PHPWord

 

 

رِسَالَةٌ فِي الدِّمَاءِ الطَّبِيعِيَّةِ لِلنِّسَاءِ

 

பெண்கள் சுத்தம் தொடர்பான ஒரு கையேடு

 

بِقَلَمِ فَضِيلَةِ الشَّيْخِ العَلَّامَةِ

مُحَمَّدِ بْنِ صَالِحٍ العُثَيْمِينِ

غَفَرَ اللَّهُ لَهُ وَلِوَالِدَيْهِ وَلِلمُسْلِمِينَ

 

ஆக்கம் : பேரறிஞர் அஷ்ஷைக்

முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்)

அல்லாஹ் அவருடையவும், அவருடைய பெற்றோர், அனைத்து முஸ்லிம்களுடயைவும் பாவங்களை மன்னிப்பானாக!

 

بِسْمِ اللهِ الرَّحمَنِ الرَّحِيمِ

ெண்கள் சுத்தம் தொடர்பான ஒரு கையேடு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஆரம்பிக்கிறேன்)

புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே, அவனைப் போற்றி, அவனிடமே உதவியும் தேடுகிறோம், அவனிடமே பாவமன்னிப்புக்கோரி மீளுகிறோம், எமது உள்ளங்களின் தீங்குகளிருந்தும், செயல்களின் தீங்குகளிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்பை தேடுகிறோம். யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுகிறானோ அவரை வழிகெடுப்போன் யாருமில்லை. யாரை அல்லாஹ் வழிதவறச் செய்து விட்டானோ அவருக்கு நேர்வழி காட்டுவோன் யாரும் இல்லை. மேலும் அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை, அவன் தனித்தவன், அவனுக்கு எந்ந இணையாளனும் இல்லை என்றும் சான்று பகர்கின்றேன். மேலும், முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனது அடியாரும் தூதருமாவார் என்றும் சான்று பகர்கின்றேன். மேலும் இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களின் மேலான குடும்பத்தவர்கள். கண்ணியம் நிறைந்த தோழர்கள் மறுமைவரையில் அவர்களை உரிய முறையில் பின்பற்றி வாழ்வோர் மீதும் அல்லாஹ் ஸலாத்தையும் ஸலாமையும் பொழிவானாக.

பெண்களைப் பொறுத்தவரையில், அவர்களுக்கு குறிப்பிட்ட நாட்கள் வெளிவரும் மாதவிடாய், இஸ்திஹாழாஹ் (தொடர் உதிரப் போக்கு) நிஃபாஸ் (பிரசவத்தின் பின் வெளிவரும் இரத்தம்) என மூன்று விதமான உதிரப்போக்குகள் இருக்கின்றன. முக்கிய விடயங்களில் ஒன்றான இவை குறித்து தெளிவைப் பெற்றுக்கொள்வதுடன் இதன் சட்டதிட்டங்களை அறிந்துகொள்வதும், இவை குறித்த அறிஞர்களின் கூற்றுக்களில் சரியானவற்றை பிழையானவற்றிலிருந்து வேறு படுத்திக்கொள்வதும் மிக அத்தியாவசிய ஒன்றாக இருக்கிறது. அறிஞர்களின் கூற்றுகளை முன்னுரிமைப்படுத்துவதும் முன்னுரிமைப் படுத்தாது ஏற்றுக்கொள்ளாதிருப்பதும் அல்குர்ஆனினதும், அஸ்ஸுன்னாஹ்வினதும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டே அமைய வேண்டும். இதற்கு பின்வரும் காரணங்களை குறிப்பிட முடியும்.

ஒன்று : அடியார்கள் வணக்கமாகமாகக் கொள்ளும் அல்லாஹ்வின் கட்டளைகள் மற்றும் சட்டதிட்டங்கள் அனைத்தும் அவ்விரண்டு அடிப்படை மூலாதாரங்களின் மீதே கட்டியெழுப்பப்பட்டுள்ளன.

இரண்டாவது : குர்ஆன் சுன்னாவை சார்ந்திருப்பதில் ஒருவகையான அமைதியும், பூரிப்பும், ஆறுதலும், மன நிம்மதியும், நிறைவும் ஏற்படுவதனை உணர முடியும்.

மூன்றாவது : அல்குர்ஆன் மற்றும் அஸ்ஸுன்னாஹ் தவிர்ந்தவை அடிப்படை ஆதாரங்களாக அமையாது அவை துணை சான்றாதாரமாக மாத்திரமே அமையும்.

ஏனெனில் அல் குர்ஆன் அஸ்ஸுன்னா தவிர்ந்த எதிலும் ஆதாரம் இல்லை. அதே போன்று, சரியான கூற்றின் படி குர்ஆனுக்கும் ஸுன்னாவுக்கும் முரண்படாத வகையிலும் மற்றொரு ஸஹாபியின் கூற்றுக்கு முரணாகாத முறையிலும் கூறப்பட்ட ஸஹாபாக்களிலுள்ள அறிஞர்களின் கூற்றுக்களும் துணை ஆதாரமாக அமையும். அக்கூற்று குர்ஆன் ஸுன்னாவுக்கு மாற்றமாக அமைந்தால் குர்ஆன் ஸுன்னாவை எடுத்து நடப்பது கடமையாகும். அதே வேளை,மற்றொரு ஸஹாபியால் முரண்பட்ட கூற்றொன்று இருக்குமாயின், (அப்பொழுது அல் குர்ஆனுக்கும் அஸ்ஸுன்னாஹ்வுக்கும் மிக நெருங்கிய ஆதாரங்களைக் கொண்டு) உறுதிப்படுத்தப்பட்ட கூற்றை ஆராய்ந்து முன்னுரிமைப்படுத்த வேண்டும். இவ்வாறு கருத்து முரண்படும் போது நடந்து கொள்ள வேண்டிய முறையை அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான் :

﴿...فَإِن تَنَٰزَعۡتُمۡ فِي شَيۡءٖ فَرُدُّوهُ إِلَى ٱللَّهِ وَٱلرَّسُولِ إِن كُنتُمۡ تُؤۡمِنُونَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِۚ ذَٰلِكَ خَيۡرٞ وَأَحۡسَنُ تَأۡوِيلًا﴾

உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும். (ஸூரத்துன் நிஸா : 59)

இது பெண்கள் சுத்தம் தொடர்பான ஷரீஆ சட்டங்கள் அடங்கிய ஒரு சிறு கையேடாகும். இது பின்வரும் தலைப்புகளை உள்ளடக்கியுள்ளது.

முதல் அத்தியாயம்: மாதவிடாயின் பொருளும் அதன் மதிநுட்பமும்.

இரண்டாம் அத்தியாயம்: மாதவிடாயின் காலம் மற்றும் அதன் கால அளவு.

மூன்றாம் பிரிவு: மாதவிடாயால் ஏற்படும் அசாதாரமாண சூழல்கள்.

நான்காம் பிரிவு: மாதவிடாய் தொடர்பான சட்டங்கள்

ஐந்தாம் பிரிவு : தொடர் உதிரப்போக்கு (இஸ்திஹாழா) தொடர்பான சட்டங்கள்

ஆறாம் பிரிவு : நிஃபாஸ் (பேறுகால உதிரப்போக்கு)  தொடர்பான சட்டங்கள்

ஏழாம் பிரிவு : மாதவிடாய் வராது தடுக்கின்ற, அதனை வரவழைக்கின்ற, கருவுறாது தடுக்கக்கூடிய அல்லது கருக்கலைப்பை ஏற்படுத்தக் கூடிய பொருட்களை பயன்படுத்தல்

மாதவிடாய் என்பதன் கருத்தும் அதன் நுட்பமும்.

அறபு மொழியில் மாதவிடாயை ஹைழ் என்றழைப்பர். அதன் மொழிக்கருத்து வடிந்தோடுதல், கொட்டுதல் என்பதாகும்.

இஸ்லாமிய ஷரீஆ பரிபாஷையில் 'ஹைழ்' என்பது ஒரு பூப்படைந்த பெண்களிடமிருந்து மாதந்தோரும் சுழற்சி முறையில் இயற்கையாக வெளிப்படும் இரத்தத்தை குறிக்கின்றது. எனவே. இயற்கையாக வெளிப்படும் இந்த இரத்தப் போக்கானது ஏதாவதொரு நோய் அல்லது காயம், கருச்சிதைவு, பிரசவம், போன்ற இரத்தப் போக்குடன் இணைத்து நோக்குதல் கூடாது. பெண்களுக்கு ஏற்படும் இந்த மாதவிடாய் அவர்களுடைய உடல் நிலை, வாழும் சூழல், தட்ப வெப்பநிலை ஆகியவற்றைப் பொறுத்து வேறுபடும். ஆகவே பெண்கள் இந்தவிடயத்தில் தங்களுக்கிடையில் தெளிவாக வேறுபட்டு நிற்கின்றனர்.

இந்த இயற்கை செயன்முறையானது அல்லாஹ்வின் ஆழமான ஞானத்தின் வெளிப்பாடாகும். இதில் மிகப்பெரும் மர்மம் உள்ளடங்கியுள்ளது

அதாவது ஒரு தாய் கர்ப்பமடைந்ததும் அவளின் கருப்பையில் உள்ள கருக்கட்டிய சினைமுட்டைக்கு (சின்னஞ்சிறு உயிருக்கு) தாயின் வயிற்றுக்கு வெளியில் உள்ளவரைப் போன்று ஊட்டச்சத்துள்ள உணவைப் பெற்றுக்கொள்ள முடியாது. அது மாத்திரமின்றி அந்த உயிருடன் மிகக் கருணை கொண்டோருக்குக் கூட ஒருவேளை சத்துள்ள உணவை ஊட்டிட முடியாது. இந்த நிலையில், வல்லவனான அல்லாஹ் மிகவும் சிறப்பான இரத்த ஓட்ட முறையொன்றை (பெண்ணுள்) அமைத்துள்ளான். அந்த முறைக்கமைய உருவாகும் சத்துள்ள உணவை தொப்புல் கொடி மூலம் கருவறையிலுள்ள உயிருக்குக் கிடைக்கச் செய்கின்றான். படைப்பாளர்களில் சிறந்தோனான அல்லாஹ் மிகவும் உயர்ந்தவனாவான்.

இதுவே ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்படுவதன் இரகசியமாகும். ஒரு பெண் கருத்தரித்துவிடும் போது அவளுக்கு மாதவிடாய் நின்று விடுகிறது. இதன் போது அவள் மிக அரிதாகவே இரத்தப் போக்குக்கு ஆளாகிறாள். இவ்வாறுதான் பாலூட்டும் தாய்க்கும் பாலூட்டும் ஆரம்பக்கட்டத்தில் குறைவாகவே மாதவிடாய் ஏற்படுகிறது.

மாதவிடாய்க் காலமும் தவணையும்

இத்தலைப்பானது இரு பகுதிகளைக் கொண்டுள்ளது.

முதலாவது பகுதி :பூப்பெய்தல் வயது தொடர்ப்பானது.

இரண்டாம் பகுதி : மாதவிடாய் காலம் தொடர்பானது.

முதலாம் பகுதி: ஒரு பெண்ணுக்கு பன்னிரண்டு வயதிற்கும் ஐம்பது வயதிற்கும் இடைப்பட்ட காலத்தில் மாதவிடாய் உண்டாகும். ஆயினும், அவளது உடல் நிலை, வாழும் சூழலுக்கேற்ப வெப்பநிலையை பொறுத்து குறிப்பிடப்பட்ட வயதான பன்னிரண்டுக்கு முன் அல்லது பின் மாதவிடாய் ஏற்படலாம்.

மாதவிடாய் ஏற்படுவதற்கு வயதெல்லை உண்டா என்பதிலும், குறித்த மாதவிடாய் கால எல்லைக்கு முன்னோ பின்னோ வெளியாகும் இரத்தம் தொடர்பாகவும், அது அவளது மாதவிடாய் இரத்தமா அல்லது வேறேதும் இரத்தமா? என்பதிலும் மார்க்க அறிஞர்கள்; கருத்துமுரண்பாடு கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக முரண்பட்ட கருத்துக்களை அறிஞர்கள் கொண்டுள்ளனர். இச்சட்டப்பிரச்சினை தொடர்பான கருத்துமுரண்பாடுகளை குறிப்பிட்டதன் பின் இமாம் தாரிமி அவர்கள் : 'என்னைப் பொறுத்த வரையில் இவை அனைத்தும் பிழையானவை!' ஆகவே இந்த விவகராத்திற்கு அடிப்படை ஒன்று உண்டு. ஒருவரின் வயதை கருத்தில் கொள்ளாது அவருக்கு இரத்தம் வெளியாகியுள்ளதா? இல்லையா? என்பதைத்தான் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இவ்வாறு வெளியான இரத்தத்தை மாதவிடாய் இரத்தமாகக் கருதுவது அவசியமானதாகும் என கூறுகிறார்கள். அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவனாவான்!'1

இமாம் அத் தாரிமீ அவர்கள் கூறியதே மிகவும் சரியானது. இதுவே செய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்களின் கருத்துமாகும். எனவே, ஒரு பெண் தன்னிடம் இரத்தம் வெளிவரக் கண்டால் அதை மாதவிடாய் என்றே கருத வேண்டும். அப்பொழுது அவள் ஒன்பது வயதை விடக் குறைவானவளாகவோ,அல்லது ஐம்பது வயதை விடக் கூடுதலானவளாகவோ இருக்கின்றாள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டியதில்லை.2 ஏனெனில், ஒரு பெண்; தனது மாதவிலக்கை காண்பதைப்பொருத்தே அல்லாஹ்வும் அவனின் தூதரும் அதற்கான சட்டதிட்டங்களை தொடர்படுத்தியுள்ளார்கள். அன்றி, மாதவிலக்கு ஆரம்பமாவதற்கும் முடிவதற்கும் அல்குர்ஆனிலும் நபியவர்களின் வழிகாட்டலிலும் குறித்த வயதெல்லை குறிப்பிடப்பட வில்லை. உண்மையில் இது தொடர்பான வயதெல்லையை வகுக்க அல்குர்ஆனினதும் அஸ்ஸுன்னாவினதும் ஆதாரம் அவசியமாகின்றது. ஆனால், அத்தகைய ஆதாரங்கள் எதுவுமே அதில் காண முடியவில்லை.

இரண்டாம் பகுதி : மாதவிடாய்க்கான கால எல்லை (மாதவிடாய்க்கான நாட்களை கணக்கிடுதல்)

ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் உண்டாகிவிட்டால் அது எவ்வளவு நாட்கள் நீடிக்கும் என்பதில் மார்க்க அறிஞர்களுக்கு மத்தியில் ஆறு அல்லது ஏழுக்கும் மேற்பட்ட கருத்து நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. சில அறிஞர்கள்; 'மாதவிடாய் நீடிக்கும் குறைந்த பட்ச நாட்கள் அதி கூடிய நாட்கள் என்ற வரையறை எதுவும் கிடையாது!' என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளுனர் என இமாம் இப்னு ல் முன்ஸிர் ரஹிமஹுல்லாஹ் குறிப்பிடுகிறார்கள்.3

நூலாசிரியர் அவர்கள் குறிப்பிடுகையில், 'இது ஏற்கனவே குறிப்பிட்ட அத்தாரிமி அவர்களின் கூற்றை ஒத்ததாகும், இதுவே ஷைகுல் இஸ்லாம்;இப்னு தைமிய்யா அவர்களின் தெரிவு என்பதுடன், இதுவே சரியான கருத்துமாகும். ஏனெனில், இது அல் குர்ஆனினதும் அஸ்ஸுன்னாவினதும், ஒப்பீட்டு ரீதியான ஆதாரங்களைக் கொண்டும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இதற்கான ஆதாரங்கள் பின்வருமாறு :

ஆதாரம் :1

அல்லாஹ் கூறுகிறான் :

﴿وَيَسۡـَٔلُونَكَ عَنِ ٱلۡمَحِيضِۖ قُلۡ هُوَ أَذٗى فَٱعۡتَزِلُواْ ٱلنِّسَآءَ فِي ٱلۡمَحِيضِ وَلَا تَقۡرَبُوهُنَّ حَتَّىٰ يَطۡهُرۡنَ...﴾

மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்; நீர் கூறும்: “அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள்; அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களுடன் உடலுறவு வைக்காதீர்கள். (ஸூரத்துல் பகரா : 222) இங்கு அல்லாஹ், ஒரு பெண் மாதவிடாய் இருக்கும் நிலையில் உடலுறவு கொள்ள முடியாது என்ற தடைக்கான கால நிர்ணயத்தை அவளது சுத்தத்தை வைத்தே தீர்மானித்துள்ளான்.அவ்வாறின்றி, ஒரு நாள், மூன்று நாட்கள், பதினைந்து நாட்கள் என கால எல்லையொன்றை குறிப்பிடவில்லையென்பதை இங்கு அறிய முடிகிறது. எனவே மாதவிடாய் (சுத்தமற்ற நிலை) எப்போது ஏற்படுகிறதோ அப்போது அதற்குரிய சட்டங்கள் அவளின் மீது விதியாகிறது. எப்போது அவள் மாதவிடாயிலிருந்து சுத்தமான நிலையை அடைகிறாளோ அப்போது மாதவிடாய்க்குரிய சட்டங்கள் நீங்கி விடுகிறது. இதன் பிரகாரம் மாதவிடாய் நாட்கள் எத்தனை என வரையறுத்து குறிப்பிட முடியாது என்பதே இதன் சாராம்சமாகும்.

