங்களுக்கும் (நிராகரிப்பாளர்களாகிய) அவர்களுக்கும் இடையிலுள்ள ஒப்பந்தம் தொழுகையே, அதனை விட்டவர் நிராகரித்து விடுகின்றார்".15

மேலும், இது கடமை என்பதை மறுப்பவன் நிராகரிப்பாளன் ஆகிவிட்டான் என்பது அறிஞர்களின் ஏகோபித்த கருத்தாகும் மேலும், மேற்கூறிய ஹதீஸ் மற்றும் நபித்தோழர்களின் இஜ்மா ஆகியவற்றின் அடிப்படையில், தொழுகையை சோம்பலாகவும் அலட்சியமாகவும் விட்டுவிட்டவரும் காபிராகி விடுவான் என்பதே மிகச் சரியான கருத்தாகும். 

மூன்றாவது : தொழுகையின் நிபந்தனைகள் :

1- தொழுகைக்குரிய நேரத்தை அடைந்திருத்தல்:

அல்லாஹ் கூறுகின்றான் :

﴿...إِنَّ ٱلصَّلَوٰةَ كَانَتۡ عَلَى ٱلۡمُؤۡمِنِينَ كِتَٰبٗا مَّوۡقُوتٗا﴾

"நிச்சயமாகத் தொழுகை நம்பிக்கையாளர்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக இருக்கிறது". (அந் நிஸாஃ) அதாவது, வரையறுக்கப்பட்ட நேரங்களில் கட்டாயமாக்கப்பட்டதாகும்.

கடமையான தொழுகைகளின் நேரங்கள் பின்வருமாறு:

1- பஜ்ர்: விடியல் முதல் சூரியன் உதயமாகும் வரை.

2- லுஹ்ர்: சூரியன் உச்சி சாய்ந்ததிலிருந்து ஒவ்வொரு பொருளின் நிழல் அதன் நீளத்திற்கு சமமாகும் வரை.

3- அஸ்ர் : லுஹ்ர் நேரம் முடிவதிலிருந்து சூரியன் பொன்னிறமாகும் வரை. அஸருடைய நிர்ப்பந்த நேரம் சூரியன் மறையும் வரை நீடிக்கும்.

4- மஃக்ரிப்: சூரியன் மறைந்தது முதல் செம்மேகம் மறையும் வரையிலாகும்.

5- இஷா: மக்ரிப் நேரம் முடிவதிலிருந்து நள்ளிரவு வரையிலாகும்.

2- உடலில் அவசியம் மறைக்க வேண்டிய (அவ்ரத்) பகுதியை மறைத்தல்.

அவை, கட்டாயம் மறைக்கப்பட வேண்டிய, வெளிப்படுவது வெட்கப்படத்தக்கதும், அசிங்கமாகவும் கருதப்படும் இடங்களாகும். ஆணின் அவ்ரத், தொப்புள் முதல் முழங்கால் வரையிலாகும், பெண்ணைப் பொறுத்தவரை, தொழுகையில் முகத்தைத் தவிர அனைத்தும் மறைக்க வேண்டிய பகுதிகளாகும்.  அவள், மஹ்ரம்கள் அல்லாத அந்நிய ஆண்கள் முன்னிலையில் இருக்கும்போது முகத்தையும் மறைக்க வேண்டும். 

3- நஜிஸை தவிர்த்து கொள்ளல்.

அசுத்தம் என்பது சிறுநீர், மலம், இரத்தம் போன்ற, தொழுகையைத் தடுக்கக்கூடிய தன்மை கொண்டவையாகும். இது உடல், இடம், மற்றும் உடையில் இருக்கக்கூடும்.

4- கிப்லாவை முன்னோக்குதல்

கிப்லா என்பது கண்ணியமிகு கஃபாவாகும். மக்கள் அதனை முன்னோக்குவதால் கிப்லா என அழைக்கப்படுகிறது.

கிப்லாவை முன்னோக்காத தொழுகை செல்லுபடியாகாது. அல்லாஹ் கூறுகின்றான் :

﴿...وَحَيۡثُ مَا كُنتُمۡ فَوَلُّواْ وُجُوهَكُمۡ شَطۡرَهُ...﴾

(முஸ்லிம்களே!) நீங்கள் எங்கிருந்தாலும் (தொழும்போது) அதன் பக்கம் உங்கள் முகங்களைத் திருப்புங்கள். (அல்பகரா : 144)

5. நிய்யத் :

இது மொழியில், நோக்கம் என்று அர்த்தம் தரும். மார்க்க அடிப்படையில்: அல்லாஹ்வை நெருங்கும் எண்ணத்துடன் வழிபாட்டைச் செய்வதற்கான மனநாட்டத்தைக் குறிக்கும். இதன் இடம் உள்ளம் ஆகும், எனவே இதனை வாயால் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, மாறாக இது ஒரு புதுமை (பித்அத்) ஆகும்.

நான்காவது: தொழுகையின் முதல் நிலைக் கடமைகள் (ருக்ன்கள்) :

இவை பதினான்கு (14) ருக்ன்கள் ஆகும்:

முதல் அடிப்படை : சக்தியுள்ள போது நின்று தொழுதல் :

அல்லாஹ் கூறுகின்றான் :

﴿‌...وَقُومُواْ لِلَّهِ قَٰنِتِينَ﴾

(தொழுகையில்) அல்லாஹ்விற்குப் பணிந்தவர்களாக நில்லுங்கள். (அல் பகரா : 238) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக, இம்ரான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:

«صَلِّ قَائِمًا، فَإِن لَمْ تَسْتَطِعْ فَقَاعِدًا، فَإِن لَمْ تَسْتَطِعْ فَعَلَى جَنْبٍ».

'நின்ற நிலையில் தொழுவீராக, அதற்கு முடியாவிட்டால் உட்கார்ந்த நிலையில் தொழுவீராக, அதற்கும் முடியாவிட்டால் சாய்ந்த நிலையில் தொழுவீராக'16.

நோயின் காரணமாக நிற்க முடியாவிட்டால், உட்கார்ந்தோ அல்லது பக்கவாட்டிலோ முடியுமான முறையில் தொழ வேண்டும். அச்சநிலையில் உள்ளவர், நிர்வாணமாக இருப்பவர், சிகிச்சை காரணமாக நிற்க முடியாமல், உட்கார்ந்தோ, சாய்ந்தோ இருக்க வேண்டியவர் ஆகியோரும் நோயாளிகளைப் போன்றவர்களே நின்று தொழ முடியாத இமாமுக்குப் பின்னால் தொழுபவரும் நின்று தொழாமல் இருக்க அனுமதியுண்டு.  இமாம் உட்கார்ந்து தொழுதால், அவருக்குப் பின்னால் தொழுபவரும் அவரை பின்பற்றி உட்கார்ந்து தொழ வேண்டும். ஸுன்னத்தான தொழுகைகளில், நிற்க முடிந்தாலும் உட்கார்ந்தும் தொழலாம். இருப்பினும் நின்று தொழுதவருடைய கூலியுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே கிடைக்கும்.

இரண்டாவது ருக்ன்: ஆரம்பத்தில் இஹ்ராம் தக்பீர் கூறுதல்:

நபி (ஸல்) கூறுகிறார்கள் :

«ثُمَّ اسْتَقْبِلِ الْقِبْلَةَ، وَكَبِّرْ».

பிறகு கிப்லாவை முன்னோக்கி, தக்பீர் கூறு"17.

அதன் வடிவம்: 'அல்லாஹு அக்பர்' எனக் கூறுவதாகும். இதற்கு மாற்றாக வேறு எதுவும் நிறைவேறாது.

மூன்றாவது பிரதான கடமை: ஸூரா பாதிஹா ஓதுதல்:

நபி (ஸல்) கூறுகிறார்கள் :

«لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِفَاتِحَةِ الْكِتَابِ».

ஸூரத்துல் பாத்திஹாவை ஓதாத ஒருவருடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது18.

நான்காவது ருக்ன்: ஒவ்வொரு ரக்அத்திலும் ருகூஃ செய்தல்:

அல்லாஹ் கூறுகின்றான் :

﴿يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا ارْكَعُوا وَاسْجُدُوا...﴾

நம்பிக்கையாளர்களே! (தொழுகையில்) குனியுங்கள்! (ருகூஉ செய்யுங்கள்) இன்னும், சிரம்பணியுங்கள்! (ஹஜ் : 77).

ஐந்தாவது மற்றும் ஆறாவது தூண்கள்:

ருகூஉவிலிருந்து எழுதல் மற்றும் அதற்கு முந்தைய நிலைபோல நேராக நிற்றல். நபி ﷺ இதை தொடர்ந்து செய்துள்ளார்கள்.

மேலும் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், தமது தொழுகையை பிழையாகத் தொழுதவரிடம் இவ்வாறு கூறினார்கள்:

«ثُمَّ ارْفَعْ حَتَّى تَعْتَدِلَ قَائِمًا».

பின்னர் நேர்த்தியாக நேராக நிற்கும் வரை எழுந்து வரவும்19.

ஏழாவது ருக்னு: ஏழு உறுப்புக்களில் ஸுஜூது செய்வது:

அவையாவன: நெற்றியுடன் மூக்கு, இரு கைகள், இரு முழங்கால்கள், இரு பாதங்களின் ஓரங்கள், நபி (ஸல்) கூறுகிறார்கள் :

«أُمِرْنَا أَنْ نَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ: الجَبْهَةِ، وَأَشَارَ بِيدِهِ عَلَى أَنْفِهِ، وَالكَفَّيْنِ، وَالرُّكْبَتَيْنِ، وَأَطْرَافِ القَدَمَيْنِ».

“நெற்றி- இதன் போது தம் கையால் மூக்கையும் அடையாளம் காட்டினார்கள்-, இரண்டு உள்ளங்கைகள், இரண்டு முட்டுக் கால்கள், இரண்டு பாதங்களின் முனைகள் ஆகிய ஏழு உறுப்புகக்ள் படுமாறு ஸஜ்தாச் செய்யுமாறு நாங்கள் கட்டளையிடப்பட்டுள்ளோம்20.

எட்டாவது ருக்ன்: ஸுஜூதிலிருந்து இருப்புக்கு வருதல் மற்றும் இரண்டு ஸஜ்தாக்களுக்கு இடையில் அமர்தல்:

ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்:

«كَانَ النَّبِيُّ ﷺ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ السَّجْدَةِ، لَمْ يَسْجُدْ حَتَّى يَسْتَوِيَ جَالِسًا».

“நபியவர்கள் ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தினால், நேராக அமர்ந்த பிறகே மீண்டும் ஸஜ்தாவிற்கு செல்வார்கள்.21

ஒன்பதாவது கடமை : அனைத்து ருகூன்களிலும் அமைதியாக தரித்து நிற்றல் :

அதாவது சொற்ப நேரமாவது அமைதியாக இருக்கவேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், தொழுகையில் தவறு செய்தவரிடம் கூறினார்கள் :

«حَتَّى تَطْمَئِنَّ».

22 “நீ அமைதியடையும் வரை”

பத்தாவது மற்றும் பதினோராவது தூண்கள்:

இறுதி அத்தஹிய்யாத்து மற்றும் அதன் அமர்வு: நபி (ஸல்) அவர்கள் கூறியதாக,  இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

«إِذَا صَلَّى أَحَدُكُمْ فَلْيَقُلْ: التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، أَشْهَدُ أَنْ لَا إِلٰهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ».

«உங்களில் ஒருவர் தொழும் பொது, அத்தஹிய்யாது லில்லாஹி வஸ்ஸலவாது வத்தய்யிபாது, அஸ்ஸலாமு அலைக அய்யுஹன்னபிய்யு வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு, அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு என்று கூறட்டும்»23.

பன்னிரண்டாவது ருக்ன்: இறுதி அத்தஹிய்யாதில் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறுதல்:

அதனை இவ்வாறு கூற வேண்டும் :

«اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ».

“அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மத்”«யா அல்லாஹ்! முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது அருள்புரிவாயாக»24, அதற்கு அதிகமாக உள்ளது ஸுன்னாவாகும்

பதின்மூன்றாம் ருகூன்: ருகூன்களுக்கிடையில் ஒழுங்கு முறை பேணுதல்:

ஏனெனில் நபி ﷺ அவர்கள் இதனை ஒழுங்குமுறையாகவே செய்துள்ளார்கள், மேலும் அவர்கள் கூறுகிறார்கள் :

«صَلُّوا كَمَا رَأَيْتُمُونِي أُصَلِّي».

”நான் எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுது கொள்ளுங்கள்"..25 தொழுகையில் தவறிழைத்தவருக்கு, அதை 'ஸும்ம' என்ற முன்இடைச்சொல்லை பயன்படுத்தி ஒழுங்கு முறையாகக் கற்றுக் கொடுத்தார்கள்.

பதினான்காவது ருக்ன்: ஸலாம் கூறுதல் :

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :

««‌وَخِتَامُهَا ‌التَّسْلِيمُ».

“அதனை (தொழுகையை) நிறைவுசெய்வது, ஸலாம் கூறுவதாகும், மேலும் அவர்கள் கூறுகிறார்கள்:

«وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ».

«ஸலாம் கூறுவது, அதிலிருந்து விடுபடுவதாகும்».26

ஐந்தாவதாக : தொழுகையின் வாஜிப்கள்:

அவை எட்டாகும் (8)

1- இஹ்ராம் தக்பீர் தவிர்ந்த அனைத்து தக்பீர்கள்.

2- ருகூவில் ஒரு தடவை 'ஸுப்ஹான ரப்பியல் அழீம்' என்று கூறுதல். மூன்று தடவைகள் வரை அதிகரித்துக் கொள்ளலாம், இதுவே குறைந்த பட்ச பூரணத்துவமாகும். அதிகபட்சம் 10 தடவைகள் ஆகும்.

3- ருகூஃவிலிருந்து எழும்போது இமாமும் தனித்து தொழுபவரும் 'ஸமிஅல்லாஹுலிமன் ஹமிதஃ' என்று கூறுதல்.

4- ருகூவில் இருந்து எழும்போது (மஃமூம்) 'ரப்பனா வலகல் ஹம்து' என்று கூறுதல்.

5- ஸுஜுதில் ஒரு தடவை 'ஸுப்ஹான ரப்பியல் அஃலா' என்று கூறுதல். மூன்று தடவைகள் வரை அதிகரிக்கப்படுவது சுன்னத் ஆகும்.

6- இரு ஸஜ்தாக்களுக்குமிடையில் 'ரப்பிஃபிர்லி' என்று ஒரு முறை கூறுதல், மூன்று தடவைகள் வரை அதிகரிக்கப்படுவது சுன்னத் ஆகும்.

7- முதலாவது அத்தஹிய்யாத்; அதில் அவர் இவ்வாறு கூறுவார்:

«التَّحِيَّاتُ لِلَّهِ، وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، أَشْهَدُ أَنْ لَا إِلٰهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ».

அத்தஹிய்யாது லில்லாஹி வஸ்ஸலவாது வத்தய்யிபாது அஸ்ஸலாமு அலைக அய்யுஹன்னபிய்யு வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு, அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு". (சொல், செயல், பொருள் சார்ந்த எல்லாக் காணிக்கைகளும், வணக்கங்களும், பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்கள் மீது சாந்தியும், அல்லாஹ்வின் அருளும், அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக. எங்கள் மீதும், அல்லாஹ்வின் நல்லடியார்கள் அனைவர் மீதும் சாந்தி உண்டாகட்டும். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். மேலும், முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதரும், அடியாருமாவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்).27

8- முதலாவது அத்தஹிய்யாத்திற்காக அமர்தல்.

ஆறாவதாக : தொழுகையின் ஸுன்னாக்கள்

தொழுகையின் சுன்னத்துகளை விட்டுவிடுவதால் தொழுகை முறியாது, இவை இரு வகைப்படுகின்றன : சொல் சார்ந்த ஸுன்னாக்கள், செயல் சார்ந்த ஸுன்னாக்கள்.

முதலாவதாக : சொல் சார்ந்த ஸுன்னாக்கள் :

1. ஆரம்ப துஆ, இதற்கு பல வடிவங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று:

«سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، وَتَبَارَكَ اسْمُكَ، وَتَعَالى جَدُّكَ، وَلا إِلٰهَ غَيْرُكَ».

(ஸுப்ஹானக ல்லாஹும்ம வபிஹம்திக வதபாரகஸ்முக வதஆலா ஜத்துக வலாஇலாஹ கய்ருக) என்பதாகும்.

பொருள் (உனக்கு தகுதியற்ற எல்லாக் குறைகளிலிருந்தும்) உன்னை நான் துதிக்கிறேன். உனது புகழைக்கொண்டு உன்னை போற்றியவனாகவே உள்ளேன். உனது பெயர் அருட்பேறு நிறைந்தாக உள்ளது. உன்னுடைய கண்ணியமும் மகத்துவமும் மேலோங்கிவிட்டது. உன்னையன்றி உண்மையாக வணங்கப்படுபவன் (வேறு எவறும், எதுவும்) இல்லை.28

2- ஸூரதுல் ஃபாதிஹாவுக்கு முன் இஸ்திஆதா கூறுதல், அதாவது, "அஊது பில்லாஹி மினஷ் ஷைதானிர் ரஜீம்" என்று கூறுதல். (சபிக்கப்பட்ட ஷைத்தானின் தீங்கை விட்டும் நான் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்).

3- ஓத ஆரம்பிக்கும் முன் பிஸ்மில்லாஹ் கூறுதல்  அதாவது, 'பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்'. என்று கூறுதல் (பொருள் : அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையவனுமாகிய அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு ஓதுகின்றேன்) 

4- ருகூஃ மற்றும் ஸுஜூதின் தஸ்பீஹை ஒரு முறைக்கு மேல் அதிகமாக கூறுதல்.

5- ஒரு தடவைக்கு மேல் 

«رَبِّ اغْفِرْ لِي».

“ரப்பி இக்பிர் லீ” பொருள் : என் இரட்சகனே! என்னை மன்னித்தருள்வாயாக! என்ற துஆவை இரண்டு ஸஜ்தாக்களுக்கு இடையில் ஓதுதல்.

6- பின்வரும் துதியைக் கூறுதல் :

«مَلْءَ السَّمَاوَاتِ، وَمَلْءَ الْأَرْضِ، وَمَلْءَ مَا بَيْنَهُمَا، وَمَلْءَ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ».

“மல்அஸ் ஸமாவாதி வமல்அல் அர்ழி வமல்அ மா பைணஹுமா வமல்அ மா ஷிஃத மின் ஷைஇன் பஃது”(பொருள் : வானங்களும் பூமியும் அவ்விரண்டுக்கும் இடைப்பட்டவைகளும் நிரம்புமளவிற்கும் மேலும் நீ எதை நாடுகிறாயோ அது நிரம்பும் அளவுக்கும் (உனக்குப் புகழ் உரியது) என்று,  பின்வருமாறு கூறிய பின்னர் : 

«رَبَّنَا ولَكَ الحَمْدُ».

ரப்பனா வலகல் ஹம்து. என்ற துஆவை ஓதிய பின்னர் கூறல். 29

7- பாத்திஹாவை ஒதி முடிந்ததும் வேறு ஸூரா ஓதுதல்.

8- பின்வரும் துஆவைக் கூறுதல் :

«اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ، وَمِنْ عَذَابِ الْقَبْرِ، وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، وَمِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ».

அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மின் அதாபி ஜஹன்னம் வமின் அதாபில் கப்ரி, வமின் பித்னதில் மஹ்யா வல் மமாதி, வமின் பித்னதில் மஸீஹித் தஜ்ஜால். ((யா அல்லாஹ்! நரக வேதனையிலிருந்து உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன். மேலும் மண்ணறை வேதனையிலிருந்து நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். மேலும் வாழ்வு மற்றும் மரணத்தின் குழப்பத்திலிருந்து நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். மேலும் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்)).30 இறுதி அத்தஹிய்யாத்தில், அதைவிட மேலதிகமாக உள்ள துஆக்கள்

இரண்டாவது : செயல் சார்ந்த ஸுன்னாக்கள் :

1- நான்கு சந்தர்ப்பங்களில் இரு தோள் புயங்களுக்கு அல்லது இரு காதுகளுக்கு நேராக இரு கைகளையும் உயர்த்துதல்:

1)- ஆரம்பத் தக்பீர் கூறும் போது.

‌2)- ருகூவிற்கு செல்லும் போதும்.

‌3)- ருகூவிலிருந்து இருப்புக்கு வரும்போது.

‌4)- மூன்றாம் ரக்அத்திற்காக எழுந்து நிற்கும் போது.

2- ருகூவிற்கு முன்னரும் பின்னருமான நிலையின் போது, இடது கையின் மீது வலது கையை வைத்து அதனை நெஞ்சின் மீது வைத்துக் கொள்ளுதல்.

3- ஸுஜூது செய்யும் இடத்தை நோக்குதல்.

4- ஸுஜூது செய்யும் போது இரு தோள்பட்டைகளையும் இரு விலாப்புறங்களை விட்டு அகற்றி வைத்தல்.

5- ஸுஜூதுகளில் வயிற்றைத் தொடைகளை விட்டு அகற்றிவைத்தல்.

6- மூன்று ரக்அத் மற்றும் நான்கு ரக்அத் தொழுகைகளின் இறுதி அத்தஹிய்யாத் இருப்பைத் தவிர்த்து, தொழுகையின் அனைத்து இருப்புகளிலும் இப்திராஷ் முறையில் அமர வேண்டும்.

7- மூன்று மற்றும் நான்கு ரக்அத்கள் கொண்ட தொழுகையின் இறுதி அத்தஹிய்யாத்தில் தவர்ருக் முறையில் அமர வேண்டும்.

 

ஏழாவது : தொழுகை முறை

1- அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொழுகைக்காக நின்றால், கிப்லாவை முன்னோக்கி, தம் கைகளை உயர்த்தி, உள்ளங்கைகள் கிப்லாவை நோக்கி இருக்குமாறு வைத்து, பின்வருமாறு கூறுவார்கள்:

«اللهُ أَكْبَرُ».

அல்லாஹு அக்பர்

2- பின்னர் தனது இடது கையை வலது கையால் பிடித்து, அவற்றை நெஞ்சின் மீது வைப்பார்கள்.

3- பின்னர் துவக்க துஆவை (இஸ்திப்தாஹ்) ஓதுவார்கள். அவற்றில் குறிப்பிட்ட ஒரே துஆவையே ஓதிக் கொண்டிருக்கமாட்டார்கள்.  அவர்களைத் தொட்டும் ஆதாரப் பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட அனைத்து துஆஉல் இஸ்திப்தாஹ்களையும் ஓதலாம். உதாரணமாக,

«سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، وَتَبَارَكَ اسْمُكَ، وَتَعَالى جَدُّكَ، وَلا إِلٰهَ غَيْرُكَ».

(ஸுப்ஹானக ல்லாஹும்ம வபிஹம்திக வதபாரகஸ்முக வதஆலா ஜத்துக வலாஇலாஹ கய்ருக) என்பதாகும். பொருள் (உனக்கு தகுதியற்ற எல்லாக் குறைகளிலிருந்தும்) உன்னை நான் துதிக்கிறேன். உனது புகழைக்கொண்டு உன்னை போற்றியவனாகவே உள்ளேன். உனது பெயர் அருட்பேறு நிறைந்தாக உள்ளது. உன்னுடைய கண்ணியமும் மகத்துவமும் மேலோங்கிவிட்டது. உன்னையன்றி உண்மையாக வணங்கப்படுபவன் (வேறு எவறும், எதுவும்) இல்லை.

4- பின்னர் பின்வருமாறு ஓதுவார்கள்:

«أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ، بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ».

'அஊது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர் ரஜீம், பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என ஓதுவார். (எறியப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகின்றேன், கருணையுள்ள, இரக்கமுள்ள அல்லாஹ்வின் பெயரால்)

5- பிறகு ஃபாத்திஹா ஸூராவை ஓதிவிட்டு, அதை முடித்ததும் (ஆமீன்) என கூறுவார்கள்.

6- பிறகு அல்குர்ஆனிலிருந்து அவருக்கு இயலுமானதை ஓதுவார்கள், பஜ்ர் தொழுகையிலும் மஃரிப் மற்றும் இஷா தொழுகைகளின் முதல் இரண்டு ரக்அத்களிலும் சப்தமாக ஓதுவார்கள் மற்றவற்றில் இரகசியமாக ஓதுவார். ஒவ்வொரு தொழுகையின் முதல் ரக்அத்தையும் இரண்டாம் ரக்அத்தை விட நீளமாக்குவார்கள்.

7- பின்னர் இரு கைகளையும் இஸ்திஃப்தாஹ் கூறிய போது உயர்த்திய படி உயர்த்தைவார்கள். பிறகு அல்லாஹு அக்பர் என்று கூறுவார்கள். ருகூஃ செய்தவராகக் குனிவார்கள், இரு கைகளையும் விரல்களை விரித்த நிலையில் முழங்கால்களில் வைத்து, அவற்றை நிலைநிறுத்தி, முதுகை நேராக வைத்து, தலையை அதற்கு நேராக வைப்பார்கள்; தலையை உயர்த்தவோ அல்லது தாழ்த்தவோ மாட்டார்கள். மேலும் பின்வருமாறு கூறுவார்கள் :

«سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ» مرةً.

(ஸுப்ஹான ரப்பியல் அழீம்) பொருள் : மகத்தான அல்லாஹ்வை தூய்மைப் படுத்துகிறேன்  (ஒரு முறை) மேலே கூறியது போன்று, மூன்று தடவைகள் கூறுவதுவே குறைந்த பட்ச பரிபூரணமாகும்,

8- பிறகு தலையை உயர்த்தி இவ்வாறு கூறுவார்: 

«سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ».

«ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹு», ருகூஉ செய்யும் போது கைகளை உயர்த்துவது போல (இந்நிலையிலும்) கைகளை உயர்த்துவார்கள். 

9- நேராக நின்ற பிறகு பின்வருமாறு கூறுவார்கள்:

«اللَّهُمَّ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، مَلْءَ السَّمَاءِ، وَمَلْءَ الْأَرْضِ، وَمَلْءَ مَا بَيْنَهُمَا، وَمَلْءَ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ، أَهْلَ الثَّنَاءِ وَالْمَجْدِ، أَحَقُّ مَا قَالَ الْعَبْدُ، وَكُلُّنَا لَكَ عَبْدٌ، لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ».

யா அல்லாஹ்! எங்கள் இரட்சகனே! புகழ் அனைத்தும் உனக்கே உரியன, அருட்பேறும் அழகும் மிக்க அதிகமான புகழும் உனக்கே உரியன. வானங்களும் பூமியும் அவ்விரண்டுக்கும் இடைப்பட்டவைகளும் நிரம்புமளவிற்கும் மேலும் நீ எதை நாடுகிறாயோ அது நிரம்பும் அளவுக்கும் (உனக்கே புகழனைத்தும்). புகழுக்கும் கீர்த்திக்கும் உரியவனே! (இது) அடியான் கூறுவதற்கு மிகவும் தகுதி வாய்ந்த (வார்த்தையா)கும். நாங்கள் அனைவரும் உனக்கு அடிமைகளே! நீ கொடுத்ததைத் தடுப்பவர் எவருமில்லை. நீ தடுத்ததைக் கொடுப்பவர் எவருமில்லை. (செல்வம், ஆட்சி அதிகாரம், உயர்ந்த பதவிகள் போன்ற) உலக செல்வாக்குப்பெற்றவரின் செல்வாக்கு (உனது தண்டனையிலிருந்து பாதுகாத்திட) எப்பயனையும் அளிக்காது.31 இந்த இஃதிலாலில் அவர்கள் நீண்ட நேரம் நிற்பார்கள். 

10- பிறகு அல்லாஹு அக்பர் என்று கூறி ஸஜ்தாவிற்கு செல்வார்கள்.  அப்போது கைகளை உயர்த்த மாட்டார்கள், நெற்றி, மூக்கு, இரு உள்ளங்கைகள், முட்டுக்கால்கள், இரு கால் விரல்களின் உட்பகுதிகள் என்பன தரையில் படும் நிலையில் ஸுஜூது செய்வார்கள்.  மேலும், தமது கை மற்றும் கால் விரல்களால் கிப்லாவை முன்னோக்குவார்கள், ஸஜூதில் சீராக இருப்பார்கள், நெற்றி மற்றும் மூக்கை நிலத்தில் படச் செய்வதோடு, தன் உள்ளங்கைகளில் ஊன்றிப் பிடித்து, முழங்கைகளை உயர்த்தி வைத்துக் கொள்வார்கள், மேலும், இரு கைகளையும் உடலின் பக்கவாட்டிலிருந்து விலக்கி வைத்துக் கொள்வார்கள். அத்துடன், வயிற்றை தொடைகளிலிருந்து உயர்த்தியும்,  தமது தொடைகளை கால்களிலிருந்து விலக்கியும் வைப்பார்கள்.  மேலும், ஸுஜுதில் பின்வருமாறு கூறுவார்கள் :

«سُبْحَانَ رَبِّيَ الأَعْلَى».

“ஸுப்ஹான ரப்பியல் அஃலா". (உயர்ந்தோனாகிய எனது இரட்சகனை நான் தூய்மைப் படுத்துகிறேன்). (ஒரு தடவை) ஏற்கனவே கூறியது போன்று, மூன்று தடவைகள் கூறுவது குறைந்த பட்ச பூரணத்துவமாகும், மேலும், வந்துள்ள துஆக்களை ஓதுவார்கள்.

11- பிறகு அல்லாஹு அக்பர் என்று கூறியவாறு தலையை உயர்த்துவார்கள் பின்னர் இடது காலை விரித்து அதன் மீது அமர்ந்து, வலது காலை நட்டிவைத்து, இரு கைகளையும் தனது தொடைகளின் மீது வைத்து பின்வருமாறு கூறுவார்கள்  :

«اللَّهُمَّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَاجْبُرْنِي، وَاهْدِنِي، وَارْزُقْنِي».

((யா அல்லாஹ்! என்னை மன்னித்து, எனக்கு அருள்புரிந்து, என்குறைகளை மறைத்து, எனக்கு ஆறுதலைத் தந்திடுவாயாக! மேலும் நேர்வழிகாட்டி, வாழ்வாதாரத்தையும் தந்தருள்வாயாக)).32

12- பிறகு அல்லாஹு அக்பர் என்று கூறி ஸஜ்தா செய்வார்கள், இரண்டாவது ஸஜ்தாவை முதல் ஸஜ்தாவைப் போலவே செய்வார்கள்.

13- பிறகு தலையை உயர்த்தி அல்லாஹு அக்பர் எனக் கூறி, முழங்கால்கள் மற்றும் தொடைகள் மீது நம்பி, பாதங்களின் முனைகளில் எழுந்து நிற்பார்கள்.

14- நிற்கும் நிலையை அடைந்தவுடன், ஓதத் தொடங்குவார்கள். இரண்டாவது ரக்அத்தையும் முதல் ரக்அத்தைப் போன்றே தொழுவார்கள்

15- பிறகு,  இரு ஸுஜூதுகளுக்கிடையில் அமர்வது போலவே, முதலாவது அத்தஹிய்யாத்திற்காகவும் அமர்வார்கள்,  மேலும், வலது கையை வலது தொடையிலும், இடது கையை இடது தொடையிலும் வைப்பார்கள். தமது, வலது கையின் பெருவிரலை நடு விரலின் மீது வலையம் போன்று வைப்பார்கள்.  மேலும், ஆள்காட்டி விரலை நீட்டியபடி, அதைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள் பின்னர், பின்வருமாறு கூறுவார்கள் :

«التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، أَشْهَدُ أَنْ لَا إِلٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ».

அத்தஹிய்யாது லில்லாஹி வஸ்ஸலவாது வத்தய்யிபாது அஸ்ஸலாமு அலைக அய்யுஹன்னபிய்யு வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு, அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லாஷரீக லஹூ, வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு". (பொருள் : சொல், செயல், பொருள் சார்ந்த எல்லாக் காணிக்கைகளும், வணக்கங்களும், பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்கள் மீது சாந்தியும், அல்லாஹ்வின் அருளும், அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக. எங்கள் மீதும், அல்லாஹ்வின் நல்லடியார்கள் அனைவர் மீதும் சாந்தி உண்டாகட்டும். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். மேலும், முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதரும், அடியாருமாவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்). நபியவர்கள் இந்த அமர்வை சுருக்கிக் கொள்வார்கள். 

16- பிறகு தக்பீர் கூறி எழுந்து மூன்றாம் மற்றும் நான்காம் ரக்அத்துக்களை தொழுவார்கள். அவற்றை முதல் இரு ரக்அத்துக்களை விட சுருக்கமாக்கிக் கொள்வார்கள்.   அவ்விரண்டிலும் ஸூரா பாதிஹாவை ஓதுவார்கள். 

17- பிறகு, இறுதி அத்தஹிய்யாத்தில் 'தவர்ருக்' முறையில் அமருவார்கள்.  இடது காலை விரித்து வலது புறமாக வெளிப்படுத்தி, வலது காலை நட்டு, பிற்தட்டைத் தரையில் வைப்பது தவர்ருக் எனப்படும்.

18- பின்னர் இறுதி அத்தஹிய்யாத்தில் ஓதவேண்டியதை ஓதுவார்கள். அது முதலாவது அத்தஹிய்யாத்தைப் போன்றதாகும்.  அவற்றிற்கு மேலதிகமாக பின்வருமாறும் கூறுவார்கள் :

«اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ».

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத அலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதுன் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதும் மஜீத்".(பொருள் : யா அல்லாஹ்! இப்ராஹீம் (அலை) அவர்களது குடும்பத்தின் மீது நீ ஸலவாத் கூறியது போன்று, முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது குடும்பத்தின் மீதும் ஸலவாத் கூறுவாயாக! நீ புகழுக்கு உரியவனாகவும் கீர்த்திமிக்கவனாகவும் இருக்கின்றாய்! மேலும், இப்ராஹீம் (அலை) அவர்களது குடும்பத்தின் மீது நீ பரக்கத் செய்தது போன்று, முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது குடும்பத்தின் மீதும் பரக்கத் செய்வாயாக! நீ புகழுக்கு உரியவனாகவும் கீர்த்திமிக்கவனாகவும் இருக்கின்றாய்!

19- மேலும், நரகத்தின் வேதனையிலிருந்தும், மண்ணறையின் வேதனையிலிருந்தும், வாழ்வு மற்றும் மரணத்தின் சோதனையிலிருந்தும், தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு கேட்கவும் செய்வார்கள்.  அவற்றுடன், அல் குர்ஆனிலும் ஹதீஸிலும் உள்ள துஆக்களைப் பயன்படுத்தி துஆ செய்யலாம்.

20- பிறகு வலது புறம் முகத்தைத் திருப்பி, ஸலாம் கூறும் விதமாக, 

«السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ».

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்". (உங்கள் மீது சாந்தி உண்டவதாக மேலும் அல்லாஹ்வின் அருளும் உண்டாவதாக). என்று கூறுவார்கள்  அதேபோல, இடது புறமாகவும் கூறுவார்கள் . கிப்லாவை நோக்கி முகம் இருக்கும் நிலையில் ஸலாத்தை ஆரம்பத்து, முழுமையாகத் திரும்பும்போது அதை நிறைவு செய்வார்.

எட்டாவதாக : தொழுகையில் வெறுக்கத்தக்கவை :

1- தேவையில்லாமல் திரும்புதல்.

2- பார்வையை வானத்தை நோக்கி உயர்த்துதல்.

3- தேவையில்லாமல் கண்களை மூடிக்கொள்வது.

4- ஸுஜூது செய்யும் போது முழங்கைகளை விரித்து நிலத்தில் பட வைத்தல்

5- தேவையின்றி வாயும் மூக்கையும் மறைத்துக் கொள்ளல்.

6. மல, சலத்தை அடக்கிய நிலையில் அல்லது விருப்பமான உணவு தயாராக இருக்கும் போது தொழுதல்.

7. ஸுஜூத் செய்ததன் காரணமாக நெற்றி மற்றும் மூக்கில் ஒட்டியுள்ளதை துடைத்தல். தொழுது முடித்த பின் அவ்வாறு துடைத்துக்கொள்ளலாம் 

8- அத்தியவசியமின்றி (நிற்கும் போது) சுவர் போன்றவற்றில் சாய்ந்து நிற்றல்.

 

 

ஒன்பதாவது : தொழுகையை முறிப்பவை :

1- உண்ணுதல், பருகுதல்.

2- தொழுகைக்கு வெளிபட்ட பேச்சு 

3- சிரித்தல், மற்றும் சப்தமிட்டு சிரித்தல்.

4- வேண்டுமென்றே தொழுகையின் பிரதான கடமைகளில் (தூண்களில்) அல்லது வாஜிப்களில் ஒன்றை விடுதல்.

5. ஒரு ருக்ன் அல்லது ரக்அத்தை வேண்டுமென்றே அதிகரித்தல்.

6- வேண்டுமென்றே இமாமுக்கு முன் ஸலாம் கூறுதல்.

7- தொழுகையுடன் தொடர்பற்ற தேவையற்ற தொடரான அதிக அசைவுகள்.

8- தொழுகையின் நிபந்தனைகளில் ஒன்றுக்கு முரணானவற்றைச் செய்தல்; உதாரணமாக வுழூ முறிதல், வேண்டுமென்றே அவ்ரத்தை வெளிப்படுத்தல், அவசியமின்றி உடலை அதிகமாக கிப்லாவிலிருந்து திருப்புதல், நிய்யத்தை முறித்தல்.

10. மறதிக்கான ஸுஜூத் :

மறதி: நபி ﷺ தொழுகையில் மறந்துள்ளார்கள்; ஏனெனில் மறதி மனித இயல்பின் ஒரு பகுதி ஆகும், அவரது மறதி அல்லாஹ்வின் பரிபூரணமான அருளாகவும், அவர்களது மார்க்கத்தைப் பரிபூரணப்படுத்துவதாகவும் உள்ளது; ஏனெனில் மறதியின் போது அவர்கள் காட்டித்தந்தவற்றை அவர்கள் பின்பற்றலாம்.

மறதிக்கான ஸுஜூது செய்யப்பட வேண்டிய காரணங்கள்:

முதல் நிலை:

தொழுகையில் அதிகரித்தல், இது செயல்களில் அதிகரித்தலாகவோ அல்லது சொற்களில் அதிகரித்தலாகவோ இருக்கலாம்:

அ- தொழுகையின் செயல்களை அதிகரித்தல்: இது, உட்கார வேண்டிய இடத்தில் நிற்குதல், நிற்க வேண்டிய இடத்தில் உட்காருதல், அல்லது ருகூஃ அல்லது ஸுஜூத்தை அதிகரித்தல் போன்ற, தொழுகையின் வகையில் அதிகரித்தலாக இருந்து, அவற்றை மறதியாக செய்தால், மறதிக்கான ஸுஜூத் செய்ய வேண்டும்.

பி- சொற்களை அதிகப்படுத்துதல் : உதாரணமாக, ருகூஃ மற்றும் ஸுஜூதில் அல்குர்ஆன் ஓதுதல்

அவ்வாறு செய்தால், மறதிக்கான ஸுஜூத் செய்வது விரும்பத்தக்கது.

இரண்டாவது நிலை:

தொழுகையில் தவறுதலாக குறைபாடு ஏற்படுவது, இது இரண்டு வழிகளில் நடக்கலாம் :

அ- ருகூனை விடுதல்: இந்த ருகூன் தக்பீரத்துல் இஹ்ராமாக இருந்தால், தொழுகை நிறைவேறாது, மறதிக்கான ஸுஜூத் போதாது. முதல் தக்பீர் அல்லாத, ருகூஃ அல்லது ஸுஜூது போன்ற ருகுன்களை மறந்து, அடுத்த ரக்அத்தின் ஓதலுக்கு முன்னர் நினைவுக்கு வந்தால், அந்த இடத்திற்குத் திரும்பிச் சென்று, அதனையும், அதற்குப் பின் உள்ளவற்றையும் செய்ய வேண்டும்.

அடுத்த ரக்அத்தின் ஓதலுக்குப் பிறகு நினைவுக்கு வந்தால், அதனை விட்டுவிட்ட ரக்அத் செல்லுபடியற்றதாகி விடும், அடுத்த ரக்அத் முந்தைய ரக்அத்தின் இடத்தில் இருக்கும்.

ஆ- தொழுகையின் வாஜிப்களை விடுதல்: உதாரணமாக, முதல் தஷஹ்ஹூதை மறந்து விடுதல், அல்லது ருகூவில் தஸ்பீஹ் செய்யாமல் விடுதல். இந்த நிலையில்: மறதிக்கான ஸுஜூத் செய்ய வேண்டும்.

3. மூன்றாவது நிலை: சந்தேகம்:

உதாரணம்: லுஹர் தொழுகையில் மூன்று ரக்அத்துக்களாகவா அல்லது நான்கு ரக்அத்துக்களாகவா தொழுதார் என்று சந்தேகம் இருந்தால், இவ்வாறான நிலையில்:

அ- ஏதேனும் ஒன்று ஓரளவு தெளிவாகத் தெரிந்தால் அதனைச் செய்ய வேண்டும், மேலும் ஸஜ்தா ஸஹ்வு செய்ய வேண்டும்.

ஆ- அவருக்கு எதுவும் ஓரளவு தெளிவாகத் தெரியவில்லை எனில் உறுதியானதை எடுத்துக்கொண்டு, மறதிக்காக ஸஜ்தா செய்வார்.

தொழுகை முடிந்த பின் சந்தேகம் ஏற்பட்டால், அல்லது ஒருவர் அதிகமாக சந்தேகப்படுபவராக இருந்தால், அந்த சந்தேகத்தைப் பொருட்படுத்த வேண்டியதில்லை.

குறிப்பு: குறைபாடு அல்லது எதுவும் ஏற்றமாக விளங்காத அளவு உள்ள சந்தேகம் காரணமாக ஸுஜூத் ஸஹ்வு செய்தால், ஸலாம் கூறுவதற்கு முன் செய்யப்படும். அதிகரித்ததன் காரணமாக, அல்லது சந்தேகம் ஏற்பட்டு, ஏற்றமானதைக் கொண்டு செயற்பட்டதன் காரணமாக ஸஜூத் செய்தால், ஸலாமுக்கு முன்னர் செய்வார்.  - இன் ஷா அல்லாஹ் - இவ்விடயம் விசாலத்தன்மை கொண்டது. 

11. தொழுகை தடைசெய்யப்பட்டுள்ள நேரங்கள்:

அனைத்து நேரங்களிலும் தொழ அனுமதியுள்ளது என்பதே அடிப்படையாகும், ஆனால், மார்க்கம் சில நேரங்களில் தொழுவதைத் தடைசெய்துள்ளது. அவை பின்வருமாறு:

1- பஜ்ர் தொழுததில் இருந்து, சூரியன் உதயமாகி, சாதாரண கண்பார்வையில் ஒரு ஈட்டியின் உயரத்திற்கு உயரும் வரை.

2- சூரியன் நடு உச்சியில் இருக்கும் நேரம் முதல், அது சாயும் நேரம் வரை, இது தொழுகை தடைசெய்யப்பட்ட நேரங்களில மிகக் குறுகிய நேரமாகும்.

3- அஸர் தொழுகை முதல் சூரியன் மறையும் வரை, இது தொழுகை தடைசெய்யப்பட்ட நேரங்களில் மிக நீண்ட நேரமாகும்.

தடைசெய்யப்பட்ட நேரங்களில் தொழமுடியுமான தொழுகைகள் :

1- தவறவிட்ட பர்ழான கடமைகளை நிறைவேற்றுதல்.

2. காரணங்களுக்கான தொழுகைகள், உதாரணமாக: மஸ்ஜிதுக்குரிய காணிக்கை, தவாஃபின் இரு ரக்அத்கள், கிரகணத் தொழுகை, ஜனாஸா தொழுகை.

3- ஸுப்ஹ் தொழுகைக்குப் பின் பஜ்ருடைய ஸுன்னத் தொழுகையை நிறைவேற்றுதல்.

 

பன்னிரண்டாவது : கூட்டுத் தொழுகை :

இது இஸ்லாத்தின் மகத்தான அடையாளச் சின்னங்களில் ஒன்றாகும், மேலும் இது, மக்கள் கூட்டாக பள்ளிவாசல்களில் தொழுவதைக் குறிக்கும்.  மஸ்ஜித்களில் ஐவேளைத் தொழுகைகளை நிறைவேற்றுவது, மிக முக்கியமான ஒரு வழிபாடாகவும். மகத்தான ஒரு வணக்கமாகவும் உள்ளது என்பது முஸ்லிம்கள் ஏகமனதாக ஒப்புக்கொண்டுள்ள ஒன்றாகும். உண்மையில், இதுவே இஸ்லாத்தின் மிக மகத்தான அடையாளச் சின்னமாகும்.

1. கூட்டுத் தொழுகையின் சட்டம் :

ஐந்து நேர தொழுகைளையும் பள்ளிவாசலில் கூட்டாகத் தொழுவது ஆற்றலுள்ள ஆண்கள் ஒவ்வொருவர் மீதும் கடமையாகும். அது, ஊரிலும் இருக்கலாம்; பிரயாணத்திலும் இருக்கலாம். அச்ச நிலையாகவும் இருக்கலாம் அல்லது பாதுகாப்பு நிலையாகவும் இருக்கலாம்.

கூட்டுத் தொழுகை கடமை என்பதற்கு ஆதாரமாக,  அல்குர்ஆனும், ஹதீஸும், தலைமுறை தலைமுறையாக முஸ்லிம்கள் செய்துவந்த நடைமுறையும் உள்ளன.

அல்குர்ஆனில், அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்:

﴿وَإِذَا كُنتَ فِيهِمۡ فَأَقَمۡتَ لَهُمُ ٱلصَّلَوٰةَ فَلۡتَقُمۡ طَآئِفَةٞ مِّنۡهُم مَّعَكَ...﴾

"(நபியே! போரில்) நீர் அவர்களுடன் இருந்து, அவர்களுக்கு நீர் தொழுகையை நிலைநிறுத்தினால் அவர்களில் ஒரு பிரிவு உம்முடன் (தொழ) நிற்கவும்...". (நிஸா : 102). இந்த வசனம் கூட்டுத் தொழுகை மிக அவசியமான கடமை என்பதை அறிவிக்கின்றது.  ஏனெனில், பயமென்ற நிலையிலும் அதை விட்டுவிடுவதற்கு முஸ்லிம்களுக்கு சலுகை வழங்கப்பட வில்லை, அது கடமையல்லாத ஒன்றாக இருந்தால், பயம் என்ற நியாயம் அதனை விடுவாதற்கான முதன்மையான காரணமாக இருந்திருக்கும். கூட்டுத்தொழுகையை விட்டு, அதில் சோம்பலாக இருப்பது நயவஞ்சகர்களின் பிரபலமான பண்புகளில் ஒன்றாகும்.

மேலும் இது குறித்து ஹதீஸ்கள் அதிகமாக உள்ளன, அவற்றில் சில:

ஸஹீஹ் முஸ்லிமில் பின்வருமாறு வந்துள்ளது: 

أَنَّ رَجُلًا أَعْمَى قَالَ: يَا رَسُولَ اللَّهِ، لَيْسَ لِي قَائِدٌ يَقُودُنِي إِلَى الْمَسْجِدِ، فَسَأَلَهُ أَنْ يُرَخِّصَ لَهُ أَنْ يُصَلِّيَ فِي بَيْتِهِ، فَرَخَّصَ لَهُ، فَلَمَّا وَلَّى دَعَاهُ فَقَالَ: «هَلْ تَسْمَعُ النِّدَاءَ؟» قَالَ: نَعَمْ، قَالَ: «فَأَجِبْ».

நபி (ஸல்) அவர்களிடம் பார்வையற்ற ஒரு மனிதர் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! என்னைப் பள்ளிவாசலுக்கு அழைத்து வரக்கூடிய வழிகாட்டி எவரும் எனக்கு இல்லை' என்று கூறி, வீட்டிலேயே தொழுது கொள்ள தமக்கு அனுமதியளிக்குமாறு கோரினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதியளித்தார்கள். பிறகு அவர் திரும்பிச் சென்றபோது அவரை அழைத்து, 'தொழுகை அறிவிப்பு சப்தம் உமக்குக் கேட்கிறதா?' என்று கேட்டார்கள். அவர் 'ஆம்' (கேட்கிறது) என்றார். நபி (ஸல்) அவர்கள் 'அப்படியானால் நீர் அதற்கு செவிசாய்ப்பீராக!' (கூட்டுத் தொழுகையில் வந்து கலந்து கொள்வீராக!) என்று கூறினார்கள்.33

பார்வையற்றவராக இருந்தும், அவர் சிரமங்களை சந்திப்பார் என்றிருந்தும், பள்ளிவாசலுக்கு வந்து கூட்டுத் தொழுகையில் கலந்துகொண்டு, அதான் அழைப்புக்கு செவிசாய்க்க நபி (ஸல்) அவர்கள் அவருக்கு உத்தரவிட்டுள்ளார்கள். எனவே, இது கூட்டுத் தொழுகை கடமை என்பதை உறுதிப்படுத்துகின்றது.

2. கூட்டுத் தொழுகை எவ்வாறு அடைந்துகொள்ளப்படும் :

இமாமுடன் தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைந்தால் கூட்டுத் தொழுகையை அடைந்ததாகக் கணிக்கப்படும், நபி (ஸல்) கூறுகிறார்கள் :

«مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الصَّلَاةِ فَقَدْ أَدْرَكَ الصَّلَاةَ».

யார் தொழுகையில் ஒரு ரக்அத்தையேனும் அடைந்து கொள்கிறாரோ அவர் தொழுகையை முழுமையாக அடைந்து கொண்டவராவார்".34

3. ஒரு ரக்அத் எவ்வாறு அடைந்துகொள்ளப்படும் :

ஒரு ரக்அத், (அதன்) ருகூஃஐ அடைவதன் மூலம் அடையப்படும்.  தாமதித்து வரும் ஒருவர், இமாமுடன் ருகூஃ செய்யும் நிலையில் சேர்ந்தால், அவர் நின்று கொண்டு தக்பிருல் இஹ்ராம் கூற வேண்டும், பின்னர் மீண்டும் தக்பிர் கூறி ருகூஃ செய்ய வேண்டும், நிலையில் நிற்கும் போது ஆரம்ப தக்பீரை மட்டும் கூறினால், அது ருகூஃ தக்பீருக்கு பதிலாக போதுமானதாக இருக்கும். 

4- ஒரு மனிதனுக்குக் கூட்டுத் தொழுகையை விட அனுமதியளிக்கும் சலுகைகள்:

1. நோய். அதன் காரணமாக  ஜும்ஆ மற்றும் கூட்டு தொழுகைக்கு வருவது கடினமாக இருந்தால்.

2. சிறுநீர் அல்லது மலத்தை அடக்கிக் கொண்டிருத்தல். ஏனெனில், இதனால் தொழுகையில் உள்ளச்சம் குறைந்து விடும், மேலும், அதனால் உடலுக்கும் தீங்கு உண்டு. 

