كيفية صلاة النبي ﷺ (تاميلي)

كتاب كَيفِيَّةُ صَلَاةِ النَّبِيِّ ﷺ لخَّص فيه سماحة الشيخ عبد العزيز بن باز رحمه الله صفة صلاة النبي ﷺ، بأسلوب سهل ومنهج دقيق، مستندًا إلى النصوص الصحيحة، ليكون هاديًا للمسلم في صلاته، وقد بيَّن فيه أركان الصلاة وسننها وصفاتها من الوضوء إلى التسليم، جامعًا بين الدليل والبيان، داعيًا إلى الاقتداء الكامل بالنبي ﷺ في أعظم عبادة.

  • earth மொழி
    (تاميلي)
  • earth தொகுப்பு:

ஏனைய மொழிபெயர்ப்புகள் 77

ce شيشاني- нохчийн мотт sq ألباني- Shqip pt برتغالي- português as آسامي- অসমীয়া ms ملايو- Melayu uz أوزبكي- Ўзбек ar عربي- العربية ps بشتو- بشتو ur أردو- اردو en إنجليزي- English bn بنغالي- বাংলা ru روسي- Русский zh صيني- 中文 fa فارسي- فارسي fr فرنسي- Français hi هندي- हिन्दी sw سواحيلي- Kiswahili id إندونيسي- Indonesia ha هوسا- Hausa tl فلبيني تجالوج- Tagalog tr تركي- Türkçe gu غوجاراتية- ગુજરાતી te تلغو- తెలుగు si سنهالي- සිංහල ta تاميلي- தமிழ் mk مقدوني- македонски pl بولندي- polski it إيطالي- italiano hu هنجاري مجري- magyar ka جورجي- ქართული es إسباني- español kn كنادي- ಕನ್ನಡ om أورومو- afaan oromoo sr صربي- Српски az أذري- azərbaycanca lo لاو- ພາສາລາວ ml مليالم- മലയാളം tg طاجيكي- тоҷикӣ hy أرميني- Հայերէն bs بوسني- bosanski vi فيتنامي- Tiếng Việt dv ديفهي- ދިވެހި ky قرغيزي- Кыргызча st سوتي- Sesotho th تايلندي- ไทย ne نيبالي- नेपाली cs تشيكي- čeština fi فنلندي- suomi bg بلغاري- български mos موري- Mõõré mg ملاغاشي- Malagasy kk كازاخي- қазақ тілі ig إيجبو- Igbo yo يوربا- Èdè Yorùbá uk أوكراني- українська ddn دندي- Dendi dje زارما- Zarmaciine mfe كريولي- créole ko كوري- 한국어 da دنماركي- dansk sn الشونا- Shona prs دري- فارسی دری af أفريقاني- Afrikaans dyo جوالا- Jóola so صومالي- Soomaali bem بيمبا- Bemba ja ياباني- 日本語 sl سلوفيني- slovenščina nl هولندي- Nederlands my بورمي- ဗမာ ki كيكويو- Gĩkũyũ lt ليتواني- lietuvių mnk مندنكا- Mandinka lv لاتفي- latviešu rn كيروندي- Ikirundi hr كرواتي- hrvatski ro روماني- română
PHPWord

 

 

كَيْفِيَّةُ صَلَاةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

 

 

நபியவர்களின் தொழுகை முறை

 

 

لِفَضِيلَةِ الشَّيْخِ العَلَّامَةِ

عَبْدِ العَزِيزِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ بَازٍ

غَفَرَ اللَّهُ لَهُ وَلِوَالِدَيْهِ وَلِلْمُسْلِمِينَ

 

மதிப்பிற்குரிய அஷ்ஷேய்க் அப்துல் அஸீஸ் இப்னி பாஸ் (ரஹ்)

 


بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

நபியவர்களின் தொழுகை முறை

 

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஆரம்பிக்கின்றேன்)

எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே உரியது, ஸலாத்தும் ஸலாமும் அவருடைய அடியாரும் தூதருமான நமது நபி முஹம்மத் அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

இது நபி (ஸல்) அவர்களின் தொழுகையின் முறையை விளக்கும் சுருக்கமான சில வார்த்தைகளாகும். இதனை ஒவ்வொரு முஸ்லிமான ஆணும் பெண்ணும் படித்து, நடைமுறைப்படுத்த முயற்சி செய்ய வேண்டும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(صَلُّوا كَمَا رَأَيْتُمُونِي أُصَلِّي).

“நான் எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுது கொள்ளுங்கள்".1 வாசகருக்கு அதனை பின்வருமாறு விளக்குகின்றோம்:

1- வுழூவை முழுமையாகச் செய்ய வேண்டும், அதாவது அல்லாஹ் ஏவியபடி வுழூச் செய்ய வேண்டும். அல்லாஹ் கூறுகின்றான்:

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا قُمۡتُمۡ إِلَى ٱلصَّلَوٰةِ فَٱغۡسِلُواْ وُجُوهَكُمۡ وَأَيۡدِيَكُمۡ إِلَى ٱلۡمَرَافِقِ وَٱمۡسَحُواْ بِرُءُوسِكُمۡ وَأَرۡجُلَكُمۡ إِلَى ٱلۡكَعۡبَيۡنِ...﴾

நம்பிக்கையாளர்களே! நீங்கள் தொழுகைக்கு நின்றால் உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் கைகளையும் கழுவுங்கள், இன்னும், உங்கள் தலைகளில் (நனைந்த கைகளினால்) தடவுங்கள். இன்னும் இரு கணுக்கால்கள் வரை உங்கள் கால்களையும் கழுவுங்கள்... (அல் மாஇதா : 6) அல்குர்ஆன் வசனத்தை முழுமையாகப் பார்க்கவும்

நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள் :

َا تُقْبَلُ صَلَاةٌ بِغَيْرِ طُهُورٍ).