ஆதாரம்-2 ஸஹீஹ் முஸ்லிமில் பதிவான பின்வரும் ஹதீஸ் இதற்கு ஆதாரமாக உள்ளது. உம்ராவுக்கு நிய்யத் வைத்த நிலையில் ஆஇஷா (ரழி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டது. அப்போது நபி ﷺ அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் :

«افْعَلِي مَا يَفْعَلُ الْحَاجُّ، غَيْرَ أَنْ لَا تَطُوفِي بِالْبَيْتِ حَتَّى تَطْهُرِي». قَالَتْ: فَلَمَّا كَانَ يَوْمُ النَّحْرِ طَهُرَتْ، فَأَفَاضَتْ.

ஹாஜிகள் செய்யும் அனைத்தையும் நீயும் செய்; ஆனால், நீ தூய்மையாகும் வரை கஃபாவை வலம் வராதே (தவாஃப் செய்யாதே)" என்று கூறினார்கள். பிறகு, குர்பானி நாளன்று (துல்ஹஜ் 10) நான் தூய்மையடைந்து, தவாபையும் செய்தேன். ஹதீஸ்4.

ஸஹீஹுல் புஹாரி மற்றும் ஸஹீஹ் முஸ்லிமில் பதிவானதன்படி, நபி ﷺ ஆஇஷா (ரழி) அவர்களுக்கு கூறினார்கள்:

«انتَظِرِي فَإِذَا طَهُرْتِ فَاخْرُجِي إِلَى التَّنْعِيمِ».

«காத்திருப்பீராக, நீர் சுத்தமானதும் தன்ஈமிற்கு செல்வீராக»5, நபிﷺ அவர்கள் மாதவிடாய் பெண்களின் அதிலிருந்து சுத்தம் அடைவதையே (மாதவிடாயால்) தடுக்கப்பட்ட வணக்கங்கள் செய்ய அனுமதியாக ஆக்கினார்க்ள். மாறாக, ஒரு குறிப்பிட்ட காலத்தை எல்லையாக ஆக்கவில்லை. எனவே, இதன் மூலம் மார்க்க சட்டம் மாதவிடாய் தொடக்கம் மற்றும் அதன் முடிவை வைத்தே அமையப்பெற்றிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது.

ஆதாரம் 3 - பெண்களின் மாதவிடாய் ஆரம்பமாகும் வயது, முடியும் வயது பற்றி சில சட்ட அறிஞர்களால் குறிப்பிடப்பட்ட அளவுகோள்களும் விளக்கங்களும் அல்லாஹ்வின் அருள்மறை அல்குர்ஆனிலோ, நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வழிமுறை அஸ்ஸுன்னாவிலோ காணப்படவில்லை. இது குறித்த தெளிவு அத்தியாவசியத் தேவை என்றிருந்தும் கூட அது குறித்து அல்குர்ஆனோ அஸ்ஸுன்னாவோ எதனையும் குறிப்பிடவில்லை. இந்த அளவுகோள்களை நன்கு விளங்குவதும். அல்லாஹ்வுக்கான வணக்க வழிபாடுகளில் அத்தியாவசியமாகவும் இருப்பின், அல்லாஹ்வும் அவன் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களும் இது பற்றி ஒவ்வொருவரும் மிகவும் தெளிவான முறையில் அறிந்து கொள்ளும் விதமாக தெளிவு படுத்தியிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. அது மாத்திரமின்றி மாதவிடாயின் விளைவாக ஏற்படுகின்ற சட்டங்கள் தொழுகை, நோன்பு, விவாகம், விவாகரத்து, வாரிசுச் சொத்து போன்றவைகளில் ஆதிக்கம் செலுத்துவது அதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. அவ்வாறிருந்தும் அதற்கான கால வரையறைகளை அல் குர்ஆனோ அஸ்ஸுன்னாவோ நிர்ணயிக்கவில்லை. ஆனால் இதற்கு மாற்றமாக தொழுகையைப் பொருத்தவரை அல்லாஹ்வும் அவனின் தூதரும் அதன் எண்ணிக்கைகளையும்,அதன் நேரங்களையும், ருகூஉ ஸுஜூதுகளின் நிலைகளையும் தெளிவுபடுத்தியுள்ளார்கள். அதே போன்று, ஸகாத் குறித்தும் ஸகாத் கொடுக்க வேண்டிய செல்வம், அதன் அளவுகள் மற்றும் கொடுக்கப்படுவதற்கு தகுதியானவர்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்கள். அவ்வாரே நோன்பு பற்றியும் அதற்குரிய காலம் மற்றும் ஒரு நாளில் நோன்பு பிடிப்பதற்கான நேர அளவு குறித்தும் ஹஜ்ஜோடு தொடர்பான விடயங்கள் பற்றியும் தெளிவு படுத்தியுள்ளார்கள். உண்ணுதல் மற்றும் பருகுதலின் ஒழுக்கங்கள், உறங்கும் போது பேணவேண்டிய ஒழுக்கங்கள், மனைவியுடன் உடலுறவு கொள்ளுதல், அமர்தல், வீட்டிற்குள் நுழைதல், வெளியே செல்லுதல், சுயதேவைகளை கழித்தல், சிறுநீர் கழித்தபின் கற்களைப் பயன்படுத்தி சுத்தம் செய்தல் (இஸ்திஜ்மார்) மேலும் அதில் எத்தனைக் கற்கள் பயன்படுத்துதல் போன்ற வாழ்வின் எல்லா நிலைகளிலும் செய்ய வேண்டிய சிறிய விடயத்திலிருந்து பெரிய விடயம் வரை எல்லாவற்றையும் அல்லாஹ் தன் மார்க்கத்தின் மூலம் பூரணமாகத் தெளிவுப்படுத்தி தனது விசுவாசிகளுக்கு அருள் புரிந்துள்ளான்.

இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு விவரிக்கிறான் :

﴿...وَنَزَّلۡنَا عَلَيۡكَ ٱلۡكِتَٰبَ تِبۡيَٰنٗا لِّكُلِّ شَيۡءٖ...﴾

மேலும், இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும் உம்மீது நாம் இறக்கி வைத்திருக்கிறோம். (ஸூரத்துன் நஹ்ல் : 89) மேலும் அல்லாஹ் கூறுகிறான் :

﴿...مَا كَانَ حَدِيثًا يُفْتَرَى وَلَـكِن تَصْدِيقَ الَّذِي بَيْنَ يَدَيْهِ وَتَفْصِيلَ كُلَّ شَيْءٍ...﴾

இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாக இருக்கவில்லை, மாறாக இதற்கு முன் உள்ள (வேதத்)தையும் இது உண்மையாக்கி வைக்கிறது. ஒவ்வொரு விஷயத்தையும் இது விவரித்துக் காட்டுவதாகவும், நம்பிக்கை கொண்ட சமூகத்தவருக்கு நேர்வழியாகவும், ரஹ்மத்தாகவும் இருக்கிறது. (ஸூரத்து யூஸுஃப்: 111).

இருந்தும், மாதவிடாய் தொடர்பான விபரங்களும் அளவுகோள்களும் பற்றி அல்லாஹவின் அருள் மறையிலோ, நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய ஸுன்னாவிலோ எதுவும் கூறப்படவில்லை. ஆகையால், ஒருவர் அவற்றைக் கருத்தில் கொள்ளத் தேவையில்லை என்பது தெளிவாகின்றது. உண்மையில்,மாதவிடாயைப் பொருத்தவரையில் முன்னரே குறிப்பிட்டதற்கமைவாக மாதவிடாய் இரத்தம் வெளிவந்துள்ளது அல்லது வெளிவரவில்லை என்பதைப் பொறுத்தே அதன் சட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட சட்டப்பிரச்சினை தொடர்பாக அல்லாஹ்வின் அருள் மறையிலோ, நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய ஸுன்னாவிலோ எதுவும் கூறப்படவில்லையாயின் அதனைக் கருத்தில் கொள்ளத் தேவையில்லை என்ற விதியானது மாதவிடாய் காலத்தை தீர்மானிப்பது சம்பந்தப்பட்ட சட்டப்பிரச்சினையிலும் ஏனைய சட்டப்பிரச்சினைகளிலும் ஆதாரமாக கொள்வதற்கு முடியும். அதாவது, அல்லாஹ்வின் அருள்மறை அல் குர்ஆன், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் ஸுன்னாஹ், ஆகிய அடிப்படைமூலாதாரங்கள் மற்றும் (இஜ்மாஉ) அறிஞர்களின் ஏகோபித்த தெளிவான கருத்து, அல்லது தெளிவான கியாஸ் ஆகிய துணை மூலாதாரங்களின் அடிப்படையில் தான் ஒரு சட்டத்தை உறுதிப்படுத்த முடியுமே தவிர வேறு அளவுகோள்களின் மூலம் எதனையும் தீர்மானிக்க முடியாது. செய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் தமது சட்டவரைவொன்றில் இவ்வாறு கூறுகின்றார்: மாதவிடாயைப் பொறுத்த வரை,அது தொடர்பாக அல்லாஹ் பல சட்டதிட்டங்களை தனது வேத நூலிலும் நபி வழிமுறையாகிய ஸுன்னாவினூடாகவும் விவரித்துள்ளான்;. ஆயினும், இந்த விடயம் தொடர்பாக முஸ்லிம் சமுதாயம் மிக அவசியமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாய நிலையில் இருந்தும் கூட, அது பற்றிய குறுகிய கால, நீண்ட கால வரையரைகளைக் குறிப்பிடவில்லை. மேலும், ஒரு பெண் இரண்டு மாதவிடாய்களுக்கு இடையில் எவ்வளவு காலம் சுத்தமாய் இருப்பாள் என வரையறுக்கவுமில்லை. மொழிரீதியாகக் கூட ஹைழ் (மாதவிடாய்) என்பது ஒரு அளவுகோளையோ வேரேதும் விளக்கத்தையோ குறித்துக் காட்டவுமில்லை. ஆகவே எவர் மாதவிடாய் தொடர்பாக கால வரையரையை அல்லது அளவுகோளொன்றை நிர்ணயிக்கிறாறோ அவர் அல்குர் ஆனுக்கும் நபிவழிமுறையான ஸுன்னாவுக்கும் மாறு செய்தவராவார்.6

ஆதராம் 4 -கியாஸ்: (இது ஒரு துணை மூலாதாரம் : அல்குர்ஆன், ஸுன்னா, இஜ்மாஉ ஆகிய சட்ட மூலாதாரங்கள் மூலம் அல்லது அவற்றுள் ஒன்று மூலம் ஏற்கனவே பெறப்பட்ட ஒரு தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு புதிய பிரச்சினையை ஒப்பு நோக்கிக் கண்டறிகின்ற முடிவாகும்)

அல்லாஹ் மாதவிடாயை தொல்லை மற்றும் அசௌகரிய மிக்கதும் என விவரித்துள்ளான். எனவேதான், அது ஒரு பெண்ணுக்கு அது உண்டாகி இருப்பது கண்டறியப்பட்டால் அது சுத்தமற்ற நிலையாகும். இதில் - இரண்டாம் முதலாம் நாட்களுக்கிடையில், நான்காம் மூன்றாம் நாட்களுக்கிடையில், பதினாராம் பதினைந்தாம் நாட்களுக்கிடையில், பதினெட்டாம் பதினேழாம் நாட்களுக்கிடையில் என எத்தகைய வேறுபாடும் வித்தியாசமுமில்லை. எனவே மாதவிடாயும்; அதன் விளைவாக ஏற்படும் தொந்தரவும் இரண்டு நாட்களிலும் ஒரே மாதிரியாக உள்ளது. இங்கு குறித்த காரணமும் சமமாகவே காணப்படுகிறது. இவ்வாறு இரண்டு நாட்களும் தூய்மையற்ற நிலையும் தொந்தரவும் சமமாக இருக்கும் போது சட்டரீதியில் வேறுபடுத்துவது எப்படி சரியாகும்? எனவே, மாதவிடாய் தொடர்பான நடைமுறை காரணிகளைக் கொண்டு இரண்டு நாட்களுக்கும் உரியதான சட்ட முடிவு இருக்கும் பொழுது ஒரு நாளுக்கு ஒன்று என்ற வகையில் அமையப்பெறும் வெவ்வேறான சட்ட முடிவுகள் தெளிவான கியாஸுக்கு எதிரானதாகுமல்லவா? அல்லது காரணங்கள் இரண்டு நாட்களுக்கும் சமமாக இருப்பது ஒரே மாதிரியான சட்ட முடிவுகளை பெற்றுத்தருவது என்ற அடிப்படையில் சரியான கியாஸாக ஆகமாட்டாதா?

ஆதாரம் 5 : மாதவிடாய்க்கான குறிப்பிட்ட கால எல்லையை வகுத்துக் கூறுவோரின் உடன்பாடின்மையும் தடுமாற்றாலும் அவற்றிற்குத் தெளிவான ஆதாரமில்லை என்பதை எடுத்துக்கொட்டுகிறது. இவை இஜ்திஹாத் மூலம் கூறப்பட்ட தீர்ப்புகளாகும். இவைகள் பிழையாகவோ சரியாகவோ இருக்க முடியும். இவற்றுள் ஒரு கருத்தை விட மற்றொரு கருத்துக்கு முன்னுரிமையளிக்கப்படவேண்டியதுமில்லை. ஆகவே இத்தகைய பிரச்சினைக்குரிய விடயங்களில் அல் குர்ஆனையும் ஸுன்னாஹ்வையும் நோக்கி மீள்வதே எமது கடமையாகும்.

எனவே, மாதவிடாய்க்கு குறுகிய அல்லது நீண்ட கால வரையறை எதுவும் இல்லை என்பதும் அதுவே மிகச்சரியான கூற்று என்பதும் தெளிவாகுமானால் காயம் அல்லது அது போன்ற எவ்விதக்காரணமுமின்றி பெண்கள் இயற்கையாக இரத்தம் வெளிவரக் கண்டால் அதை மாதவிடாய் என்றே கருத வேண்டும். இது தொடர்பாகக் கால வரையறைகள் சார்ந்த அளவுகோள்களையோ வயதெல்லையையோ கருத்திற் கொள்ளக் கூடாது. ஆனால், ஒரு பெண்ணுக்கு இரத்தம் வெளிவருவது நிற்கவில்லையாயின்; அப்பெண் 'இஸ்திஹாழா' நிலையில் இருப்பதாகக் கருதப்படுவாள். (இஸ்திஹாழா என்பது தொடர் உதிரப்போக்கு என்பதாகும்.) இஸ்திஹாழா குறித்த விவரமும் சட்டங்களும் விரிவாக இன்ஷாஅல்லாஹ் பின்னர் குறிப்பிடப்படும்.

ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : இஸ்திஹாழா (தொடர் உதிரப்போக்கு) என்பதை காட்டக் கூடிய அறிகுறிகள் தென்படும்வரையில், கருப்பையிலிருந்து வெளிவரும் அனைத்தும் அடிப்படையில் மாதவிடாயாகவே கருதப்படும்.'7

அவர்கள் மேலும் குறிப்பிடுகையில்,

(ஒரு பெண்ணிடமிருந்து) வெளிவரும் இரத்தம் ஒரு காயத்திலிருந்தோ அல்லது ஓர் இரத்த நாலத்திலிருந்தோ வெளிவரவில்லையென்றால் அதனை மாதவிடாய் இரத்தம் என்றே கருத வேண்டும்.8

இக்கூற்றே ஆதாரத்தின் அடிப்படையில் ஒரு உறுதியான கருத்தாகவும், மாதவிடாய்க்கு குறிப்பிட்ட கால எல்லையை வரையரை செய்தோரின் கருத்தை விட விளங்கி, கருத்தில் கொண்டு, இலகுவாக செயல்படுத்த கூடியதாகவுமுள்ளது. மேலும், இக்கருத்தே இஸ்லாத்தின் உயிரோட்டத்திற்கும் அடிப்படைக்கும் இலகு தன்மைக்கும் இணக்கமாக அமைவதால் ஏற்றுக் கொள்வதற்கு பொருத்தமாக உள்ளது. இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்:

﴿...وَمَا جَعَلَ عَلَيۡكُمۡ فِي ٱلدِّينِ مِنۡ حَرَجٖ...﴾

இந்த மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை (ஸூரத்துல் ஹஜ் : 78), நபி ﷺ அவர்கள் கூறினார்கள் :

«إِنَّ الدِّينَ يُسْرٌ وَلَنْ يُشَادَّ الدِّينَ أَحَدٌ إِلَّا غَلَبَهُ فَسَدِّدُوا وَقَارِبُوا وَأَبْشِرُوا».