3. உணவு தயாராக இருத்தல். அதேநரம், அம்மனிதன் பசியுடன் இருத்தல் போது அல்லது உணவுக்காக அவன் மனம் ஏங்கிக் கொண்டிருக்கும் நிலையில், ஆனால், இதை வழக்கமாகவோ அல்லது கூட்டுத் தொழுகையை தவிர்க்கும் உத்தியாகவோ மாற்றிக் கொள்ளக் கூடாது.

4- உயிர் அல்லது செல்வம் போன்றவற்றிற்குத் தீங்கு ஏற்படலாம் என உறுதியாகப் பயப்படல்.

13. போர் நேரத் தொழுகை :

போர் நேரத் தொழுகை, நிராகரிப் போருடன் போரிடல், கிளர்ச்சியாளர்களுடன் போரிடல், மற்றும் பொதுவாக எதிர்த்துப் போரிடுபவர்களுடன் போரிடல் என, அனைத்து அனுமதிக்கப்பட்ட போர்களின் போதும் உள்ள சட்டமாகும். அல்லாஹ் கூறுகின்றான் :

﴿...إِنۡ خِفۡتُمۡ أَن يَفۡتِنَكُمُ ٱلَّذِينَ كَفَرُوٓاْ...﴾

"...நிராகரிப்பாளர்கள் உங்களைத் துன்புறுத்துவதை நீங்கள் பயந்தால்",  (அந்நிஸா : 101) எதிர்த்துப் போரிடமுடியுமான மற்றவர்களையும் இதனுடன் ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்.

போர்க்காலத் தொழுகை, இரண்டு நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்படுகின்றது:

1. எதிர்த்துப் போரிடுவது அனுமதிக்கப்பட்டவராக எதிரி இருக்க வேண்டும்.

2) தொழுகையை நிறைவேற்றும் போது முஸ்லிம்களை அவர்கள் தாக்கலாம் எனப் பயப்படல். 

போர் நேரத் தொழுகை முறை :

இதற்கு பல முறைகள் உள்ளன. அவற்றில் மிகப் பிரதானமானது, ஸஹ்ல் (ரலி) அவர்கள் கூறிய ஹதீஸில் வருவதாகும்:

أَنَّ طَائِفَةً صَفَّتْ مَعَ النَّبِي ﷺ، وَطَائِفَةً وِجَاهَ العَدُوِّ، فَصَلَّى بِالَّتِي مَعَهُ رَكْعَةً، ثُمَّ ثَبَتَ قَائِمًا، وَأَتَمُّوا لِأَنْفُسِهِمْ، ثُمَّ انْصَرَفُوا، وَصَفُّوا وِجَاهَ العَدُوِّ، وَجَاءَتِ الطَّائِفَةُ الأُخْرَى، فَصَلَّى بِهِمُ الرَّكْعَةَ الَّتِي بَقِيَتْ مِنْ صَلَاتِهِ، ثُمَّ ثَبَتَ جَالِسًا، وَأَتَمُّوا لِأَنْفُسِهِمْ، ثُمَّ سَلَّمَ بِهِمْ.

ஒரு குழுவினர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் (தொழுவதற்கு) வரிசையாக நின்றனர், மற்றொரு குழுவினர் எதிரிகளுக்கு எதிராக (போருக்கு) நின்றனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்முடன் இருந்தவர்களுடன் ஒரு ரக்அத் தொழுதார்கள், பின்னர் நின்று கொண்டிருந்தார்கள், மஃமூம்கள் தங்களுக்காக (மற்றொரு ரக்அத்தை) முடித்தார்கள், பின்னர் அவர்கள் திரும்பி, எதிரிகளுக்கு எதிராக வரிசையாக நின்றார்கள். மற்ற குழுவினர் வந்தார்கள், அவர்களுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழுத தொழுகையின் மீதமுள்ள ரக்அத்தை தொழுதார்கள், பின்னர் அமர்ந்திருந்தார்கள், அவர்கள் தங்களுக்காக (மற்றொரு ரக்அத்தை) முடித்தார்கள், பின்னர் அவர்களுடன் (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஸலாம் கூறினார்கள்.35

போர் நேரத் தொழுகை கற்றுத் தரும் பாடங்கள்:

1. இஸ்லாத்தில் தொழுகை மற்றும் கூட்டுத் தொழுகையின் முக்கியத்துவம். ஏனெனில், இக்கடினமான சூழ்நிலைகளிலும் அது கைவிடப்படவில்லை.

2- இந்த உம்மத்தினரிடமிருந்து சிரமத்தை நீக்குதல், இஸ்லாமிய ஷரீஆவின் தாராளத்தன்மையும் அது எல்லா காலங்களுக்கும் இடங்களுக்கும் பொருந்திப் போகின்றமையும்.

3. இஸ்லாமிய ஷரீஆவின் முழுமைத்துவம், மேலும் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஏற்றவாறு அது சட்டங்களை வகுத்துள்ளமை.

 

 

பதினான்காவது: ஜும்ஆ தொழுகை:

முதலாவதாக : அதன் சட்டநிலை :

பருவமடைந்த, புத்தியுள்ள, ஊரிலிருக்கும், விடுவதற்கான நியாயகாரணங்கள் எதுவுமற்ற ஒவ்வொரு ஆணின் மீதும் ஜும்ஆ தொழுகை கடமையாகும்.

அல்லாஹ் கூறியுள்ளான் :

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا نُودِيَ لِلصَّلَوٰةِ مِن يَوۡمِ ٱلۡجُمُعَةِ فَٱسۡعَوۡاْ إِلَىٰ ذِكۡرِ ٱللَّهِ وَذَرُواْ ٱلۡبَيۡعَۚ ذَٰلِكُمۡ خَيۡرٞ لَّكُمۡ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ 9﴾

"நம்பிக்கையாளர்களே! ஜுமுஆ தினத்தன்று தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வின் நினைவின் பக்கம் (வெள்ளிக் கிழமை பிரசங்கத்தை செவியுறுவதன் பக்கம்) நீங்கள் விரையுங்கள்! இன்னும், வியாபாரத்தை விட்டுவிடுங்கள்! நீங்கள் (அதன் நன்மையை) அறிகிறவர்களாக இருந்தால் அதுதான் உங்களுக்கு மிகச் சிறந்ததாகும்".(9) ஜும்ஆ (9)

மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

«لَيَنْتَهِيَنَّ أَقْوَامٌ عَنْ وَدْعِهِمُ الْجُمُعَاتِ، أَوْ لَيَخْتِمَنَّ اللَّهُ عَلَى قُلُوبِهِمْ، ثُمَّ لَيَكُونُنَّ مِنَ الْغَافِلِينَ».

"ஜுமுஆக்களைக் கைவிடுவதிலிருந்து விலகியிருக்கட்டும்! இல்லையேல் அவர்களின் இதயங்கள்மீது அல்லாஹ் முத்திரை பதித்துவிடுவான்; பிறகு அவர்கள் அலட்சியவாதிகளில் சேர்ந்துவிடுவர்".36

இரண்டாவது: ஜும்ஆத் தொழுகை செல்லுபடியாவதற்கான நிபந்தனைகள் :

1) நேரம்: அதன் நேரம் லுஹர் தொழுகையின் நேரம் போலவாகும் அதற்குரிய நேரத்திற்கு முன்னரோ, அதற்குரிய நேரம் முடிந்த பின்னரோ அது நிறைவேறமாட்டாது.

2) அதனைக் கூட்டாக நடத்த வேண்டும், சரியான கருத்துப்படி கூட்டத்தின் (ஜமாஅத்தின்) குறைந்தபட்ச எண்ணிக்கை மூன்று ஆகும், தனி ஒருவர் அல்லது இருவர் நிறைவேற்றினால் அது நிறைவேறாது.

3) தொழுகை நிறைவேற்றுபவர்கள் வழக்கமாக கட்டப்படும் வீடுகளில் குடியிருப்பவர்களாக இருக்க வேண்டும், அது இரும்பு கம்பி கலந்த சிமெண்டாகவோ, கல்லாகவோ, களிமணாகவோ அல்லது வேறு எதுவாகவோ இருந்தாலும் சரியே  எனவே, கூடாரங்களில் மற்றும் கம்பளி வீடுகளில் வாசித்துக்கொண்டும், தமது கால்நடைகளுக்கான புல்வெளிகளைத் தேடி இடம் பெயர்ந்துகொண்டும் இருக்கும் கிராமப்புற மக்கள் இதனை நிறைவேற்ற முடியாது. 

4) முதலில் இரு குத்பாக்கள் செய்யப்பட வேண்டும். நபி ﷺ அவர்கள் அவ்வாறு பேணிச் செய்துள்ளார்கள் 

மூன்றாவது: ஜும்ஆ உரையின் அடிப்படை அம்சங்கள் :

1- அல்லாஹ்வை புகழுதல் மற்றும்  உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை, முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சியம் கூறுதல்

2- நபி (ஸல்) அவர்களின் மீது ஸலவாத் சொல்லுதல்.

3- அல்லாஹ்வை அஞ்சுமாறு உபதேசித்தல் 

4- அல்குர்ஆனில் சிலவற்றை ஓதுதல்.

5- உபதேசித்தல் 

நான்காவது: ஜும்ஆ உரையின் ஸுன்னாக்கள் :

1- மின்பர் மீது குத்பா செய்தல்

2- இரண்டு உரைகளுக்கும் இடையில் சற்று நேரம் அமர்தல். 3- அவ்விரு உரைகளிலும் முஸ்லிம்களுக்கும் அவர்களின் தலைவர்களுக்கும் துஆ செய்வது.

4- இரு குத்பாக்களையும் சுருக்கிக் கொள்ளல்

5- மிம்பரில் ஏறும் போது, மக்களுக்கு ஸலாம் கூறுதல்.

ஐந்தாவது: வெள்ளிக்கிழமையின் ஸுன்னாக்கள்

1- பல் துலக்குதல்.

2- மணம் - இருப்பின் -  பூசிக்கொள்ளுதல். 

3- ஜும்ஆ தொழுகைக்கு ஆரம்ப நேரத்தில் செல்லுதல்.

4- பள்ளிக்கு வாகனத்தில் இன்றி, நடந்துசெல்லுதல்

5- இமாமுக்கு நெருக்கமாக அமர்தல்.

6. துஆ கேட்டல்.

7- ஸுறதுல் கஹ்பை ஓதுதல்.

8- நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறுதல்.

ஆறாவது: ஜும்ஆத் தொழுகைக்கு வருபவர்களுக்கு தடை செய்யப்படும் விஷயங்கள் :

1- வெள்ளிக்கிழமை அன்று இமாம் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது பேசுவது ஹராமாகும், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

«إِذَا قُلْتَ لِصَاحِبِكَ يَوْمَ الْجُمُعَةِ: أَنصِتْ، وَالْإِمَامُ يَخْطُبُ، فَقَدْ لَغُوتَ».

“வெள்ளிக்கிழமை அன்று இமாம் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது, உன் அருகில் இருப்பவரிடம் நீ 'மௌனமாக இரு' என்று கூறினாலும் நீ வீண்டித்துவிட்டாய்.”37 அதாவது, வீண் பேச்சுப் பேசிவிட்டாய். இங்கு லக்வு என்பது, பாவத்தைக் குறிக்கும்

2- மனிதர்களைத் தாண்டி செல்வது வெறுக்கப் படும். ஆனால் ஒருவர் இமாம் ஆக இருந்தால், அல்லது ஒரு இடைவெளி இருந்து, தாண்டிச் சென்றால் மாத்திரமே அதை அடையமுடியும் என்றால் மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

ஜும்ஆவை அடைவது:

யார் ஜும்ஆ தொழுகையின் இரண்டாவது ரக்அத்தில், இமாமை ருகூவுடைய நிலையில்  அடைந்து கொள்கிறாரோ அவர் ஜும்ஆ தொழுகையை அடைந்து கொண்டு விட்டார். எனவே, அவற்றை இரண்டு ரக்அத்களாகக் தொழுதுகொள்வார்.  இரண்டாவது ரக்அத்தின் ருகூவை அடையவில்லை என்றால் அவருக்கு ஜும்ஆ தவறிவிட்டது. அதை லுஹராக, நான்கு ரக்அத்துக்கள் தொழவேண்டும். அதே போல் தூக்கத்தினால் அல்லது வேறு காரணத்தினால் ஜும்ஆ தொழுகை தவறியவர்களும் அதனைத் லுஹ்ர் தொழுகையாக நிறைவேற்ற வேண்டும்.

15- அசாதாரண நிலையிலுள்ளோரின் தொழுகை :

முதலாவதாக : நோயாளியின் தொழுகை :

முதலாவது: நோயாளி தன் இயலுமைக்கு ஏற்ப தொழுகையை நிறைவேற்றுவது கட்டாயமாகும் , அவரது புத்தி நிலை சரியாக இருக்கும் வரை, தொழுகையை அதற்குரிய நேரத்தை விட்டும் பிற்படுத்துவது கூடாது.

இரண்டாவது: நோயாளி எப்படி தொழுவார்? :

1. நோயாளி சிரமமோ அல்லது பாதிப்போ இன்றி நின்று தொழமுடியுமான ஒருவராக இருந்தால், நின்று தொழ வேண்டும். ருகூஃ மற்றும் ஸுஜூதுகளையும் செய்ய வேண்டும்.

2- நிற்க முடிந்தாலும், ருகூஃ அல்லது ஸுஜூத் செய்வது பாதிப்பை ஏற்படுத்தும் என்று இருந்தால், ருகூஃவிற்கு நிற்கும் நிலையில் சைக்கினை செய்து, ஸுஜூதிற்கு உட்கார்ந்த நிலையில் சைக்கினை செய்ய வேண்டும்.

3. நின்ற நிலையில் தொழ முடியாவிட்டால் உட்கார்ந்த நிலையில் தொழ வேண்டும், நிற்கும் இடத்தில் கால்களை மடக்கி அமர்வது ஸுன்னத் ஆகும். ருகூஃ செய்ய சைக்கினை செய்ய வேண்டும். ஸுஜூதை தரையில் செய்ய வேண்டும். முடியாவிட்டால் ஸுஜூதுக்கும் சைக்கினை செய்ய வேண்டும். அது ருகூஃவுக்கு செய்யும் சைக்கினையை விட தாழ்வாக இருக்க வேண்டும்.

4. உட்கார்ந்து தொழ முடியாவிட்டால் பக்கவாட்டில் சாய்ந்து, முகம் கிப்லாத் திசையை நோக்கி இருக்குமாறு தொழ வேண்டும். வலதுபக்க விலாப்புறத்தில் சாய்வது சாத்தியமானால், அதுவே சிறந்தது, ருகூஃ மற்றும் ஸுஜூதுக்கு சைக்கினை செய்ய வேண்டும்.

5. பக்கவாட்டில் சாய்ந்து தொழ முடியா விட்டால், இரு கால்களும் கிப்லாத் திசையில் இருக்கும் நிலையில் மல்லாந்து படுத்துக் கொண்டு தொழ வேண்டும், ருகூஃ, ஸுஜூதை சைக்கினை மூலம் நிறைவேற்ற வேண்டும்.

6- ருகூஃ, ஸுஜூதுகளுக்காக உடலால் சைக்கினை செய்ய முடியா விட்டால் தலையினால் சைக்கினை செய்ய வேண்டும். அதுவும் சிரமமானால் சைக்கினையும் செய்ய வேண்டியதில்லை. அவர் தொழுகையின் செயல்களை மனதினால் நிறைவேற்ற வேண்டும். அதாவது, ருகூஃ, ஸுஜூது, உட்கார்வது போன்ற தொழுகையின் செயல்களை மனதினால் நினைத்து, அவற்றின் திக்ருகளைச் செய்ய வேண்டும்.

7- நோயாளி தொழுகையின் நிபந்தனைகளில் இயலுமானவற்றை செய்ய வேண்டும். உதாரணமாக: கிப்லாவை நோக்கி நிற்றல், நீரால் வுழு செய்தல், அல்லது முடியாத போது தயம்மும் செய்தல், அசுத்தத்திலிருந்து தூய்மையடைந்து கொள்ளல். இவற்றில் ஏதாவது ஒன்றை செய்ய முடியாவிட்டால், அவை அவரை விட்டும் தளர்ந்து விடுகின்றன. அவர் தன்னுடைய நிலைமைக்கு ஏற்பத் தொழ வேண்டும், தொழுகையை அதன் நேரத்திலிருந்து தாமதிக்கக் கூடாது.

8- நிற்கவேண்டிய மற்றும் ருகூஃ உடைய நிலையில் நோயாளி கால்களை மடக்கி (சம்மனமாக) அமர்வது ஸுன்னத் ஆகும். மற்ற இடங்களில் கால்களை மடக்கி இடது காலின் பாதத்தில் அமர்வது ஸுன்னத் ஆகும்.

இரண்டாவது : பயணியின் தொழுகை :

1- பயணி சலுகையுடையவர்களில் ஒருவராகும். அவர்  நான்கு ரக்அத்கள் கொண்ட தொழுகையை இரண்டு ரக்அத்களாக சுருக்கித் தொழலாம்.  அல்லாஹ் கூறுகின்றான் :

﴿وَإِذَا ضَرَبۡتُمۡ فِي ٱلۡأَرۡضِ فَلَيۡسَ عَلَيۡكُمۡ جُنَاحٌ أَن تَقۡصُرُواْ مِنَ ٱلصَّلَوٰةِ...﴾

"(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் பூமியில் பயணித்தால், தொழுகையைச் சுருக்குவது உங்கள் மீது குற்றமில்லை..." (அந்நிஸாஃ : 101).

அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்:

«خَرَجْنَا مَعَ النَّبِيِّ ﷺ مِنَ الْمَدِينَةِ إِلَى مَكَّةَ، فَكَانَ يُصَلِّي رَكْعَتَيْنِ رَكْعَتَيْنِ، حَتَّى رَجَعْنَا إِلَى الْمَدِينَةِ».

நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் மதீனாவிலிருந்து மக்காவிற்கு சென்றோம். நாம் மதீனவைச் சென்றடையும் வரை, அவர்கள் இரண்டு இரண்டு ரக்அத்களாகவே தொழுவித்தார்கள்38 

ஒரு பயணி, தனது ஊரின் கட்டடங்களை விட்டு வெளியேறியவுடன் சுருக்கித் தொழ ஆரம்பிக்கலாம்; ஏனெனில் அல்லாஹ் பயணத்தில் இருப்பவர்களுக்குத் தான் சுருக்கித் தொழ அனுமதித்துள்ளான். தன் ஊரை விட்டு வெளியேறுவதற்கு முன் அவன் பயணத்தில் ஈடுபட்டவனாகவோ அல்லது பிரயாணியாகவோ இருக்க மாட்டான். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் பயணத்தைத் தொடங்கிய பின்னரே தொழுகையை சுருக்குவார்கள்.

2) பயணி கடக்க விரும்பும் தூரம் சுமார் எண்பது கிலோமீட்டர் ஆக இருந்தால், அப்பொழுது அவர் தொழுகையை சுருக்கிக் கொள்ளலாம்.

3- பயணி மீண்டும் தனது ஊரினுள் நுழையும் வரை தொழுகையை சுருக்கிக் கொள்ளலாம்.

4- ஒரு பயணி ஓர் ஊரை அடைந்து, அங்கு தங்க விரும்பினால்; அவருக்கு மூன்று நிலைகள் உள்ளன:

அ) அங்கு நான்கு நாட்களுக்கும் மேலாக தங்கியிருப்பதற்குத் தீர்மானித்திருத்தல்.  இவர் முதல் நாளிலிருந்தே தொழுகையை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்; பயணத்தின் சலுகைகளைப் பயன்படுத்த முடியாது.

ப) நான்கு நாட்கள் அல்லது அதற்குக் குறைவாக தங்கியிருப்பதற்குத் திட்டமித்திருத்தல். இவர் பயணத்தின் சலுகைகளைப் பயன்படுத்திக்கொள்ளவும், கஸ்ர் செய்யவும் அனுமதியுண்டு.

(3) குறிப்பிட்ட காலம் தங்கியிருக்கும் நோக்கம் இல்லாமல் இருத்தல். மாறாக, அவ்விடம் பொருத்தமாக இருப்பதற்கு ஏற்ப, அல்லது சிகிச்சை பெறல், யாரையாவது சந்தித்தால் போன்ற விடயங்களுக்கு ஏற்ப, ஒரு நாளோ  அல்லது பத்து நாட்களோ தங்கியிருப்பார், எனவே, தனது நோக்கம் முடிந்தவுடன் ஊருக்குத் திரும்பிவிடுவார்.  இவர், ஊருக்குத் திரும்பும் வரை - அவர் தங்கியிருப்பது நான்கு நாட்களுக்கு அதிகாமாக இருப்பினும் -  பயணத்தின் சலுகைகளைப் பயன்படுத்தி, சுருக்கித் தொழ அனுமதிக்கப்படுகிறது.

5. ஒரு பயணி,  ஊரில் இருக்கும் (முழுமையாயகத் தொழும்) இமாமைப் பின்பற்றித் தொழுகின்றபோது; இறுதி தஷஹ்ஹுதில் தான் சேர்ந்தாலும், தொழுகையை முழுமையாக நிறைவேற்றுவது கடமையாகும்.

6- சுருக்கித் தொழும் ஒரு பயணியின் பின்னால் தொழுகின்ற ஓர் ஊர்வாசி, இமாம் ஸலாம் கூறிய பின் தனது தொழுகையை முழுமைப்படுத்துவது கட்டாயமாகும்.

பதினாறாவது : இரு பெருநாள் தொழுகைகள் :

முஸ்லிம்களின் பெருநாட்கள் அல்லாஹ்வால் சட்டமாக்கப்பட்ட மார்க்கப் பெருநாட்கள் ஆகும், இவை அவர்களாக உருவாக்கிக்கொண்டதல்ல.  முஸ்லிம்களுக்கு இருபெருநாட்கள் மட்டுமே உள்ளன.  நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாளே அவையாகும்.  ஆனால், காஃபிர்களின் கொண்டாட்டங்கள் அல்லது பித்அத்தான (நூதனமான) கொண்டாட்டங்கள் எதனையும் அல்லாஹ் தஆலா மார்க்கமாக்க வில்லை, அவனது கட்டளைக்கு உட்பட்டவையும் அல்ல. அவற்றை அவர்களே உருவாக்கிக் கொண்டார்கள். 

இரு பெருநாள் தொழுகையின் சட்டம் :

இவை (சமூகத்தில் யாராவது ஒரு தரப்பினர் நிறைவேற்றினால் கடமை நீங்கிவிடும் என்ற நிலையில் உள்ள) பொது கடமையாகும். நபி (ஸல்) அவர்களும்,  நேர்வழி பெற்ற கலீபாக்களும் அவற்றைப் பேணிவந்துள்ளார்கள். அல்லாஹ்வின் திருப்தி அவர்கள் மேல் உண்டாகட்டும், இவை மார்க்கத்தின் வெளிப்படையான அடையளச் சின்னங்களில் உள்ளவையாகும். 

இரு பெருநாள் தொழுகையின் நேரம்: சூரியன் உதித்து ஒரு ஈட்டியின் அளவுக்கு உயர்ந்ததும், அதாவது சூரிய உதயத்திற்குப் பிறகு சுமார் பதினைந்து நிமிடங்கள் கழித்து, நேரம் தொடங்குகிறது. பின்னர், சூரியன் உச்சிக்கு வந்து, மேற்குப் பக்கமாக சாய ஆரம்பிக்கும் போது முடிவடைகிறது.

இரு பெருநாள் தொழுகை முறை :

1- முதலாவது ரக்அத்தில் தக்பீரதுல் இஹ்ராம் கூறி, ஆரம்ப துஆவை ஓத வேண்டும். பின்பு ஆறு தக்பீர்களை கூறி, ஒவ்வொரு தக்பீருக்கும் கைகளை உயர்த்த வேண்டும். தக்பீர்களுக்கு இடையில் அல்லாஹ்வை புகழ்ந்து, நபி ﷺ மீது ஸலவாத்தை ஓத வேண்டும். பின்பு அஊது மற்றும் பிஸ்மில்லாஹ் கூறி, ஓதலை ஆரம்பிக்க வேண்டும்.

2- இரண்டாம் ரக்அத்தில், நிலைக்கு வருவதற்கான தக்பீருக்குப் பின் ஐந்து தக்பீர்களைச் சொல்ல வேண்டும். பின் அஊது, பிஸ்மில்லாஹ் கூறி ஓதத் தொடங்க வேண்டும். பாதிஹாவுக்குப் பின்னர், முதலாம் ரக்அத்தில் ஸூரா அஃலாவையும், இரண்டாம் ரக்அத்தில் ஸூரா காஷியாவையும் ஓதுவது விரும்பத்தக்கது.

3- இமாம், ஸலாம் கூறிய பின் மிம்பரில் ஏறி, இரண்டு குத்பாக்களை நிகழ்த்துவார். அவற்றின் இடையில், வெள்ளிக்கிழமை குத்பா போன்று, சற்று நேரம் அமர்வார்.  

பெருநாளின் ஸுன்னாக்கள் :

அ- குளிப்பு.

‌ஆ- சுத்தமடைந்து கொள்ளல், மணம் பூசிக் கொள்ளல்.

இ- நோன்புப் பெருநாளில், (தொழுகைக்கு) வெளியேறுவதற்கு முன் உண்ணுதல், ஹஜ்ஜுப் பெருநாளில், வீடுதிரும்பிய பின்னர், - குர்பானி இருக்கும் பட்சத்தில் - அதிலிருந்து உண்ணுதல்.

ஈ- நடந்து செல்லுதல்.

எ- ஒரு வழியால் சென்று, வேறு வழியால் திரும்புதல்.

ஏ- மஃமூம் (இமாம் அல்ல) தொழுகைக்கான இடத்திற்கு நேரகாலத்துடன் செல்லுதல்.