“வுழூ இன்றி தொழுகை ஏற்கப்பட மாட்டாது".2

தமது தொழுகையை தவறாக செய்தவருக்கு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :

(‌إِذَا ‌قُمْتَ ‌إِلَى ‌الصَّلَاةِ، ‌فَأَسْبِغِ ‌الْوُضُوءَ).

“நீங்கள் தொழுகைக்காக செல்ல நாடினால், வுழுவை முழுமையாகச் செய்யுங்கள்.3

2. தொழுகையை நிறைவேற்றுபவர், எங்கு இருந்தாலும், கிப்லாவை நோக்கி, அதாவது கஃபாவை நோக்கி, தனது முழு உடலையும் திருப்ப வேண்டும். அவர் நிறைவேற்ற விரும்பும் தொழுகையை, அது கட்டாயமானதோ அல்லது உபரியான தொழுகையோ, மனதினால் எண்ண வேண்டும். வாயினால் நிய்யத்தைச் சொல்லக் கூடாது, ஏனெனில் வாயினால் சொல்லுதல் நபி (ஸல்) அவர்கள் செய்யாத புதுமையாகும். நபி (ஸல்) அவர்கள் நிய்யத்தை வாயினால் சொல்லவில்லை. அவர்களது தோழர்களும் (ரழி) சொல்ல வில்லை. தொழுபவர், இமாமாக அல்லது தனித்துத் தொழுபவராக இருந்தால், தன் முன்னே ஒரு தடையை வைத்துக் கொண்டு தொழ வேண்டும். கிப்லாவை நோக்கி தொழுவது தொழுகைக்கான ஒரு நிபந்தனையாகும். சில விதிவிலக்கான நேரங்களைத் தவிர, அதுபற்றி அறிஞர்களின் நூல்களில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

3- ஆரம்ப தக்பீரை, அல்லாஹு அக்பர் எனக் கூறி, தனது பார்வையை சஜ்தா செய்யும் இடத்தை நோக்கிச் செலுத்தவேண்டும்.

4- தக்பீர் கூறும்போது இரு கைகளையும் தோள்பட்டைக்கு அல்லது காதுகளுக்கு நேராக உயர்த்த வேண்டும்.

5- நபி (ஸல்) செய்தது போன்று, தனது இரு கைகளையும் நெஞ்சின் மீது வைக்க வேண்டும். தனது வலது கையை இடது கையின் மணிக்கட்டு, முன்கை ஆகியவற்றின் மீது வைக்க வேண்டும்.

6. ஆரம்ப துஆவை (துஆஉல் இஸ்திப்தாஹ்) ஓதுவது ஸுன்னத் ஆகும்.

(اللَّهُمَّ بَاعِدْ بَيْنِي وبيْنَ خَطَايَايَ، كَمَا بَاعَدْتَ بيْنَ المَشْرِقِ والمَغْرِبِ، اللَّهُمَّ نَقِّنِي مِنَ الخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الأبْيَضُ مِنَ الدَّنَسِ، اللَّهُمَّ اغْسِلْ خَطَايَايَ بالمَاءِ والثَّلْجِ والبَرَدِ).

அல்லாஹும்ம பாஇத் பைனீ வபைன கதாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரிகி வல்மஃரிபி. அல்லாஹும்ம நக்கினீ மினல் கதாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யழு மினத் தனஸ். அல்லாஹும்மஃஸில்னீ மின் கதாயாய பில்மாஇ வஸ்ஸல்ஜி வல்பரத்.

(பொருள்: இறைவா! கிழக்குக்கும் மேற்குக்கும் இடையே நீ ஏற்படுத்திய தூரத்தைப் போன்று, எனக்கும் என் தவறுகளுக்கும் இடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! வெண்மையான ஆடை, அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப்படு வதைப் போன்று என் தவறுகளைவிட்டு என்னைத் தூய்மைப்படுத்துவாயாக! தண்ணீராலும் பனிக்கட்டியாலும் ஆலங் கட்டியாலும் என் தவறுகளைக் கழுவு வாயாக!)4

மேலும் அவர் இதற்குப் பதிலாக பின்வருமாறு கூறவும் முடியும்.

(سُبْحَانَكَ اللَّهُمَّ وبِحَمْدِكَ، وَتَبَارَكَ اسْمُكَ، وَتَعَالَى جَدُّكَ، ولَا إلَهَ غَيْرُكَ).

(ஸுப்ஹானக ல்லாஹும்ம வபிஹம்திக வதபாரகஸ்முக வதஆலா ஜத்துக வலாஇலாஹ கய்ருக) என்பதாகும். (6)

(பொருள் : இறைவா! உனது புகழைக் கொண்டு உன்னைத் துதிக்கின்றேன். உன் பெயர் கீர்த்தியடைந்துவிட்டது. உன் மகத்துவம் உயர்வடைந்து விட்டது. உன்னைத் தவிர வணங்கப்படத் தகுதியானவன் யாருமில்லை.)5 இவை தவிர, நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடமிருந்து உறுதிப் படுத்தப்பட்ட வேறு இஸ்திப்தாஹ் துஆக்களை ஓதவும் முடியும். அவற்றை மாறி மாறி ஓதுவது சிறந்தது. ஏனெனில் அதுவே முழுமையான பின்பற்றலாகும். பின்பு "அஊது பில்லாஹி மினஷ் ஷைதானிர் ரஜீம்" (எடுத்தெறியப் பட்ட ஷைத்தானின் தீங்குகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்) என்று கூறி, "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்" (கருணையுள்ள இரக்கமுள்ள அல்லாஹ்வின் பெயரால்) என ஆரம்பித்து, ஸூரதுல் ஃபாதிஹாவை ஓத வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

(لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بفَاتِحَةِ الكِتَابِ).