“நிச்சயமாக மார்க்கம் எளிதானது. இம்மார்க்கத்தில் எவரேனும் (தம் சக்திக்கு மீறி) கடுமை காட்டினால், அவரை அது மிகைத்து விடும். ஆகவே, நீங்கள் நேர்மையானதையே கடைப்பிடியுங்கள்; (பூரணத்துவத்தை) நெருங்கிச் செல்லுங்கள்; நற்செய்தி பெறுங்கள். ஆதாரம் : புஹாரி9

நபி ﷺ அவர்களின் குணங்களில் ஒன்று:

«أَنَّهُ مَا خُيِّرَ بَيْنَ أَمْرَيْنِ إِلَّا اخْتَارَ أَيْسَرَهُمَا مَا لَمْ يَكُنْ إِثْمًا».

«அவர்களுக்கு இரண்டு விடயங்களில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், அதுவொரு பாவமான காரியம் இல்லாதவரை, அவ்விரண்டில் மிக இலகுவானதையே தேர்வு செய்வார்கள்».10

கருத்தரித்த பெண்ணின் மாதவிடாய் :

பெரும்பாலான பெண்கள் கருத்தரித்துவிட்டால் அவர்களது மாதவிடாய் நின்றுவிடுகின்றது. இது குறித்து இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் : 'பெண்கள் தாங்கள் கருத்தரித்துள்ளனர் என்பதை மாதவிடாய் நின்று விடுவதன் மூலமே அறிந்து கொள்கின்றனர்' என்று கூறுகிறார்கள்.11.

ஒரு கருவுற்ற பெண் பிரசவத்திற்கு குறுகிய காலத்திற்கு முன்னர் அதாவது இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர் பிரசவ வேதனையுடன் இரத்தம் வெளிவரக் கண்டால் அதுவே 'நிஃபாஸ்' ஆகும். சில போது, அவள் தனது பிரசவத்திற்கு அதிக நாட்களுக்கு முன்போ அல்லது சில நாட்களுக்கு முன்போ எத்தகைய பிரசவ வேதனையுமின்றி இரத்தம் வெளிவரக் கண்டால், அது 'நிஃபாஸ்' ஆக கருதப்படமாட்டாது. எனினும்; பிரசவ வேதனையின்றி இரத்தம் வெளிவந்தால் இதனை மாதவிடாய் எனக் கருதி மாதவிடாய்க்கான எல்லாச் சட்டங்களையும் பிரயோகிப்பதா? அல்லது 'தமுன் பாஸித்' (மாதவிடாய் மற்றும் பிரசவத்தின் பின் வரும் இரத்தம் அல்லாது) எனக்கொண்டு மாதவிடாய்க்குரிய சட்டங்களை பிரயோகிக்காது இருப்பதா? என்பதில்

அறிஞர்களிடையே கருத்து முரண்பாடு காணப்படுகிறது. வழக்கமான மாதவிடாய் அமைப்பில் அது இருந்தால் அது மாதவிடாய் என்பதே சரியான கருத்தாகும். காரணம் ஒரு பெண்ணிடமிருந்து வெளிப்படும் இரத்தமானது மாதவிடாய் சார்ந்தது என்பதை வேறுபடுத்தக் கூடிய ஏதாவது காரணம் காணப்படவில்லையாயின் அடிப்படையில் அது மாதவிடாய் இரத்தமாகவே கொள்ளப்படும். கர்ப்பிணியான பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்படாது எனச் சுட்டிக்காட்டும் எந்த ஆதாரமும் அல்குர்ஆனிலோ நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய ஸுன்னாவிலோ இல்லை.

இதுவே இமாம் மாலிக் மற்றும் இமாம் ஷாபிஈ ஆகியோர்களது நிலைப்பாடாகும். இதுவே ஷைஹுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்களதும் தெரிவாகும். அல்இக்தியாராத் அல் பிக்ஹிய்யா லிஷைஹில் இஸ்லாம் இப்னு தைமியா லதா தலாமீதிஹி என்ற நூலில் அதன் ஆசிரியர் பின்வருமாறு கூறுகிறார்: இதே கருத்தை இமாம் அஹ்மத் அவர்களும் கொண்டிருந்தார் என்றும் இமாம் பைஹகி அவர்கள் குறிப்பிடுகிறார்.1213

இதன்படி, பின்வரும் இரண்டு முக்கிய விடயங்களில் தவிர, கருவுற்ற ஒரு பெண்ணின் மாதவிடாய்க்கு, சாதாரண மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணின் எல்லாச் சட்டங்களும் பொருத்தமானதாக அமையும்.

முதலாவது விடயம்: விவாகரத்து, கருவுறாத ஒரு பெண்ணை மாதவிடாயின் போது 'தலாக் விவாகரத்து செய்வது ஹராமாக்கப்பட்டுள்ளது. ஆனால் அவள் கருவுற்றவளாக இருந்தால் தலாக் சொல்வதில் எவ்விதத் தடையும் கிடையாது. ஏனெனில் கருவுறாத ஒரு பெண்ணை மாதவிடாயின் போது 'தலாக் விவாகரத்து செய்வது பின்வரும் அல்லாஹு தஆலாவின் கூற்றுக்கு முரணாணதாகும்

﴿...فَطَلِّقُوهُنَّ لِعِدَّتِهِنَّ...﴾

அவர்களின் “இத்தா”வைக் கணக்கிட ஏற்ற வகையில் (மாதவிடாய் அல்லாத காலங்களில்) தலாக் கூறுங்கள். (ஸூரத்துத் தலாக் : 1), கருவுற்ற ஒரு பெண்ணை மாதவிடாயின் போது தலாக் விவாகரத்து செய்வது அல்லாஹ்வின் மேற்படி கூற்றுக்கு முரணாணது அல்ல. ஏனெனில் யார் கருவுற்ற ஒரு பெண்ணை விவாகரத்து செய்கிறானோ அவளுக்கு மாதவிடாய் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவளின் விவாவரத்து காலத்தில்தான் விவாவகரத்து செய்துள்ளான். ஏனெனில் அவளது இத்தா கருவுற்றுள்ள காலத்தின் மூலமே கணிப்பிடப்படுகிறது. இதனடிப்iயில் ஒரு பெண்ணை உடலுறவின் பின் விவாகரத்துசெய்வதில் எவ்விதத் தடையும் கிடையாது.

இரண்டாவது விடயம் : கருவுற்ற ஒரு பெண்ணின் மாதவிடாய் காலமானது ஏனையோரின் மாதவிடாய் சுழற்சி போன்று முடிவடையமாட்டாது. அதாவது கருவுற்ற பெண்ணின் இத்தா அவளுடைய பிரசவத்துடன் முடிவடைகின்றது. அக்கால எல்லையில் அவளுக்கு மாதவிடாய் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இதுவே சட்டமாகும். இது குறித்து அல்லாஹு தஆலா பின்வருமாறு குறிப்பிடுகிறான். அல்லாஹ் கூறுகிறான் :

﴿...وَأُوْلَاتُ الأَحْمَالِ أَجَلُهُنَّ أَن يَضَعْنَ حَمْلَهُنَّ...﴾

தவிர கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய (“இத்தா”வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும் (ஸூரத்துத் தலாக் : 4).

 

மூன்றாம் பகுதி : மாதவிடாய் மாற்றங்கள்/ வித்தியாசங்கள்

மாதவிடாயில் அவ்வப்போது பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவதை அவதானிக்க முடியும். அது பல வகைப்படும்

முதலாவது வகை: மாதவிடாய் ஏற்படும் நாட்கள் கூடுதல் அல்லது குறைதல்.; உதாரணமாக ஒரு பெண்ணின் வழமையான மாதவிடாய் நாட்கள் சாதாரணமாக ஆறு நாட்கள் வரை இருக்கும். பின் அந்த கால எல்லை ஏழாவது நாள் வரை நீடிக்கும். அல்லது ஏழு நாட்கள் வரை நீடிக்க வேண்டிய கால எல்லை ஆறாவது நாளுடன் முடிவடையும்.

இரண்டாவது வகை : குறித்த காலத்திற்கு முன் வருதல் அல்லது தாமதித்து வருதல். உதாரணமாக: வழமையாக ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஒவ்வொரு மாதத்தின் இறுதியில் ஏற்படும். ஆனாலும் அதை மாதத்தின் ஆரம்பத்தில் காண்கிறாள். அல்லது அதற்கு நேரெதிராக அவளின் வழமையான மாதவிடாய் மாத ஆரம்பத்தில் இருக்க அதனை மாத இறுதியில் வரக் காண்கிறாள்.

இந்த இரண்டு நிலை தொடர்பான இறை மார்க்கத்தின் முடிவு என்ன என்பதில் அறிஞர்கள் கருத்து முரண்படுகின்றனர். இது பற்றிய மிகவும் சரியான நிலைப்பாடு என்னவெனில், அவள் எப்பொழுது இரத்தத்தைக் காண்கின்றாளோ அப்பொழுது அதை மாதவிடாய் எனக்கருத வேண்டும்; எப்பொழுது இரத்தம் நின்று சுத்தமடைகின்றாளோ அப்பொழுது தூய்மை அடைந்து விட்டதாகக் கருத வேண்டும். இதில் நாட்கள் கூடிக் குறைதல் என்பதையோ குறித்த காலத்திற்கு முன் வருதல் அல்லது தாமதித்து வருதல் என்பதையோ கருத்திற் கொள்ளத் தேவையில்லை. முன் சென்ற பகுதியில் குறிப்பிட்டது போன்று மாதவிடாய் பற்றிய சட்டங்கள் யாவும் 'மாதவிடாய் காணப்படுவது' என்பதுடன் சம்பந்தப்பட்டுள்ளது.

இது இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்களின் நிலைப்பாடாகவும் ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்களின் தெரிவாகவும் காணப்படுகிறது. முஃனி என்ற நூலின் ஆசிரியரும் (இமாம் இப்னு குதாமா அல் மக்திஸி) இந்தக் கருத்தைப் பலப்படுத்தி ஆதரவளித்துள்ளார். அவர்கள் இவ்வாறு தனது கருத்தை குறிப்பிடுகிறார்கள்: மேலே மத்ஹபில் குறிப்பிடப்பட்டது போன்று வழமை கருத்திற் கொள்ளப்படவேண்டும் என்றிருந்தால் அதனை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெளிவுபடுத்தியிருப்பார்கள், தெளிவுபடுத்த வேண்டிய ஒரு விடயத்தை தெளிவுபடுத்தாது பிற்படுத்துவது நபியவர்களுக்கு அனுமதிக்கப்படாத விடயமாகும்.1415 தெளிவு படுத்த வேண்டிய ஒரு விடயத்தை கால தாமதம் செய்வது கூடாது. காரணம் மாதவிடாய் தொடர்பான விடயங்கள் குறித்த விளக்கம் எல்லா நேரத்திலும் அவர்களின் மனைவியருக்கும் தேவைப்பட்டது. அவ்வாறிருந்தும் அதனை தெளிவு படுத்தாது அவர்கள் இருக்கவில்லை. மாதவிடாய் தொடர்பான விவகராத்தில் காலவரையரை தொடர்பாக தொடர் உதிரப்போக்குள்ள பெண்ணுக்கான வரையரையே நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளது.16

மூன்றாவது வகை : காயங்களிலிருந்து வடியும் சீழ் போன்றுள்ள மஞ்சள் நிறமுடைய அல்லது மஞ்சள் மற்றும் கறுப்பு நிறங்களுக்கு இடையிலான கலங்களான நிலையில் மாதவிடாய் காலத்தின் போது இவ்வாறு ஏதும் வெளிப்படுமானால் அல்லது அதற்கு அடுத்தாற் போன்று சுத்த நிலையை அடைவதற்கு முன்போ இது நிகழுமானால் இதை மாதவிடாய் என்று கருதுவதோடு மாதவிடாய் தொடர்பான அனைத்து சட்டங்களையும் பின்பற்ற வேண்டும். சிலவேளை, சுத்தம் அடைந்ததன் பின் இத்தகையது ஏதும் நிகழுமாயின், அந்நிலையை மாதவிடாய் எனக் கருதலாகாது. இதனை உம்மு அதிய்யா (ரழி) அவர்களின் கூற்றிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது. சுத்தமானதன் பின் வெளிவரும் மஞ்சள் மற்றும் பழுப்பு நிறங்களை நாம் மாதவிடாயாகக் கருதுவதில்லை. இந்த ஹதீஸை, அபூ தாவூத் (ரஹ்) அவர்கள் நம்பகமான அறிவிப்பாளர் தொடரின் மூலம் பதிவு செய்துள்ளார்கள்17, புஹாரியில் ' சுத்தம் அடைந்ததன் பின்' என்ற கூற்று இன்றி அறிவிக்கப்பட்டுள்ளது . என்றாலும் இமாம் புஹாரி அவர்கள் மாதவிடாய் அல்லாத நாட்களில் வெளிவரும் மஞ்சல் மற்றும் பழுப்பு நிறங்கள் பற்றிய பாடம் என குறித்த ஹதீஸிற்கு தலைப்பிட்டுள்ளார்கள்18

புஹாரி விரிவுரையான பத்ஹுல் பாரியில் இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார் கள் : 'நீங்கள் வெள்ளைப்படுதலை காணும் வரையில் என்ற இதற்கு முன்னர் குறிப்பிடப்பட்ட ஆஇஷா ரழியின் ஹதீஸையும் இந்தத் தலைப்பில் குறிப்பிடப்பட்ட உம்மு அதிய்யா அவர்களின் ஹதீஸையும் இணைத்து இங்கு மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் ஹதீஸ் மாதவிடாய் நாட்களில் மஞ்சல் மற்றும் பழுப்பு நிறத்தைக் கண்டால் ஒரு பெண் மாதவிடாய் சட்டங்களைப் பின்பற்ற வேண்டும் அது அல்லாத நாட்களில் அதாவது சுத்தத்தின் பின் இவற்றைக் கண்டால் அவை மாதவிடாயாகக் கருதப்பட மாட்டாது என்ற உம்மு அதிய்யா அவர்களின் ஹதீஸை பின்பற்ற வேண்டும்.19

இங்கு ஆஇஷா (ரழி) அவர்களின் ஹதீஸ் மேற்குறிப்பிட்ட தலைப்பிற்கு முன் உறுதிமிக்க முஅல்லகான ஹதீஸாக இமாம் புஹாரி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்20.

சில பெண்கள் (மாதவிடாயின் அடையாளங்கள் ஏதும் எஞ்சியுள்ளதா அதாவது சுத்தம் அடைந்துவிட்டோமா இல்லையா என்பதை அறிந்து கொள்ள) மாதவிடாயின் மஞ்சள் நிறத்தில் அடையாளம் உள்ள தமது பருத்தி துணியை ஆஇஷா (ரழி) அவர்களுக்கு அனுப்பி வைப்பார்கள். (அப்பொழுது) ஆயிஷா (ரழி) அவர்கள் கூறுவார்கள்: “(கசிவு இல்லாத) வெண்மையான பருத்தி துணியை காணும் வரை நீங்கள் அவசரப்பட வேண்டாம்.” (21)21

'அல்குஸ்ஸத்துல் பைழா' என்பது மாதவிடாய் நின்றுவிடும்போது கருப்பையிலிருந்து வெளிவரும் வெள்ளை திரவத்தைக் குறிக்கும்.

நான்காவது வகை: மாதவிடாய் ஒழுங்கின்மை (மாதவிடாய் விட்டு விட்டு வருதல்) அதாவது ஒருநாள் இரத்தம் வெளிவருவதையும்;(மாதவிடாய் நிலை)

மறுநாள் அது நின்று சுத்தமாகிய நிலையையும் காண்கிறாள் இது தொடர்பாக இரண்டு நிலைகளை அவதானிக்க முடிகிறது.

முதலாவது நிலை :இத்தகைய ஒழுங்கின்மை எல்லா நேரங்களிலும் இடம் பெருமாயின், அப்போது வெளிவரும் இரத்தம் இஸ்திஹாழாவாகும் (தொடர் உதிரப்போக்கு). இவ்வேளை இஸ்திஹாழாஹ்வுக்குரிய எல்லா சட்டங்களும் பேணப்படும்.

இரண்டாவது நிலை : இவ்வொழுங்கின்மை தொடராக அன்றி சிற்சில நேரங்களில் இடம் பெரும். அவள் சுத்தமாக இருக்கும் நேரத்தில் காணப்படும். எனவே, இது உண்மையிலேயே மாதவிடாய்க்கான சட்டங்கள் பொருந்தாத சுத்தமுடைய காலமா? அல்லது அது மாதவிடாய்க் காலத்தின் ஒரு பகுதியா என அறிஞர்கள் கருத்து முரண்படுகின்றனர்.