தக்பீர் கூறுதல்:

இரண்டு பெருநாட்களின் இரவுகளிலும், துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களிலும், தஷ்ரீக்குடைய நாட்களிலும் தக்பீர் ஓதுவது ஸுன்னத்தாகும். அது இரு வகைப்படும் :

முதலாவது: காலம் குறிப்பிடப்படாத பொதுவான தக்பீர்.

1- நோன்புப் பெருநாளில்: சூரியன் மறையும் நேரத்தில் இருந்து பெருநாள் தொழுகை தொடங்கும் வரை.

2- ஹஜ்ஜுப் பெருநாளில்: துல் ஹஜ் மாதத்தின் முதல் நாளின் இரவின் சூரியன் மறையும் நேரத்திலிருந்து, தஷ்ரீக் நாட்களின் இறுதி நாளின் சூரியன் மறையும் நேரம் வரை.

இரண்டாம் வகை: (நேர) வரையறை செய்யப்பட்ட தக்பீர்: இது கடமையான தொழுகைகளின் பின்னரான நேரத்தோடு வரையறுக்கப்பட்டதாகும். 

1- இஹ்ராம் நிலையில் இல்லாதவர் : அரஃபா நாளின் விடியற்காலை முதல், தஷ்ரீக் நாட்களின் இறுதி நாள் மாலை வரை,

2. இஹ்ராம் நிலையில் இருப்பவர் : பெருநாள் (ஈத்) நாளில் லுஹ்ர் தொழுகை முதல் தஷ்ரீக் நாட்களின் இறுதி நாளின் அஸர் தொழுகை வரை.

பதினேழாவது: சூரிய, சந்திரக் கிரகணத் தொழுகை :

ஹுஸூப் மற்றும் குஸூப் என்பதன் பொருள்:

அல்-ஹுஸூஃப்: இரவில் சந்திரனின் ஒளி அல்லது அதன் சில பகுதி மறைந்து போதல்.

அல்குஸூஃப்: பகலில் சூரிய ஒளி அல்லது அதன் சில பகுதி மறைவதாகும்.

கிரகணத் தொழுகையின் சட்டம் :

இது வலியுறுத்தப்பட்ட ஸுன்னாவாகும், நபி (ஸல்) அவர்கள் இதனைச் செய்துள்ளமை இதை உறுதிப்படுத்துகின்றது. அதாவது,  அவர்களின் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்ட போது இதனைத் தொழுதார்கள். மேலும், நபியவர்கள் அதனை ஏவியுள்ளமையும், அது மார்க்கத்தில் உள்ளதென அறிஞர்கள் ஏகோபித்தமையும் இதனை உறுதிப்படுத்துகின்றது.

அதன் நேரம்:

கிரகணம் தொடங்கியது முதல் அது மறையும் வரை, அதாவது கிரகணம் முடிவடையும் வரை.

அதன் முறை :

இதன் ரக்அத்களின் எண்ணிக்கை இரண்டாகும்.  இரண்டிலும் சப்தமாக ஓதவேண்டும். இதன் விதிமுறை பின்வருமாறு:

‌அ- தக்பீர் கூறி தொழுகையைத் தொடங்கி, ஆரம்ப திக்ரை ஓதி, அஊது பில்லாஹ் மற்றும் பிஸ்மில்லாஹ் கூறி, ஸூரா பாதிஹா ஓதிவிட்டு, பின் நீண்ட நேரம் அல்குர்ஆனை  ஓத வேண்டும்.

‌ஆ- பின்னர் நீண்ட ருகூஊ செய்தல்.

இ. பின் ருகூஃவிலிருந்து எழுந்து "ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹு" என்று கூற வேண்டும். பின் ஸூறத்துல் பாத்திஹாவை ஓத வேண்டும். பின் முதலில் ஓதியதை விட குறைவாக நீண்ட நேரம் அல்குர்ஆனை  ஓத வேண்டும்.

‌ஈ - பிறகு முதல் ருகூவை விடக் குறைவாக,  நீண்ட ருகூவைச் செய்வார்.

எ - பின் ருகூஃவிலிருந்து எழுந்து, "ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹு" என்று கூற வேண்டும்.

ஏ - பின்னர் இரண்டு நீண்ட ஸஜ்தாக்களைச் செய்தல்.

உ. பிறகு இரண்டாவது ரக்அத்திற்காக எழுந்து, முதல் ரக்அத்தைப் போன்றே இதையும் செய்வார். ஆனால் இது அதைவிட சற்றே குறைவாக இருக்கும்.

கிரகணத் தொழுகையின் ஸுன்னாக்கள்:

1)”அஸ்ஸலாத்து ஜாமிஅத்” என அதற்காக அழைப்பு விடுத்தல் : 

‌2) கூட்டாக நிறைவேற்றப்படல்.

3) தொழுகையில், நிற்கும் நிலை, ருகூஉ, ஸுஜூத் ஆகியவற்றை நீட்டுதல்

‌4) இரண்டாம் ரக்அத், முதலாவதை விட சுருக்கமாக இருத்தல்.

5) அதன் பின் அறிவுரை கூறுதல், வணக்க வழிபாடுகளைச் செய்யவும், தீயவற்றை விட்டு விடவும் ஊக்குவித்தல்.

அ) அதிகமாக பிரார்த்தனை, துஆ, இஸ்திக்பார் மற்றும் தர்மம் போன்றவற்றில் ஈடுபடல்.

பதினெட்டாவது - மழைதேடித் தொழுதல் :

1) இஸ்திஸ்கா: வறட்சியின்போது, மழை பொழியச் செய்யுமாறு இறைவனிடம் வேண்டுதல்.

மார்க்க அடிப்படையில், மழைதேடித் தொழுவதற்குரிய நேரம்:

நிலம் வறண்டு, மழை நின்று, அதனால் பாதிப்பும் ஏற்பட்டால், தங்கள் இறைவனிடம் இறைஞ்சி, மழையைத் தருமாறும், இரட்சிக்குமாறும் பல்வேறு வழிகளில் பிரார்த்திப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழிகள் இல்லை. 

அ- ஒரு சந்தர்ப்பத்தில் கூட்டாகவோ, தனியாகவோ தொழுவது கொண்டும், 

ஆ- இன்னொரு சந்தர்ப்பத்தில், ஜும்ஆ குத்பாப் பிரசங்கத்தில் பிரசங்கம் ஆற்றுபவர் துஆ கேட்க, முஸ்லிம்கள் அவரது துஆவுக்கு ஆமீன் சொல்வதன் மூலமும், 

இ- இன்னும் சில சந்தர்ப்பங்களில், தொழுகையோ, பிரசங்கமோ இன்றி ஏதாவது ஒரு நேரத்தில் துஆக் கேட்பது கொண்டும் மழை வேண்டப்படும்.

மழைதேடித் தொழுவதன் சட்டம் :

இது, உரிய காரணம் இருக்கும் பட்சத்தில்  வலியுறுத்தப்பட்ட ஸுன்னா ஆகும். அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்: 

«خَرَجَ النَّبِيُّ ﷺ إِلَى الْمُصَلَّى، فَاسْتَسْقَى، وَاسْتَقْبَلَ الْقِبْلَةَ، وَقَلَبَ رِدَاءَهُ، وَصَلَّى رَكْعَتَيْنِ».

“நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொழும் மைதானத்திற்கு புறப்பட்டு, மழை வேண்டி பிரார்த்தனை செய்தார்கள். கிப்லாவை நோக்கி நின்று, தமது மேலாடையை மாற்றி, இரண்டு ரக்அத்துக்களை தொழுதார்கள்.39

மழைதேடித் தொழுகை முறை :

மழைதேடித் தொழுகை அதற்குரிய இடத்தில் இரு பெருநாள் தொழுகை போல நிறைவேற்றப்படும். இது, பெருநாள் தொழுகையைப் போல, முஸல்லாவில் நிறைவேற்றப்படுவது விரும்பத்தக்கது. ரக்அத்களின் எண்ணிக்கை, சப்தமாக ஓதுதல், பிரசங்கத்திற்கு முன் தொழுதல், முதல் மற்றும் இரண்டாம் ரக்அத்களில் ஓதுவதற்கு முன் கூடுதல் தக்பீர்கள் கூறுதல் ஆகியவற்றில் இதன் விதிமுறைகள் பண்டிகை தொழுகையின் விதிமுறைகளைப் போன்றே இருக்கும்.  அதன் விளக்கம், ஏற்கனவே பெருநாள் தொழுகைகள் பற்றிய பாடத்தில் விளக்கப்பட்டுள்ளது.  அவர் ஒரு குத்பாவை ஓதுவார்.

பத்தொன்பதாவது: ஜனாஸாவின் சட்டங்கள்:

முதலாவதாக : மரணத்தருவாயில் இருப்பவரின் அருகில் இருப்பவர் செய்யவேண்டியவை :

1- மரணப் படுக்கையில் இருக்கும் ஒருவரிடம் 'லாஇலாஹ இல்லல்லாஹ்' என்ற ஏகத்துவக் கலிமாவை சொல்லிக் கொடுப்பது ஸுன்னாவாகும்.

2- அவரைக் கிப்லாவை நோக்கி திருப்புவதும்  ஸுன்னத் ஆகும்.

3- அவரது கண்களை மூடிவிடுவது விரும்பத்தக்கது.

4- இறந்தவரை மரணத்திற்கு பின் ஒரு துணியால் மறைப்பதும் ஸுன்னத் ஆகும்.

5- அவரை அடக்கம் செய்யும் வேலைகளைத் துரிதப்படுத்த வேண்டும். 

6- அவரது கடன்களை விரைவாக அடைப்பதும்  அவசியமாகும்.

7- மைய்யித்தைக் குளிப்பாட்டி கஃபன் இடவேண்டும். இவை பர்ழு கிபாயாவாகும். 

இரண்டாவதாக : ஜனாஸா தொழுகையின் சட்ட திட்டங்கள் :

இதன் சட்டநிலை : இவை பர்ழு கிபாயாவாகும். 

நிபந்தனைகள் :

1- கிப்லாவை முன்னோக்குதல்

2- உடலில் அவசியம் மறைக்க வேண்டிய பகுதியை மறைத்தல்.

3) நஜிஸை தவிர்ந்து கொள்ளல்.

4) தொழுவிப்பவர் மற்றும் ஜனாஸா  சுத்தமாயிருத்தல்.

5. தொழுவிப்பவரும், மரணித்தவரும்  முஸ்லிமாக இருத்தல் 

6) ஜனாஸா ஊரிலேயே இருந்தால், அதைக் கொண்டு வந்திருத்தல் 

7. தொழுவிப்பவர் மார்க்கக் கடமைகள் கட்டாயப்படுத்தப்பட்டவராக இருக்க வேண்டும்.

அதன் தூண்கள் :

1) நின்று தொழுதல் 

2) நான்கு தக்பீர்கள்.

3) சூறா அல் பாத்திஹாவை ஓதுதல்.

4) நபி ﷺ அவர்களின் மீது ஸலவாத் சொல்லுதல்.

5- இறந்தவருக்காக துஆ கேட்டல்.

6) ஒழுங்குமுறை பேணல் 

7. ஸலாம் கூறுதல்.

அதன் ஸுன்னாக்கள்:

1) ஒவ்வொரு தக்பீரின் போதும் இரு கைகளையும் உயர்த்துதல்.

2) அஊது கூறுதல்.

3) தனக்காகவும் மற்ற முஸ்லிம்களுக்காகவும் பிரார்த்தனை செய்தல்.

4) இரகசியமாக ஓதுதல்.

5) நான்காவது தக்பீருக்குப் பிறகு, ஸலாம் கூறுவதற்கு முன் சிறிது நேரம் நிற்றல் 

6) வலது கையை இடது கையின் மீது வைத்து,  நெஞ்சின் மேல் வைத்தல்.

7- ஸலாம் கூறும் போது தலையை வலப்பக்கமாக திருப்புதல்.

அதன் விதம் :

இமாம் மற்றும் தனித்தொழுவோர் ஆணின் நெஞ்சுக்கு முன்னாலும், பெண்ணின் நடுவிலும் நின்று, இஹ்ராம் தக்பீர் கூற வேண்டும்.  பின்பு, தொழுகையின் ஆரம்ப துஆ ஓதாமல், பிஸ்மில்லாஹ் கூறி, ஸூரதுல் ஃபாதிஹாவை  ஓத வேண்டும்.

பின்னர் தக்பீர் கூறி, நபி (ஸல்லல்லாஹு அலைவஸல்லம்) அவர்களின் மீது ஸலாவாத்துக் கூறவேண்டும். பின்னர் தக்பீர் கூறி, இறந்தவருக்காக ஹதீஸில் வந்துள்ள துஆவை ஓத வேண்டும்.  உதாரணமாக, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு பிரார்த்தித்தார்கள் : 

«اللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا، وَصَغِيرِنَا وَكَبِيرِنَا، وَذَكَرِنَا وَأُنثَانَا، وَشَاهِدِنَا وَغَائِبِنَا، اللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الإِيمَانِ، وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الإِسْلَامِ، اللَّهُمَّ لَا تَحْرِمْنَا أَجْرَهُ، وَلَا تُضِلَّنَا بَعْدَهُ»40.

(பொருள் :இறைவா எம்மில் உயிரோடுள்ளோருக்கும், மரணித்துள்ளோருக்கும், சிறியவர்களுக்கும், பெரியவர்களுக்கும், ஆண்களுக்கும், பெண்களுக்கும், இங்கு சமுகமளித்துள்ளோருக்கும், சமுகமளிக்காதோருக்கும், நீ பிழை பொறுத்தருள்வாயாக. எம்மிலே நீ யாரை வாழ வைக்கின்றாயோ அவரை ஈமானிலே வாழ வைப்பாயாக. மேலும் நீ யாரை மரணிக்கச் செய்கிறாயோ அவரை இஸ்லாத்திலே மரணிக்கச் செய்வாயாக. இறைவா அவரது கூலியை நீ தடுத்து விடாதே. அவருக்கு பின் எம்மை சோதித்து விடாதே.)

இவ்வாறும் நபியவர்கள் பிராத்தித்துள்ளார்கள்: 

«اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ، وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مَدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلًا خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَمِنْ عَذَابِ النَّارِ»41.

யா அல்லாஹ்! இவரை மன்னிப்பாயாக. இவருக்கு அருள்பாலிப்பாயாக. இவருக்கு மறுமை வாழ்வில் ஆரோக்கியம் அளிப்பாயாக. இவரைப் பொறுத்தருள்வாயாக. இவரது தங்குமிடத்தை கண்ணியமாக்குவாயாக. இவர் புகும் இடத்தை (மண்ணறையை) விரிவாக்குவாயாக. மேலும் இவரை தண்ணீர், பனி, (ஆலம் கட்டி) பனிக்கட்டி கொண்டு கழுவுவாயாக. வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து நீ தூய்மைப் படுத்துவதைப் போல் இவரை இவரது பாவங்களிலிருந்து நீ தூய்மைப் படுத்துவாயாக. இவரது வீட்டுக்குப் பகரமாக சிறந்த வீட்டையும், இவரது குடும்பத்தாருக்குப் பகரமாக சிறந்த குடும்பத்தாரையும், இவரது துணைக்கு பகரமாக சிறந்த துணையையும்; இவருக்கு வழங்குவாயாக. இன்னும் இவரை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்வாயாக. இன்னும் மண்ணறையின் வேதனையிலிருந்தும், நரகத்தின் தண்டனையிலிருந்தும் இவரைக் காப்பாற்றுவாயாக. பின் தக்பீர் கூறி, சிறிது நேரம் நின்று, வலதுபக்கமாக ஒரு ஸலாம் சொல்ல வேண்டும்.

மூன்றாம் ஆய்வு : ஸகாத்

1. ஸகாதின் வரையறையும் அதன் அந்தஸ்த்தும்:

ஸகாத் என்பது மொழியில், வளர்ச்சி மற்றும் அதிகரிப்பு ஆகிய அர்த்தங்களைத் தரும். 

இஸ்லாத்தில் ஸகாத் என்பது, குறிப்பிட்ட சிலர் தரப்பினரது, குறிப்பிட்ட சொத்துக்களில் மார்க்க அடிப்படையில் உள்ள கடமையைக் குறிக்கும். 

இது இஸ்லாத்தின் மூன்றாவது தூணாகும்.  இது தொழுகையுடன் குர்ஆனில் 82 இடங்களில் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, இது, இதன் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றது.

அல்லாஹ் கூறுகிறான்:

﴿وَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتُواْ ٱلزَّكَوٰةَ...﴾

"இன்னும், நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள்! இன்னும், ஸகாத்தையும்  கொடுங்கள்!". (அல்பகரா : 43).

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,

«بُنِيَ الإِسْلَامُ عَلَى خَمْسٍ: شَهَادَةِ أَنْ لَا إِلٰهَ إِلَّا اللَّـهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّـهِ، وَإِقَامِ الصَّلَاةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَحَجِّ الْبَيْتِ، وَصَوْمِ رَمَضَانَ».

''இஸ்லாம் ஐந்து தூண்கள் மீது நிறுவப்பட்டுள்ளது: உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை, முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சியம் கூறுதல், தொழுகையை நிறைவேற்றுதல், ஸகாத் வழங்குதல், ஹஜ் செய்தல், ரமழானில் நோன்பு நோற்றல்''42.

அனைத்து முஸ்லிம்களும் இது கடமை என்பதையும்,  அவ்வாறு கடமை என்பதை மறுத்தவர், நிராகரித்துவிட்டார்  என்பதையும்,  அதைக் கொடுக்காமல் தடுத்துவைத்துக் கொண்டிருப்பவருக்கு எதிராக யுத்தம் செய்ய வேண்டும் என்பதையும் ஏகமனதாக ஏற்றுள்ளனர். 

2- ஸகாத் கடமையாவதற்கான நிபந்தனைகள் :

(1) சுதந்திரம் : அடிமைப்பட்டவருக்கு ஸகாத் கடமையில்லை; ஏனெனில் அவருக்கு சொந்தமாக எதுவும் இல்லை, அவருடைய கையில் உள்ளவை அவனுடைய எஜமானின் சொத்து ஆகும். எனவே அதன் ஸகாத் அவனுடைய எஜமானின் கடமையாகும்.

(2) முஸ்லிமாக இருத்தல்: எனவே காபிருக்கு கடமையில்லை; ஏனெனில் இது ஒரு வணக்க வழிபாடாகும், நிராகரிப்பாளர், இறைவணக்கங்களுக்கு உரியவனல்ல. 

‌(3) கடமையாகும் அளவை (நிஸாபை)க் கொண்டிருத்தல்.  நிஸாப் அளவிற்கு குறைவான சொத்தில் ஸகாத் கடமையாகாது, அது (இஸ்லாமிய சட்டத்தில்) அறியப்பட்டுள்ள ஒரு அளவாகும். 

‌(4) முழுமையான உரிமை: செல்வம் ஒருவரின் முழுமையான, நிரந்தரமான சொத்தாக இருக்க வேண்டும். நிரந்தர உரிமை நிலைநாட்டப்படாத செல்வத்திற்கு ஸகாத் கிடையாது, உதாரணமாக, கடன் போன்றவை.

(5) செல்வத்தின் மீது ஒரு வருடம் கடந்து செல்லுதல் : நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்:

«لَا زَكَاةَ فِي مَالٍ حَتَّى يَحُولَ عَلَيْهِ الْحَوْلُ».

“ஒரு வருடம் நிறைவடையாமல் செல்வத்தில் ஸகாத் கிடையாது.”43

3. ஸகாத் விதியாகும் பொருட்கள் :

முதலாவது : கால்நடைகள்

அவை ஒட்டகம், மாடு, ஆடு ஆகிய கால்நடைகளாகும். இரண்டு நிபந்தனைகளுடன் அவற்றில் ஸகாத் விதியாகும்:

1- பால் உற்பத்திக்கும், இனப்பெருக்கத்துக்கும் வைக்கப் பட்டதாக இருக்க வேண்டும்; வேலைக்காக அல்ல.

2- அவை சுயமாக மேயக்கூடியவையாக இருக்க வேண்டும்.  உரிமையாளர் தாமாக உணவை வாங்கிக் கொடுத்தால், அல்லது தாமாகவே புற்கள் போன்றவற்றை சேகரித்துக் கொடுத்தால் அவற்றின் மீது ஸகாத் கடமையில்லை. வருடம் முழுவதும் அல்லது, அதிக காலம் சுயமீக மேச்சலில் ஈடுபடாமல், சில காலம் மட்டுமே மேய்ச்சலில் இருக்கும் கால்நடைகளில் ஸகாத் கிடையாது.

4- கால்நடைகளின் நிஸாப்:

1. ஒட்டகங்களுக்கான ஸகாத்:

நிபந்தனைகள் பூர்த்தியாகியிருந்தால், ஒவ்வொரு ஐந்து ஒட்டகங்களுக்கும் ஒரு ஆடும்,  பத்து ஒட்டகங்களுக்கு இரண்டு ஆடுகளும், பதினைந்து ஒட்டகங்களுக்கு மூன்று ஆடுகளும், இருபது ஒட்டகங்களுக்கு நான்கு ஆடுகளும் ஸகாத்தாக கடமையாகும்,  இதனை ஸுன்னா மற்றும் இஜ்மா உறுதிப்படுத்துகின்றன. அதன் எண்ணிக்கை இருபத்தைந்தை அடைந்தால், அவற்றிற்காக 'பிந்த் மகாத்' எனப்படும், ஒரு வருடத்தை பூர்த்தி செய்துவிட்டு இரண்டாவது வருடத்தில் நுழைந்திருக்கும் பெண் ஒட்டகம் ஒன்று கொடுப்பது கட்டாயமாகும். அது இல்லையாயின், அதற்குப் பதிலாக 'இப்ன் லபூன்' (எனப்படும் இரு வருடம் பூர்த்தியான ஆண் ஒட்டகம் ) கொடுக்கப்படும்.  

ஒட்டகங்களின் எண்ணிக்கை முப்பத்தாறு ஆகும்போது, அவற்றில் பின்த் லபூன் (இரண்டு வயது நிறைவடைந்த பெண் ஒட்டகம்) கொடுக்கப்பட வேண்டும்.

எண்ணிக்கை நாற்பத்தி ஆறை அடைந்தால்,  அவற்றில், ஹிக்கா எனப்படும், மூன்று ஆண்டுகள் பூர்த்தியான ஒட்டகம் கட்டாயமாகும்.

ஒட்டகங்களின் எண்ணிக்கை அறுபத்து ஒன்றை அடைந்தால், அவற்றிற்காக நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த 'ஜத்அஹ்' ஒட்டகம் கொடுக்கப்பட வேண்டும்.

எப்போது ஒட்டகங்களின் மொத்தம் எழுபத்தாறு ஆகின்றதோ, அப்போது இரண்டு பின்து லபூன் ஒட்டகங்கள் (இரு வருடங்களைப் பூர்த்தியாக்கியவை) கடமையாகின்றன.

ஒட்டகங்களின் எண்ணிக்கை தொண்ணூற்று ஒன்றை அடைந்தால், அவற்றிற்காக, மூன்று  வயது நிறைந்த இரு பெண் ஒட்டகங்கள் கொடுக்கப்பட வேண்டும்.

ஒட்டகங்களின் மொத்த எண்ணிக்கை நூற்றிருபதைக் கடந்தால், அதில் மூன்று பின்து லபூன் (இரண்டு வயதை முழுமைப்படுத்திய ஒட்டகம்) கடமையாகும், பின்னர் ஒவ்வொரு நாற்பதிலும் ஒரு பின்து லபூனும், ஒவ்வொரு ஐம்பதிலும் ஹிக்கா எனப்படும், மூன்று வயது நிரம்பிய பெண் ஓட்டக்கமும் கொடுக்கப்படவேண்டும். 

2. மாடுகளுக்கான ஸகாத் :

அவற்றில் நிபந்தனைகள் பூர்த்தியான பின்னர், அவற்றின் எண்ணிக்கை 30 ஆகும் போது, அவற்றில், ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ள ஆண் அல்லது பெண் மாடு வழங்குவது கட்டாயமாகும். 

முப்பதிற்குக் குறைவானவற்றில் எதுவும் கடமை இல்லை.

மாடுகளின் எண்ணிக்கை, நாற்பதை அடைந்தால், அவற்றிற்காக இரண்டு வயது பூர்த்தியடைந்த பசு கொடுக்கப்பட வேண்டும்.

மொத்த மாடுகளின் எண்ணிக்கை நாற்பதைக் கடந்தால், ஒவ்வொரு முப்பதிலும் தபீஉ அல்லது தபீஅ (அதாவது, ஒரு வயது பூர்த்தியடைந்த ஆண், பெண் மாடு)  என்றோ,  ஒவ்வொரு நாற்பதிலும் முஸின்னா எனப்படும்  இரண்டு வயதை நிறைவு செய்த ஒரு மாடு என்றோ கொடுப்பது கடமையாகும். 

3. ஆட்டிற்கான ஸகாத்

செம்மறி ஆடு அல்லது வெள்ளாடு ஆகியவற்றின் மொத்தம் நாற்பது ஆகும் போது, அதில் ஒரு ஆடு கொடுக்க வேண்டும். அது ஒன்றில் ஆறு மாதங்கள் பூர்த்தியான செம்மறி ஆடாகவோ, அல்லது ஒரு வருடம் பூர்த்தியான பெண் வெள்ளாடு ஆகவோ இருக்கலாம். 

ஆடுகளின் எண்ணிக்கை நாற்பதை விடக் குறைவாக இருந்தால் ஸகாத் கிடையாது. ஆடுகளின் எண்ணிக்கை நூற்றிருபத்தொன்று ஆகும்போது, அவற்றிற்காக, இரண்டு ஆடுகள் கொடுக்கப்பட வேண்டும். அவற்றின் எண்ணிக்கை இருநூற்று ஒன்றை அடைந்தால், அவற்றிற்காக மூன்று ஆடுகள்  கொடுக்கப் படவேண்டும்.