“ஸூரத்துல் பாத்திஹாவை ஓதாத ஒருவருடைய தொழுகை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது”6 அதற்குப் பின், சப்தமிட்டு ஓதவேண்டிய தொழுகைகளில், 'ஆமீன்' என சப்தமாகக் கூற வேண்டும், மற்றும் இரகசியமாக ஓதவேண்டிய தொழுகைகளில் அமைதியாகக் கூற வேண்டும். பிறகு அல்குர்ஆனில் தன்னால் இயலுமானதை ஓத வேண்டும். ஸூரத்துல் பாத்திஹாவை ஓதிய பின், ழுஹர், அஸ்ர் மற்றும் இஷா தொழுகைகளில், அவ்ஸாதுல் முபஸ்ஸலில் இருந்தும், ஸுப்ஹ் தொழுகையில் திவாலுல் முபஸ்ஸலில் இருந்தும், மக்ரிப் தொழுகையில் சில சமயங்களில் திவாலுல் முபஸ்ஸலில் இருந்தும், வேறு சில சமயங்களில் கிஸாரூல் முபஸ்ஸலில் இருந்தும் ஓதுவது சிறந்தது. இது தொடர்பாக வந்துள்ள பல்வேறு ஹதீஸ்களை இவ்வாறு நடமுறைப்படுத்தலாம்.

7- தக்பீர் கூறி இரு கைகளையும் தோள்கள் அல்லது காதுகளின் அளவிற்கு உயர்த்தி, தலையை முதுகுடன் சமமாக வைத்து, இரு கைகளையும் முழங்காலில் விரல்களை விரித்த நிலையில் வைத்து, ருகூஃவில் அமைதியுடன் இருப்பார். 'ஸுப்ஹான ரப்பியல் அழீம்' (பொருள்: மகத்தான எனது இரட்சகனை நான் தூய்மைப்படுத்துகிறேன்) என்று கூறுவார். இதனை மூன்று தடவைகள் அல்லது அதற்கு மேல் கூறுவது சிறந்தது. மேலும் இதனுடன் சேர்த்து பின்வருமாறு கூறுவதும் விரும்பத்தக்கது:

(‌سُبْحَانَكَ ‌اللَّهُمَّ ‌وَبِحَمْدِكَ، ‌اللَّهُمَّ ‌اغْفِرْ ‌لِي).

“ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக அல்லாஹும்மக்பிர் லீ” (யா அல்லாஹ்! உன்னை புகழ்ந்து, நீ மிகவும் பரிசுத்தமானவன் எனத் துதிசெய்கிறேன். யா அல்லாஹ்! என்னை மன்னித்தருள்வாயாக)7

8- இரு கைகளையும் தோள்பட்டைகள் அல்லது காதுகளுக்கு நேராக உயர்த்திய நிலையில், ருகூவிலிருந்து தலையை உயர்த்தி பின்வருமாறு கூறுவார்: ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்". இமாமாக இருந்தாலும், தனித்துத் தொழுபவராக இருந்தாலும், மேற்படி கூறுவார். பின்பு, நின்று கொண்டிருக்கும் நிலையில் பின்வருமாறும் கூறுவார் :

(رَبَّنَا ولَكَ الحَمْدُ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ مِلْءَ السَّمَواتِ ومِلْءَ الأرضِ، ومِلْءَ ما شِئتَ مِن شيءٍ بَعدُ).

ரப்பனா வலகல்ஹம்து ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரகன் பீஹி மில்அஸ்ஸமாவாதி வமில்அல்அர்தி, வமில்அ மா ஷிஃத மின் ஷய்இன் பஅது.

எங்களுடைய இரட்சகனே! உனக்கு அதிகமான, தூய்மையான, பரக்கத் பொருந்திய புகழ்கள் உரித்தாக உள்ளன. அது, வானங்கள், பூமி நிரம்பவும், மற்றும் அவற்றுக்கப்பால் நீ நாடுகின்ற அளவு நிரம்பவும் இருக்கும்.8

ஆனால், அவர் மஃமூமாக இருந்தால், எழும்பும் போது 'ரப்பனா வலகல் ஹம்து' என்று கூற வேண்டும். மேலும், இமாம், மஃமூம் மற்றும் தனித்துத் தொழுபவர் ஆகிய ஒவ்வொருவரும்,

َهْلَ الثَّنَاءِ وَالْمجْدِ، أَحَقُّ مَا قَالَ العَبْدُ، وكُلُّنَا لَكَ عَبْدٌ: اللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أعْطَيْتَ، ولَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ، ولَا يَنْفَعُ ذَا الجَدِّ مِنْكَ الجَدُّ).