இமாம் ஷாஃபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்களின் இரு கூற்றுகளில் மிகச் சரியான கூற்றின் படி அது மாதவிடாயாகும். இவ்வேளை மாதவிடாய்க்கான சட்டங்களை அப்பெண் பின்பற்ற வேண்டும். இது ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் இமாம் ஸாஹிபுல் பாஇக் இப்னு காழி அல் ஜபல் போன்றோரினது தெரிவாகவும். இமாம் அபூ ஹனீபா ரஹிமஹுல்லாஹ், அவர்களது மத்ஹபின் கருத்தும் இதுவே.222324 ஏனெனில் 'குஸ்ஸதுல் பைழா' வெள்ளை நீர் காணப்படவில்லை. அது 'துஹ்ர்' சுத்த நிலையாக இருந்திருந்தால் அதற்கு முன்னரும் பின்னரும் மாதவிடாயாக இருந்திருக்க வேண்டும் அவ்வாறு யாரும் குறிப்பிடமாட்டார். அவ்வாறெனில் இத்தா ஐந்து நாட்களுக்குள் முடிந்துவிடும். அதனை தூய்மையானாதாக கொள்வதற்கு முற்பட்டால் ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கும் இடையில் குளிக்க வேண்டும். அது பெறும் சிரமத்தையும் கஷ்டத்தையும் ஏற்படுத்தும். சிரமத்தை நீக்குவதே இஸ்லாமிய ஷரீஆவின் நோக்கமாகும். புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது.

மேலும் ஹன்பலி மத்ஹபின் மிகப்பிரபல்யமான கருத்தாவது, இரத்தம் வருவது மாதவிடாயாகும். அது நின்று விட்டால் அது தூய்மையான நிலையாகும். மாதவிடாய் காலமும் தூய்மையடையும் காலமும் நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதியை கடந்து விட்டால், அதை இஸ்திஹாழா ' தொடர் உதிரப்போக்கு வந்த நாட்களாக கருதவேண்டும்.25

(ஹன்பலி மத்ஹபின் பிக்ஹ் நூலான) அல் முஃனியின் ஆசிரியர் இவ்வாறு கூறுகின்றார் : ஒரு நாளை விடவும் குறைவாக இரத்தம் நிற்குமாயின் அவள் தெளிவாக மாதவிடாய் நின்றதை கண்டாலன்றி அதைத் 'தஹாரா' (சுத்தம்) உடைய நிலை எனக் கருத முடியாது. இது குறித்து நிபாஸ் பற்றிய இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்களின் அறிவிப்பை மேலே குறிப்பிட்டிருந்தோம். இதுவே சரியான கருத்தாகும். அதே போன்று குறிப்பிட்ட நேரத்தில் வருவதும் பின்னர் நின்று விடுவதும் என்ற நிலைக்கு அடிக்கடி குளித்து சுத்தமாகிக் கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்துவதில் சிரமம் இருக்கிறது, மார்க்கத்தில் இச்சிரமம் இல்லை.

﴿...وَمَا جَعَلَ عَلَيۡكُمۡ فِي ٱلدِّينِ مِنۡ حَرَجٖ...﴾

இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை (ஸூரத்துல் ஹஜ் : 78), தொடர்ந்து அவர் குறிப்பிடுகையில், ஒரு பெண் தனது வழமையான மாதவிடாயின் இறுதியில் மாதவிடாய் நின்றுவிடுதல் அல்லது வெள்ளை நீரைக் காணுதல் என்ற இரு காரணங்களும் அல்லாது ஒரு நாளைக்கு குறைவான காலப்பகுதியில் இரத்தம் நின்று விடுவதை அவதானித்தால்; அது துஹ்ர் சுத்த நிலையை அடைந்ததாக கருதப்படமாட்டாது.26

'முஃனி' என்ற நூல் ஆசிரியரின் இக்கூற்று, மேற்காணும் இரண்டு கருத்துக்களுக்கும் இடைப்பட்ட நடுநிலையான கருத்தாகும். மிகச்சரியானதை அல்லாஹ்வே நன்கறிந்வன்! எனக் கூறுகிறார்.

ஐந்தாவது வகை : இரத்தம் வரண்டு காணப்படுதல். அதாவது ஈரமான திரவம் வெளியேறுவதைக் காண்கின்றாள். இவ்வாறு மாதவிடாயின் போது நிகழுமாயின் அல்லது சுத்த நிலையை அடைய முன் அதனுடன் தொடர்புற்று இருக்குமாயின் அப்பொழுது அது மாதவிடாயாகக் கருதப்படும். சுத்தத்தின் பின்னர் அது நிகழுமாயின் அப்பொழுது அது மாதவிடாயாக கருதப்படமாட்டாது. ஏனெனில் இதன் உச்சகட்ட நிலமை, மஞ்சல் மற்றும் பழுப்பு நிறமாக வெளிவரும் திரவம் போன்றதே. எனவே, அதற்குறிய சட்டமே இதற்குமாகும்.

நான்காம் பகுதி: மாதவிடாய் தொடர்பான சட்டங்கள்

மாதவிடாய் தொடர்பாக இருபதற்கு மேற்பட்ட சட்டங்கள் காணப்படுகின்றன. இங்கு மிக அவசியமானவற்றை மட்டும் குறிப்பிடுவது போதுமானது எனக் கருதுகின்றோம். அவற்றுள் பின்வருவன முக்கியமானவை :

முதலாவது: (அஸ்ஸலாத்) தொழுகை

பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது பர்ளான மற்றும் ஸுன்னத்தான தொழுகைகளை தொழுவது தடை செய்யப்பட்டுள்ளது (ஹராமாகும்). அவ்வாறு நிறைவேற்றினால் அது நிறைவேற மாட்டாது. அதே போன்று குறிப்பிட்ட ஒரு தொழுகைக்குரிய நேரத்தில், அத்தொழுகையின் பூரணமான ஒரு ரக்அத்தைப் நிறைவேற்றுவதற்குரிய நேரத்தை அடைந்து கொண்டால் மாத்திரம் அத்தொழுகையை நிறைவேற்றுவது கட்டாயமாகும். அது ஆரம்ப நேரமாகவோ அல்லது இருதி நேரமாகவோ இருக்கலாம். இதை விரிவாகக் காண்பதற்கு கீழ்க் காணும் உதாரணங்களை பார்ப்போம்.

ஆரம்ப நேரம் என்பதற்கான உதாரணம் : ஒரு பெண்ணுக்கு சூரியன் மறைந்த பின்னர் மாதவிடாய் ஏற்படுகிறது . அவ்வேளையில் மஃரிப் தொழுகையின் ஒரு ரக்அத்தை நிறைவேற்றும் அளவு காலம் அவள் சுத்தமாக இருந்திருந்தாள், அதற்காக அவள் பூரண சுத்தம் அடைந்த பின் அந்த மஃரிப் தொழுகையை நிறைவேற்றுவது அவசியமாகும். ஏனெனில் அவள் மாதவிடாய் ஏற்படுவதற்கு முன் ஒரு ரக்அத் தொழுவதற்கான கால அவகாசத்தை பெற்றுக்கொண்டாள்.

இறுதி நேரம் என்பதற்கான உதாரணம்: ஒரு பெண்ணுக்கு சூரியன் உதயமாகுமுன்னர் ஃபஜ்ர் தொழுகையின் ஒரு ரக்அத் தொழுவதற்குரிய நேரம் எஞ்சியிருக்கின்ற நிலையில் மாதவிடாய் நின்று விடுகின்றது. அவள் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்ட பின்னர் ஃபஜ்ர் தொழுகையைப் பூரணமாக நிறைவேற்றுவது அவசியமாகும். ஏனெனில் அவள் மாதவிடாய் ஏற்படுவதற்கு முன் ஒரு ரக்அத் தொழுவதற்கான கால அவகாசத்தை பெற்றுக்கொண்டாள்.

எனினும், அவளுக்கு தொழுகையின் ஒரு ரக்அத்தை நிறைவேற்றுவதற்குரிய காலம் -நேரம்- கிடைக்காதிருந்தால் அவள் மீது அத் தொழுகையை நிறைவேற்றுவது அவசியமில்லை. அதாவது மேலே குறிப்பிடப்பட்ட முதல் உதாரணத்தில் உள்ளதைப் போன்று சூரியன் மறைந்தன் பின் மற்றத் தொழுகைக்கான நேரம் நுழைவதற்கு ஒரு நொடிப்பொழுது இருந்தால் அல்லது இரண்டாவது உதாரணத்தில் உள்ளதைப் போன்று சூரியன் உதயத்திற்கு ஒரு நொடிப்பொழுது இருக்கும் நிலையில் அவள் சுத்தமடைந்தாள் அத்தொழுகைகளை நிறைவேற்றுவது அவசியமில்லை. இதற்கு ஆதாரமாக பின்வரும் ஹதீஸ் காணப்படுகிறது.

«مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الصَّلَاةِ فَقَدْ أَدْرَكَ الصَّلَاةَ».

யார் தொழுகையில் ஒரு ரக்அத்தையேனும் அடைந்து கொள்கிறாரோ அவர் அத்தொழுகையை அடைந்து கொண்டவராவார். இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக அறிவித்துள்ளனர்27. எனவே, ஒரு ரக்அத்தை விட குறைவான அளவை அடைந்தால் அவர் அத்தொழுகையை அடைந்தவராகக் கருதப்படமாட்டார் என்பது இந்த ஹதீதின் மூலம் விளங்கிக்கொள்ள முடிகின்றது.

சிலவேளை, ஒரு பெண் அஸர் தொழுகையின் ஒரு ரக்அத்தை அத்தொழுகைக்குரிய நேரத்தில் அடைந்து கொண்டாள் அப்பொழுது அவள் லுஹர் தொழுகையை அஸர் தொழுகையுடன் தொழுவது கட்டாயமாகுமா? அல்லது ஒரு பெண் இஷா தொழுகையின் ஒரு ரக்அத்தை அத் தொழுகைக்குரிய நேரத்தில் அடைந்து கொண்டாள் அப்பொழுது அவள் மஃரிப் தொழுகையை இஷா தொழுகையுடன் தொழுவது கட்டாயமாகுமா?

இதில் அறிஞர்கள் மத்தியில் கருத்து முரண்பாடு காணப்படுகிறது. இது தொடர்பான சரியான நிலைப்பாடு, அவள் எத்தொழுகையின் நேரத்தை அடைந்து கொண்டாளோ அதை மாத்திரமே நிறைவேற்ற வேண்டும். எனவே, அஸர் தொழுகையையும் இஷா தொழுகையையும் மாத்திரமே நிறைவேற்ற வேண்டும். இதற்கு பின்வரும் நபிமொழி ஆதாரமாக அமைந்துள்ளது. நபி ﷺ அவர்கள் கூறினார்கள் :

«مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الْعَصْرِ قَبْلَ أَنْ تَغْرُبَ الشَّمْسُ فَقَدْ أَدْرَكَ الْعَصْرَ».

யார் சூரியன் மறைவதற்கு முன் அஸர் தொழுகையின் ஒரு ரக்அத்தை அடைகிறாரோ, அவர் அஸர் தொழுகையை அடைந்து விட்டார். இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக அறிவித்துள்ளனர்28. இந்த ஹதீஸில் நபியவர்கள்; லுஹர் மற்றும் அஸர் தொழுகையை அடைந்து கொண்டார் எனக் குறிப்பிடவில்லை.

அதே போல் லுஹர் தொழுகை அவர் மீது கட்டாயம் எனவும் குறிப்பிடவில்லை. காரணம் "அடிப்படையில் ஒரு கரியத்தை செய்வதற்கான ஆதாரம் இல்லையென்றால் அப்பொருப்பிலிருந்து ஒருவர் விடுபடுகிறார்" என்பது சட்ட விதியாகும். இமாம் மாலிக், இமாம் அபூஹனிஃபா (ரஹிமஹுமல்லாஹ்) மத்ஹப் நிலைப்பாடும் இதுவே. இதனை (இவ்விருவரின் இந்நிலைப்பாட்டை) இமாம் நவவி அவர்கள் மஜ்மூஃ எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.29

தக்பீர்: அல்லாஹு அக்பர் (அல்லாஹ்வே மிகப் பெரியவன்),

தஸ்பீஹ்: சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் மிகத்தூய்மையானவன்),

தஹ்மீத்: அல்ஹம்துலில்லாஹ் (புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே), உணவருந்தும் போது பிஸ்மில்லாஹ் கூறுவது, ஹதீஸ் மற்றும் பிக்ஹ் நூல்களை வாசிப்பது, பிரார்த்தனை செய்வது, அதற்கு ஆமீன் கூறுவது, அல்குர்ஆனை செவிமடுப்பது போன்றன அவள் மீது தடுக்கப்பட்டதல்ல.

«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَّكِئُ فِي حِجْرِ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا وَهِيَ حَائِضٌ فَيَقْرَأُ الْقُرْآنَ».

'ஆஇஷா (ரழி) அவர்கள் மாதவிடாயாக இருக்கும் நிலையில் நபி ﷺ அவர்கள் அன்னாரின் மடிமீது சாய்ந்து கொண்டு அல் குர்ஆன் ஓதுபவர்களாக இருந்தார்கள்.30

அதே போன்று ஸஹீஹுல் புஹாரி, ஸஹீஹ் முஸ்லிமில் பின்வரும் ஹதீஸும் பதிவு செய்யப்பட்டுள்ளது. உம்மு அதிய்யா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள், தான் நபியவர்கள் கூறுவதை செவிமடுத்ததாக கூறுகிறார்கள் :

«يَخْرُجُ الْعَوَاتِقُ وَذَوَاتُ الْخُدُورِ وَالْحُيَّضُ -يَعْنِي: إِلَى صَلَاةِ الْعِيدَيْنِ- وَلْيَشْهَدْنَ الْخَيْرَ، وَدَعْوَةَ الْمُؤْمِنِينَ، وَيَعْتَزِلُ الْحُيَّضُ الْمُصَلَّى».

"திரைக்குப் பின்னால் இருக்கும் மணமாகாத இளம் கன்னி பெண்களும், நன்கு வளர்ந்த பெண்பிள்ளைகளும், மாதவிடாய் ஏற்பட்ட பெண்களும் இரு பெருநாட் தொழுகைக்கு வெளியே வந்து நற்காரியங்களில் பங்கெடுக்க வேண்டும். அத்துடன் இறை விசுவாசிகளின் பிராரத்தனைகளிலும் கலந்துகொள்ள வேண்டும். ஆனால், மாதவிடாய் உண்டான பெண்கள் முஸல்லாவை (தொழும் இடத்தை) விட்டு ஒதுங்கி இருக்க வேண்டும்."31

மாதவிடாய் உண்டான ஒரு பெண், தனது நாவால் ஓதாது நேரடியாகப் பார்த்தோ அல்லது உள்ளத்தால் சிந்தித்தோ (அமைதியாக) குர்ஆனை ஓதுவதற்கு அனுமதி உண்டு. இமாம் நவவி அவர்கள் ஷர்ஹுல் முஹத்தப் என்ற நூலில் மேற்குறிப்பிட்டது போன்று அல்குர்ஆனை ஓதுவது அனைவராலும் அனுமதிக்கப் பட்டது என்றும் நாவால் உச்சரித்து தெளிவாக சப்தமிட்டு ஒதுவதை பெரும்பாலான அறிஞர்கள் தடைசெய்துள்ளனர் என்றும் அது அனுமதிக்கப் படவில்லை என்றும் குறிப்பிடுகிறார்.32

நாவால் உச்சரித்து ஓதுவதை பெரும்பாலான அறிஞர்கள் தடைசெய்துள்ளனர், மேலும் அது அனுமதிக்கப்படவில்லை. எனினும், இமாம்களான புகாரி, இப்னு ஜரீர் அத்தபரீ, இப்னுல் முன்திர் (ரஹிமஹுமுல்லாஹ்) ஆகியோர் அதனை (வாயால் மொழிந்து ஓதுவதை) ஆகுமெனக்கூறியுள்ளனர்.333435

இமாம் மாலிக் மற்றும் இமாம் ஷாபிஈ தனது பழைய தீர்பிலும் இக்கருத்தை கொண்டுள்ளனர் என ஃபத்ஹுல் பாரியில் அறிவிக்கப்பட்டுள்ளது. 3637

இமாம் புஹாரி அவர்கள் இப்ராஹீம் அந்நஃகஈ அவர்களின் தகவலை முஅல்லகான செய்தியாக பதிவு செய்துள்ளார். அதில் 'அல்குர்ஆன் வசனங்களை ஒதுவதில் எவ்விதப் பிரச்சினையும் கிடையாது' என்ற கருத்தைக் குறிப்பிட்டுள்ளார்கள் (38).38

ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் தனது மர்கத்தீர்புகள் (அல் பதாவா) நூலில் பின்வருமாறு கூறுகிறார்கள்: 'அடிப்படையில் மாதவிடாய் ஏற்பட்ட ஒரு பெண் அல் குர்ஆன் ஓதுவதை தடைசெய்யும் எந்த நபிவழிகாட்டலையும் காணக்கிடைக்கவில்லை. ஏனெனில் நபியவர்களது பின்வரும் கூற்று :

«لَا تَقْرَأُ الحَائِضُ وَلَا الجُنُبُ شَيْئًا مِنَ الْقُرْآنِ».

''ஹாயிளும், ஜுனுபாளியும் குர்ஆனிலிருந்து எதையும் ஓதக்கூடாது''. (ஆதாரம் : 39)39 ஹதீஸ் கலை அறிஞர்களின் ஏகோபித்த கருத்தின்படி இது பலவீனமான ஹதீஸாகும்40.