இந்த அளவைத் தாண்டிய பின்னர் ஸகாத்தின் அளவு நிலைபெற்றுவிடும். அதாவது, ஒவ்வொரு நூறு ஆடுகளிலும் ஒரு ஆடு கடமையாகும். எனவே நானூறு ஆடுகளுக்கு நான்கு ஆடுகள் ஸகாத் கடமையாகும், இவ்வாறே தொடர்ந்து கணிக்கவேண்டும். 

இரண்டாவது: நிலத்திலிருந்து பெறப்படும் விளைச்சலுக்கான ஸகாத் :

நிலத்திலிருந்து வெளிவரும் விளைச்சல்கள்  இருவகைப்படும் :

1) தானியங்கள் மற்றும் கனிவகைகள்.

2- கணியங்கள் 

முதல் வகை: தானியங்கள் மற்றும் கனிவகைகள்:

கோதுமை, வாற்கோதுமை, அரிசி போன்ற தானியங்களில் ஸகாத் கடமையாகும்.  கனிவகைகளில்; உதாரணமாக: பேரீத்தம் பழம் மற்றும் காய்ந்த முந்திரிகை போன்றவற்றிலும் கடமையாகும்.  கீரை மற்றும் காய்கறிகள் போன்ற ஏனைய தாவரங்களில் ஸகாத் வழங்க வேண்டிய அவசியமில்லை.  

பயிர்களுக்கும் பழங்களுக்கும் ஸகாத் விதியாகும் நிபந்தனைகள் :

1) சேமிக்கப்படுபவையாக இருத்தல் : பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவை சேமிக்கப்படாததால் அவற்றில் ஸகாத் கிடையாது.

2) அளவிடத்தக்கதாக இருக்க வேண்டும்: எண்ணிக்கையால் அல்லது எடையால் விற்கப்படும் பொருட்களுக்கு ஸகாத் கிடையாது; உதாரணமாக, தர்பூசணி, வெங்காயம், மாதுளை போன்றவை.

3) நிஸாப் அளவை அடைய வேண்டும்: இது ஐந்து அவ்ஸுக் ஆகும். அதற்குக்  குறைவானதில் ஸகாத் இல்லை.

4) ஸகாத் வழங்க வேண்டிய நேரத்தில் நிஸாப் அவருக்கு உரியதாக இருக்க வேண்டும்.

ஸகாத் கடமையாகும் நேரத்திற்குப் பின் ஒருவர் அதனை உடமையாக்கினால், அதற்கு ஸகாத் கடமையாகாது. உதாரணமாக, அறுவடை செய்யப்பட்ட பின் அதை வாங்குதல் அல்லது பரிசாக பெறல்

அவற்றில் ஸகாத் கடமையாகும் நேரம்:

தானியங்கள் மற்றும் பழவகைகள் பயன்பாட்டிற்கு உகந்த நிலையில் வந்தவுடன் அவற்றிற்குரிய ஸகாத் கடமையாகும். அவை பயன்பாட்டிற்கு உகந்தவையாக மாறியமைக்கான அடையாளம் பின்வருமாறு :

அ- தானியங்களில்: அது கடினமாகவும், உறுதியானதாகவும், வலுவானதாகவும் ஆகும்போது.

ஆ- பேரீச்சம் பழங்களில்: அவை சிவப்பாகவோ மஞ்சளாகவோ மாறுவது.

இ- திராட்சையில் : மென்மையானதாகவும், இனிப்பானதுமானதாக இருத்தல்.

அதனுடைய நிஸாப் அளவு :

தானியங்கள் மற்றும் பழங்களின் நிஸாப் அளவு : ஐந்து வஸக் ஆகும் ஒரு வஸக் என்பது அறுபது ஸாஉகள் ஆகும் எனவே, ஸகாத்தின் நிஸாபு அளவு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்து 300 ஸாவுகள் (சுமார் 900 கிலோ கிராம்) ஆகும்.

அவற்றில் ஸகாத் கொடுக்கவேண்டிய அளவு :

மழைநீர் மற்றும் ஊற்றுநீர் போன்றவற்றால், செலவில்லாமல், சிரமமின்றி நீர் புகட்டப்படும் பயிர்களில் பத்தில் ஒரு பங்கு கடமையாகும்.

கிணறுகள் மற்றும் ஆறுகள் போன்றவற்றில்  இருந்து விலங்குகள் அல்லது நவீன இயந்திரங்கள் மூலம் நீர் பாய்ச்சினால் 5% வீதம் ஸகாத் வழங்க வேண்டும்.

வகை இரண்டு: கனிமங்கள்:

நிலத்திலிருந்து பெறப்படும் வகைகளில் ஒன்று: கனிப்பொருட்கள் ஆகும் அவை நிலத்திலிருந்து எடுக்கப்படும், தங்கம், வெள்ளி, இரும்பு மற்றும் ரத்தினங்கள் போன்றவை.

ஸகாத் விதியாகும் நேரம் :

அதைப் பெற்றுக் கொண்டதும், அதற்குரிய ஸகாத்தை உடனடியாக வழங்க வேண்டும்; ஏனெனில், அதற்காக ஒரு வருடம் நிறைவடைய வேண்டிய அவசியமில்லை. அதன் நிர்ணயிக்கப்பட்ட அளவு தங்கம் மற்றும் வெள்ளியின் நிர்ணயிக்கப்பட்ட அளவாகும், அதிலிருந்து அதன் பெறுமதியின் 2.5% வீதம் ஸகாத் வழங்க வேண்டும்.

மூன்றாவது : நாணயங்களின் ஸகாத் :

பணங்கள் என்பது தங்கம், வெள்ளி, காகித நாணயங்கள் ஆகும், அவற்றிற்காக ஸகாத் கொடுப்பது கட்டாயமாகும்.  இதற்கான ஆதாரம் அல்லாஹ்வின் பின்வரும் கூற்றாகும் :

﴿وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنْفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ فَبَشِّرْهُمْ بِعَذَابٍ أَلِيمٍ 34﴾

இன்னும், எவர்கள் தங்கத்தையும், வெள்ளியையும் சேமித்துவிட்டு, அவற்றை அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்ய மாட்டார்களோ, துன்புறுத்தக்கூடிய தண்டனை அவர்களுக்கு உண்டு என்று நற்செய்தி கூறுவீராக. (அத்தௌபா : 34).

பின்வரும் ஹதீஸும் ஆதாரமாகும்:

«مَا مِنْ صَاحِبِ ذَهَبٍ وَلَا فِضَّةٍ لَا يُؤَدِّي فِيهَا حَقَّهَا؛ إِلَّا إِذَا كَانَ يَوْمَ الْقِيَامَةِ صُفِّحَتْ لَهُ صَفَائِحُ مِنْ نَارٍ».

“தங்கம் அல்லது வெள்ளியை வைத்திருப்பவர்கள் அவற்றின் கடமையை நிறைவேற்றாவிட்டால் மறுமை நாளில் அவர்களுக்கு நரகத்தின் தகடுகள் வழங்கப்படும்."44

அறிஞர்கள் அனைவரும் தங்கம், வெள்ளி மற்றும் பண நோட்டுக்களில் ஸகாத் கட்டாயம் என்பதில் ஒருமித்த கருத்தில் உள்ளனர்; ஏனெனில் அவை பண பரிவர்த்தனையில் தங்கம், வெள்ளியின் இடத்தைப் பிடித்துள்ளன.

நாணயங்களில் ஸகாத் நிர்ணய அளவு, அதில் விதியாகும் அளவு :

இது தங்கம் அல்லது வெள்ளியின் நிஸாப் ஆகும்; ஏனெனில் அவை பணத்தின் மதிப்பில் அவற்றின் இடத்தை பிடித்துள்ளன. அவை, இரண்டில் எதாவது ஒன்றின் நிஸாப் அளவை அடைந்தால் அதில் ஸகாத் கடமையாகின்றது. இன்றைய காலத்தில் பண நோட்டுக்களின் நிஸாப் அளவை வெள்ளியின் அடிப்படையில் கணக்கிடுவது வழக்கமாக உள்ளது; ஏனெனில் அது தங்கத்தை விட மலிவானது, எனவே அது தங்கத்தை விட முன்னதாகவே நிஸாப் அளவை அடைகிறது. முஸ்லிம் ஒருவர் 595 கிராம் வெள்ளிக்கு சமமான மதிப்பு, பணத்தை உடையவராக இருந்தால், அதற்கான வருடம் பூர்த்தியானால் அதில் ஸகாத் விதியாகும். ஒரு கிராம் வெள்ளியின் விலை நேரத்துக்கு நேரம் வேறுபடும். ஒருவரிடம் குறைந்த அளவு பணம் இருந்து, அது நிஸாப் அளவை  அடைந்ததா இல்லையா என்பதை அறியாமல் இருந்தால், வெள்ளி வியாபாரிகளிடம் ஒரு கிராம் வெள்ளியின் மதிப்பை கேட்டறிந்து, அதை (595) என்ற எண்ணில் பெருக்க வேண்டும். பெறப்படும் முடிவு நிஸாப் ஆகும்.

குறிப்பு: ஒருவர் தனது பணத்தின் ஸகாத்தைக் கொடுக்க விரும்பினால், நிஸாப் அளவை நாற்பதில் பிரிக்க வேண்டும். வரும் விடையே கொடுக்கவேண்டிய அளவாகும்.

நான்காவது : வர்த்தகப் பொருட்களுக்கான ஸகாத் :

இவை, லாபத்திற்காக விற்பனை மற்றும் கொள்முதல் செய்ய வைக்கப்பட்டுள்ளவையாகும்.  வியாபாரப் பொருட்கள் எனும் போது,  நாணயங்களைத் தவிர அனைத்து வகையான சொத்துக்களும் உள்ளடங்கும். உதாரணமாக,  கார்கள், ஆடைகள், துணிகள், இரும்பு, மரங்கள் மற்றும் வியாபாரத்திற்காக வைக்கப்பட்டுள்ள பிற பொருட்கள்.

வர்த்தகப் பொருட்களுக்கான ஸகாத் கடமையாவதற்கான நிபந்தனைகள்:

1. விற்றல், குத்தகைக்கு வழங்கல், மற்றும் பிற சம்பாத்திய வழிகள் போன்றவற்றின் மூலம் தனது சுயமான செயலால் அவற்றை உரிமையாக்கிக்கொள்வது.

2- அதனை வியாபார நோக்கத்துடன் வைத்திருக்க வேண்டும். அதாவது அதன்வழி வருமானம் ஈட்டுவதை நோக்கமாகக் கொள்ள வேண்டும். ஏனெனில் செயல்கள் எண்ணங்களைப் பொறுத்தே அமையும். வியாபாரம் ஒரு செயல் ஆகும், எனவே மற்ற செயல்களைப் போலவே அதனுடனும், நோக்கம் இணைந்து வரவேண்டும்.

3. அதன் மதிப்பு, நாணயங்களில் ஒன்றின் நிஸாப் அளவை எட்ட வேண்டும்.

4- அவற்றிற்கு ஒரு வருடம் பூர்த்தி அடைதல்

வர்த்தகப் பொருட்களின் ஸகாத் வழங்கும் முறை:

வியாபாரப் பொருட்களுக்கு ஒரு வருடம் முழுமையடைந்தவுடன், தங்கம் அல்லது வெள்ளி ஆகியவற்றில் ஒன்றினால் அவற்றின் பெறுமதியை மதிப்பீடு செய்யவேண்டும்.  அவற்றின் பெறுமதி பார்க்கப்பட்டு, அவை தங்கம் அல்லது வெள்ளிக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவை அடைந்தால், அதன் பெறுமதியில் இருந்து 2.5% ஸகாத் வழங்க வேண்டும்.

5. ஸகாதுல் பித்ர்:

இது ரமழான் மாதத்தின் இறுதியில் வழங்க வேண்டிய கட்டாய தர்மமாகும், இது ஹிஜ்ரி இரண்டாவது ஆண்டில் கடமையாக்கப்பட்டது.

அதன் சட்டநிலை :

ஈதுல் பித்ர் தின இரவிலும் பகலிலும் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் போதுமான அளவை விடக் கூடுதலாக உணவு வைத்திருக்கும் ஒவ்வொரு முஸ்லிமும் ஸகாதுல் பித்ர் கொடுப்பது அவசியமாகும். ஆண், பெண், சிறுவர், பெரியவர், சுதந்திரமானவர், அடிமை என அனைத்து முஸ்லிம்கள் மீதும் இது கடமையாகும்.  பின்வரும் ஹதீஸ் அதற்கு ஆதாரமாகும்:

«فَرَضَ رَسُولُ اللَّهِ ﷺ زَكَاةَ الْفِطْرِ عَلَى الْعَبْدِ وَالْحُرِّ، وَالذَّكَرِ وَالْأُنثَى، وَالصَّغِيرِ وَالْكَبِيرِ، مِنَ الْمُسْلِمِينَ».

“முஸ்லிம்களில் அடிமை, சுதந்திரர், ஆண், பெண், சிறியவர், பெரியவர் என அனைவருக்கும் ஸகாதுல் பித்ரை நபியவர்கள் ﷺ விதியாக்கினார்கள்.”45 இங்கு வந்துள்ள “பரழ” என்ற வார்த்தை, கடமையாக்குதல் என்று அர்த்தம் தருகின்றது. .

அது மார்க்கமாக்கப்பட்ட நோக்கம் :

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறுகிறார்கள் :

«فَرَضَ رَسُولُ اللَّهِ ﷺ زَكَاةَ الْفِطْرِ؛ طُهْرَةً لِلصَّائِمِ مِنَ اللَّغْوِ وَالرَّفَثِ، وَطُعْمَةً لِلْمَسَاكِينِ».

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸகாத்துல் பித்ரை, நோன்பாளி தன்னை வீண்பேச்சு மற்றும் கெட்ட வார்த்தைகளில் இருந்து தூய்மைப்படுத்தும் நோக்கிலும், ஏழைகளுக்கு உணவாகவும் கடமையாக்கினார்கள்"46.

அது கடமையாகும் நேரமும் கொடுக்கப்படவேண்டிய நேரமும்:

பெருநாள் இரவின் சூரியன் மறைந்ததில் இருந்து ஸகாதுல் பித்ர் கடமையாகும். அதனைப் பெருநாள் தொழுகைக்குச் செல்லும் முன், வழங்குவது விரும்பத்தக்கது. பெருநாள் தொழுகையை விடவும் பிற்படுத்துவது கூடாது. பெருநாள் தொழுகையை விட அதைப் பிற்படுத்தினால், அதனைக் கழாச்செய்ய வேண்டியது அவசியமாகும். மேலும் அதற்குரிய நேரத்தை விட்டும் பிற்போட்டதற்காக அவன் பாவியாவான்.

பெருநாளுக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன் வழங்குவதும் அனுமதிக்கப்படுகிறது.

கொடுக்கப்பட வேண்டிய அளவும், பொருட்களும் : 

ஒரு நாட்டு மக்கள் வழக்கமான உணவாகக் கொள்ளும், அரிசி, பேரீத்தம் பழம் அல்லது கோதுமை போன்றவற்றில் ஒரு ஸாஉ அளவு  ஒரு ஸாஇன் அளவு: கிட்டத்தட்ட மூன்று கிலோகிராம் பெறுமதியைக் கொடுக்கமுடியாது. அதாவது, மேற்கூறியவற்றுக்குப் பதிலாகப் பணத்தை வழங்கமுடியாது. ஏனெனில் இது தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கட்டளைக்கு மாறானது.

ஸகாத் வழங்கல் மற்றும் பெறத் தகுதியானவர்கள் :

அதைக் கொடுக்கவேண்டிய வேண்டிய நேரம் :

ஸகாத்துல் பித்ரை, அதற்குரிய நேரம் வந்தவுடன் உடனடியாக வழங்கப்பட வேண்டும். நிர்ப்பந்தம் இல்லாமல் தாமதிப்பது அனுமதிக்கப்படமாட்டாது. உதாரணமாக, பணம் தூரமான ஒரு ஊரில் இருத்தல், அத்துடன் பொறுப்புச் சாட்டிவிட ஒருவரும் இல்லாமல் இருத்தல். 

அது கொடுக்கப்படவேண்டிய  இடம்:

தனது சொத்து இருக்கும் ஊரிலேயே ஸகாத்தையும் வழங்குவது சிறந்தது, தனது பணம் உள்ள ஊர் அல்லாத, வேறொரு ஊரில் அதனை வழங்குவது சில சூழ்நிலைகளில் அனுமதிக்கப்படலாம் :

அ- ஸகாத்துல் பித்ர் பெற தகுதியானோர் அந்த ஊரில் இல்லாவிட்டால்.

ஆ - தேவையுள்ள ஒரு உறவினர் பிறிதொரு ஊரில் இருந்தால் 

இ- ஸகாத்தை வேறொரு ஊருக்கு அனுப்பவதற்கான மார்க்க நியாயங்கள் இருந்தால், உதாரணமாக, பஞ்சம் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் உள்ள பகுதிகளுக்கு ஸகாத்தை அனுப்புதல். 

ஆதாரங்கள் பொதுவாக உள்ளதன் அடிப்படையில், சிறுவனின் மற்றும் மானநோயாளியின் செல்வத்திலும் ஸகாத் விதியாகும், அவர்களுக்குப் பதிலாக அவர்களின் செல்வத்தின் மீது அவர்களின் பாதுகாவலர் அதை வழங்க வேண்டும். நிய்யத் இன்றி ஸகாத் வழங்க முடியாது. நபி (ஸல்) கூறுகிறார்கள் :

«إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ».

செயல்கள் அனைத்தும் எண்ணங்களைக் கொண்டே நிர்ணயிக்கப்படுகின்றன.47

ஸகாத் பெறத் தகுதியானவர்கள் :

ஸகாத் வழங்கப்படுவோர் எட்டுக் கூட்டத்தினர் ஆகும்:

முதலாவது வகை: வறியவர்கள்:

இவர்கள் தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான வசிப்பிடம், உணவு மற்றும் உடை ஆகியவற்றைப் பெற முடியாதவர்கள்.  அவர்களுக்கு ஸகாத் வழங்கப்படும் அளவு, அவர்களுக்கும், அவர்களது செலவிற்குக் கீழுள்ளவர்களுக்கும் ஒரு வருடத்திற்கு போதுமானதாக இருக்க வேண்டும்.

இரண்டாம் வகை: ஏழைகள்:

இவர்கள் தங்களுக்குத் தேவையானதில் அதிகமானதைப் பெறுகிறார்கள், ஆனால் முழுமையாகப் பெற முடிவதல்லை. உதாரணமாக: ஒருவருக்கு சம்பளம் இருக்கலாம், ஆனால் அது அவருக்கு ஒரு ஆண்டுக்கு போதுமானதாக இருக்காது.

அவர்களுக்கு வழங்கும் ஸகாதின் அளவு: அவர்களுக்கும், அவர்களது செலவிற்குக் கீழுள்ளவர்களுக்கும் ஒரு வருடத்திற்கு தேவையான முழு அளவு.

மூன்றாவது தரப்பினர் : அதில் பணிபுரிபவர்கள்:

இவர்கள், ஸகாத் பணத்தை வசூலிக்க அல்லது அதை பாதுகாக்க அல்லது அவசியமானவர்களுக்கு கொண்டு சேர்க்க அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டவர்கள்.

அவர்களுக்கு ஸகாத் வழங்கும் அளவு: அவர்களுக்கு அரசாங்கத்திலிருந்து கூலி அல்லது சம்பளம் வழங்கப்படாவிட்டால், அவர்கள் செய்யும் பணிக்கான கூலியளவு வழங்கப்படும்

நான்காவது வகை: உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்கள்:

ஒருவர் இஸ்லாத்தை ஏற்பதையோ, அல்லது அவரது ஈமானைப் பலப்படுத்துவதையோ, அல்லது அவரது தீங்கை விட்டும் முஸ்லிம்களைப் பாதுகாப்பதையோ நோக்கமாகக் கொண்டு அவர்களுக்கு வழங்கப்படுவதையே இது குறிக்கும். 

அவர்களுக்கு வழங்கப்படும் ஸகாதின் அளவு: அவர்களை இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கும் அளவு.

ஐந்தாவது வகை: அடிமைகள்:

அதாவது, பொதுவான அடிமைகள் மற்றும் முகாதபான அடிமைகளை விடுதலை செய்தல் 

இங்கு முகாதப் என்பது : தனது எஜமானிடமிருந்து தன்னை விடுவிக்கும் நோக்கில் உரிமைச் சீட்டு எழுதப்பட்ட அடிமை, இதில் முஸ்லிம் போர்க் கைதிகளை விடுவித்துக் கொள்வதும் அடங்கும்.

ஆறாவது வகை: கடனாளிகள், அவர்கள் இரு வகைப்படும்:

முதலாவது: தன்னுடைய தேவைக்காக கடன் பெற்றவர், அதேநேரம் தனது கடனை அடைக்க எதுவும் இல்லாதவர்.  இவரது கடனை  நிறைவேற்றுவதற்கு தேவையான அளவு வழங்கப்படும்.

இரண்டாவது : பிரிந்திருப்போரை ஒற்றுமைப்படுத்துவதற்காக கடன் பெற்றவர், இவர் பணக்காரனாக இருந்தாலும், இவரது அந்தக் கடனை அடைக்கத் தேவையான அளவு வழங்கப்படும்.

ஏழாவது வகை: அல்லாஹ்வின் பாதையில் இருப்பவர்கள்:

அதாவது, அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போராடுபவர்கள்.

இவர்களுக்கு ஸகாத் வழங்கப்படும் அளவு: அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதற்குத் தேவையான வாகனம், ஆயுதம், உணவு மற்றும் இதர தேவைகளுக்கு போதுமான அளவு.

எட்டாவது வகை: வழிப்போக்கர்:

அதாவது, செலவுகள் தீர்ந்ததுவிட்ட  அல்லது திருடப்பட்டுவிட்ட பயணி. மேலும்,  அவருடைய ஊருக்கு திரும்ப செல்ல அவரிடம் பணம் எதுவும் இருக்கமாட்டாது.

இவருக்கு ஸகாத் வழங்கப்படும் அளவு: அவர் அந்த ஊரைச் சென்றடைவதற்குத் தேவையான அளவு; அவர் அங்கு பணக்காரராக இருந்தாலும் சரியே 

ஆய்வு நான்கு: நோன்பு:

நோன்பு என்பது :

அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு பஜ்ர் உதயம் முதல் சூரியன் மறையும் வரை நோன்பை முறிக்கும் காரியங்களை விட்டும் தவிர்ந்து இருத்தல்.

இது இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும் மேலும், அல்லாஹ் தஆலா கடமையாக்கிய கடமைகளில் ஒன்றுமாகும்.  மேலும், மார்க்கத்தில் அவசியமாக அறியப்பட்ட ஒன்றுமாகும். அல்குர்ஆனும், ஸுன்னாவும், முஸ்லிம்களின் ஒருமித்த கருத்தும் இது கடமை என்பதை தெளிவுபடுத்துகின்றன.

அல்லாஹ் கூறுகிறான்:

﴿‌شَهۡرُ رَمَضَانَ ٱلَّذِيٓ أُنزِلَ فِيهِ ٱلۡقُرۡءَانُ هُدٗى لِّلنَّاسِ وَبَيِّنَٰتٖ مِّنَ ٱلۡهُدَىٰ وَٱلۡفُرۡقَانِۚ فَمَن شَهِدَ مِنكُمُ ٱلشَّهۡرَ فَلۡيَصُمۡهُ...﴾

ரமழான் மாதம் எத்தகையது என்றால் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டியாகவும் நேர்வழி உடைய சான்றுகளாகவும் இன்னும் உண்மை, பொய்யை பிரித்தறிவிக்கின்ற தெளிவான சத்தியத்தின் சான்றுகளாகவும் உள்ள அல்குர்ஆன் இறக்கப்பட்டது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தில் (உள்ளூரில்) தங்கி இருப்பாரோ அவர் அதில் கண்டிப்பாக நோன்பு நோற்கவும்... (அல் பகரா : 185).

 

 

 

ரமழான் நோன்பு கடமையாவதற்கான நிபந்தனைகள் :

1- முஸ்லிமாக இருத்தல், காபிரின் நோன்பு செல்லுபடியாகாது.

2- பருவமடைந்திருத்தல்; சிறுவர்களுக்கு அது கடமையாகாது.  பிரித்தறியும் வயதை அடைந்த சிறுபிள்ளை நோற்றால் செல்லுபடியாகும். அவருக்கு அது உபரியான நோன்பாக அமையும்.

3- புத்திசுயாதீனம் உள்ளவராக இருத்தல்.  பைத்தியகாரர்களுக்கு நோன்பு கடமையாகாது. நிய்யத் இன்மை காரணமாக. செல்லுபடியாகவும் மாட்டாது. 

4- அதற்கு சக்தி பெறுதல், நோற்கமுடியாத நோயாளிக்கு அது கடமையாகாது, பயணத்தில் இருப்பவருக்கும் கடமையாகமாட்டாது. நோய் மற்றும் பயணம் ஆகிய காரணங்கள் நீங்கிய பின்னர் அதனை அவர்கள் நிறைவேற்றவேண்டும்.  பெண்ணின் நோன்பு செல்லுபடியாவதற்கான நிபந்தனைகளில் ஒன்று, மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தம் வராமல் இருப்பதாகும்.

ரமழான் மாதம் நுழைவது இரண்டு விடயங்களில் ஒன்று மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது, அவை:

அ- ரமழான் மாதத்தின் தலைப்பிறை காணல், நபி (ஸல்) கூறுகிறார்கள் :

«صُومُوا لِرُؤْيَتِهِ، وَأفْطِرُوا لِرُؤْيَتِهِ».