“அஹ்லஸ் ஸனாஇ வல் மஜ்த், அஹக்கு மா காலல் அப்து, வகுல்லுனா லக அப்து. அல்லாஹும்ம லா மானிஅ லிமா அஃதைத, வலா முஃதிய லிமா மனஃத வலா யன்பஉ தல் ஜத்தி மின்கல் ஜத்து”

(புகழுக்கும் கீர்த்திக்கும் உரியவனே! (இது) அடியான் கூறுவதற்கு மிகவும் தகுதி வாய்ந்த (வார்த்தையா)கும். நாங்கள் அனைவரும் உனக்கு அடிமைகளே! யா அல்லாஹ் நீ கொடுத்ததைத் தடுப்பவர் எவருமில்லை. நீ தடுத்ததைக் கொடுப்பவர் எவருமில்லை. (செல்வம், ஆட்சி அதிகாரம், உயர்ந்த பதவிகள் போன்ற) உலக செல்வாக்குப்பெற்றவரின் செல்வாக்கு (உனது தண்டனையிலிருந்து பாதுகாத்திட) எப்பயனையும் அளிக்காது)9 என்று கூறினால், அதுவும் நல்லது. ஏனெனில், இதுவும் ஆதாரப்பூர்வமானதாகும்.

இமாம், மஃமூம் மற்றும் தனியாக தொழுபவர் ஆகியோர், ருகூவிற்கு முன்னர் நிலைப்போல, தங்கள் கைகளை நெஞ்சின் மீது வைப்பது விரும்பத்தக்கது, ஏனெனில் நபி (ஸல்)அவர்கள் அவ்வாறு செய்ததாக வாயில் இப்னு ஹுஜ்ர் மற்றும் ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) ஆகியோரின் ஹதீஸ்களில் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

9- அல்லாஹு அக்பர் என்று கூறி, முதலில் முட்டுக்கால்களை தரையில் வைக்க வேண்டும். அது சிரமமாக இருந்தால், முட்டுக்கால்களுக்கு முன்னர் கைகளை வைக்க வேண்டும். கைகளின் விரல்களையும், கால்களின் விரல்களையும் ஒன்றிணைத்து, நீட்டி கிப்லா திசையை நோக்கி வைக்க வேண்டும். நெற்றி மற்றும் மூக்கு, இரண்டு கைகள், இரண்டு முட்டுக்கால்கள், இரண்டு கால் விரல்களின் உட்பகுதி ஆகிய ஏழு உறுப்புக்களும் தரையில் படுமாறு இருக்கவேண்டும். "ஸுப்ஹான ரப்பியல் அஃலா" என்று கூற வேண்டும். மூன்று முறை அல்லது அதற்கு மேல் கூறுவது சுன்னத் ஆகும். அதனுடன் பின்வரும் துஆவையும் சேர்த்துக் கூறுவது விரும்பத்தக்கது:

(سُبْحانَكَ اللَّهُمَّ رَبَّنا وبِحَمْدِكَ، اللَّهُمَّ اغْفِرْ لِي).

“ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக அல்லாஹும்மக்பிர் லீ”

(யா அல்லாஹ்! எங்களின் இரட்சகனே ! உன்னைப் புகழ்வதன் மூலம் உன்னை துதிசெய்கிறேன். யா அல்லாஹ்! என்னை மன்னித்தருள்வாயாக.) நபி (ஸல்) அவர்களின் பின்வரும் ஹதீஸுக்கு ஏற்ப, அதிகமாக பிரார்த்தனை செய்வது நல்லது.

(‌أَمَّا ‌الرُّكُوعُ، ‌فَعَظِّمُوا ‌فِيهِ ‌الرَّبَّ، وَأَمَّا السُّجُودُ، فَاجْتَهِدُوا فِي الدُّعَاءِ، فَقَمِنٌ أَنْ يُسْتَجَابَ لَكُمْ).

நபியவர்கள் கூறினார்கள் : “ருகூஃவில் இரட்சகனை மகத்துவப்படுத்துங்கள், ஸுஜுதில் முயற்சித்துப் பிரார்த்தனையில் ஈடுபடுங்கள். உங்களுக்குப் பதிலளிக்கப்பட அவ்விடம் மிகப் பொருத்தமானதாகும்".10

அவர் தன் இரட்சகனிடம் இம்மை மறுமைக்குரிய நலன்களை வேண்டிக் கேட்வேண்டும். அது வாஜிபான தொழுகையாகவோ, அல்லது நபிலான தொழுகையாகவோ இருக்கலாம். மேலும் அவர், தனது தோல் புயங்களை பக்கவாட்டிலிருந்து விலக்கி, வயிற்றை தொடையிலிருந்து விலக்கி, தொடைகளை கால்களிலிருந்து விலக்கி, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதற் கேற்ப தனது கைகளை நிலத்திலிருந்து உயர்த்தி வைக்க வேண்டும்.

(اعْتَدِلُوا في السُّجُودِ، ولَا يَبْسُطْ أحَدُكُمْ ذِرَاعَيْهِ انْبِسَاطَ الكَلْبِ).

நபியவர்கள் கூறினார்கள் : “ஸுஜூதில் நேராக இருங்கள், உங்களில் யாரும் நாயைப் போல இரு முழங்கைகளையும் விரித்து விடாதீர்கள்.”11

10- தலையை உயர்த்தி 'தக்பீர்' கூறி இடது காலை விரித்து அதன் மீது அமர்வார், வலது கால் பாதத்தை நட்டி வைப்பார், இரு கைகளையும் தொடைகள் மற்றும் முழங்கால்களின் மீது வைப்பார். பின்னர்,

(رَبِّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاهْدِنِي وَارْزُقْنِي وَعَافِنِي وَاجْبُرْنِي).