உண்மையில், நபி ﷺ அவர்கள் காலத்து பெண்களுக்கும் மாதவிடாய் இருக்கவே செய்தது. தொழுகையைப் போன்று குர்ஆன் ஓதுவது தடை செய்யப்பட்டிருந்தால், நபி ﷺ அவர்கள் தமது சமூகத்திற்கு அதை நன்கு தெளிவு படுத்தியிருப்பார்கள். அவர்களது தூய மனைவியர் இதை அறிந்துவைத்து, மக்களுக்கு அறிவித்திருப்பார்கள். எனவே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதனை தடை செய்ததாக எவரும் அறிவிக்காத நிலையில், அதனை ஹராம் எனச்சொல்ல நமக்கு ஆகாது.41

என்றாலும் 'இந்த விடயம் (மாதவிடாய் காலத்தில் பெண்கள் குர்ஆன் ஓதுவது) தொடர்பாக அறிஞர்கள் மத்தியில் சர்ச்சை இருப்பதால் மாதவிடாய் உண்டான ஒரு பெண் அல் குர்ஆனை ஒப்புவித்து பாடம் நடாத்தும் ஆசிரியையாகவோ, ஒரு பரீட்சைக்குத் தமது பாடங்களைத் தயார் செய்பவளாகவோ இருக்கும் நிலை போன்ற தவிர்க்க முடியாத நிலைகளில் அன்றி மற்றைய நிலைகளில் குர்ஆனைத் தனது நாவினால் ஓதாமல் இருப்பதே மிகவும் ஏற்றமானதாகும்'

இரண்டாவது : (அஸ்ஸவ்ம்) நோன்பு நோற்றல் : மாதவிடாய் ஏற்பட்ட ஒரு பெண் பர்லான மற்றும் ஸுன்னத்தான, நோன்பு நோற்பதைவிட்டும் தடுக்கப்பட்டுள்ளாள். அவ்வாறு அவள் நோன்பு நோற்றாலும் அது நிறைவேறாது. ஆனால் விடுபட்ட நாட்களின் கட்டாய (பர்ழான) நோன்புகளை நோற்பது கடமையாகும், இதற்கு ஆதாரமாக ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் பின்வரும் ஹதீஸ் காணப்படுகிறது.

"كَانَ يُصِيبُنَا ذَلِكَ -تَعْنِي: الْحَيْضَ- فَنُؤْمَرُ بِقَضَاءِ الصَّوْمِ وَلَا نُؤْمَرُ بِقَضَاءِ الصَّلَاةِ".

எமக்கு மாதவிடாய் ஏற்படும், அப்பொழுது நாம் எமது நோன்புகளைப் கழாச் செய்யுமாறு ஏவப்பட்டோம். ஆனால், தொழுகையைப் கழாச்செய்ய ஏவப்படவில்லை. இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக அறிவித்துள்ளனர்42.

ஒரு பெண் நோன்பு நோற்றிருக்கும் நிலையில், சூரியன் மறைவதற்கு ஒரு நொடிப்பொழுது முன்னால் அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டாலும் அவளது நோன்பு வீணாகி விடும் (நிறைவேறாது) எனவே குறிப்பிட்ட நோன்பு பர்ழாக இருந்தால் அவள் சுத்தமான பின் அந்த நோன்பை மீண்டும் நோற்றாக – கழாச்செய்தாக - வேண்டும் அதே நேரம், சூரியன் மறைவதற்கு முன்னால் மாதவிடாயை உணர்கிறாள்; ஆனால் சூரியன் மறைந்த பின்னரே இரத்தம் வெளிவருகிறது என்றால் இந்நிலையில், இது தொடர்பான மிகச் சரியான முடிவு என்னவெனில் அவளது நோன்பு பூரணமாகிவிடுவதுடன் அது வீணாகி விடமாட்டாது. ஏனெனில், பெண்ணின் உடலினுள்ளே இருக்கும் இரத்த்திற்கு எவ்வித சட்டங்களும் கிடையாது.

ஒரு பெண்ணுக்கு கனவில் ஸ்கலிதமானால் குளிப்பது கடமையா?' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள்:

قال: «نَعَمْ إِذَا هِيَ رَأَتِ الْمَاءَ».

"ஆம், அவள் (அந்தத் திரவ) நீரைப் பார்த்தால் (குளிப்பது கடமை)" என்று பதிலளித்தார்கள்.43 சட்டமானது விந்து வெளியேறுவதை நிதர்சனமாகக் காண்பதைப் பொறுத்தே வகுக்கப்பட்டுள்ளதே தவிர, அது வெளியேறுவதாக உணர்வதை வைத்து அல்ல. அவ்வாறே, மாதவிடாயின் சட்டங்களும் அது வெளியேறுவதை நிதர்சனமாகக் காண்பதைப் பொறுத்தே உறுதிப்படுத்தப்படுகிறதே தவிர, அது வெளியேறுவதாக உணர்வதை வைத்து அல்ல.

ஒரு பெண்ணின் மாதவிடாய் காலம் (ஃபஜ்ர்) வைகறை உதயத்தின் பின்னரும் தொடர்ந்து இருந்து, வைகறை உதயமாகி ஒரு நொடிப்பொழுதில் அவள் சுத்தமாகி விட்டாலும் அவளது அன்றைய நோன்பு நிறைவேறாது.

அவள் ஃபஜ்ருக்கு முன் சுத்தமாகி நோன்பும் நோற்று, ஃபஜ்ர் பிந்தி பர்ழான கட்டாயக் குளிப்பைக் குளித்தாலும் அவளுடைய நோன்பு ஏற்கத்தக்கதாகும். ஜனாபத் ஏற்பட்ட ஒருவரின் நிலைமையை ஒத்ததாகவே இந்த நிலையும் காணப்படுகிறது ஆஇஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்:

"كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصْبِحُ جُنُبًا مِنْ جِمَاعٍ غَيْرِ احْتِلَامٍ ثُمَّ يَصُومُ فِي رَمَضَانَ".

அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கனவின் மூலமல்லாமல், தாம்பத்திய உறவின் காரணமாக ஜனாபத் நிலையில் காலைப் பொழுதை அடைவார்கள். பிறகு அந்நாளில் நோன்பு நோற்பார்கள் இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக அறிவித்துள்ளனர்44.

மூன்றாவது: தவாஃப் செய்தல்.

மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் பர்ழான மற்றும் சுன்னத்தான தவாஃபை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செய்தால் அது நிறைவேறாது. இது தவிர்ந்த ஹஜ்ஜுடன் தொடர்பான ஏனைய கடமைகளான ஸஈ செய்தல், அரபாவில் தரித்தல், முஸ்தலிபா மற்றும் மினாவில் இரவில் தங்குதல், ஜம்ராவில் கல்லெறிதல் போன்ற விடயங்களை செய்வது அவளுக்கு தடுக்கப்பட்டது அல்ல. ஆஇஷா (ரழி) அவர்களுக்கு ஹஜ்ஜின் போது மாதவிடாய் ஏற்பட்டது. அப்பொழுது அவர்களுக்கு நபி ﷺ அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:

«افْعَلِي مَا يَفْعَلُ الْحَاجُّ غَيْرَ أَلَّا تَطُوفِي بِالْبَيْتِ حَتَّى تَطْهُرِي».

ஹாஜிகள் செய்யும் கிரியைகளை செய், ஆனால் சுத்தமாகும் வரையில் தவாஃப் மட்டும் செய்ய வேண்டாம்"45.

இதன் அடிப்படையில் ஒரு பெண் சுத்தமாக இருக்கும் நிலையில் தவாப் செய்து பின் தவாப் முடிந்ததும் மாதவிடாய் ஏற்பட்டால் அல்லது ஸஈ செய்யும் போது மாதவிடாய் ஏற்பட்டால் அவளின் தவாபும் ஸஃயும் நிறைவேறிவிடும்.

நான்காவது : தவாபுல் வதாஃவை (பிரியாவிடை தவாப்) விட்டுவிடுவதற்கு அனுமதி. ஒரு பெண் ஹஜ் உம்ரா ஆகிய கிரியைகள் யாவற்றையும் நிறைவேற்றிவிட்டு தனது சொந்த ஊருக்கு புறப்பட்டுச்செல்ல முன் மாதவிடாய் ஏற்பட்டு, அது ஊருக்கு புறப்பட்டுச் செல்லும் வரை நீடிக்குமாயின், அவள் தவாபுல் வதாஃ (பிரியாவிடை தவாஃபை) நிறைவேற்றாமலேயே செல்வதற்கு அனுமதியுள்ளது. இதற்கு ஆதாரமாக பின்வரும் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவித்த ஹதீஸ் ஆதாரமாக உள்ளது. இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்:

"أُمِرَ النَّاسُ أَنْ يَكُونَ آخِرُ عَهْدِهِمْ بِالْبَيْتِ، إِلَّا أَنَّهُ خُفِّفَ عَنِ الْمَرْأَةِ الْحَائِضِ".

(ஹஜ்ஜை முடித்துத் திரும்பும்) மக்கள் இறுதியாக கஃபாவைத் தவாஃப் செய்வதை தங்களின் இறுதி வழிபாடாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என கட்டளையிடப்பட்டுள்ளனர். ஆயினும், மாதவிடாயுள்ள பெண்ணுக்கு இதில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக அறிவித்துள்ளனர்46.

வணக்கவழிபாடுகள் யாவும் அல்குர்ஆன் அஸ்ஸுன்னாவின் ஆதாரத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளதால் மாதவிடாய் ஏற்பட்ட ஒரு பெண் மக்காவை விட்டு செல்லும் வேளை புனித மஸ்ஜிதின் அருகில் சென்று பிரார்த்தனையில் ஈடுபடுவது வரவேற்கத்தக்கதல்ல. இவ்வாறு செய்வது தொடர்பாக நபியவர்களின் எந்த வழிகாட்டலும் கிடைக்கவில்லை. ஏனெனில், நபி ﷺ அவர்களிடமிருந்து வந்த வழிகாட்டல் இதற்கு மாற்றமாக உள்ளது. ஸபிய்யா (ரழி) அவர்களுக்கு தவாஃபுல் இஃபாழாவின் பின் மாதவிடாய் ஏற்பட்ட போது, நபி ﷺ அவர்கள் அவர்களுக்குக் கூறினார்கள்:

«فَلْتَنْفِرْ إِذَنْ».

«அப்படியாயின், புறப்படுங்கள்». இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக அறிவித்துள்ளனர்47.

இந்த ஹதீஸின் படி நபியவர்கள் ஸபிய்யா ரழியல்லாஹு அன்ஹா அவர்களை பள்ளிக்குச் செல்லுமாறு கட்டளையிடவில்லை. அவ்வாறு அது அனுமதிக்கப்பட்ட காரியமாக இருந்தால் அதனை நபியவர்கள் தெளிவுபடுத்தியிருப்பார்கள். எனினும், தவாஃப் அல் இஃபாழாவை அல்லது உம்ராவுடைய தவாஃபை நிறைவேற்ற முன்னர் ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால், அவள் சுத்தமான பின் அவைகளை நிறைவேற்றுவாள்.

ஐந்தாவது சட்டம் : பள்ளிவாயலில் தங்குதல். இதற்கு ஆதாரமாக பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக உள்ளது. இந்த ஹதீஸில் மாதவிடாய் ஏற்பட்ட ஒரு பெண் பெருநாள் தொழுகை நடாத்தப்படும் இடத்தில் அமர்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. அந்த அடிப்படையில் பள்ளியில் தங்குவதும் கூடாது. உம்மு அத்திய்யா (ரழி) அவர்கள், தான் நபியவர்களிடம் கேட்டதாக கூறுகிறார்கள்:

«يَخْرُجُ الْعَوَاتِقُ وَذَوَاتُ الْخُدُورِ وَالْحُيَّضُ».

'வயதுக்கு வந்த கன்னிப் பெண்களும், திரைக்குள் இருக்கும் பெண்களும், மற்றும் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களும் (ஈத் பெருநாள் தொழுமிடத்திற்கு) வரவேண்டும் அதில்:

«يَعْتَزِلُ الْحُيَّضُ الْمُصَلَّى».

ஆனால், மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் தொழுமிடத்திலிருந்து (முஸல்லா) விலகி இருக்க வேண்டும். (என்றும் நபி ﷺ கூறினார்கள்) இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக அறிவித்துள்ளனர்48.

ஆறாவது சட்டம் :

உடலுறவு : ஒரு கணவர் மாதவிடாய் ஏற்பட்ட தனது மனைவியுடன் உடலுறவு கொள்வது தடை செய்யபட்டுள்ளது. அத்துடன், அதற்கான சந்தர்ப்பத்தை அவள் ஏற்படுத்திக் கொடுப்பதும் தடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரமாக பின்வரும் அல்லாஹ்வின் வசனம் அமைந்துள்ளது.

﴿وَيَسۡـَٔلُونَكَ عَنِ ٱلۡمَحِيضِۖ قُلۡ هُوَ أَذٗى فَٱعۡتَزِلُواْ ٱلنِّسَآءَ فِي ٱلۡمَحِيضِ وَلَا تَقۡرَبُوهُنَّ حَتَّىٰ يَطۡهُرۡنَ...﴾

மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்; நீர் கூறும்: “அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள்; அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள். (ஸூரத்துல் பகரா : 222) இங்கு குறிப்பிடப்பட்ட மஹீழ் என்ற வார்த்தை மாதவிடாய் காலத்தையும் அது வருமிடத்தையும் அதாவது யோனியையும் குறிக்கிறது. மேலும் நபிﷺ அவர்கள் கூறினார்கள் :

«اصْنَعُوا كُلَّ شَيْءٍ إِلَّا النِّكَاحَ».

உடலுறவைத் தவிர மற்ற அனைத்தையும் நீங்கள் செய்து கொள்ளுங்கள் அதாவது: (பிறப்புறுப்புக்களால் ஏற்படும்) உடலுறவு. ஆதாரம் : முஸ்லிம் (49)49 மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணுடன் உடலுறவு கொள்வது தடை என்பதில் எல்லா மார்க்க அறிஞர்களும் ஏகோபித்த கருத்தில் உள்ளனர்.

அல்லாஹ் மற்றும் அவனின் தூதரினாலும்; அறிஞர்களின் ஏகோபித்த முடிவாலும் தடுக்கப்பட்ட இச்செயலை அல்லாஹ்வையும் மறுமை நாளையும் உறுதியாக நம்பும் எவரும் செய்யத்துணிவது ஹராமாகும். எவர் இக்காரியத்தில் ஈடுபடுகின்றாரோ அவர் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் அடிபணியாது, விசுவாசிகளின் பாதையல்லாது ஏனைய வழிதவறியோரின் பாதையில் செல்வோராவார். இமாம் நவவியின் அல்மஜ்மூஃ ஷர்ஹுல் முஹத்தப் என்ற நூலின் பாகம் 2 பக்கம் 374 ல் இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியதாக பின்வருமாறு இடம்பெற்றுள்ளது 'யாரேனும் இத்தகைய செயலில் ஈடுபட்டால் அவர் பெரும் பாவமொன்றை செய்தவர் ஆவார்.' என்று அவர் கூறுகிறார். அதே மத்ஹபைச் சேர்ந்த ஏனைய அறிஞர்களும் 'யாரேனும் ஒருவர் மாதவிடாய் ஏற்பட்ட ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வது அனுமதிக்கப்பட்டது எனக் கருதுவாராயின் அவர் குப்ரில் (இறை நிராகரிப்பில்) வீழ்ந்துவிட்டவராக தீர்ப்பளிக்கப்பட வேண்டும். என்று கூறுகிறார்கள். (இமாம் நவவியின் கூற்று முற்றும்)

ஒருவரின் பாலியல் ஆசையை கட்டுப்படுத்துவதற்காக மாதவிடாய் ஏற்பட்ட தனது மனைவியின் தடுக்கப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து அவளை முத்தமிடவும். கட்டித் தழுவவும், அணைத்துக் கொள்ளவும் அனுமதியுண்டு ஆனால். ஒரு முக்கியமான விடயத்தை மறந்து விடக் கூடாது அதாவது, மனைவியின் தொப்புழுக்கும் முழங்காலுக்கும் இடைப்பட்ட பகுதியை எதைக் கொண்டேனும் மறைக்காது நெருங்குவது கூடாது. ஏனெனில், ஆஇஷா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள் :

"كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُنِي فَأَتَّزِرُ فَيُبَاشِرُنِي وَأَنَا حَائِضٌ".

மாதவிடாய் காலத்தில், அவர்கள் எனக்கு இடுப்புக்குக் கீழே அணியும் ஆடையான இஸார் அணிந்து கொள்ளும்படி கட்டளையிடுவார்கள், அதன்பின் என்னை அனைத்துக் கொள்வார்கள். இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக அறிவித்துள்ளனர்50.