«நீங்கள் அதை (பிறையை) கண்டால் நோன்பு நோற்கவும், அதை (பிறையை) கண்டால் நோன்பு துறக்கவும்».48

ஆ- ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக பூர்த்தி செய்தல், அதாவது ரமழான் மாதத்தின் பிறை தென்படாதபோது அல்லது அது தென்படாமல் மேகம் அல்லது தூசி போன்றவை தடுக்கும் போது. நபி ﷺ அவர்கள் கூறினார்கள் :

«فَإِنْ غُمَّ عَلَيْكُمْ؛ فَأَكْمِلُوا عِدَّةَ شَعْبَانَ ثَلاثِينَ يَوْمًا».

«உங்களுக்கு (சந்திரன்) மறைக்கப்பட்டு விட்டால், ஷஃபானின் (மாத) எண்ணிக்கையை முப்பது நாட்களாக முழுமையாக்குங்கள்»49.

நோன்பில் நிய்யத் :

நோன்பு மற்ற வணக்கங்களைப் போலவே நிய்யத் இல்லாமல் செல்லாது, கடமையான நோன்பில் நிய்யத் கடமைப் படும் நேரம் மற்றவற்றிலிருந்து மாறுபடுகிறது, அதன் விளக்கம் பின்வருமாறு:

முதலாவது: கடமையான நோன்பு. உதாரணமாக, ரமழான் மாத நோன்பு அல்லது கஃபாரா (குற்றப் பரிகாரம்) அல்லது நேர்ச்சை நோன்பு போன்றவை. இவற்றுக்கான நிய்யத்தை பஜ்ர் உதயமாக முன் வைப்பது அவசியமாகும். நபி (ஸல்) கூறுகிறார்கள்:

«مَن لَمْ يُبَيِّتْ الصِّيَامَ مِنَ اللَّيْلِ فَلَا صِيَامَ لَهُ».

யார் இரவில் நோன்பு நோற்க நிய்யத் வைக்கவில்லையோ அவருக்கு நோன்பு கிடையாது".50

இரண்டாவது: ஸுன்னத்தான நோன்புகள். இதற்காக ஒருவர் பகலிலும் நிய்யத் வைக்கமுடியும், ஆனால், அவர் ஃபஜ்ர் உதித்த பின் நோன்பைக் முறிக்கும் எதையும் உட்கொள்ளாமல் இருந்திருக்க வேண்டும்.

நோன்பை முறிக்கும் காரியங்கள் :

முதலாவதாக: உடலுறவு: நோன்பிறுக்கும் நிலையில் எப்போது உடலுறவு கொண்டாலும், அவனது நோன்பு முறிந்து விடும். அவன் உடலுறவு கொண்ட அந்த நாளை கழாச் செய்வது கட்டாயமாகும், அவ்வாறு காழாச் செய்வதுடன் குற்றப் பரிகாரம் வழங்குவதும் கடமையாகும். அதாவது ஓர் அடிமையை விடுதலை செய்யவேண்டும். அதனைச் செய்ய இயலாதவராக இருந்தால், தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும், நியாயமான ஒரு காரணத்தினால், நோன்பு நோற்க அவர் சக்திபெறா விட்டால், அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும், ஒவ்வொரு ஏழைக்கும் நாட்டில் உண்ணப்படும் உணவின் அரை ஸாஉ அளவு  வழங்க வேண்டும்.

இரண்டாவது: முத்தமிடுதல், தொடுதல், சுயஇன்பம், அல்லது மீண்டும் மீண்டும் பார்வையிடுதல் போன்றவற்றால் விந்து வெளிப்படுதல். இதற்கு கழாச் செய்வது மட்டுமே கடமை, குற்றப்பரிகாரம் இல்லை; ஏனெனில், குற்றப்பரிகாரம்  உடலுறவுக்கு மாத்திரம் உரிய சட்டமாகும். தூங்கும் ஒருவர் கனவுகண்டு, இந்திரியம் வெளிப்பட்டால்; அதில் அவருக்கு எந்தக் குற்றமும் இல்லை; ஏனெனில் அது அவரின் விருப்பமின்றி நிகழ்கிறது, எனவே பெருந்தொடக்குக்காக குளிப்பார்.

3- வேண்டுமென்றே உண்ணல், பருகல். அல்லாஹ் கூறுகின்றான் :

﴿وَكُلُواْ وَٱشۡرَبُواْ حَتَّىٰ يَتَبَيَّنَ لَكُمُ ٱلۡخَيۡطُ ٱلۡأَبۡيَضُ مِنَ ٱلۡخَيۡطِ ٱلۡأَسۡوَدِ مِنَ ٱلۡفَجۡرِۖ ثُمَّ أَتِمُّواْ ٱلصِّيَامَ إِلَى ٱلَّيۡلِ...﴾

"இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை) நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்; பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்".  (அல் பகரா : 187).

மறதியாக உண்டாலோ, பருகினாலோ அவர் மீது குற்றமேதுமில்லை; நபியவர்கள் கூறினார்கள்:

«مَن نَسِيَ وَهُوَ صَائِمٌ، فَأَكَلَ أَوْ شَرِبَ، فَلْيُتِمَّ صَوْمَهُ، فَإِنَّمَا أَطْعَمَهُ اللَّهُ وَسَقَاهُ».

“நோன்பு நோற்கும் போது யாரேனும் மறந்து உண்டால் அல்லது பருகினால் அவர் தனது நோன்பைத் தொடரட்டும்; ஏனெனில் அல்லாஹ்வே அவருக்கு உணவளித்து, பானமளித்தான்".51

4- வேண்டுமென்றே வாந்தியெடுத்தல். ஆனால் தானாகவே வாந்தி வந்தால், அது நோன்பில் பாதிப்பை ஏற்படுத்தாது. நபி (ஸல்) கூறுகிறார்கள் :

«مَنْ ذَرَعَهُ الْقَيءُ فَلَيْسَ عَلَيْهِ قَضَاءٌ، وَمَن اسْتَقَاءَ عَمْدًا فَلْيَقْضِ».

''யாருக்கேனும் தன்னிச்சையாக வாந்தி வந்தால் நோன்பைக் கழா செய்ய வேண்டியதில்லை, ஆனால் யாரேனும் வேண்டுமென்றே வாந்தி எடுக்க முயன்றால் அவர் கழாச் செய்ய வேண்டும்''.52

ஐந்தாவது : ஹிஜாமா, அல்லது இரத்தம் சிந்துவது, அல்லது நோயாளிக்கு உதவ இரத்தம் தானம் செய்வது போன்றவற்றின் மூலம் உடலிலிருந்து இரத்தத்தை வெளியேற்றுவது; இவை அனைத்தாலும் நோன்பு முறிகிறது. பரிசோதனைக்காக எடுக்கப்படும் சிறிதளவு இரத்தம் நோன்பில் எந்தத்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அதேபோல, மூக்கு அல்லது காயங்களில் இருந்து இரத்தம் சிந்துவது அல்லது பற்கள் பிடுங்கப்படுவதனால் இரத்தம் வெளியேறுதல் போன்று அவனது விருப்பமின்றி வெளியேறினால், இது நோன்பில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

ரமழானில் நோன்புவிட அனுமதியளிக்கப்படுவோர் :

முதல் பிரிவினர்: நோன்பை விடுவதற்கு அனுமதிக்கப்பட்டவர்கள், ஆனால் அவர்கள் பிறகு நோன்பை நிறைவேற்ற வேண்டும், அவர்கள்:

முதலாவதாக: குணமடையக்கூடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளி. அதேநேரம்,  நோன்பு நோற்பது அவருக்கு சிரமமாகவோ, பாதிப்பாகவோ உள்ளது. 

இரண்டாவது :பிரயாணி; அவர் பயணத்தில் சிரமப்பட்டாலும் சிரமப்படாவிட்டாலும் சரியே! 

இதற்கான ஆதாரம் அல்லாஹ்வின் பின்வரும் வசனமாகும் :

﴿...وَمَن كَانَ مَرِيضًا أَوۡ عَلَىٰ سَفَرٖ فَعِدَّةٞ مِّنۡ أَيَّامٍ أُخَرَ...﴾

இன்னும், எவர் நோயாளியாக அல்லது பயணத்தில் இருப்பாரோ அவர் (அந்த நோன்பை) மற்ற நாட்களில் கணக்கிடவும். (பகரா : 185).

மூன்றாவது: கர்ப்பிணி பெண் அல்லது பாலூட்டும் பெண். அதாவது, நோன்பு நோற்பது அவர்களுக்கோ கடினமாக இருந்தால், அல்லது அவர்களுக்கோ, அவர்களின் குழந்தைகளுக்கோ பாதிப்பை ஏற்படுத்தும் என்றால் (நோன்பை விடலாம்), அவர்கள் நோயாளிகள் என்ற சட்டத்தில் இருப்பதால், அவர்களுக்கு நோன்பை விட்டுவிட அனுமதிக்கப்படுகிறது. ஆனால், அவர்கள் பிற நேரத்தில் நோன்பை கழாச்செய்ய வேண்டும்.

நான்காவது: மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தப்போக்கு ஏற்பட்ட பெண், நோன்பை விடுவது அவர்களுக்குக் கடமையாகும், அவர்களின் நோன்பு நிறைவேறாது. அவர்கள் பிற நாட்களில் அவற்றை கழாச்செய்ய வேண்டும்.

பிரிவு இரண்டு: நோன்பு விட அனுமதிக்கப்படுபவர். அதேநேரம், அவர்கள்  கழா செய்வது அவசியமின்றி, கப்பாரா கொடுப்பது அவசியம். அவர்கள்:

முதலாவது: குணமடையாத நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி.

இரண்டாவது: நோன்பு நோற்க முடியாத வயோதிபர்.

இவர்கள் நோன்பை விட்டுவிட்டு, ரமழான் மாதத்தின் ஒவ்வொரு நாளுக்கும் பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும், ஒரு வயோதிபர், வயோதிபத்தின் கடுமையான பலவீனப்பட்ட நிலைக்கு வந்தால், கடமைகள் அவரை விட்டும் நீங்கும். எனவே அவர் நோன்பை விடுவார். அவர் எதுவும் செய்ய வேண்டியதில்லை. 

கழா செய்யவேண்டிய நேரமும் அதைத் தாமதப்படுத்துவதன் சட்ட நிலையும் :

ஒரு ரமழானுடைய நோன்பை அதற்கடுத்து வரும் ரமழான் நோன்புக்கு இடையில் கழாச்செய்ய வேண்டும், துரிதமாகவே கழாச் செய்துவிடுவது சிறந்ததாகும், கழாச்செய்ய வேண்டிய நோன்புகளை அடுத்த ரமழானுக்கு பிறகு பிற்படுத்துவது அனுமதிக்கப்படாததாகும். ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்:

«كَانَ يَكُونُ عَلَيَّ الصَّوْمُ مِنْ رَمَضَانَ، فَمَا أَسْتَطِيعُ أَنْ أَقْضِيَ إِلَّا فِي شَعْبَانَ لِمَكَانِ رَسُولِ اللهِ ﷺ».

எனக்கு ரமழான் மாதத்திலிருந்து விடுபட்ட நோன்புகள் இருக்கும். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காரணமாக அவற்றை ஷஃபான் மாதத்தில்தான் கழாச்செய்வேன்.53

நோன்பைக் கழாச்செய்வதை அடுத்த ரமழானுக்குப் பின்னர் வரை தாமதித்தால், அவனுக்கு இரண்டு நிலைகள் உண்டு:

1. நியாயமான ஒரு காரணத்தினால் பிற்படுத்தியிருத்தல். உதாரணமாக: நோய்வாய்ப்பட்டு, அந்த நோய் இரண்டாம் ரமழான் வரை நீடித்தல். இவர் நோன்பைக் கழாச்செய்தால் மாத்திரம் போதுமானது.

2- எந்த நியாயமான காரணமுமின்றி தாமதப்படுத்துதல். , இவ்வாறு தாமதப்படுத்தியமைக்காக அவர் பாவியாவார். அவர் தவ்பா செய்து, கழாச் செய்ய வேண்டும். மேலும் ஒவ்வொரு நாளுக்காகவும், ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.

கடமையான நோன்பு மீதமுள்ளவர்கள் ஸுன்னத்தான நோன்புகள் நோற்றல்:

ரமழான் நோன்புகளைக் கழா செய்ய இருப்பவர்கள், ஸுன்னத்தான நோன்புகளை நோற்கும் முன் அவற்றை நிறைவேற்றுவது சிறந்ததாகும். ஆனால் நபிலான நோன்பு நேரம் கடந்து விடக்கூடியதாக இருந்தால் - உதாரணமாக, அரஃபா மற்றும் ஆஷூரா நோன்பு - அவற்றை, கழாவுக்கு முன்னர் நோற்க வேண்டும்; ஏனெனில் கழாச் செய்யும் நேரம் பரந்தது, ஆனால் ஆஷூரா மற்றும் அரஃபா நேரம் கடந்து விடும். ஆனால் நோன்பை கழாச்செய்த பின் மட்டுமே ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகளை நோற்க வேண்டும்.

நோன்பு நோற்பது தடைசெய்யப்பட்ட தினங்கள் :

1- நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய நாட்களில் நோன்பு நோற்பது.  நபியவர்கள் இதனைத் தடுத்துள்ளார்கள். 

2. துல்ஹஜ் மாதத்தின் தஷ்ரீக்குடைய நாட்களில் நோன்பு நோற்றல்.  ஆனால், தமத்துஃ மற்றும் கிரான் முறையில் ஹஜ் செய்த, குர்பானியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் நோற்கலாம். துல்ஹஜ் மாதத்தின் பதினொன்றாம், பன்னிரெண்டாம் மற்றும் பதிமூன்றாம் நாட்களே தஷ்ரீக் நாட்களாகும்.

3. ஷஃபான் மாதத்தின் முப்பதாம் நாளாகிய, சந்தேகத்திற்கு உரிய நாளில் நோற்பது.  அதாவது, அந்த இரவு முகில்கள் அல்லது தூசிகள் நிறைந்த இரவாக இருந்து, பிறையைப் பார்ப்பதற்கு அவை தடையாக இருந்தால். 

நோன்பு நோற்பது வெறுக்கப்பட்ட தினங்கள்:

அ - ரஜப் மாதம் முழுதும் விசேடமாக நோன்பு நோற்றல்.  ஆ - வெள்ளிக்கிழமை தினத்தில் விசேடமாக  நோன்பு நோற்பது, அது தடை செய்யப்பட்டுள்ளது.  அதற்கு முன்னால் அல்லது பின்னால் ஒரு நாளை இணைத்து நோன்பு நோற்றால் அப்போது வெறுக்கப்படமாட்டாது

நோன்பு நோற்பது ஸுன்னத்தான தினங்கள் :

அ -  ஷவ்வால் மாதத்தில் ஆறு நாட்கள். ஆ - துல்ஹஜ் மாதத்தின் முதல் ஒன்பது நாட்களில் நோன்பு நோற்றல், அதில் மிக முக்கியமானது அறஃபா தினம். ஆனால் ஹஜ் பயணத்தில் இருப்பவர்களுக்கு அதில் நோன்பு நோற்பது ஸுன்னா அல்ல. இந்த இரண்டு ஆண்டுகளின் பாவங்களுக்குப் பரிகாரமாகும். இ - மாதாந்தம் மூன்று தினங்கள் நோன்பு நோற்பது. அதில் மிகச்சிறப்புக்குரியது ஒவ்வொரு அரபு மாதத்திலும், அய்யாமுல் பீழ் நாட்களான (13,14,15) ஆகிய தினங்களில் நோன்பு நோற்றல் ஆகும். ஈ -  வாரத்தில் திங்கள் மற்றும் வியாழன் நோன்பு நோற்றல், ஏனெனில் நபி (ஸல்) அவற்றை நோற்றார்கள்; அவ்விரு நாட்களில் அடியார்களின் செயல்கள் அல்லாஹ்விடம் சமர்ப்பிக்கப்படுகின்றன.

உபரியான நோன்பு:

அ- தாவூத் عليه السلام அவர்களின் நோன்பு. அவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்பவர்களாக இருந்துள்ளார்கள். அந்த முறையில் நோன்பு நோற்றல்.

ஆ - அல்லாஹ்வின் மாதமாகிய, முஹர்ரம் மாதத்தில் நோன்பு நோற்பது. இது நோன்பு நோற்பது மிகவும் சிறப்பான மாதமாகும். அதிலும் மிக முக்கியமானது, ஆசூரா தினத்தில் நோன்பு நோற்பதாகும். அது முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாளாகும். அதனுடன் ஒன்பதாவது நாளிலும் நோன்பு நோற்பது நல்லது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 

«لَئِنْ بَقِيتُ إِلَى قَابِلٍ لَأَصُومَنَّ التَّاسِعَ».

நான் அடுத்த வருடம் வரை வாழ்ந்தால், ஒன்பதாம் நாளில் நோன்பு நோற்பேன்.54 மேலும், அது முன்னிருந்த வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாகின்றது.

ஐந்தாம் ஆய்வு: ஹஜ்ஜும் உம்ராவும்

மொழியில் ஹஜ் என்பது : நாடிச் செல்லுதல் என்று அர்த்தம் தரும். இஸ்லாமிய பரிபாஷையில் : புனித ஆலயமான கஃபாவுக்கும் புனித தளங்களுக்கும் குறிப்பிட்ட காலத்தில் சென்று குறிப்பிட்ட சில (செயற்பாடுகளை) கிரியைகளை நிறைவேற்றுவதைக் குறிக்கும். 

உம்ரா என்பது மொழியில் : தரிசிக்கச் செல்லல் என்பதாகும். 

இஸ்லாமிய பரிபாஷையில் : புனித ஆலயமான கஃபாவுக்கு எந்த நேரத்திலும் சென்று குறிப்பிட்ட சில (செயற்பாடுகளை) கிரியைகளை செய்வதற்கான தரிசனம் ஆகும்.

ஹஜ் இஸ்லாத்தின் தூண்களிலும் முக்கிய அடிப்படைகளிலும் ஒன்றாகும். இது ஹிஜ்ரி 9ம் ஆண்டு கடமையாக்கப்பட்டது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரே ஒரு ஹஜ்ஜை நிறைவேற்றியுள்ளார்கள்; அது ஹஜ்ஜதுல் வதா ஆகும்.

சக்திபெற்றவருக்கு வாழ்நாளில் ஒருமுறை ஹஜ் செய்வது கடமையாகும். அதற்கு மேற்பட்டது, உபரியான ஹஜ்ஜாகும். உம்ராவும் பல அறிஞர்களின் கூற்றின் பிரகாரம் கடமையாகும்.  இதற்கான ஆதாரமாக, “பெண்கள் மீது ஜிஹாத் கடமையா? எனக் கேட்டபோது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:

«نَعَمْ، عَلَيْهِنَّ جِهَادٌ لَا قِتَالَ فِيهِ: الْحَجُّ وَالْعُمْرَةُ».

“ஆம், அவர்களுக்கு போரிடல் இல்லாத அறப்போர் உண்டு: அதுவே, ஹஜ்ஜும் உம்ராவும் ஆகும்55

ஹஜ்ஜும் உம்ராவும் கடமையாவதற்கான நிபந்தனைகள் :

1- முஸ்லிமாக இருத்தல் 

2- புத்தி சுவாதீனமுள்ளவராக இருத்தல்

3- பருவமடைதல்

4- சுதந்திரமானவராக இருத்தல்

5-சக்திபெற்றவராக இருத்தல்

பெண்களுக்கு ஆறாவது ஒரு நிபந்தனை உண்டு. அதாவது, ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கு அவளுடன் பயணிக்கும் ஒரு மஹ்ரம் இருக்க வேண்டும்.  ஏனெனில் அவளுக்கு ஹஜ் அல்லது வேறு எந்த பயணத்திற்கும் மஹ்ரமின்றி செல்ல அனுமதிக்கபட்டமாட்டாது.  நபி (ஸல்) கூறுகிறார்கள் :

«لَا تُسَافِرُ الْمَرْأَةُ إِلَّا مَعَ ذِي مَحْرَمٍ، وَلَا يَدْخُلُ عَلَيْهَا رَجُلٌ إِلَّا وَمَعَهَا مَحْرَمٌ».

'ஒரு பெண் மணமுடிக்கத் தகாத நெருங்கிய உறவினர் (மஹ்ரம்) ஒருவர் தம்முடன் இருக்கும் நிலையில் தவிர பயணம் மேற்கொள்ளக் கூடாது, மேலும் அவளுடன் மஹ்ரம் ஒருவர் இல்லாமல், அவளிடம் ஒரு ஆண் நுழையக் கூடாது.’56

பெண்ணின் மஹ்ரம் என்பது அவளது கணவர் அல்லது அவளை நிரந்தரமாக திருமணம் செய்ய தடைசெய்யப்பட்டவர்கள் ஆகும்.  அது ஒன்றில், சகோதரர், தந்தை, தந்தையின் சகோதரர், சகோதரனின் மகன், தாயின் சகோதரர் போன்ற இரத்த உறவுமுறையாக இருக்கலாம். அல்லது பால்குடி உறவு போன்ற, ஹலாலான காரணத்தினால் கிடைத்த சகோதரனாக இருக்கலாம். அல்லது திருமண உறவின் மூலம் உருவான, தாயின் கணவர், கணவனின் மகன் போன்ற உறவாகவும் இருக்கலாம். 

சக்தியிருத்தல் என்பது, பொருளாதார மற்றும் உடல் ரீதியாக சக்தி இருப்பதாகும். அதாவது வாகனங்களில் ஏறவும், பயணத்தின் சிரமங்களைத் தாங்கிக் கொள்ளவும் சக்தி இருப்பதும், போகவும் வரவும் போதுமான பொருளாதார வசதி இருப்பதுமாகும்.  மேலும், அவர் திரும்பி வரும்வரை தமது பிள்ளைகள் மற்றும் செலவுக்குட்பட்டவர்களுக்குப் போதுமான வசதிகள் இருப்பதுமாகும். 

ஹஜ் செல்லும் பாதை தனது உயிருக்கும் செல்வத்திற்கும் பாதுகாப்பானதாகவும்  இருக்கவேண்டும்.

தன் உடலால் சக்தியின்றி, செல்வத்தால் மாத்திரம் சக்திபெற்றவராக இருந்தால்,  (உதாரணமாக, முதியவராகவோ, அல்லது குணமடையாத நோயால் பாதிக்கப்பட்டவராகவோ இருந்தால்) அவர் தனக்குப் பதிலாக யாரையாவது ஹஜ் மற்றும் உம்ரா செய்ய கட்டாயமாக நியமிக்கவேண்டும்.

ஹஜ் மற்றும் உம்ராவில் இன்னொருவருக்குப் பதிலாக செய்பவருக்கு இரண்டு நிபந்தனைகள் உள்ளன:

1- ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு தகுதியானவராக இருக்க வேண்டும், அதாவது முஸ்லிமாக, பருவமடைந்த புத்திசுயாதீனம் உள்ளவராக இருக்க வேண்டும்.

2- ஏற்கனவே அவர் தன்னுடைய ஹஜ் கடமையை நிறைவேற்றியிருக்க வேண்டும்.

இஹ்ராமுக்கான மீகாத்கள் :

மீகாத் என்பது மொழியில்: எல்லை என்ற அர்த்தம் தரும். இஸ்லாமிய பரிபாஷையில், இது வழிபாட்டின் இடம் அல்லது அதன் நேரத்தைக் குறிக்கும்.

ஹஜ்ஜுக்கு என, காலம் சார்ந்த, மற்றும் இடம் சார்ந்த நிய்யத் வைக்கும் எல்லைகள் உள்ளன:

அ- காலம் சார்ந்த எல்லைகள் பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான் :

﴿ٱلۡحَجُّ أَشۡهُرٞ مَّعۡلُومَٰتٞۚ فَمَن فَرَضَ فِيهِنَّ ٱلۡحَجَّ...﴾

"ஹஜ்ஜு(க்காக இஹ்ராம் கட்ட வேண்டிய காலம் ஷவ்வால், துல் கஅதா, துல் ஹஜ்ஜுடைய முதல் பத்து நாட்கள் ஆகிய) அறியப்பட்ட மாதங்களாகும்". (அல் பகரா : 197).

இந்த மாதங்கள்: ஷவ்வால், துல்கஃதா மற்றும்  துல்ஹஜ் பத்து நாட்கள் ஆகும்.

‌ஆ - நிய்யத் வைக்கும் எல்லைகள்: இவை ஹாஜிகள் இஹ்ராம் இல்லாமல் மக்காவிற்குள் நுழையக் கூடாத எல்லைகள் ஆகும், அவைகள் பின்வருமாறு:

1. மதீனா வாசிகளுக்கான மீகாத்: துல்ஹுலைஃபா.

2. ஜுஹ்ஃபா: ஷாம், எகிப்து, மொரோக்கோ நாட்டவர்களின் மீகாத்.

3. கர்ன் அல்மனாஸில்: இது தற்போது ஸைல் என அறியப்படுகிறது; இது நஜ்த் வாசிகளுக்கான மீகாத்.

4. ஸாது(தzாது)இர்க்: இராக் வாசிகளின் மீகாத். 

5. யலம்லம்: யெமன் வாசிகளின் மீகாத்.