“ரப்பிஃபிர்லீ வர்ஹம்னீ வஹ்தினீ வர்ஸுக்னீ வஆபினீ வஜ்புர்னீ” (யா அல்லாஹ்! என்னை மன்னித்து எனக்கு அருள்புரிந்து நேர்வழிகாட்டுவாயாக! மேலும் எனக்கு வாழ்வாதாரத்தையும் ஆரோக்கியத்தையும் தந்திடுவாயாக! எனது குறைகளை மறைத்து ஆறுதலைத் தந்திடுவாயாக!) என்று கூறுவார்.12 இந்த அமர்வில் அமைதியுடன் இருப்பார்.

11- இரண்டாவது ஸஜ்தாவை அல்லாஹு அக்பர் என்று கூறி , முதல் ஸஜ்தாவில் செய்ததைப்போன்று இதிலும் செய்வார்.

12- தலை தூக்கி அல்லாஹு அக்பர் என்று கூறியவாறு, இரண்டு ஸஜ்தாவிற்கும் இடையில் அமர்வது போன்று சற்று நேரம் அமர்வார். இது, ‘ஜல்ஸத்துல் இஸ்திராஹா’ என அழைக்கப்படும். இது விரும்பத்தக்கது, இதை விட்டுவிட்டால் குற்றமில்லை. இதில் எந்த திக்ரோ துஆவோ இல்லை. பிறகு, முடியுமாக இருந்தால், முன்னங்காலில் ஊன்றி, இரண்டாவது ரக்அத்திற்காக எழுந்து நிற்பார். இல்லையெனில் தரையில் ஊன்றி எழுந்து நிற்பார். பிறகு, முதல் ரக்அத்தில் செய்ததைப் போலவே, ஸூரத்துல் பாத்திஹாவை ஓதி, அதற்குப் பிறகு அவருக்கு எளிதான குர்ஆன் வசனங்களை ஓதுவார்.

13- தொழுகை, பஜ்ரு, ஜும்ஆ, மற்றும் இரண்டு பெருநாள் தொழுகை போன்ற இரண்டு ரக்அத்களைக் கொண்டதாக இருந்தால், இரண்டாம் ஸுஜூதிலிருந்து எழுந்து வலது கால் பாதத்தை நட்டி, இடது காலை விரித்து அதன் மீது அமர வேண்டும். பின்பு, வலது கையை வலது பக்க தெடையின் மீது வைத்து, ஆள்காட்டி விரலைத் தவிர அனைத்து விரல்களையும் மடித்து, ஆள்காட்டி விரலை, தௌஹீதை சுட்டிக்காட்டுவது போன்று வைக்கவேண்டும். மேலும், வலது கையின் சின்ன விரலையும் அதற்கடுத்துள்ள விரலையும் மடித்து, கட்டை விரலை நடுவிரலுடன் இணைத்து வட்டம் போல் ஆக்கி, ஆள்காட்டி விரலைக் கொண்டு சுட்டிக் காட்டினால் அதுவும் நன்றாகும்; ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து இவ்விரு முறைகளும் உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்விரண்டு முறைகளையும் மாறி மாறி செய்வது சிறந்தது. மேலும், தனது இடது கையை இடது தொடையின் மீதும் முழங்காலின் மீதும் வைக்க வேண்டும், பின்னர் இந்த அமர்வில் அத்தஹிய்யாத்தை ஓத வேண்டும், அது:

(التَّحِيَّاتُ للهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلَامُ عَلَيْكَ أيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وبَرَكَاتُهُ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ الله الصَّالِحِينَ، أَشْهَدُ أنْ لَا إلَهَ إلَّا الله وأَشْهَدُ أنَّ مُحَمَّدًا عَبْدُهُ ورَسولُهُ).

அத்தஹிய்யாது லில்லாஹி வஸ்ஸலவாது வத்தய்யிபாது அஸ்ஸலாமு அலைக அய்யுஹன்னபிய்யு வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு, அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு". (சொல், செயல், பொருள் சார்ந்த எல்லாக் காணிக்கைகளும், வணக்கங்களும், பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்கள் மீது சாந்தியும், அல்லாஹ்வின் அருளும், அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக. எங்கள் மீதும், அல்லாஹ்வின் நல்லடியார்கள் அனைவர் மீதும் சாந்தி உண்டாகட்டும். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் உறுதியாக ந ம்புகிறேன். மேலும், முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதரும், அடியாருமாவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்). அதனைத் தொடர்ந்து பின்வருமாறு கூற வேண்டும் :

(اللَّهُمَّ صَلِّ علَى مُحَمَّدٍ وعلَى آلِ مُحَمَّدٍ، كما صَلَّيْتَ علَى إبْرَاهِيمَ وعلَى آلِ إبْرَاهِيمَ؛ إنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، وَبَارِكْ علَى مُحَمَّدٍ وعلَى آلِ مُحَمَّدٍ، كما بَارَكْتَ علَى إبْرَاهِيمَ وعلَى آلِ إبْرَاهِيمَ؛ إنَّكَ حَمِيدٌ مَجِيدٌ).