ஏழாவது சட்டம் : அத்தலாக் (விவாகரத்து). ஒருவர் தனது மனைவியை மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் வேளையில் தலாக் சொல்வது செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. அல்லாஹ் கூறுகிறான் :

﴿يَاأَيُّهَا النَّبِيُّ إِذَا طَلَّقْتُمُ النِّسَاء فَطَلِّقُوهُنَّ لِعِدَّتِهِنَّ...﴾

நபியே! நீங்கள் பெண்களைத் “தலாக்” சொல்வீர்களானால் அவர்களின் “இத்தா”வைக் கணக்கிட ஏற்ற வகையில் (மாதவிடாய் அல்லாத காலங்களில்) தலாக் கூறுங்கள். (ஸூரா அத்தலாக் : 1). இதன் கருத்து என்னவெனில், பெண்கள் விவாகரத்துச் செய்யப்படும் கட்டத்தில் அவர்கள் இத்தாவை நிரணயிக்கக் கூடிய நிலைமை இருக்க வேண்டும் என்பதாகும். அதாவது அவளை ஒருவர் விவாகரத்து செய்யும் போது கருவுற்ற நிலையில் அல்லது உடலுறவு இன்றி சுத்தமடைந்த நிலையில் இருக்க வேண்டும். அப்போதுதான் விவாவகரத்தாக கருதப்படும். ஒரு பெண் மாதவிடாயில் இருக்கும் பொழுது விவாகரத்து செய்யப்பட்டால், அதனை குறிப்பிட்ட இத்தா காலத்தின் ஒரு பகுதியாகக் கொள்ள முடியாது. காரணம் அவள் விவாவகரத்து செய்யப்பட்ட மாதவிடாய் நிலையை வைத்து இத்தா காலமாக கணிப்பது இயலாது. உடலுறவின் பின் அவள் தூய்மையாக இருக்கும் நிலையில் விவாகரத்து செய்யப்பட்டால் குறிப்பிட்ட உடலுறவின் மூலம் கருவுற்றாளா இல்லையா என்பதிலும் அவ்வாறு அவள் கருவுரவில்லையாயின் மாதவிடாயின் மூலம் கணிப்பதா என்பதில் உறுதியற்ற நிலை காணப்படும் எனவே, அவளது இத்தா எந்த வகையானது என்ற உறுதியற்ற நிலையில் அவள் (சுத்தமானவளா அல்லது கர்ப்பிணியா என்று) தெளிவாகும் வரையில் அவளை அவளது கணவன் விவாகரத்து செய்வது தடைசெய்யப் பட்டுள்ளது.

ஆக, மேற்படி அல் குர்ஆன் வசனத்தின் அடிப்படையில் மாதவிடாயின் போது விவாகரத்து செய்வது (ஹராம்) தடைசெய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது. புஹாரி, முஸ்லிம் மற்றும் பிற நூல்களில் இப்னு உமர் (ரலி) அவர்களின் ஸஹீஹான ஹதீஸில் வந்தது போல, அவர் தனது மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்த நிலையில் விவாகரத்து அளித்தார். உமர் (ரலி) அவர்கள் இது குறித்து நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தார்கள். அதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோபமடைந்து கூறினார்கள்:

«مُرْهُ فَلْيُرَاجِعْهَا ثُمَّ لِيُمْسِكْهَا حَتَّى تَطْهُرَ، ثُمَّ تَحِيضَ، ثُمَّ تَطْهُرَ، ثُمَّ إِنْ شَاءَ أَمْسَكَ بَعْدُ، وَإِنْ شَاءَ طَلَّقَ قَبْلَ أَنْ يَمَسَّ، فَتِلْكَ الْعِدَّةُ الَّتِي أَمَرَ اللَّهُ أَنْ تُطَلَّقَ لَهَا النِّسَاءُ».

"அவளைத் திரும்ப அழைத்துக் கொள்ளும்படியும், அவள் தூய்மையாகும் வரை அவளை (தம்முடன்) வைத்திருக்கவும் அவரிடம் கட்டளையிடுங்கள். பின்னர் அவளுக்கு (அடுத்த) மாதவிடாய் ஏற்பட்டு, மீண்டும் அவள் தூய்மையடைவாள். அதன் பிறகு அவர் விரும்பினால் (அவளைத் தம்முடன்) வைத்துக் கொள்ளலாம்; அல்லது அவர் விரும்பினால் அவளைத் தீண்டுவதற்கு முன்பே விவாகரத்துச் செய்து கொள்ளலாம். பெண்கள் விவாகரத்துச் செய்யப்பட வேண்டும் என அல்லாஹ் கட்டளையிட்டுள்ள 'இத்தா' (காலக் கணக்கு) இதுவேயாகும்."51

எனவே, தனது மனைவி மாதவிடாய் ஏற்பட்டுள்ள வேளையில் அவளை விவாகரத்து செய்பவன் பாவம் செய்தவனாவான். அதற்காக அவன் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோருவதுடன் அல்லாஹ்வினதும் அவனது தூதரினதும் கட்டளைக்கிணங்க மார்க்க சட்டத்தின் பிரகாரம் தலாக் (விவாகரத்து) செய்வதற்காக அவளை தன்னிடம் திருப்பி அழைத்து கொண்டு அவளின் மாதவிடாய் முடிந்து அவள் சுத்தமாகும் வரை தன்னுடன் வைத்திருப்பதுடன் அடுத்த மாதவிடாய் ஏற்படும் வரை காத்திருக்க வேண்டும். பின்பு, அவள் சுத்தமானதும் அவளை தன்னுடன் மனைவியாக வைத்திருக்கலாம் அல்லது அவளுடன் உடலுறவு கொள்வதற்கு முன், விவாகரத்து செய்யலாம்.

மாதவிடாயின் போது ஒரு பெண்ணை விவாகரத்துச் செய்யவது தடுக்கப்பட்டதாகும். ஆனால் பின்வரும் மூன்று நிலைகளில் அனுமதிக்கப்படும் :

முதலாவது நிலை: அவளுடன் தனிமையில் இருப்பதற்கு முன்போ அல்லது அவளுடன் பாலியல் தொடர்பு கொள்ள முன்னோ, அவளை மாதவிடாய் காலத்தில் விவாகரத்து செய்வதில் தவறில்லை. இத்தகைய கட்டத்தில் அவளுக்கு இத்தா என்பது இல்லை என்பதுடன் அவளது விவாகரத்து அல்லாஹ்வின் கட்டளைக்கு முரணானதுமில்லை. இதற்கான ஆதாராமாக பின்வரும் அல்லாஹ்வின் வசனம் அமைந்துள்ளது :

﴿...فَطَلِّقُوهُنَّ لِعِدَّتِهِنَّ...﴾

அவர்களின் “இத்தா”வைக் கணக்கிட ஏற்ற வகையில் (மாதவிடாய் அல்லாத காலங்களில்) தலாக் கூறுங்கள். (ஸூரா அத்தலாக் : 1).

இரண்டாவது நிலை: ஒரு பெண் கருத்தரித்து இருக்கும் போது மாதவிடாய் ஏற்பட்ட்டிருக்கும் நிலையில் விவாகரத்து செய்தால் அதுவும் அனுமதிக்கத்தக்கதாகும். இது தொடர்பான விபரமும் காரணமும் ஏற்கனவே குறிப்பிடப்பட்டுவிட்டது.

மூன்றாவது நிலை: கணவன் ஏதாவது இழப்பீட்டை பெற்றுக் கொண்டு மாதவிடாய் காலத்தில் அவளை விவாகரத்து செய்வது. அதுவும் குற்றமில்லை.

உதாரணமாக கணவன் மணைவிக்கிடையே தொடரான பெரும் தகராறும் பிரச்சினைகளும், மோசமாக நடந்து கொள்ளுதல் போன்றன இருக்குமாயின் அந்தக் கணவன் தனது மனைவியிடமிருந்து பணமோ அல்லது வேறு பொருட்களோ பெற்றுக்கொண்டு மாதவிடாய் இருக்கும் நிலையில் அவளை விவாகரத்து செய்வது அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பின்வரும் ஹதீஸ் சான்றாக அமைகிறது. இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஸாபித் பின் கைஸ் (ரழி) அவர்களின் மனைவி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! ஸாபித் பின் கைஸ் அவர்களின் குணத்திலோ அல்லது மார்க்கத்திலோ நான் எந்தக் குறையும் காணவில்லை. ஆனால், இஸ்லாத்தில் (இருந்துகொண்டு) இறைமறுப்பை (போன்ற செயலை)ச் செய்வதை நான் வெறுக்கிறேன்" என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள்,

«أَتَرُدِّينَ عَلَيْهِ حَدِيقَتَهُ؟»

அவருடைய தோட்டத்தை நீர் திருப்பிக் கொடுத்துவிடுகிறீரா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர் 'ஆம்' என்று கூறினார். அதற்கு நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:

«اقْبَلِ الْحَدِيقَةَ وَطَلِّقْهَا تَطْلِيقَةً».

தோட்டத்தை ஏற்றுக்கொள்வீராக; மேலும் அவளை ஒரு தலாக் சொல்லி விடுவீராக ஆதாரம் : புஹாரி52.

இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'அவள் மாதவிடாய் உண்டாகி இருக்கிறாளா இல்லையா' எனக் கேட்காதது கவனிக்கத்தக்க விடயமாகும். ஏனெனில் இவ்வாறான தலாக் ஒரு பெண்ணே தான் முன்வந்து செய்யும் தலாகாகும். எந் நிலையில் அது இருப்பினும் ஆகுமானதாகும்.

இந்நிகழ்வை ஆதாரமாகக்; கொண்டு ஒரு பெண் அவள் மாதவிடாய் நிலையில் இருக்கும் போது கணவிடம் விவாகரத்து (குல்உ) கோருவதற்கு அனுமதியுள்ளது என இமாம் இப்னு குதாமா அல் மக்திஸி அவர்கள் தனது முஃக்னி என்ற நூலில் குறிப்பிடுகிறார். (பக்கம் 52 பாகம் 7) இங்கு கருத்திற்கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால் மாதவிடாய்க் காலத்தில் பெண்களை விவாகரத்து செய்ய தடுத்திருப்பதற்கான காரணம் அவர்களது இத்தாக் காலம் நீடித்து அவர்களுக்குத் தீங்கு ஏற்பட முடியும் என்பதினாலாகும்; ஆனால்(குல்ஐ) பெண்தரப்பால் பிரிவதை பொருத்தமட்டில் அது மோசமான முறையில் நடந்து கொள்ளுதல், அசௌகரியம், பகை போன்ற தீங்குகளை நீக்குவதை அடிப்படையாகக் கொண்டது. அதனால்; மாதவிடாயின் போது விவாகரத்து செய்வதின் தீங்கை விட இது ஆபத்து நிறைந்தது. இந்த அடிப்படையில் ஆபத்து கூடிய நிலையான பெண்ணின் தரப்பால் விவாவரத்து பெறுதல் என்பதற்கு முன்னுரிமை அளிப்பது கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் ஸாபித் இப்னு கைஸின் மனைவியிடம் அவளது மாதவிடாய் நிலைமைப் பற்றிக் கேட்கவில்லை.(இப்னு குதாமா ரஹிமஹுல்லாஹ் அவர்களின் கூற்று முற்றும்)

"அடிப்படையில் அனைத்து விடயங்களும் அனுமதிக்கப்பட்டதாகும்" என்ற விதியின் படி ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அவளுக்கு திருமண ஒப்பந்தம் செய்வது அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தடுக்கக்கூடிய ஆதாரம் எதுவும் கிடையாது. ஆயினும், குறிப்பிட்ட கணவன் தனது உடலியல் ஆசையை கட்டுப்படுத்திக் கொண்டு எச்சரிக்கையாய் இருக்க முடியும் என்றால் அக்காலப்பகுதியில் சேர்ந்து இருக்கலாம். ஆனால் அவரால் தனது உடலியல் ஆசையை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாதெனக் கண்டால், மாதவிடாயிலிருந்து சுத்தமாகும் வரை அவளுடன் தனித்திருக்கக் கூடாது.

எட்டாவது சட்டம் : விவாகரத்தின் இத்தா காலத்தை மாதவிடாயைக் கொண்டு கணக்கிடல். ஒருவர் தனது மனைவியுடன் உடலுறவு கொண்ட, அல்லது அவளுடன் தனிமையில் இருந்த பின்னர் , அவளை விவாகரத்து செய்தால், அவள் இத்தாவாக மூன்று மாதவிடாய்களை முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும். கர்ப்பினி அல்லாத மாதவிடாய் ஏற்படும் பெண்களுக்கே இந்த சட்டமாகும்.

﴿وَٱلۡمُطَلَّقَٰتُ يَتَرَبَّصۡنَ بِأَنفُسِهِنَّ ثَلَٰثَةَ قُرُوٓءٖۚ...﴾

தலாக் கூறப்பட்ட பெண்கள், தங்களுக்கு மூன்று மாதவிடாய்கள் ஆகும் வரை பொறுத்து இருக்க வேண்டும் (ஸூரா அல்பகரா : 228) வசனத்தில் இடம் பெற்ற ،،குரூஉ،، என்பது மூன்று மாதவிடாய் காலம் என்பதைக் குறிக்கும். தலாக் சொல்லப்பட்ட பெண், கருவுற்று இருந்தால் அவளுடைய இத்தா பிரசவம் வரையிலாகும். குறிப்பிட்ட இத்தா காலம் அவளுக்கு குறைவானதாக இருந்தாலும் நீண்டாதாக இருந்தாலும் சரியே.

﴿...وَأُوْلَاتُ الأَحْمَالِ أَجَلُهُنَّ أَن يَضَعْنَ حَمْلَهُنَّ...﴾

தவிர கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய (“இத்தா”வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும். (ஸூரா அத்தலாக் : 4), சிலவேளை, பெண் பருவமடையாத மாதவிடாய் ஏற்டாத (சிறு பிள்ளை போன்று) இருந்தால், அல்லது மாதவிடாய் ஏற்படும் வயதெல்லையைக் கடந்து விட்டவராக இருந்தால், அல்லது அறுவை சிகிச்சையின் மூலம் அவளது கருப்பை அகற்றப்பட்டவராக இருந்தால் அல்லது இதையொத்த நிலைகளில் இருந்தால் அவளுடைய இத்தா சரியாக மூன்று மாதங்களாகும். இதனை அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான் :

﴿وَاللَّائِي يَئِسْنَ مِنَ الْمَحِيضِ مِن نِّسَائِكُمْ إِنِ ارْتَبْتُمْ فَعِدَّتُهُنَّ ثَلَاثَةُ أَشْهُرٍ وَاللَّائِي لَمْ يَحِضْنَ...﴾

மேலும், உங்கள் பெண்களில், எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால், அப்பெண்களுக்கும், மாதவிடாயே ஏற்படாப் பெண்களுக்கும், “இத்தா”(வின் தவணை) மூன்று மாதங்களாகும். (ஸூரா அத்தலாக் : 4), சிலபோது, மாதவிடாய் ஏற்படும் ஒரு பெண்; நோய், குழந்தைக்குப் பாலூட்டுதல் போன்ற சில காரணங்களால் மாதவிடாய் நின்று விட்டதை உணர்கிறாள்;. அவள் தனது மாதவிடாய் மீண்டும் வரும் வரை அது மிக நீண்ட காலமாயினும் இத்தா இருப்பதோடு, அதன் மூலம் தனது இத்தா காலத்தை கணக்கிட்டுக்கொள்வாள். குறிப்பிட்ட காரணங்கள் நீங்கியதன் பின்னரும் (அதாவது, அவளுடைய நோய் குணமாகிறது அல்லது பாலூட்டலிலிருந்து முடிவடைகிறாள்) மாதவிடாய் ஏற்படவில்லையாயின், அப்பொழுது அக்காரணங்கள் நீங்கிய காலத்திலிருந்து ஒரு வருடம் பூர்த்தியாக இத்தாக்காலத்தைக் கணித்தல் வேண்டும். இதுதான் இஸ்லாமிய சட்டவிதிகளுக்குப் பொருந்தும் மிகச் சரியான கருத்தாகும். குறிப்பிட்ட காரணங்கள் நீங்கி மாதவிடாய் ஏற்படவில்லையாயின் அவளது நிலை, அறியப்படாத எதுவிதக் காரணங்கள் இல்லாது மாதவிடாய் நின்றுவிட்ட பெண்களின் நிலைக்கு ஒப்பானதாகும். அவ்வாறு இருந்தால் பேணுதலின் அடிப்படையில் அவளது இத்தாக்காலம் ஒரு வருடமாகும். பொதுவாக பிள்ளைப் பிரசவக் காலமாக ஒன்பது மாதமும் இத்தாவுடைய காலம் மூன்று மாதமுமாக சேர்த்து ஒருவருடமாக கணிக்கப்படும்.