இந்த எல்லைகளுக்குள் வசிப்போர் தமது இருப்பிடங்களில் இருந்து ஹஜ் மற்றும் உம்ரா நிய்யத் வைக்க வேண்டும். மக்காவாசிகள் தமது இருப்பிடங்களில் இருந்து நிய்யத் வைக்க வேண்டும். இஹ்ராம் கட்டுவதற்கு எல்லைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. உம்ராவிற்காக, அவர்கள் மிக அருகிலுள்ள புனித எல்லைக்கு வெளியில் சென்று, இஹ்ராம் கட்டிக்கொள்வார்கள். ஹஜ் அல்லது உம்ரா செய்ய விரும்புவோர் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ள இடங்களிலிருந்து, அதாவது முன் குறிப்பிடப்பட்டுள்ள மீகாத் எல்லைகளிலிருந்து இஹ்ராம் கட்ட வேண்டும். ஹஜ் அல்லது உம்ரா செய்ய நாடி வரும் ஒருவர் இஹ்ராம் நிய்யத் வைக்காமல் அந்த எல்லைகளைத் தாண்டுவது அனுமதிக்கபட்டதல்ல.

மேற்கூறிய எல்லைகளின் வழியாக நுழையும், அவற்றின் பகுதிகளில் வசிப்பவரல்லாதவர்களும் அங்கிருந்து இஹ்ராம் நிய்யத் வைக்க வேண்டும்.

மக்காவிற்கு செல்லும் வழியில், நிலம், கடல் அல்லது வான்வழியாக மேற்கூறிய எந்த எல்லைகளையும் கடக்காதவர், தமக்கு அருகிலுள்ள எல்லையை நெருங்கும் போது நிய்யத் வைக்க வேண்டும். உமர் இப்னுல் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு கூறியதாவது : "உங்கள் பாதையில் அவற்றிற்கு நேராக வரும் மீக்காத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்".57

விமானம் மூலம் ஹஜ் அல்லது உம்ரா கடமைகளை நிறைவேற்றப் பயணிக்கும் ஒருவர், தமது விமானம் தனது பாதையில் உள்ள மீகாத்தை நெருங்கும் போது இஹ்ராம் நிய்யத் வைக்க வேண்டும், இஹ்ராம் நிய்யத்தை, விமானம் விமான நிலையத்தில் தரையிறங்கும் வரை பிற்படுத்துவது கூடாது.

இஹ்ராம் நிய்யத் :

இஹ்ராம் என்பது வணக்கத்தில் நுழைவதாக  நிய்யத் வைப்பதாகும். எனவே, ஹஜ்ஜில் நிய்யத் என்பது ஹஜ் வணக்கத்தில் நுழைவதாக நாடுவதாகும்.  உம்ராவில் நிய்யத் என்பது, உம்ரா வணக்கத்தில் நுழைவதாக நாடுவதாகும். ஹஜ் அல்லது உம்ரா வணக்கத்தில் நுழைவதை நிய்யத்து வைத்தால் மட்டுமே அவர் முஹ்ரிம் ஆக மாறுவார்.  நிய்யத் இல்லாமல் இஹ்ராம் ஆடைகளை மட்டும் அணிவது, இஹ்ராம் ஆகாது.

இஹ்ராமின் விரும்பத்தக்க செயல்கள்:

1- இஹ்ராமுக்கு முன் குளித்தல்.

2- ஒரு ஆண் இஹ்ராம் ஆடையில் அல்லாமல்,  உடலில் நறுமணமிடுதல். 

3- வெள்ளை வேட்டி மற்றும் மேலாடையுடன், இரண்டு காலணிகளுடன் இஹ்ராம் அணிதல்.

4- வாகனத்தில் ஏறி, கிப்லாத் திசையை முன்னோக்கிய நிலையில் இஹ்ராம் நிய்யத் வைத்தல்.

ஹஜ்ஜின் வகைகள் :

மூன்று வகையான ஹஜ் வழிபாடுகளில் எதனை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்க இஹ்ராம் நிய்யத் வைத்தவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவை:

1. தமத்துஃ; ஹஜ்ஜுடைய மாதங்களில் உம்ராச் செய்து, அதனை முடித்து, பின் அதே ஆண்டில் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் நிய்யத் வைப்பது.

2- இஃப்ராத்; இது ஹஜ்ஜுக்காக மட்டும் மீகாத்தில் இஹ்ராம் நிய்யத் வைத்து, பின்பு ஹஜ் கடமைகளை நிறைவேற்றும் வரை இஹ்ராமில் இருப்பது.

3- 'அல் கிறான்'; அதாவது ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும் ஒன்றாக இஹ்ராம் நிய்யத் வைத்தல், அல்லது உம்ராவுக்காக இஹ்ராம் கட்டி, அதன் தவாஃபை ஆரம்பிக்கு முன் ஹஜ்ஜை அதனுடன் இணைத்தல். இவ்வாறு மீகாத்தில் இருந்து உம்ரா மற்றும் ஹஜ்ஜுக்கான நிய்யத்துடன் இஹ்ராம் கட்டி, அவற்றிற்காக தவாஃப் செய்து ஸஈ செய்வது.

தமத்துஃ மற்றும் கிரான் செய்பவர்கள்,  மஸ்ஜிதுல் ஹராமின் அருகில் வாசிக்காதவராக இருந்தால், அவர்களுக்கு பித்யா (பலியிடல்) கடமையாகும்.

இந்த மூன்று ஹஜ் முறைகளில் சிறந்தது தமத்துஃ ஆகும்; ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் தம்முடைய தோழர்களுக்கு அதனைச் செய்யுமாறு ஏவினார்கள்58. அதன் பின் கிரான் சிறந்ததாகும்; ஏனெனில் அது ஹஜ் மற்றும் உம்ரா இணைந்ததாகும், அதன் பின் இஃப்ராத்.

இஹ்ராம் நிய்யத் வைத்த பின், அவர் இவ்வாறு தல்பியா கூற வேண்டும்:

«لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لَا شَرِيكَ لَكَ».

(லெப்பைக், அல்லாஹும்ம லெப்பைக், லெப்பைக் லாஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல்முல்க, லாஷரீக லக)) இதோ, உன் அழைப்பை ஏற்று வந்து விட்டேன்! யா அல்லாஹ்! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! இணையில்லாதோனே! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! புகழும், அருட்கொடையும், ஆட்சியும் உனக்கே உரியன! உனக்கு நிகரானவர் எவருமில்லை.)59

இது ஸுன்னாவாகும். எனவே, அதனை அதிகம் செய்வது முஸ்தஹப்பாகும், ஆண்கள் அதனை சப்தமாகக் கூறவேண்டும். பெண்கள் அதனை மௌனமாகச் செய்ய வேண்டும்.

அதன் நேரம், இஹ்ராம் நிய்யத் வைத்ததில் இருந்து தொடங்குகிறது, அதன் இறுதி நேரம் பின்வருமாறு:

முதலாவது : உம்ரா செய்யும் ஒருவர் தவாப் செய்யத் தொடங்குவதற்கு முன் நிறுத்த வேண்டும்.

இரண்டாவது: பெருநாள் தினத்தில் ஜம்ரதுல் அகபாவிற்கு கல் எறியும்போது ஹாஜிகள்  அதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இஹ்ராமின் போது தடைசெய்யப்பட்டவைகள்:

முதலாவது: தலைமுடி அல்லது உடம்பின் ஏனைய பாகங்களிலுள்ள முடிகளை மழித்தல், கத்தரித்தல் அல்லது பிடுங்குதல்.

தடைசெய்யப்பட்ட இரண்டாவது: கை அல்லது கால் நகங்களை, காரணமின்றி வெட்டுதல் அல்லது களைதல்,  ஆனால் நகம் உடைந்துவிட, அதை அகற்றினால் அதற்காக பரிகாரம் கொடுக்க வேண்டியதில்லை.

மூன்றாவது தடை: தலையுடன் ஒட்டிய பொருட்கள் மூலம், ஒரு ஆண் தலையை மறைத்தல், உதாரணமாக: தொப்பி மற்றும் குத்ரா.

நான்காவது தடை: ஆண்கள்,  சட்டை, தலைப்பாகை அல்லது கால்சட்டை போன்ற, தங்கள் உடல் முழுவதையும் அல்லது சில பகுதிகளை மறைக்கும், தையலான ஆடைகளை அணியலாகாது.  தைக்கப்பட்டவை என்பது, உறுப்பின் அளவிற்கு தைக்கப்பட்ட காலணிகள், கையுறை, காலுறைகள் போன்றவையாகும்.  பெண்கள் இஹ்ராமின் போது தம்மை மறைத்துக்கொள்ளவேண்டிய தேவை இருப்பதால், தமக்குப் பிடித்த ஆடைகளை அணியலாம். ஆனால், புர்கா அணியக் கூடாது. அந்நிய ஆண்கள் அருகில் வந்தால், அதுவல்லாத ஹிஜாப் அல்லது ஜில்பாப் போன்றவற்றால் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும். இரு கைகளிலும் கையுறைகளை அணியவும் கூடாது.

தடைசெய்யப்பட்ட ஐந்தாவது: வாசனைத் திரவியம்; ஏனெனில், இஹ்ராம் நிலையில் இருப்பவர், இவ்வுலகின் ஆடம்பரங்களையும் அலங்காரங்களையும் விட்டு விலகி, மறுமையை நோக்குவதே  வேண்டப்படுகிறது.

ஆறாவது தடை : தரை வாழ் பிராணிகளை வேட்டையாடுதல் மற்றும் கொல்லுதல் தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே இஹ்ராம் அணிந்தவர் தரை மிருகங்களை வேட்டையாடவோ, அதற்கு உதவவோ, அவற்றை அறுக்கவோ கூடாது.

இஹ்ராம் அணிந்தவர்,  தாமாக வேட்டையாடியதையோ அல்லது அவருக்காக வேட்டையாடப்பட்டதையோ அல்லது அவர் உதவியதோ உண்பது தடை செய்யப்பட்டுள்ளது; ஏனெனில் அவை அவரைப் பொறுத்தவரை இறந்தவற்றைப் போன்றவையாகும்.

நீரில் வாழும் பிராணிகளை வேட்டையாடுவது இஹ்ராமுடன் இருப்பவருக்குத்  தடைசெய்யப்பட்ட ஒன்றல்ல. மேலும், கோழி மற்றும் கால்நடைகள்  போன்றவற்றை அறுப்பதும் தடைசெய்யப்பட்டதல்ல; ஏனெனில் அது வேட்டையாடுவதல்ல.

தடைசெய்யப்பட்டுள்ள ஏழாவது அம்சம் : தனது அல்லது பிறரின் திருமணத்தை  நடத்தி வைத்தல், அல்லது சாட்சியாக இருத்தல்.

தடைசெய்யப்பட்டுள்ள எட்டாவது அம்சம்: உடலுறவு கொள்ளல்; முதலாவது தஹல்லுலுக்கு முன்னர் உடலுறவு கொண்டால், அவரது ஹஜ்ஜே பாழாகிவிடும். ஆனாலும், அவன் தொடர்ந்து தனது வழிபாடுகளை நிறைவேற்றவேண்டும்.  அத்துடன் அடுத்த ஆண்டில் அதை மீண்டும் செய்வதோடு, மேலும் ஒரு ஒட்டகத்தைப் பலியிடவும் வேண்டும். முதலாவது தஹல்லுலுக்கு பிறகு ஏற்பட்டிருந்தால், அவரது ஹஜ் பாழ்படமாட்டாது. ஆனால் அதற்காக ஒரு குர்பானி வழங்க வேண்டும்.

பெண், இதற்கு உடன்பத்திருந்தால்,  அவளும் ஆணைப் போலவே.  

தடை செய்யப்பட்ட ஒன்பதாவது அம்சம்: பெண் உறுப்பைத் தவிர்ந்த இடங்களில் உடலுறவு கொள்ளல். இஹ்ராம் அணிந்தவர் மனைவியோடு உறவு கொள்ளுதல் கூடாது.  ஏனெனில் அது தடை செய்யப்பட்ட உடலுறவிற்கு வழிவகுக்கும்.

உம்ரா:

அ- உம்ராவின் தூண்கள் :

1- இஹ்ராம் நிய்யத் வைத்தல்.

2- தவாப்.

3- ஸஈ செய்தல்.

ஆ - உம்ராவின் கடமைகள்:

1- அங்கீகரிக்கப்பட்ட மீகாத்தில் இஹ்ராம் நிய்யத் வைத்தல்.  

2- தலைமுடியை மழித்தல் அல்லது குறைத்தல்.

இ - உம்ரா செய்யும் முறை :

முதலில் உம்ரா செய்யும் ஒருவர், ஹஜருல் அஸ்வத் கல்லிலிருந்து ஆரம்பித்து அதில் முடிவடையும் வகையில் ஏழு சுற்றுக்கள் தவாப் செய்ய வேண்டும். அவர் தவாஃப் செய்யும்போது, வுழூ செய்தவராகவும், தொப்புள் முதல் முழங்கால் வரை அவ்ரத்தை மறைத்தவராகவும் இருக்க வேண்டும்.  தவாப் முழுவதும் இழ்திபா செய்வது ஸுன்னாவாகும். இழ்திபா என்பது வலது தோளை வெளிப்படுத்தி, மேலாடையை அதன் கீழ் வைத்து, மேலாடையின் இரு முனைகளையும் இடது தோளின் மீது வைப்பதாகும்.   ஏழாவது சுற்றை முடித்ததும், இழ்திபாவை விட்டு, தனது தோள்களை ஆடையால் மூடிக்கொள்ளவேண்டும். 

ஹஜருல் அஸ்வதின் திசையை முன்னோக்கி, அதனை முத்தமிட முடிந்தால் முத்தமிட வேண்டும், இல்லையெனில் வலது கையால் தொட முடிந்தால் தொட்டு, பின்னர் கையை முத்தமிடவேண்டும்.  ஹஜருல் அஸ்வதை தொடமுடியா விட்டால், அதனை நோக்கி, வலது கையை உயர்த்தி الله أكبر என்று ஒருமுறை கூறி கையை முத்தமிடாமல், நிற்காமல் செல்ல வேண்டும்.  இவ்வாறு அவர் தனது தவாபை, கஃபாவை இடப்புறமாகக் கொண்டு தொடருவார். முதல் மூன்று சுற்றுகளில் ரமல் செய்வது சுன்னத் ஆகும். ரமல் என்பது நெருக்கமான அடிகளுடன விரைந்து நடப்பதாகும். 

கஃபாவின் நான்காவது மூலையான ருக்னுல் யமானியை கடந்து செல்லும் போது, அவருக்கு வசதியாக இருந்தால் வலது கையால் தொட வேண்டும். அதற்காக தக்பீர் கூறவோ, முத்தமிடவோ வேண்டியதில்லை. அவருக்கு தொடுவதற்கு வசதியாக இல்லாவிட்டால், அதை நோக்கி சைகை செய்யாமல், தக்பீர் கூறாமல் சென்று விட வேண்டும். ருக்னுல் யமானிக்கும் ஹஜருல் அஸ்வத்துக்கும் இடையில் பின்வருமாறு கூற வேண்டும் :

﴿...رَبَّنَآ ءَاتِنَا فِي ٱلدُّنۡيَا حَسَنَةٗ وَفِي ٱلۡأٓخِرَةِ حَسَنَةٗ وَقِنَا عَذَابَ ٱلنَّارِ﴾

எங்கள் இறைவா! எங்களுக்கு இம்மையிலும் அழகியதைத் தா! மறுமையிலும் அழகியதைத் தா! (நரக) நெருப்பின் தண்டனையிலிருந்தும் எங்களைப் பாதுகாத்துவிடு. (அல் பகரா : 201)

தவாஃப் முடிந்ததும், மகாமு இப்ராஹீமின்  பின்புறம் - அது சாத்தியமானால் -  இரண்டு ரக்அத்துக்கள் தொழ வேண்டும்; அது சாத்தியமில்லையெனில், மஸ்ஜிதுல் ஹராமின் எந்த இடத்திலும் தொழலாம். முதல் ரக்அத்தில் ஃபாத்திஹாவுக்குப் பின்னர் ஸூரா அல்காபிரூன் ஓதுவதும்,  இரண்டாம் ரக்அத்தில் பாதிஹா ஓதிய பின்னர் ஸூரத்துல் இக்லாஸை ஓதுவதும் ஸுன்னாவாகும், பின்னர் மஸ்அா நோக்கி சென்று, ஸஈ செய்தல். அதாவது ஸபா, மர்வா குன்றுகளுக்கு இடையில் ஏழு சுற்றுக்கள் ஸஈ செய்தல். செல்வது ஒரு சுற்றாகவும், திரும்புவது இன்னுமொரு சுற்றாகவும் கொள்ளப்படும். 

ஸஈயை ஸபாவில் தொடங்குவார். ஒன்றில் அதில் ஏறுவார். அல்லது அதற்கருகில் நிற்பார். ஸபாவில் ஏறுதல் சுலபமாக இருந்தால் அதுவே சிறந்தது. அப்போது அவர் பின்வரும்  இறைவசனத்தை ஓதுவார்:

﴿‌إِنَّ ٱلصَّفَا وَٱلۡمَرۡوَةَ مِن شَعَآئِرِ ٱللَّهِ...﴾

பொருள் : நிச்சயமாக ஸஃபா, மர்வா (மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் உள்ளவை) (அல் பகரா : 158)

கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்வை புகழ்ந்து, தக்பீர் கூறி, பின்வருமாறு கூறுவது விரும்பத்தக்கது:

«لَا إِلٰهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ، لَا إِلٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، يُحْيِي وَيُمِيتُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، لَا إِلٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ، أَنْجَزَ وَعْدَهُ، وَنَصَرَ عَبْدَهُ، وَهَزَمَ الْأَحْزَابَ وَحْدَهُ».

உண்மையான வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை, அல்லாஹ் மிகப் பெரியவன், உண்மையான வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவனைத்தவிர வேறு யாருமில்லை, அவனுக்கு எந்த இணையாளரும் இல்லை, ஆட்சியும் சர்வபுகழும் அவனுக்கே உரியது, அவன் உயிர்ப்பிக்கவும் உயிர் எடுக்கவும் செய்கிறான், அவன் அனைத்தின் மீதும் பேராற்றல் உடையவன், உண்மையான வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவனைத்தவிர வேறு யாருமில்லை, அவன் தனது வாக்குறுதியை நிறைவேற்றினான், தனது அடியாருக்கு உதவினான், கூட்டங்களை அவன் ஒருவனே தோற்கடித்தான்.60 பின்னர் இரு கைகளையும் உயர்த்தி துஆ  செய்வார், இந்த திக்ர் மற்றும் துவாவை மூன்று முறை மீண்டும் கூறுவார். பின் இறங்கி, மர்வாவை நோக்கி நடப்பார்.  முதல் குறியீட்டை அடைவது தொடக்கம், இரண்டாம் குறியீட்டை அடைவதுவரை ஆண்கள் சற்று விரைவாக நடக்க வேண்டும். பெண்கள் ஸஈயின் போது அந்த இரண்டு பச்சை விளக்குகளுக்கு இடையில் வேகமாக ஓடுமாறு மார்க்கம் கூறவில்லை. ஏனெனில் அவள் மறைக்கப்பட வேண்டியவள். அவளுக்கு ஸஈ முழுவதும் நடப்பது மட்டுமே மார்க்கத்தால் கூறப்பட்டுள்ளது.  பின் நடந்து சென்று, மர்வா மீது ஏறவோ, அல்லது அதற்கருகில் நிற்கவோ செய்வார். அதற்கு ஏறுதல் இயலுமானால் அதுவே சிறந்தது. ஸபாவில் கூறிய, செய்த அம்சங்களையே மர்வாவிலும் கூறவும்,  செய்யவும் செய்வார். ஆனால் பின்வரும் வசனத்தை ஓதமாட்டார். 

﴿‌إِنَّ ٱلصَّفَا وَٱلۡمَرۡوَةَ مِن شَعَآئِرِ ٱللَّهِ...﴾

நிச்சயமாக ஸஃபா, மர்வா (மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் உள்ளவை... இது ஸஈயின் முதல் சுற்றில் ஸபா குன்றிற்கு ஏறும்போது மாத்திரம் கூறப்படும்.  பின்னர் இறங்கி, நடக்க வேண்டிய இடத்தில் நடந்து, விரைவாக நடக்க வேண்டிய இடத்தில் விரைந்து, ஸபா குன்றை அடைவார். இவ்வாறு ஏழு தடவைகள் செய்வார். செல்வது ஒரு சுற்று, திரும்புவது மேலும் ஒரு சுற்றாகும்.  ஸஈயில் தன்னால் முடியுமான திக்ர் மற்றும் பிரார்த்தனைகளை அதிகம் செய்வது விரும்பத்தக்கது. மேலும், பெருந்தொடக்கிலிருந்தும், சிறுதொடக்கிலிருந்தும் தூய்மையாக இருப்பதும் விரும்பத்தக்கது. ஆனால் தூய்மையில்லாமல் ஸஈ செய்தாலும் அதுவும் செல்லுபடியாகும்.  இதுபோல, ஒரு பெண் தவாப் செய்த பின், அவளுக்கு மாதவிடாய் அல்லது பிரசவத்திற்குப் பின்னரான இரத்தம் ஏற்பட்டால் அவள் ஸஈ செய்ய வேண்டும். அது அவளுக்குப் போதுமானதாகும். ஏனெனில், சுத்தம் என்பது ஸஈயில் விரும்பத்தக்க ஒன்றே அல்லாமல், நிபந்தனை அல்ல. 

ஸஈயை முடித்த பின், தலையை முழுவதும் சிரைத்தல் அல்லது குறைத்தல் வேண்டும், இதில் ஆண்களுக்கு தலையை முழுவதும் சிரைத்தல் சிறந்ததாகும்.

இதன் மூலம் அவர் தனது உம்ரா வழிபாடுகளை முழுமையாக நிறைவேற்றி விட்டார். 

ஹஜ் :

அ- ஹஜ்ஜின் தூண்கள் :

1- இஹ்ராம் (ஹஜ்ஜுக்காக நிய்யத் வைத்தல்).

2- அரபாவில் தரித்தல்.

3- தவாபுல் இபாழா (ஹஜ்ஜின் கடமையான தவாப்).

4- ஸஈ செய்தல்.

‌ஆ- ஹஜ்ஜின் கடமைகள்:

1- மீகாத்தில் இருந்து இஹ்ராம் நிய்யத் வைத்தல்.

2- துல் ஹஜ் ஒன்பதாவது நாள் அரபாவில் தரிப்பவர்கள், சூரியன் மறையும் வரை தரித்தல். 

3. துல்ஹஜ் மாதத்தின் பத்தாம் இரவில் நடு இரவு வரை முஸ்தலிபாவில் தங்குதல்.

4- தஷ்ரீக் நாட்களில் மினாவில் இரவு கழித்தல்.

5- ஜம்ராக்களில் கல் எறிதல்.

6- தலைமுடியை சிரைத்தல் அல்லது குறைத்தல்.

7- தவாபுல் விடாஃ (பிரியாவிடை தவாப்).

பதில் : ஹஜ் செய்யும் முறை :

முஸ்லிம் ஒருவர் எல்லையை அடைந்தவுடன், நேரம் குறைவாக இருந்தால், தனியாக ஹஜ்ஜுக்காக நிய்யத் வைக்க வேண்டும். பின் மக்காவிற்கு வந்தவுடன், கஃபாவைத் தவாப் செய்து, ஸபா மர்வாக்கிடையில் ஸஈ செய்துவிட்டு, தமது இஹ்ராமில் தொடர்ந்திருந்து, துல்ஹஜ் மாதம் ஒன்பதாம் நாள் அரபாவிற்கு சென்று, அங்கு சூரியன் மறையும் வரை தரித்திருக்க வேண்டும்.

பின்பு அவ்விடத்தை விட்டு முஸ்தலிஃபாவிற்கு தல்பியா கூறிய வண்ணம் செல்வார். அங்கு பஜ்ரு தொழுகை முடிக்கும் வரை தங்குவார். பின்னர் அங்கு தங்கி அல்லாஹ்வை நினைவுகூர்ந்து, தல்பியா கூறி, துஆ செய்து விடியற்காலை வரை இருப்பார்.

நன்கு வெளுக்க ஆரம்பித்ததும் சூரியன் உதயமாவதற்கு முன்னர் மினாவிற்குச் செல்லப் புறப்பட வேண்டும். பின்பு ஜம்ரதுல் அகபா எனும் தூணுக்கு ஏழு சிறு பொடிக்கற்களால் எறிய வேண்டும். பின் முடியை மழிக்க வேண்டும் அல்லது குறைக்க வேண்டும், மழிப்பதே சிறந்தது.

பின்னர் தவாபுல் இபாழாவை நிறைவேற்ற வேண்டும், முதற்கண் செய்த ஸஈ போதுமானது. இதனால் அவனுடைய ஹஜ் நிறைவேறி, முழுமையான தஹல்லுள் கிடைத்து விடும்.

அதன் பின், அவசரமாக இருப்பின், 11ம், 12ம் நாட்களில் மாத்திரம் மூன்று ஜம்ராக்களுக்கும் கல்லெறிய வேண்டும். ஒவ்வொரு ஜம்ராவிற்கும் ஏழு கற்களைத் தக்பீர் கூறியவண்ணம் எறிய வேண்டும். முதலில் மஸ்ஜிதுல் கைஃபை அடுத்துள்ள ஸுஃராவிற்கும், பின் மத்தியிலுள்ள ஜம்ரதுல் வுஸ்தாவிற்கும், பின் இறுதியாக ஜம்ரதுல் அகபாவிற்கும் ஒவ்வொன்றாக ஏழு கற்களை எறிய வேண்டும். விரும்பியவர் பன்னிரண்டாம் நாளுக்குப் பிறகு தாமதித்து 13ம் நாளில் கல்லெறிய விரும்பினால், 11ம் மற்றும் 12ம் நாட்களில் எறிந்ததுபோலவே கல்லெறிய வேண்டும்.

எறியும் நேரம்: மூன்று நாட்களிலும் சூரியன் உச்சி சாய்ந்தபின் ஆகும்.