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதுன் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதும் மஜீத்". (பொருள் : இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்ததைப் போல் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும், முஹம்மது (ஸல்) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற் குரியவனாகவும் இருக்கிறாய். இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் நீ அபிவிருத்தி(பரகத்து) செய்தது போல் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தாருக்கும் அபிவிருத்தி(பரகத்து) செய்வாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற் குரியவனாகவும் இருக்கிறாய்).13

நான்கு விஷயங்களில் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடும் விதமாக இவ்வாறு கூறுவார்:

(اللَّهُمَّ إنِّي أَعُوذُ بِكَ مِن عَذَابِ جَهَنَّمَ، وَمِنْ عَذَابِ القَبْرِ، وَمِنْ فِتْنَةِ المَحْيَا وَالْمَمَاتِ، وَمِنْ شَرِّ فِتْنَةِ المَسِيحِ الدَّجَّالِ).

(அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக மின் அதாபி ஜஹன்னம, வமின் அதாபில் கப்ரி, வமின் பித்னதில் மஹ்யா வல்மமாதி, வமின்ஷர்ரி பித்னதில் மஸீஹித் தஜ்ஜால்).

(பொருள் : யா அல்லாஹ்! நரகவேதனை, கப்ருடைய வேதனை, வாழ்வு மற்றும் மரணத்தின் குழப்பங்கள், மஸீஹுத் தஜ்ஜாலின் தீங்கு ஆகிய அம்சங்களை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.)14

பிறகு இம்மை மறுமைக்குரிய நலன்களில் அவர் விரும்பியதைக் கேட்டுப் பிரார்த்திக்கலாம். அவர் தனது பெற்றோர்களுக்கோ அல்லது பிற முஸ்லிம்களுக்கோ பிரார்த்தனை செய்தால் அதுவும் அனுமதிக்கப்பட்டதே - அது கட்டாய தொழுகையாயினும் அல்லது நபிலான தொழுகையாயினும் சரியே - ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களுக்கு தஷஹ்ஹுதைக் கற்றுக் கொடுத்த போது, பின்வருமாறு பொதுவாகவே கூறினார்கள் :

(ثُمَّ ‌لِيَتَخَيَّرْ ‌مِنَ ‌الدُّعَاءِ بَعْدُ أَعْجَبَهُ إِلَيْهِ فَيَدْعُو).

(பின்பு தனக்கு விருப்பமான பிரார்த்தனையைத் தேர்ந்தெடுத்து துஆ கேட்கட்டும்).15 இன்னொரு அறிவிப்பில் பின்வருமாறு வந்துள்ளது:

(‌ثُمَّ ‌لِيَخْتَرْ ‌مِنْ ‌الْمَسْأَلَةِ ‌مَا ‌شَاءَ).

பின்னர் அவன் விரும்பிய தேவைகளைத் தேர்ந்தெடுக்கட்டும்.16

இது உலகிலும் மறுமை வாழ்விலும் மனிதனுக்குப் பயனளிக்கின்ற அனைத்தையும் உள்ளடக்குகின்றது. பிறகு வலது புறம் முகத்தைத் திருப்பி அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் என்று கூறுவார்; பிறகு இடது புறம் முகத்தைத் திருப்பி அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் என்று கூறுவார்.

14- தொழுகை மஃரிபு போன்று மூன்று ரக்அத்களாகவோ அல்லது ழுஹ்ர், அஸ்ரு, இஷா போன்று நான்கு ரக்அத்களாகவோ இருந்தால், முன்னர் கூறிய அத்தஹிய்யாதுடன் நபி (ஸல்) அவர்களுக்கு ஸலவாத்தும் கூற வேண்டும். பின் முழங்கால்களில் ஊன்றி எழுந்து, கைகளை தோள்கள் அல்லது காதுகளின் அளவிற்கு உயர்த்தி அல்லாஹு அக்பர் எனக் கூறி, அவற்றை (கைகளை) முன்னர் கூறியபடி நெஞ்சின் மீது வைக்க வேண்டும். பின் பாதிஹாவை மட்டும் ஓத வேண்டும். சில சமயங்களில் ழுஹரின் மூன்றாம் மற்றும் நான்காம் ரக்அத்களில் பாதிஹாவிற்கு மேலாக ஓதினால் அதில் பிழையில்லை. நபியவர்களைத் தொட்டும் அபூ ஸஈத் அல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் அதற்கான ஆதாரமாக உள்ளது. முதல் அத்தஹிய்யாத்தின் பின் நபி (ஸல்) அவர்களுக்கு ஸலவாத் கூறாமல் விட்டால் பிழையில்லை. ஏனெனில் அது விரும்பத்தக்கதே தவிர , கட்டாயமல்ல. பின்னர், மஃரிபின் மூன்றாம் ரக்அத்தின் பின்பும், ளுஹரு, அஸ்ரு, இஷா ஆகியவற்றின் நான்காம் ரக்அத்தின் பின்பும், இரு ரக்அத்களைக் கொண்ட தொழுகைகளில் ஓதியபடி அத்தஹிய்யாத் ஓதவேண்டும். பின் வலது புறமும் இடது புறமும் திரும்பி ஸலாம் கூறி தொழுகையை முடிக்க வேண்டும், பின்பு அஸ்தஃபிருல்லாஹ் என்று மூன்று தடவைகள் அல்லாஹ்விடம் மன்னிப்பு கோர வேண்டும். பின் இவ்வாறு கூற வேண்டும்:

(اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ، تَبَارَكْتَ يا ذَا الجَلَالِ وَالإِكْرَامِ).

'அல்லாஹும்ம அன்தஸ் ஸலாம், வமின்கஸ் ஸலாம், தபாரக்த யாதல் ஜலாலி வல்இக்ராம்'.