திருமண ஒப்பந்தத்திற்குப் பிறகு, அதேவேளை உடலுறவு மற்றும் தனிமையில் சந்திப்பதற்கு முன்பு விவாகரத்து நிகழ்ந்தால், அவளுக்கு மாதவிடாய் மூலமாகவோ அல்லது வேறு விதமாகவோ இத்தா கிடையாது ; இதை குறித்து அல்லாஹ் கூறுகிறான்:

﴿يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نَكَحْتُمُ الْمُؤْمِنَاتِ ثُمَّ طَلَّقْتُمُوهُنَّ مِن قَبْلِ أَن تَمَسُّوهُنَّ فَمَا لَكُمْ عَلَيْهِنَّ مِنْ عِدَّةٍ تَعْتَدُّونَهَا...﴾

ஈமான் கொண்டவர்களே! முஃமினான பெண்களை நீங்கள் மணந்து, பிறகு நீங்கள் அவர்களை தொடுவதற்கு முன்னமேயே “தலாக்” செய்து விட்டீர்களானால், அவர்கள் விஷயத்தில் நீங்கள் கணக்கிடக் கூடிய (இத்தத்)தவணை ஒன்றும் உங்களுக்கு இல்லை. (ஸூரத்துல் அஹ்ஸாப் : 49)

ஒன்பதாவது சட்டம் : ஒரு பெண் கருவை சுமக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தி தீர்ப்பு வழங்குதல். இந்தத் தலைப்பில் பல விடயங்கள் காணப்படுகின்ற அவை மாதவிடாயுடன் தொடர்புபடுகிறது அதன் விவரம் பின்வருமாறு :

ஒருவர் தனது மனைவி கருவுற்ற நிலையில் மரணித்து விடுகிறான் என்றால் அந்த கருப்பையில் உள்ள சிசு அவனின் வாரிசாக கருதப்படுகின்றான். குறிப்பிட்ட அவளின் கணவர், மாதவிடாய் ஏற்படும் வரையில் அல்லது அவள் கருவுற்றிருப்பது தெளிவாகத் தெரியும் வரையில் அவளுடன் உடலுறவு கொள்ளாதிருந்தால் பின்வரும் நிலைப்பாடுகள் காணப்படுகின்றன :

அ: அந்தப்பெண் கருவுற்றது தெளிவாகத் தெரிந்தால் அந்த அனந்தரச்சொத்துக்குரியவனாக கருப்பையில் உள்ள சிசு கருதப்படும். காரணம் சொத்துக்குச்சொந்தக்காரரான தந்தை மரணிக்கும் வேளை அச்சிசு இருக்கிறது. ஆ: குறித்த பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்தால் அச்சிசு அனந்தரச்சொத்தை பெற்றுக்கொள்ளாது என்று தீர்ப்பளிக்கப்படும். காரணம், மாதவிடாயின் மூலம் அப்பெண் கருவுறவில்லை என்பது தெளிவாகிவிட்டது.

பத்தாவது : குளித்தல்

மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்த பெண் முழு உடலையும் சுத்தப்படுத்தி குளிப்பது கடமையாகும். இதனை பின்வரும் ஹதீதில் பார்க்க முடியும். நபி ﷺ அவர்கள் அபூ ஹுபைஷின் மகள் ஃபாத்திமாவிடம் இவ்வாறு கூறினார்கள்:

«فَإِذَا أَقْبَلَتِ الْحَيْضَةُ فَدَعِي الصَّلَاةَ، وَإِذَا أَدْبَرَتْ فَاغْتَسِلِي وَصَلِّي».

மாதவிடாய் (நேரம்) வந்துவிட்டால் தொழுகையை விட்டுவிடு. அது சென்றுவிட்டால் குளித்துவிட்டுத் தொழுதுகொள்”. ஆதாரம் : புஹாரி53

குளிப்பைப் பொறுத்த வரையிலான குறைந்தபட்ச கடமை என்னவெனில் தலையின் மேற்பகுதி உட்பட உடலின் எல்லாப் பகுதிகளையும் நன்கு கழுவி விடுவதாகும். எனினும் ஹதீதில் கூறப்பட்ட முறைப்படி குழிப்பது மிகச்சிறந்ததாகும். அஸ்மா (ரழி) அவர்கள் நபி ﷺ அவர்களிடம் மாதவிடாய்க் குளியல் பற்றிக் கேட்டார்கள். அதற்கு நபி ﷺ அவர்கள் :

«تَأْخُذُ إِحْدَاكُنَّ مَاءَهَا وَسِدْرَتَهَا فَتَطَهَّرُ فَتُحْسِنُ الطُّهُورَ، ثُمَّ تَصُبُّ عَلَى رَأْسِهَا فَتَدْلُكُهُ دَلْكًا شَدِيدًا، حَتَّى تَبْلُغَ شُؤُونَ رَأْسِهَا، ثُمَّ تَصُبُّ عَلَيْهَا الْمَاءَ، ثُمَّ تَأْخُذُ فِرْصَةً مُمَسَّكَةً -أَيْ: قِطْعَةَ قُمَاشٍ فِيهَا مِسْكٌ- فَتَطَهَّرُ بِهَا».

"உங்களில் ஒருவர் தனது தண்ணீரையும் இலந்தை இலையையும் எடுத்துத் தூய்மைப்படுத்திக் கொள்ளட்டும்; அத்தூய்மையைச் செம்மைப் படுத்தட்டும். பிறகு தன் தலையில் தண்ணீரை ஊற்றி, முடியின் வேர்கள் வரை நனையும்படி நன்கு தேய்க்கட்டும். பிறகு தன் மீது தண்ணீரை ஊற்றிக் கொள்ளட்டும். பிறகு கஸ்தூரி தோய்க்கப்பட்ட ஒரு பஞ்சுத் துண்டை எடுத்து, அதைக் கொண்டு தூய்மைப்படுத்திக் கொள்ளட்டும்" என்றார்கள். அஸ்மா (ரழி), "அதைக் கொண்டு எப்படித் தூய்மைப்படுத்திக் கொள்வது?" என்று கேட்டார்கள்.

«سُبْحَانَ اللَّهِ!»

ஸுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் மிகவும் தூயவன்), ஆஇஷா (ரழி) அவர்கள் (அஸ்மாவுக்கு விளங்கும் விதமாக) மறைவாக, "இரத்தச் சுவடு உள்ள இடங்களை (அதால்) துடைப்பீராக" என்று கூறினார்கள். ஆதாரம் : முஸ்லிம் (54).54

மாதவிடாய் உண்டான பெண் தனது தலை முடியின் அடிப்பாகம் வரை நீர் செல்வதை தடுக்கும் வகையில் முடியை நெருக்கமாக பின்னிடாத வரையில் அதனை அவிழ்த்து விடுவது கடமையில்லை. உம்மு ஸலமா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நான் கூறினேன்: அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களே, என் தலையில் முடியை இறுக்கமாகப் பின்னலிட்டுக் கொள்ளும் பெண் நான்; தாம்பத்திய உறவு காரணமாக குளிப்பதற்காக அதை நான் அவிழ்க்க வேண்டுமா? அவர் (நபி ﷺ அவர்கள்) கூறினார்கள்:

«لَا، إِنَّمَا يَكْفِيكِ أَنْ تَحْثِيَ عَلَى رَأْسِكِ ثَلَاثَ حَثَيَاتٍ ثُمَّ تُفِيضِينَ عَلَيْكِ الْمَاءَ فَتَطْهُرِينَ».

«இல்லை, உங்கள் தலையில் மூன்று முறை கையளவு தண்ணீர் ஊற்றுவது உங்களுக்குப் போதுமானது, பின்னர் உங்கள் மீது தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள், நீங்கள் தூய்மையடைவீர்கள்.»55.

மாதவிடாய் உண்டான ஒரு பெண் குறிப்பிட்டதொரு தொழுகைக்குரிய வேளையில் சுத்தமடைவாளாயின், அத்தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுவதற்காக உடனே குளிக்க வேண்டும். என்றாலும், அவள் பிரயாணத்தில் இருக்கின்றாள்; நீர் கிடைக்கவில்லை, அல்லது நீரிருந்தும் அதைப் பயன்படுத்தினால் அவளுக்குத் தீங்கு (நோய் அல்லது வேரேதும்) ஏற்படும் என்ற அச்சம் இருக்குமாயின், அவள் தயம்மும் செய்யலாம். அவள் நீரைப் பயன்படுத்தத் தடையாயுள்ள நிலை நீங்கும் வரை அப்படிச் செய்யலாம். பின்னர் அவள் குளிக்க வேண்டும்.

குறித்ததொரு தொழுகை நேரத்தின் போது சுத்தமாகிவிடும் சில பெண்கள் உள்ளனர்; அவர்கள் குளிப்பதைப் பிற்படுத்திவிட்டு; 'குறித்த தொழுகைக்குரிய காலத்தினுள் தம்மை சுத்தப்படுத்திக் கொள்வது சாத்தியமில்லை' என்று நியாயம் கூறுவர். இது ஏற்றுக்கொள்ளமுடியாத கடமையை தட்டிக் கழிக்கும் கூற்றாகும். ஏனெனில், அவர்களுக்கு குளிப்பில் குறைந்த கடமையை நிறைவேற்றி குளித்துவிட்டு, குறித்த தொழுகையை உரிய நேரத்தில் தொழ முடியும். பின்னர் அவர்களுக்கு வாய்ப்பு கிட்டும்போது முழுமையாக குளித்து சுத்தமாக முடியும்.

பகுதி: 5 : (இஸ்திஹாழா) தொடர் உதிரப்போக்கும் அது தொடர்பான சட்டங்களும்.

இஸ்திஹாழா என்பது ஒரு பெண்ணின் பெண்ணுறுப்பிலிருந்து தொடர்ச்சியாக அல்லது மிகக் குறைந்த காலத்திற்கு (மாதாந்தம் இரண்டொரு நாட்களுக்கு) நின்று மீண்டும் வெளிவரும் இரத்தத்தைக் குறிக்கும். (குறிப்பு : மாதவிடாய் இரத்தமானது கர்ப்பப்பையின் ஆழத்திலிருந்து வெளியாகும். (மட்டுமீறிய இரத்தப்போக்கு) தொடர் உதிரப்போக்கு கர்ப்பையின் வாய்ப் பகுதியிலிருந்து கசியும் இரத்தமாகும்)

1- வரைவிலக்கணத்தில் குறிப்பிடப்பட்ட முதலாவது பகுதியான தொடராக வெளிவரும் இரத்தம் என்பதற்கான ஆதாரம் ஸஹீஹுல் புஹாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனைஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்: பாத்திமா பின்த் அபீ ஹுபைஷ் அவர்கள் நபி ﷺ அவர்களிடம்,

"يَا رَسُولَ اللَّهِ إِنِّي لَا أَطْهُرُ".

'அல்லாஹ்வின் தூதரே! நான் மாதவிடாயிலிருந்து துய்மையடைவதில்லை அதாவது (இரத்தம் வெளிவருவது நிற்பதில்லை)' மற்றொரு அறிவிப்பில்,

"أَسْتَحَاضُ فَلَا أَطْهُرُ".

எனக்கு தொடர் உதிரப்போக்கு ஏற்பட்டு தூய்மையாக முடிவதில்லை (என வந்துள்ளது)56.

2- வரைவிலக்கணத்தில் குறிப்பிடப்பட்ட இரண்டாவது பகுதியான மிகக் குறைந்த காலத்திற்கு நின்று வெளிவரும் தொடர்ந்து வரும் இரத்தத்திற்கான ஆதாரம். நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களிடம் வந்த ஹம்னா பின்த் ஜஹ்ஷ் அவர்கள்,

"يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَسْتَحَاضُ حَيْضَةً كَثِيرَةً شَدِيدَةً".

நான் மிக அதிகமான, கடுமையான 'இஸ்திஹாதா' (தொடர் உதிரப்போக்கு)வினால் பாதிக்கப்பட்டிருந்தேன். இந்த ஹதீஸை அஹ்மத், அபூ தாவூத், திர்மிதி ஆகியோர் அறிவித்துள்ளனர்57. திர்மிதி அவர்கள் இதனை ஸஹீஹ் எனத் தீர்ப்பளித்ததுடன், இமாம் அஹ்மத் அவர்களும் இதனை ஸஹீஹ் என்றும், இமாம் புஹாரி அவர்கள் இதனை ஹஸன் என்றும் தரப்படுத்தியதாக அறிவித்துள்ளார்58.

இஸ்திஹாழா (தொடர் உதிரப்போக்கு) வின் நிலைகள் :

இஸ்திஹாழா ஏற்படும் பெண்களின் நிலைகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம்:

முதாலவது : ஒரு பெண்ணைப் பொறுத்த வரையில் தொடர் உதிரப்போக்கு ஏற்பட முன்னர், வழக்கமான மாதவிடாய் காலம் அவளுக்கு அறியப்பட்டதாக இருக்கும். இக் குறித்த மாதவிடாய்க் காலத்திலன்றி மற்றைய காலத்தில் வெளிவரும் இரத்தம் 'இஸ்திஹாழா என கணிக்கப்பட்டு அதற்குரிய சட்டங்கள் பின்பற்றபட வேண்டும்.

உதாரணமாக: ஒரு பெண்ணிற்கு ஒவ்வொரு மாதத்திலும் முதல் ஆறு நாட்களுக்கு சாதாரணமான நிலையில் மாதவிடாய் ஏற்படும்; பின்னர் திடீரென அவளுக்கு இரத்த வெளியேற்றம் நிற்காமல் வெளியேரும். இப் பெண்ணைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு மாதமும் ஆறு நாட்கள் வெளியேறும் இரத்தமே மாதவிடாய் இரத்தமாகவும்; அதைத் தொடர்ந்து வெளியேறும் இரத்தம் இஸ்திஹாழா இரத்தமாகவும் கருதப்படும். இதற்கான ஆதாரம் ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் பின்வரும் ஹதீதாகும். ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: ஃபாத்திமா பின்த் அபூஹுபைஷ் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள், “எனக்குத் தொடர்ச்சியான உதிரப்போக்கு (மாதவிடாய்க்கு இடைப்பட்ட காலத்தில்) ஏற்படுகிறது, நான் சுத்தமாவதில்லை. நான் தொழுகையை விட்டுவிடலாமா?” அதற்கு நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்,

«لَا، إِنَّ ذَلِكَ عِرْقٌ، وَلَكِنْ دَعِي الصَّلَاةَ قَدْرَ الْأَيَّامِ الَّتِي كُنْتِ تَحِيضِينَ فِيهَا ثُمَّ اغْتَسِلِي وَصَلِّي».

“இல்லை, இது ஒரு இரத்த நாளத்திலிருந்து (வரும் இரத்தம்). நீங்கள் வழக்கமாக மாதவிடாய் ஏற்படும் நாட்களில் மட்டும் தொழுகையை விட்டுவிடுங்கள், பிறகு குளித்துவிட்டு, உங்கள் தொழுகையை நிறைவேற்றுங்கள்.” ஆதாரம் : புஹாரி59

ஸஹீஹ் முஸ்லிமில் பதிவு செய்யப்பட்ட ஹதீஸில் நபி ﷺ அவர்கள் உம்மு ஹபீபா பின்த் ஜஹ்ஷ் அவர்களுக்குக் கூறினார்கள்:

«امْكُثِي قَدْرَ مَا كَانَتْ تَحْبِسُكِ حَيْضَتُكِ ثُمَّ اغْتَسِلِي وَصَلِّي».

உமக்கு ஏற்கனவே மாதவிடாய் ஏற்பட்ட கால அளவு வரை இருந்து விட்டு, பின் குளித்து விட்டு தொழுவீராக.60

இந்த ஹதீஸின் படி வழமையாக அறியப்பட்ட மாதவிடாய் கால அளவிற்கு இருந்துவிட்டு, பின்பு குளித்து தொழுது கொள்வாள். அந்நேரம் வரும் இரத்தம் தொடர்பாக பொருட்படுத்தத் தேவையில்லை.

இரண்டாவது நிலை : தொடர் உதிரப் போக்கு ஏற்பட முன் மாதவிலக்கு நாட்கள் பற்றிய தெளிவான கால வரையொன்றில்லாத ஒரு பெண்,அதாவது பருவமடைந்த முதல் மாதத்தில் இருந்தே ஹைழுடைய இரத்தத்துடன் சேர்ந்தே வெளியாகிக் கொண்டிருக்கும். இரத்தத்தின் நிறம் வாடை, அடர்த்தி போன்றவற்றை வைத்து அது மாதவிடாய் இரத்தமா? அல்லது இஸ்திஹாழா (தொடர் உதிரப்போக்கு) இரத்தமா என்பதை வித்தியாசப்படுத்திக்கொள்ள முடியும். வெளிப்படும் இரத்தத்தில் கருமை, அடர்த்தி, வாடை போன்றன அவதானிக்கப்பட்டால் குறித்த பெண் மாதவிடாய் சட்டங்களைப் பின்பற்ற வேண்டும். இரத்தத்தின் நிறம் மாறி அடர்த்தி, வாடை குறைந்துவிட்டால் அவள் இஸ்திஹாழாவின் சட்டத்தைப் பின்பற்ற வேண்டும். அதாவது அவளுக்கு அனைத்து வணக்க வழிபாடுகளையும் செய்ய அனுமதியுள்ளது.