12ம் நாள் சூரியன் மறைவதற்கு முன் மினாவை விட்டுப் புறப்பட்டுச் சென்றால் எந்தத் தவறும் இல்லை. 13ம் நாள் பகலில் சூரியன் சாய்ந்த பின் கல்லெறியும்வரை தங்கினால் அதுவே சிறந்தது. அல்லாஹ் கூறுகின்றான்:

﴿‌...فَمَن تَعَجَّلَ فِي يَوۡمَيۡنِ فَلَآ إِثۡمَ عَلَيۡهِ وَمَن تَأَخَّرَ فَلَآ إِثۡمَ عَلَيۡهِۖ لِمَنِ ٱتَّقَىٰ...﴾

"ஆக, எவர் இரண்டு நாள்களில் (ஊர் திரும்ப வேண்டும் என்று) அவசரப்பட்டாரோ அவர் மீது அறவே குற்றமில்லை. இன்னும், எவர் (மூன்றாவது நாளும் மினாவில் தங்குவதற்காக) தாமதித்தாரோ அவர் மீதும் அறவே குற்றமில்லை. (அதாவது,) அல்லாஹ்வை அஞ்சியவர்களுக்கு (அவர்கள் இந்த இரண்டில் எதை செய்தாலும் அவர்கள் மீது குற்றமில்லை)".

(அல் பகரா : 203)

பிரயாணம் செய்ய விரும்பியவர், ஸஈ இல்லாமல் பிரியாவிடைக்கான தவாபை மாத்திரம் ஏழு சுற்றுக்கள் செய்வார். 

அவரிடம் பலிப்பிராணி இல்லையெனில், உம்ராவை தமத்துஃ முறையில் நிய்யத் செய்து, எட்டாம் நாளில் ஹஜ்ஜுக்காக தல்பியா கூறி, ஏற்கனவே கூறப்பட்ட ஹஜ்ஜின் கிரியைகளை மேற்கொள்வதே சிறந்ததாகும். ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும் ஒன்றாக நிய்யத் வைத்தாலும் அதிலும் குற்றமில்லை. இதனை 'கிரான்' என அழைக்கப்படுகிறது. அதாவது, ஒரே தவாப் மற்றும் ஸஈயுடன் உம்ரா மற்றும் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் நிய்யத் வைப்பதாகும். 

பகுதி மூன்று:

கொடுக்கல் வாங்கல் தொடர்பானது.

அறிஞர்கள் - அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரியட்டும் - ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டிய அறிவை விளக்கி உள்ளனர். ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயமாகக் கற்றுக்கொள்ள வேண்டிய அளவு பற்றியும் அவர்கள்  பேசியுள்ளார்கள்.  வியாபாரம் செய்பவர்கள், வியாபார விதிகளைக் கற்றுக்கொள்வது அவ்வகையான கல்வியில் உள்ளது எனவும் அவர்கள் கூறியுள்ளார்கள்.  அப்போதுதான், அறியாமலே ஹராமில் அல்லது வட்டியில் விழுந்துவிடாமல் இருக்கலாம்.  இதனை உறுதிப்படுத்தும் வகையில் சில ஸஹாபாக்கள் கூறியவை:

உமர் இப்னுல் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு கூறினார்கள் : எமது சந்தையில் (கடைத்தெருக்களில்) மார்க்க சட்டதிட்டங்களை கற்றவர் தவிர வேறு எவரும் வியாபாரம் செய்ய வேண்டாம்" (61).61

அலீ இப்னு அபூதாலிப் ரழியல்லாஹு அவர்கள் கூறினார்கள், 'வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு முன் ஃபிக்ஹில் (இஸ்லாமிய சட்டம்) அறிவு பெறாதவர் வட்டியில் விழுந்து விடுகிறார், பின்னர் மீண்டும் விழுந்து விடுகிறார், மீண்டும் விழுந்து விடுகிறார். அதாவது: வட்டியில் விழுந்து விடுகிறார். (62)62

இப்னு ஆபிதீன் அவர்கள் அல்அல்லாமி அவர்களிடமிருந்து மேற்கோள் காட்டி கூறுகின்றார்கள்: கடமைகளை சுமக்கும் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் மார்க்க அறிவையும் நேர்வழியையும் கற்ற பிறகு, தொழுகை, நோன்பு, நிஸாப் அளவு உடையவர்களுக்கு ஸகாத், கடமையானவர்களுக்கு ஹஜ், வியாபாரிகளுக்கு விற்பனை பற்றிய அறிவு ஆகியவற்றை கற்றல் அவசியமாகும். ஏனெனில் அவர்கள் அனைத்து பரிவர்த்தனைகளிலும் சந்தேகங்கள் மற்றும் வெறுப்புக்குரிய வற்றிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறே,  தொழிலாளிகள் மற்றும் ஏதேனும் ஒன்றில் ஈடுபடுபவர்களும் அதற்கான அறிவையும் அதன் சட்டத்தையும் கற்றல் அவசியமாகும்.  ஏனெனில் அவர்கள் அதில் ஹராமான விடயங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்." (63).63

இமாம் நவவி - அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரியட்டும் - கூறுகின்றார்கள்: வியாபாரம், திருமணம் போன்ற, அடிப்படையில் அவசியமில்லாத வற்றைப் பொறுத்தவரை, அவற்றின் நிபந்தனைகளை அறிந்தாலே தவிர அவற்றில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளது.64

பின்வருபவை, இஸ்லாமிய சரீஆவில் வந்துள்ள, பொருளாதாரப் பரிவார்த்தனை தொடர்பான சில விதிகளாகும்:

1. முழுமையான நன்மையோ அல்லது அதிக நன்மையோ உள்ள அனைத்தையும் அனுமதித்தல். உதாரணமாக, அனுமதிக்கப்பட்டவற்றை விற்றல், வாங்குதல், வாடகைக்கு விடுதல் மற்றும் முன்னுரிமை உரிமை65.

2. மனிதர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், உறுதிப்படுத்தவும் உதவும் அனைத்து செயல்களும் - உதாரணமாக அடமானம் மற்றும் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுதல் ஆகியவை -  அனுமதிக்கப்பட்டுள்ளன.

3. ஒப்பந்தக்காரர்களின் நலனுக்கேற்ப ஒப்பந்த ரத்து, தேர்வு மற்றும் வியாபாரத்தில் நிபந்தனைகள் ஆகியவை சட்டபூர்வமானவை.

4. மக்களுக்கு அநீதமிழைக்கும், அவர்களது சொத்துக்களை அநியாயமாக உண்ணும் அனைத்து செயல்களும் தடைசெய்யப்பட்டுள்ளது. உதாரணமாக,  வட்டி, பறிப்பு, பதுக்கி வைத்தல் போன்றவை.

5- நன்மைக்காக பரஸ்பரம் ஒத்துழைக்கும் அனைத்து செயல்களும் சட்டபூர்வமானவை. உதாரணமாக கடன், இரவல், மற்றும் அடகுவைத்தல் ஆகியவை 

6. தொழில், பயன், அல்லது உழைப்பு இன்றி பணத்தைப் பெறுவதற்கான அனைத்து வழிகளும் தடுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக,  சூதாட்டம் மற்றும் வட்டி போன்றவை.

7. அறியாமை மற்றும் ஏமாற்றம் அதிகமாக உள்ள ஒவ்வொரு பரிவர்த்தனையையும் தடுக்கப்படுகின்றன. உதாரணமாக, ஒருவர் தமக்குச் சொந்தமில்லாததை விற்பனை செய்வது மற்றும் அறியப்படாததை விற்பனை செய்வது போன்றவை.

8- தடுக்கப்பட்டவற்றை தந்திரமாக அடையும் வழிகள் அனைத்தையும் தடைசெய்தல்; உதாரணமாக, 'ஈனா' விற்பனை போன்றவை66.

9. இறைவழிபாட்டில் இருந்து தடுக்கக்கூடிய அனைத்தும் தடைசெய்யப்படுகின்றன. உதாரணமாக, ஜுமுஆவுக்கான இரண்டாவது அழைப்பு விடுக்கப்பட்ட பிறகு வியாபாரம் செய்தல். 

10- முஸ்லிம்களுக்கு இடையே பகைமையை  ஏற்படுத்தக்கூடிய அல்லது தீங்கிழைக்கும் அனைத்தும் தடுக்கப்படுகின்றன. உதாரணமாக, ஹராமான பொருட்களை விற்பனை செய்வது, மற்றும் ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமின் கொடுக்கல் வாங்கலில் குறுக்கிட்டு வியாபாரம் செய்வது போன்றவை. 

ஒரு முஸ்லிமுக்கு ஏதாவது விவகாரத்தில் சட்டம் தெளிவாக இல்லாதபோது, அதற்கான மார்க்கத் தீர்வுகளை அறிய அறிஞர்களிடம் கேட்க வேண்டும். மேலும், அதற்கான மார்க்கத் தீர்வை அறிந்த பின்பே அதில் ஈடுபட வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்:

﴿‌...فَاسْأَلُوا ‌أَهْلَ ‌الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ﴾

 'நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் அறிவுடையவர்களிடம் விசாரியுங்கள்,' (அந்நஹ்லு : 43)

இதுவே (எம்மால்) தொகுக்க முடிந்த அம்சங்களாகும்.  அல்லாஹ்விடம் பயனுள்ள அறிவையும், நற்செயல்களையும் எங்களுக்கு வழங்குமாறு பிரார்த்திக்கிறோம். அவன் மாபெரும் கொடையாளன். எமது நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் மீதும், அவர்களின் குடும்பத்தார் தோழர்கள் அனைவர் மீதிலும் அல்லாஹ்வின் ஸலாத்தும், ஸலாமும் மிகுந்த அளவில் உண்டாவதாக.

 

 

***

பொருளடக்கம்

 

முன்னுரை 2

பகுதி ஒன்று: 4

இஸ்லாமியஅடிப்படைக் கொள்கை தொடர்பானவை 4

முதலாவது ஆய்வு: இஸ்லாத்தின் அர்த்தமும், அதன் தூண்களும்: 4

ஓரிறைக் கொள்கையின் முக்கியத்துவம் : 5

«லாஇலாக இல்லல்லாஹ்» என்ற சாட்சியத்தின் பொருள்: 8

(லாஇலாஹ இல்லல்லாஹ்) எனும் கலிமாவின் நிபந்தனைகளாவன: 10

முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என சாட்சி பகர்வதன் அர்த்தம்: 12

இரண்டாம் பகுதி: ஈமான் (நம்பிக்கை) மற்றும் அதன் அடிப்படைகள்: 15

1) அல்லாஹ்வை ஈமான் கொள்வது மூன்று விடயங்களை உள்ளடக்கியுள்ளது: 18

1- அவனின் ருபூபிய்யத்தை நம்பிக்கை கொள்வது: 18

2- அவனின் உலூஹிய்யத்தை ஈமான் கொள்வது: 22

3- அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகளை விசுவாசம் கொள்ளல். 28

2- மலக்குகளை நம்புதல் (ஈமான் கொள்ளுதல்) : 41

3- வேதங்களை நம்புதல் (ஈமான் கொள்ளுதல்) : 43

4. இறைத்தூதர்களை நம்புதல் : 45

5) இறுதி நாளை விசுவாசம் கொள்ளுதல் (மறுமை நாளை நம்புதல்) : 48

1. மீள எழுப்பப்படுவதை ஈமான் கொள்ளல். 48

ஆ- விசாரணை மற்றும் கூலி வழங்குவதை ஈமான் கொள்ளல்: 49

இ-  சுவனம் மற்றும் நரகத்தை நம்புதல். 50

6- நன்மை தீமை இறைவிதியின் படியே நடக்கும் என்பதை நம்புதல் : 51

மூன்றாம் பகுதி : அல் இஹ்ஸான்: 54

நான்காவது பகுதி: அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்தின் அடிப்படைக் கோட்பாடுகளின் சுருக்கம்: 56

இரண்டாவது அத்தியாயம்: வணக்க வழிபாடுகளுடன் தொடர்புடையவை 59

முதலாவது ஆய்வு : சுத்தம் : 59

முதலாவது : நீரின் வகைகள் : 59

இரண்டாவது : நஜாசத் (அழுக்கு) 60

மூன்றாவது : தொடக்கு ஏற்பட்டுள்ள நிலையில் செய்யத் தடைசெய்யப்பட்ட செயல்கள் : 65

நான்காவது: இயற்கை தேவைகளை நிறைவேற்றுவதன் ஒழுங்குகள் : 68

ஐந்தாவது: நீரினாலும் கற்களாலும் சுத்தம் செய்வதற்கான சட்டங்கள்: 70

ஆறாவது : வுழூவின் சட்டங்கள்: 71

ஏழாவது: பாதணி மற்றும் காலுரை (சொக்ஸ்) மீது மஸ்ஹ் செய்வதற்கான விதிகள்: 75

எட்டாவதாக : தயம்மும் பற்றிய விதிகள்: 78

ஒன்பதாவது : மாதவிடாய் மற்றும் நிபாஸுக்குரிய சட்டங்கள்: 83

இரண்டாம் ஆய்வு: தொழுகை: 87

முதலாவதாக : அதானும் இகாமத்தும் பற்றிய சட்ட திட்டங்கள் : 87

இரண்டாவதாக : தொழுகையின் நிலை மற்றும் சிறப்பு : 94

மூன்றாவது : தொழுகையின் நிபந்தனைகள் : 98

நான்காவது: தொழுகையின் முதல் நிலைக் கடமைகள் (ருக்ன்கள்) : 101

ஐந்தாவதாக : தொழுகையின் வாஜிப்கள்: 109

ஆறாவதாக : தொழுகையின் ஸுன்னாக்கள் 111

ஏழாவது : தொழுகை முறை 117

எட்டாவதாக : தொழுகையில் வெறுக்கத்தக்கவை : 129

ஒன்பதாவது : தொழுகையை முறிப்பவை : 130

10. மறதிக்கான ஸுஜூத் : 131

11. தொழுகை தடைசெய்யப்பட்டுள்ள நேரங்கள்: 134

பன்னிரண்டாவது : கூட்டுத் தொழுகை : 136

13. போர் நேரத் தொழுகை : 141

போர் நேரத் தொழுகை முறை : 142

பதினான்காவது: ஜும்ஆ தொழுகை : 145

ஐந்தாவது: வெள்ளிக்கிழமையின் ஸுன்னாக்கள் 148

ஜும்ஆவை அடைவது: 150

15- அசாதாரண நிலையிலுள்ளோரின் தொழுகை : 151

பதினாறாவது : இரு பெருநாள் தொழுகைகள் : 158

பதினேழாவது: சூரிய, சந்திரக் கிரகணத் தொழுகை : 162

பதினெட்டாவது - மழைதேடித் தொழுதல் : 165

பத்தொன்பதாவது: ஜனாஸாவின் சட்டங்கள்: 167

மூன்றாம் ஆய்வு : ஸகாத் 173

1. ஸகாதின் வரையறையும் அதன் அந்தஸ்த்தும்: 173

2- ஸகாத் கடமையாவதற்கான நிபந்தனைகள் : 175

3. ஸகாத் விதியாகும் பொருட்கள் : 177

ஆய்வு நான்கு: நோன்பு: 199

ரமழான் நோன்பு கடமையாவதற்கான நிபந்தனைகள் : 201

ஐந்தாம் ஆய்வு: ஹஜ்ஜும் உம்ராவும் 216

ஹஜ்ஜும் உம்ராவும் கடமையாவதற்கான நிபந்தனைகள் : 217

இஹ்ராமுக்கான மீகாத்கள் : 221

இஹ்ராம் நிய்யத் :  224

உம்ரா: 232

ஹஜ் : 239

பகுதி மூன்று: 244

கொடுக்கல் வாங்கல் தொடர்பானது. 244

 

 

***

 


ஆதாரம் : அஹ்மத் (6072), திர்மிதி (1535). இமாம் திர்மிதி இதனை ஹஸன் எனக் கூறியுள்ளார்.

புஹாரியின் அல் அதபுல் முப்ரதில் ஹதீஸ் எண் 716 லும், அஹ்மதின் முஸ்னதில் ஹதீஸ் எண் 19606 லும், அல் தியாஉல் மக்தஸியின் அல் அஹாதீஸ் அல் முக்தாராவில் 1/150 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அஷ்ஷேய்ஹ் அல்பானி அவர்கள் ஸஹீஹுல் ஜாமிஇஸ் ஸகீரில் ஹதீஸ் எண் 3731 ல் இந்த ஹதீஸ் ஸஹீஹானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஹதீஸ் முஸ்லிமில் 121 ம் இலக்கத்தில், அஹ்மத் மஸ்னதில் 10434 ம் இலக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

(மத்யு'): இது நிறமற்ற மென்மையான நீராகும். இது (மனைவியுடன்) கொஞ்சுதல், தாம்பத்தியத்தை நினைவுபடுத்தல், அதற்கான விருப்பம், பார்வை போன்ற காரணங்களால் வெளிப்படும். இது துளிகளாக வெளிப்படும், வெளிவருவதை உணராமல் இருக்கலாம். (வதி): இது சிறுநீரின் பின் அல்லது கனமான பொருளை தூக்கும்போது வெளிவரும் திடமான வெள்ளை நீராகும்.

இந்த ஹதீஸ் முஸ்லிமில் ஹதீஸ் எண் 224 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது

ஆதாரம் : முவத்தா மாலிக் (680, 219) தாரிமீ (312), முஸன்னஃப் அப்துர் ரஸாக் (1328) அல்பானி அவர்கள் இர்வாஉல் கலீல் (122) இல் இதனை ஸஹீஹ் எனத் தீர்ப்பளித்துளள்ளார்.

[8[ நஸாஈயில் ஹதீஸ் எண் 12808 லும், அஹ்மதில் ஹதீஸ் எண் 15423 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்பானி அவர்கள் இந்த ஹதீஸை இர்வாஉல் கலீல் ஹதீஸ் எண் 121 ல் ஸஹீஹ் எனத் தீர்ப்பளித்துள்ளார்.

ஆதாரம் : இப்னு மாஜா (594), இப்னு ஹிப்பான் (799) ழஈப் ஸுனன் திர்மிதியில் (146) அஷ்ஷேக் அல்பானீ இதனை ழஈப் எனக் கூறியுள்ளார்.

ஆதாரம் : புஹாரி (142), முஸ்லிம் (122).

ஆதாரம் : புஹாரி (7288), முஸ்லிம் (6066)

ஷேக் அப்துல் அஸீஸ் இப்னு பாஸ் (ரஹ்) அவர்கள் தமது 'மஜ்மூஉல் ஃபதாவா' (பாகம் 29 பக்கம் 141) இல் கூறியதாவது: (பைஹகி அவர்கள் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து 'அல்லாஹ் வாக்களித்ததை' என்ற சொற்றொடருக்குப் பிறகு 'நீ வாக்களித்ததை மீறமாட்டாய்' எனும் வார்த்தையை நல்ல அறிவிப்பளர் தொடருடன் சேர்த்துள்ளார்).

திர்மிதி (2635) ல் பதிவு செய்யப்பட்டுள்ளது

இந்த ஹதீஸ் முஸ்லிமில் ஹதீஸ் எண் 82 ம் இலக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது

இது திர்மிதியில் ஹதீஸ் எண் (265) ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இமாம் திர்மிதி அவர்கள் இதனை ஹஸன் ஸஹீஹ் கரீப் எனக் கூறியுள்ளார். அஷ்ஷேக் அல்பானி ஸஹீஹுத் தர்கீபி வத்தர்ஹீப் எனும் நூலில் இதனை ஸஹீஹ் எனக் கூறியுள்ளார்கள்.

ஆதாரம் : புஹாரி (1117).

புஹாரி ஹதீஸ் எண் 6251, முஸ்லிம் ஹதீஸ் எண் 884

புஹாரி ஹதீஸ் எண் 756, முஸ்லிம் ஹதீஸ் எண் 872

ஆதாரம் : புஹாரி (793), முஸ்லிம் (398).

புஹாரி ஹதீஸ் எண் 812 முஸ்லிம் ஹதீஸ் எண் 490

ஆதாரம் : முஸ்லிம் (498).

ஆதாரம் : புஹாரி (724), முஸ்லிம் (398).

ஆதாரம் : புஹாரி (797), முஸ்லிம் (402).

இந்த ஹதீஸ் திர்மிதியில் ஹதீஸ் எண் 839 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது

ஆதாரம் : புஹாரி ஹதீஸ் எண் 6008.

ஆதாரம் : புஹாரி ஹதீஸ் எண் 1110.

புஹாரி ஹதீஸ் எண் 835

புஹாரி ஹதீஸ் எண் 743 முஸ்லிம் ஹதீஸ் எண் 399

ஆதாரம் : திர்மிதி (266).

முஸ்லிமில் ஹதீஸ் எண் 588 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆதாரம் : அபூதாவூத் (5168).

இந்த ஹதீஸ் திர்மிதியில் ஹதீஸ் எண் 284 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஹதீஸ் முஸ்லிமில் ஹதீஸ் எண் 1484 ம் இலக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புஹாரி ஹதீஸ் எண் 609, முஸ்லிம் ஹதீஸ் எண் 602

ஆதாரம் : புஹாரி ஹதீஸ் எண் 4130, முஸ்லிம் ஹதீஸ் எண் 842.

முஸ்லிமில் ஹதீஸ் எண் 865 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆதாரம் : புஹாரி ஹதீஸ் எண் 934, முஸ்லிம் ஹதீஸ் எண் 851.

புஹாரி ஹதீஸ் எண் 1081, முஸ்லிம் ஹதீஸ் எண் 693

ஆதாரம் : புஹாரி ஹதீஸ் எண் (1012), முஸ்லிம் ஹதீஸ் எண் (894).

ஆதாரம் : அபூதாவூத் ஹதீஸ் எண் (3201), திர்மிதி ஹதீஸ் எண் (1024). இமாம் திர்மிதி இதனை ஹஸன் ஸஹீஹ் எனக் கூறியுள்ளார்கள்.

முஸ்லிமில் ஹதீஸ் எண் 962 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது

புஹாரி ஹதீஸ் எண் 8 முஸ்லிம் ஹதீஸ் எண் 111.

இப்னு மாஜாவில் ஹதீஸ் எண் 1792 லும், திர்மிதியில் ஹதீஸ் எண் 63 மற்றும் 631 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புஹாரி ஹதீஸ் எண் 1402 முஸ்லிம் ஹதீஸ் எண் 2287

ஆதாரம் : புஹாரி ஹதீஸ் எண் (1432), முஸ்லிம் ஹதீஸ் எண் (984).

இந்த ஹதீஸை அபூதாவூதில் ஹதீஸ் எண் 1609 லும், இப்னு மாஜஃ ஹதீஸ் எண் 1827 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்பானி அவர்கள் ஸஹீஹ் அபீ தாவூதில் ஹதீஸ் எண் 1609 ல் இதனை ஸஹீஹ் எனத் தீர்ப்பளித்துள்ளார்.

ஆதாரம் : புஹாரி (1), முஸ்லிம் (1907).

புஹாரி ஹதீஸ் எண் 1810 முஸ்லிம் ஹதீஸ் எண் 1086.

ஆதாரம் : புஹாரி (1909).

ஆதாரம் : அஹ்மத் ஹதீஸ் எண் 26457, அபூதாவூத் ஹதீஸ் எண் 2454, நஸாஈ ஹதீஸ் எண் 2331 (இந்த வார்த்தை இவருக்குரியது).

புஹாரி ஹதீஸ் எண் 6669 முஸ்லிம் ஹதீஸ் எண் 2709.

அபூ தாவூத் ஹதீஸ் எண் 2380, திர்மிதி ஹதீஸ் எண் 719, இப்னு மாஜஃ ஹதீஸ் எண் 676.

புஹாரி ஹதீஸ் எண் 1849 முஸ்லிம் ஹதீஸ் எண் 1846.

முஸ்லிமில் ஹதீஸ் எண் 1134 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆதாரம் : அஹ்மத்: ஹதீஸ் எண் 25198, நஸாஈ: ஹதீஸ் எண் 2627, இப்னு மாஜா: ஹதீஸ் எண் 2901.

ஆதாரம் : புஹாரி ஹதீஸ் எண் 1862, முஸ்லிம் ஹதீஸ் எண் 1341.

ஆதாரம் : புஹாரி ஹதீஸ் எண் 1531.

இந்த ஹதீஸ் முஸ்லிமில் 1211 ம் இலக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புஹாரி ஹதீஸ் எண் 1549

முஸ்லிமில் ஹதீஸ் எண் 1218 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திர்மிதியில் ஹதீஸ் எண் 487 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இமாம் திர்மிதி இதனை ஹஸன் கரீப் எனக் கூறியுள்ளார்கள். அல்பானி அவர்கள் இதனை ஹஸன் எனத் தீர்ப்பளித்துள்ளார்.

பார்க்க: முக்னி அல் முக்தாஜ் (2/22).

ஹாஷியது இப்னு ஆபிதீன்- பாகம் 1 பக்கம் 42 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது

பார்க்க : அல்மஜ்மூஃ (1/50)

‌சுஃப்அத்: தனது பங்குதாரரிடமிருந்து பணம் கொடுத்து வாங்கிய மனிதரிடம் இருந்து பங்குதாரரின் பங்கினை மீண்டும் பெற்றுக்கொள்ள பங்குதாரருக்கு உள்ள  உரிமையாகும்.

'ஈனா வியாபாரம்' என்பது, ஒருவர் மற்றொருவருக்கு ஒரு பொருளை காலம் தாழ்த்திய விலையில் கடனுக்கு விற்று, அதனை அவருக்கு வழங்கி, பிறகு பணத்தைப் பெறுவதற்கு முன் குறைவான விலையில் அதனை மீண்டும் அவனிடமிருந்து ரொக்கத்திற்கு வாங்குவதாகும்.

ஆதாரம் : புஹாரி (8).