(பொருள் : யா அல்லாஹ்! நீ சாந்தியானவன். உன்னிடமிருந்தே சாந்தி வருகின்றது. மகத்துவமும், கண்ணியமும் கொண்டவனே! நீ மகிமை பெற்றுவிட்டாய்)17 இமாமாக அவர் இருந்தால், மக்களிடம் திரும்புவதற்கு முன், பின்வருமாறு கூற வேண்டும் :

َا إلَهَ إلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَه، لَهُ المُلْكُ، ولَهُ الحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيءٍ قَدِيرٌ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إلَّا بالله، اللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أعْطَيْتَ، ولَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلَا يَنْفَعُ ذَا الجَدِّ مِنْكَ الجَدُّ، لَا إلَهَ إلَّا الله، وَلَا نَعْبُدُ إلَّا إيَّاهُ، لَهُ النِّعْمَةُ وَلَهُ الفَضْلُ، وَلَهُ الثَّنَاءُ الحَسَنُ، لَا إلَهَ إلَّا الله مُخْلِصِينَ لَهُ الدِّينَ وَلَو كَرِهَ الكَافِرُونَ).

லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹூ லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர். லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ் அல்லாஹும்ம லா மானிஅ லிமா அஃதைத வாலா முஃதிய லிமா மனஃத வலா யன்பஉ தல் ஜத்தி மின்கல் ஜத்து. லா இலாஹ இல்லல்லாஹு வலா நஃபுது இல்லா இய்யாஹு லஹுன் நிஃமது வலஹுல் பழ்ளு வலஹுஸ் ஸநாஉல் ஹஸன். லா இலாஹ இல்லல்லாஹு முக்லிஸீன லஹுத் தீன வலவ் கரிஹல் காபிரூன். ((உண்மையான வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை, அவனுக்கு எந்த இணையாளரும் இல்லை, அனைத்து ஆட்சியதிகாரமும் அனைத்துப் புகழும் அவனுக்கே உரியன, அவன் அனைத்தின் மீதும் பேராற்றல் உடையவன், அல்லாஹ்வின் நாட்டமும் வல்லமையுமின்றி எதுவொன்றும் அசையவும் முடியாது, எதற்கும் எந்த சக்தியும் கிடையாது. யா அல்லாஹ்! நீ கொடுத்ததைத் தடுப்பவர் எவருமில்லை, நீ தடுத்ததைக் கொடுப்பவர் எவருமில்லை, (செல்வம், ஆட்சி அதிகாரம், உயர்ந்த பதவிகள் போன்ற) உலக செல்வாக்குப்பெற்றவரின் செல்வாக்கு (உனது தண்டனையிலிருந்து பாதுகாத்திட) எப்பயனையும் அளிக்காது. உண்மையான வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை, அவனைத் தவிர வேறு எவரையும் வணங்கமாட்டோம், அருட்கொடைகள் யாவும் அவனுக்கே உரியன, சிறப்பும் அவனுக்கே உரியது, அழகிய புகழும் பாராட்டும் அவனுக்கே உரியது, உண்மையான வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை, காபிர்கள் வெறுத்த போதிலும் மார்க்கத்தை அவனுக்கே தூய்மையாக செய்கிறோம்.))18

மேலும், அவர் முப்பத்துமூன்று தடவை சுப்ஹானல்லாஹ் என அல்லாஹ்வைத் துதிப்பார், அதேபோல் அதே அளவு அல்ஹம்துலில்லாஹ் என

அல்லாஹ்வைப் புகழ்வார். மேலும், அதே அளவு அல்லாஹு அக்பர் என அல்லாஹ்வைப் பெருமைப் படுத்துவார். நூறாக அதனை ஆக்கி விட, லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹூ லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர். (உண்மையான வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை, அவனுக்கு எந்த இணையாளரும் இல்லை, அனைத்து ஆட்சியதிகாரமும் அனைத்துப் புகழும் அவனுக்கே உரியன, அவன் அனைத்தின் மீதும் பேராற்றல் உடையவன், ) என்று கூறுவார். அதன் பிறகு, "ஆயத் அல்-குர்ஸி", "குல் ஹூவல்லாஹு அஹத்", "குல் அஊது பிரப் அல்-பலக்", "குல் அஊது பிரப்பின் நாஸ்" போன்றவற்றை ஒவ்வொரு தொழுகைக்கும் பிறகு கூறவேண்டும். பஜ்ர் மற்றும் மஃரிப் தொழுகைகளுக்குப் பின்னர் இந்த சூறாக்களை மூன்று முறை கூறுவது விரும்பத் தக்கது. ஏனெனில் ஹதீஸ்களில் அவ்வாறு வந்துள்ளது. இந்த அத்கார்கள் அனைத்தும் ஸுன்னாக்களே தவிர கட்டாயமானவை அல்ல.

முஸ்லிமான ஒவ்வொரு ஆணும் பெண்ணும் ளுஹர் தொழுகைக்கு முன் நான்கு ரகஅத்களையும், பின் இரண்டு ரகஅத்களையும், மஃரிப் தொழுகைக்கு பின் இரண்டு ரகஅத்களையும், இஷா தொழுகைக்கு பின் இரண்டு ரகஅத்களையும், பஜ்ர் தொழுகைக்கு முன் இரண்டு ரகஅத்களையும் தொழுவது சுன்னத் ஆகும். மொத்தம் 12 ரகஅத்கள் ஆகும். இவை ராதிபான ஸுன்னத் தொழுகைகள் என அழைக்கப் படுகின்றன; ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஊரில் இருக்கும் போது இவற்றை எப்போதும் பேணி தொழுது வந்தார்கள். பிரயாணத்தில், பஜ்ரின் ஸுன்னா, வித்ர் ஆகியவற்றைத் தவிர மற்றதை விடுவார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அவற்றை வீட்டிலும், பிரயாணத்திலும் விடாமல் தொழுவார்கள். மேலும், இந்த ஸுன்னாக்களும் வித்ரும் வீட்டில் தொழப்படுவதே சிறந்தது. ஆனால், மஸ்ஜிதில் தொழுதாலும் பிழையில்லை; ஏனெனில், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள் :

َفْضَلُ صَلَاةِ المَرْءِ في بَيْتِهِ، إلَّا الصَّلَاةَ المَكْتُوبَةَ).

“கடமையான தொழுகையைத் தவிர, ஒருவரின் சிறந்த தொழுகை அவரது வீட்டில் தொழப்படுபவையே.”19

இந்த ரக்அத்துக்களைப் பேணித் தொழுதல் சுவர்கம் நுழைவதற்கான காரணிகளில் ஒன்றாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(مَنْ صَلَّى اثْنَتَيْ عَشْرَةَ رَكْعَةً فِي يَومٍ وَلَيْلَةٍ، بُنِيَ لَه بِهِنَّ بَيْتٌ فِي الجَنَّةِ).

'யார் தினமும் பர்ழ் அல்லாத சுன்னத்தான தொழுகைகள் (12) பன்னிரண்டு ரக்அத்துக்கள் தொழுதுவருகின்றாரோ, அவனுக்கு சுவனத்தில் ஒரு வீட்டை அல்லாஹ் அமைப்பான்'.20

அஸர் தொழுகைக்கு முன்னர் நான்கு ரக்அத்களையும், மஃரிப் தொழுகைக்கு முன்னர் இரண்டு ரக்அத்களையும், இஷா தொழுகைக்கு முன்னர் இரண்டு ரக்அத்களையும் தொழுதால் அதுவும் நன்றாகும்; ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதனைப் பற்றிக் கூறியுள்ளார்கள். ழுஹருக்கு முன்னரும் பின்னரும் நான்கு ரக்அத்களையும் தொழுதால் அதுவும் நன்றாகும்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

(مَنْ ‌حَافَظَ ‌عَلَى ‌أَرْبَعِ ‌رَكَعَاتٍ ‌قَبْلَ ‌الظُّهْرِ، وَأَرْبَعٍ بَعْدَهَا حَرَّمَهُ اللَّهُ عَلَى النَّارِ).

“ழுஹருக்கு முன்னர் நான்கு ரக்அத்களையும், பின்னர் நான்கு ரக்அத்களையும் யார் பேணித் தொழுதுவருகின்றாரோ, அவரை அல்லாஹ் நரகின் மீது ஹராமாக்கி விடுவான்.”21 அதன் அர்த்தம், ராதிபாவான ஸுன்னத்துக்கு மேலாக, ழுஹருக்குப் பின்னர் இரண்டு ரக்அத்துக்கள் சேர்க்கப்படுவதே; ஏனெனில் ராதிபான ஸுன்னத்தாக அதற்கு முன் நான்கு ரக்அத்துக்களும், பின்னர் இரண்டு ரக்அத்துக்கள் உள்ளன. எனவே, பின்னர் இரண்டு ரக்அத்துக்கள் சேர்க்கப்பட்டால், உம்மு ஹபீபா (ரழி) அவர்களின் ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் பெறலாம்.

எல்லா விடயங்களிலும் நல்லதை தெரிவு செய்து ஈடேற்றத்தை அடைந்து கொள்ள, உதவியாளனாய் அல்லாஹ்வே உள்ளான், நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது குடும்பத்தார், தோழர்கள் மற்றும் நல்ல முறையில் மறுமை நாள்வரை அவர்களை பின்பற்றுவோர் மீதும் அல்லாஹ்வின் அருள் என்றென்றும் உண்டாவதாக.

 

 

***

 

ta395v2.1 - 04/08/2026


(ஆதாரம் : முஸ்லிம் 224).

(ஆதாரம் : புஹாரி 5782).

ஆதாரம் : புஹாரி 744, முஸ்லிம் 598).

(ஆதாரம் : முஸ்லிம் 399).

(ஆதாரம் : புஹாரி 756).

(ஆதாரம் : புஹாரி 817, முஸ்லிம் 484).

(ஆதாரம் : புஹாரி 711, முஸ்லிம் 598).

(ஆதாரம் : முஸ்லிம் 477).

(ஆதாரம் : முஸ்லிம் 479).

(ஆதாரம் : புஹாரி 788, முஸ்லிம் 493).

(ஆதாரம் : திர்மிதி 284, அபூதாவுத் 850, இப்னுமாஜா 898).

(ஆதாரம் : புஹாரி 797, முஸ்லிம் 402).

(ஆதாரம் : புஹாரி ஹதீஸ் எண் 1311, முஸ்லிம் ஹதீஸ் எண் 588).

(ஆதாரம் : நஸாஈ: 1298)

(ஆதாரம் : முஸ்லிம் 402)

(ஆதாரம் : முஸ்லிம் 591).

(ஆதாரம் : முஸ்லிம் 402)

(ஆதாரம் : புஹாரி 6860).

(ஆதாரம் : முஸ்லிம் 728).

(ஆதாரம் : அஹ்மத் 25547, திர்மிதி 393, அபூதாவுத் 1077).

(ஆதாரம் : புஹாரி 605).