உதாரணமாக, ஒரு பெண் அவள் ஆரம்பமாக மாதவிலக்கிக்கினை காண்கிறாள், பின் அது தொடர்கிறது. முதல் பத்து நாட்களில் கருப்பு நிறமாகவும், மாதத்தின் எஞ்சிய நாட்களில் சிவப்பு நிறத்திலும் அல்லது முதல் பத்து நாட்களில் அடர்த்தியாகவும் எஞ்சிய நாட்களில் மென்மையானதாகவும் அல்லது பத்து நாட்கள் துர் நாற்றத்துடனும் எஞ்சிய நாட்கள் நாற்றமில்லாமலும் காண்கிறாள் என்று வைத்துக் கொள்வோம். அதனடிப்படையில் முதல் மற்றும் இரண்டாம், மூன்றாம் உதாரணங்களில் கூறப்பட்டது போல் இரத்தமானது கருப்பு அல்லது அடர்த்தி நிறைந்தது அல்லது துர்நாற்றமிக்கது என்றிருந்தால் இவையனைத்துக் கட்டங்களிலும் மாதவிடாயாகவே கருதப்படும். அதைத்தவிரவுள்ள நிலைகளில் இஸ்திஹாழாவாக கருதப்படும். இதற்கு நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பாதிமா பின்த் அபீஹுபைஷ் அவர்களுக்கு கூறியது ஆதாரமாக உள்ளது. நபி ﷺ அவர்கள் பாத்திமா பின்த் அபி ஹுபைஷ் அவர்களுக்கு கூறியதில் :

«إِذَا كَانَ دَمُ الْحَيْضَةِ فَإِنَّهُ أَسْوَدُ يُعْرَفُ، فَإِذَا كَانَ ذَلِكَ فَأَمْسِكِي عَنِ الصَّلَاةِ فَإِذَا كَانَ الْآخَرُ فَتَوَضَّئِي وَصَلِّي؛ فَإِنَّمَا هُوَ عِرْقٌ».

"மாதவிடாய் இரத்தம் என்பது அறியப்பட்ட கருமை நிறமுடையதாகும். ஆகவே அது (வெளியேறுவதாக) இருந்தால் தொழுகையிலிருந்து விலகியிரு. மற்றொன்றாக (வேறு நிறமாக) இருந்தால் உளூச் செய்து தொழுதுகொள். ஏனெனில் அது ஒரு நரம்பு(க் கோளாறு) ஆகும்." இதனை அபூதாவூத், நஸாஈ ஆகியோர் பதிவு செய்துள்ளனர். இப்னு ஹிப்பான், ஹாக்கிம் ஆகியோர் இதனை ஸஹீஹ் எனத் தீர்ப்பளித்துள்ளனர்.61

இந்த ஹதீஸ் அறிவிப்பாளர் தொடர் மற்றும் ஹதீஸ் வாசகம் தொடர்பில் பிரச்சினை இருப்பினும் இதனை அறிஞர்கள் ஆதாரமாகக் கொண்டுள்ளனர். பெரும்பாலான பெண்களின் வழமையை ஆதாரமாகக் கொள்வதை விட இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொள்வது மிகவும் பொருத்தமாகும்.

மூன்றாவது நிலை :– மாதவிடாய்க்கான வழமையை அறியவில்லை, வித்தியாசத்தையும் தெரிந்து கொள்ளவில்லை. அதாவது அவள் இரத்ததை கண்டது முதல் ஒரே மாதிரியாகவும் அல்லது மாதவிடாய் இரத்தமாக இருப்பதற்கு முடியாதளவு பல்வேறுபட்ட நிறங்களில் காணும் நிலை. இவ்வாறான நிலையிலிருக்கும் பெண்கள் பொதுவாகப் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் காலத்தைக் கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும். அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் ஆறு அல்லது ஏழு நாட்கள் மாதவிடாய் ஏற்படும் என்றிருந்தால் முதலில் காணும் இரத்தம் மாதவிடாய் ஆகும். அதன் பின்னர் ஏற்படுவது இஸ்திஹாழா தொடர் இரத்த போக்காகும்.

உதாரணமாக ஒரு பெண் மாதத்தின் ஐந்தாம் நாள் இரத்தம் வெளிவருவதை முதலாவதாகக் காண்கின்றாள். தொடர்ந்து வெளிவரும் அந்த இரத்தத்தின் நிறம், மணம், அடர்த்தி என்பவற்றைக் கொண்டு எந்த வித்தியாசத்தையும் விளங்கிக் கொள்ள முடியாது இருக்கின்றாள். அந்த நிலையில் அவளது மாதவிடாய் நாட்களை ஒவ்வொரு மாதமும் ஐந்தாம் தினத்திலிருந்து ஆறு அல்லது ஏழு நாட்கள் எனக் கணிக்க வேண்டும். இதற்கு பின்வரும் ஹம்னா பின் ஜஹ்ஷ் அவர்களின் ஹதீஸ் ஆதாரமாக உள்ளது. 'ஒரு முறை ஹம்னா பின்த் ஜஹ்ஷ் (ரழி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நான் மிக அதிகமான, கடுமையான 'இஸ்திஹாழா'வினால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு பெண். இது குறித்துத் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்? இது என்னைத் தொழுகை மற்றும் நோன்பிலிருந்து தடுத்துவிட்டது" என்று கூறினேன்.

அதற்கு அவர்கள்,

«أَنْعَتُ لَكِ (أَصِفُ لَكِ اسْتِعْـمَال) الْكُرْسُفَ (وهُـوَ القُطْنُ) تَضَعِينَهُ عَلَى الْفَرْجِ، فَإِنَّهُ يُذْهِبُ الدَّمَ».

"நான் உனக்கு 'குர்சுஃப்' (பருத்திப் பஞ்சு) வைக்குமாறு ஆலோசனை கூறுகிறேன். ஏனெனில் அது இரத்தத்தை உறிஞ்சிவிடும்" என்றார்கள். அதற்கு அவள், "அது (இரத்தம்) அதை விட அதிகமாக உள்ளது" என்றாள். அவர் நபியவர்கள் ,

«إِنَّمَا هَذَا رَكْضَةٌ مِنْ رَكَضَاتِ الشَّيْطَانِ، فَتَحَيَّضِي سِتَّةَ أَيَّامٍ أَوْ سَبْعَةً فِي عِلْمِ اللَّهِ تَعَالَى، ثُمَّ اغْتَسِلِي حَتَّى إِذَا رَأَيْتِ أَنَّكِ قَدْ طَهُرْتِ وَاسْتَنْقَيْتِ فَصَلِّي أَرْبَعًا وَعِشْرِينَ أَوْ ثَلَاثًا وَعِشْرِينَ لَيْلَةً وَأَيَّامَهَا وَصُومِي».

"இது ஷைத்தானின் உதிகளில் ஒன்றாகும். எனவே அல்லாஹ்வின் அறிவில் (உள்ள படி) ஆறு அல்லது ஏழு நாட்கள் உன்னை மாதவிடாய் உள்ளவளாகக் கணக்கிட்டுக் கொள். பிறகு குளித்துவிடு. நீ தூய்மையாகிவிட்டாய் என்றும், உதிரப்போக்கு நின்றுவிட்டது என்றும் கருதினால் இருபத்து மூன்று அல்லது இருபத்து நான்கு இரவுகளும் அதன் பகல்களும் தொழுதே வருவாயாக! நோன்பும் வைப்பாயாக! நிச்சயமாக இது உனக்குப் போதுமானதாகும். இதை அஹ்மத், அபூதாவூத், திர்மிதி ஆகியோர் பதிவு செய்துள்ளனர். திர்மிதி அவர்கள் இதை ஸஹீஹ் எனத் தீர்ப்பளித்துள்ளார் (62). மேலும், அஹ்மத் அவர்கள் இதை ஸஹீஹ் என்றும், புஹாரி அவர்கள் இதை ஹஸன் என்றும் தீர்ப்பளித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது(63).6263

நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் இங்கு 'ஆறு அல்லது ஏழு நாட்கள்' என குறிப்பிட்டது விரும்பிய எதையேனும் தெரிந்தெடுத்துக் கொள்வதற்கல்ல. மாறாக, அது இஜ்திஹாத் அடிப்படையிலாகும். அதாவது ஒரு பெண் தனது வயது, உடல் அமைப்பு போன்ற விடயங்களில் தனக்கு நெருக்கமானவர்களை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அவ்வாறு தன்னுடன் ஒத்துப்போகும் பெண்களுக்கு ஆறு நாட்கள்தான் மாதவிடாய் என்றால் அவள் தனக்கும் ஆறு நாட்கள் என எடுத்துக்கொள்வாள்; சிலவேளை அவர்களுக்கு ஏழு நாட்கள் என்றால் அவளும் ஏழு நாட்கள் என எடுத்துக்கொள்வாள்.

தொடர் உதிரப்போக்கு ஏற்பட்ட பெண்களுக்கு ஒப்பானவர்களின் நிலை :

சில வேளை பெண்ணுறுப்பிலிருந்து இரத்தம் தொடராக வெளிவருவதற்கு கருப்பை மற்றும் அதனை அண்டிய பகுதியில் சத்திர சிகிச்சைமேற்கொண்டது போன்ற ஏதேனும் காரணிகள் இருக்க முடியும். அவ்வாறு வெளிவரும் இரத்தம் இரண்டு வகைப்படும் :

1- சத்திர சிகிச்சையைத்தொடர்ந்து அவளுக்கு மாதவிடாய் ஏற்படுவது சாத்தியமில்லை என்ற நிலை. அதாவது இரத்தம் வெளியே வர முடியாத வகையில் கருப்பையை முழுமையாக அகற்றிவிடல் அல்லது கருப்பையிலிருந்து வெளிவரும் வழியை அடைத்து விடுவிடல் போன்றவற்றை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். இத்தகையவற்றிற்கு இஸ்திஹாழாஹ் தொடர்பான சட்டங்கள் கடைப்பிடிக்கத் தேவையில்லை. சுத்தமாகியதின் பின் மஞ்சள் நிறத்திலான அல்லது கபில நிறத்திலான இரத்தம் அல்லது ஈரத்தன்மை போன்றவை வெளியேறும் போது கடைப்பிடிக்க வேண்டிய சட்டங்களையே இங்கு பின்பற்ற வேண்டும். எனவே, அவள் தொழுவது, நோன்பு நோற்பது போன்றவற்றிலிருந்து தன்னைத் தடுத்துக் கொள்ளக் கூடாது. அவற்றை உரிய முறையில் செய்துவர வேண்டும். மேலும், இத்தகைய கட்டத்தில் அவள் தனது கணவனுடன் உடலுறவு கொள்வதும் தடையாகாது. இவ்விரத்தத்திற்கு கடமையான குளிப்பும் கிடையாது. எனினும், அவள் தொழும் நேரத்தில் இரத்தத்தைக்கழுவி, இரத்தம் வெளியே வராது இருப்பதை தடுப்பதற்காக ஒரு துணியினால் மறை உறுப்பை கட்டிக்கொண்டு பின்னர் தொழுகைக்காக வுழு செய்து கொள்வாள். பர்ளான தொழுகை போன்று நேரம் குறிப்பிடப்பட்ட தொழுகையாக இருந்தால் நேரம் நுழைந்ததன் பின்னரே வுழூச்செய்ய வேண்டும். நப்லான தொழுகையை நிறைவேற்ற விரும்பினால் அவ்வப்போது அவள் அதற்காக வுழு செய்து கொள்வாள்.

இரண்டாம் வகை : சத்திர சிகிச்சை தொடர்ந்து அவளுக்கு மாதவிடாய் வருவது நின்றுவிடும் என்று கூற முடியாத நிலை. இந் நிலையில் மாதவிடாய் வருவது சாத்தியம் என்ற அடிப்படையை வைத்து முஸ்தஹாழாவுக்குரிய சட்டங்கள் பின்பற்ற வேண்டும். இதற்காதாரமாகக் கீழ்க்காணும் ஹதீஸ் அமைகின்றது.

«إِنَّمَا ذَلِكَ عِرْقٌ وَلَيْسَ بِالْحَيْضَةِ، فَإِذَا أَقْبَلَتِ الْحَيْضَةُ فَاتْرُكِي الصَّلَاةَ».

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம) அவர்கள் பாத்திமா பின்த் அபீ ஹுபைஷ் அவர்களுக்கு பின்வருமாறு கூறினார்கள் ' அது மாதவிடாயல்ல அது இரத்த நாலத்திலிருந்து ஏற்படும் ஒரு உபாதையாகும். எனவே, (உண்மையான) மாதவிடாய் ஆரம்பமானால் தொழுகையை விட்டுவிடுங்கள்'.64

நபியின் வார்த்தையில்,

«فَإِذَا أَقْبَلَتِ الْحَيْضَةُ».

”உனக்கு மாதவிடாய் வரும்போது” என்பது உதிரப்போக்கிற்கு உரிய சட்டங்கள் ஆரம்பமும் முடிவுமுள்ள மாதவிடாய் ஏற்படுகின்ற ஒரு பெண்ணுக்கு பொருந்தும், மாதவிடாய் ஏற்பட வாய்பற்ற பெண்ணைப் பொருத்தவரை அவளிடம் வெளிவரும் இரத்தம் இரத்த நாலத்திலிருந்து ஏற்படும்.

(இஸ்திஹாழாவின் ) தொடர் உதிரப்போக்கின் சட்டங்கள்:

மேற்கூறப்பட்டவற்றிலிருந்து பெண்களிடமிருந்து வெளிவரும் இரத்தம் எப்போது மாதவிடாய் இரத்தமாக இருக்கும், எப்போது இஸ்திஹாழா –தொடர் உதிரப்போக்கு- இரத்தமாக இருக்கும் என்பதை நாம் அறிந்து கொண்டோம். எனவே மாதவிடாயாக இருக்கும் சந்தர்ப்பத்தில் அதற்குரிய சட்டஒழுங்குகளையும், இஸ்திஹாழாவாக இருந்தால் அதற்குரிய சட்டங்களையும் கடைப்பிடிக்க வேண்டும்

மாதவிடாய்குரிய முக்கிய சட்ட ஒழுங்குகள் பற்றி நாம் முன்னரே அறிந்து கொண்டோம். தற்போது 'இஸ்திஹாழாவின்' தொடர் உதிரப்போக்கின் சட்டதிட்டங்களை அறிந்து கொள்வோம்.

'இஸ்திஹாழாவின்'; தொடர் உதிரப்போக்கின் சட்டதிட்டங்கள் யாவும் ஒரு பெண் தூய்மையாக இருக்கும் நிலையில் பின்பற்ற வேண்டிய சட்ட ஒழுங்குகளேயாகும். அந்த வகையில் 'முஸ்தஹாழா' தொடர் உதிரப்போக்கு ஏற்பட்ட பெண்களுக்கும் தூய்மையடைந்த பெண்களுக்குமிடையில் பின்வரும் விடயங்களில் தவிர எவ்வித வேறு பாடும் கிடையாது. அவைகள் வருமாறு :

முதலாவது : -முஸ்தஹாழா - தொடர் உதிரப்போக்கு ஏற்பட்ட பெண்கள் தமது ஒவ்வொரு தொழுகைக்காகவும் தனித்தனியாக வுழூ செய்வது கடமையாகும். இதற்கான ஆதாரம் பின்வரும் ஹதீதாகும்: நபி ﷺ அவர்கள் பாத்திமா பின்த் அபி ஹுபைஷ் அவர்களுக்கு,

«ثُمَّ تَوَضَّئِي لِكُلِّ صَلَاةٍ».

"பிறகு அந்த நேரம் வரும் வரை ஒவ்வொரு தொழுகைக்கும் நீ வுழூ செய்துகொள்" என கூறினார்கள். இமாம் புஹாரி இதனை 'இரத்தத்தைக் கழுவுதல்' என்ற பாடத்தில் பதிவு செய்திருக்கிறார். இதன் கருத்தாவது, பர்ழான தொழுகைகளுக்கு அதற்குரிய நேரம் வந்த பின்னரே வுழூ செய்ய வேண்டும் என்பதாகும். ஆனால் நேரம் குறிக்கப்படாத நப்லான தொழுகையாக இருந்தால் அவள் அதனை நிறைவேற்ற விரும்பும் வேளை வுழூ செய்து கொள்ளல் வேண்டும்.

இரண்டாவது : வுழூ செய்யும் முன்னர் இரத்த கறைகளைக் கழுவி தூய்மைப்படுத்தி, இரத்தத்தை உறிஞ்சி வைத்துக் கொள்வதற்காக அவளது மறைவான பகுதியில் ஒரு பருத்தித் துண்டை கட்டிக்கொள்ள வேண்டும். இதற்கு நபியவர்கள் ஹம்னா (ரழி) அவர்களுக்கு கூறிய வழிகாட்டல் ஆதாரமாக உள்ளது :

«أَنْعَتُ لَكِ الْكُرْسُفَ فَإِنَّهُ يُذْهِبُ الدَّمَ». قَالَتْ: فَإِنَّهُ أَكْثَرُ مِنْ ذَلِكَ. قَالَ: «فَاتَّخِذِي ثَوْبًا». قَالَتْ: هُوَ أَكْثَرُ مِنْ ذَلِكَ. قَالَ: «فَتَلَجَّمِي».

நபி ﷺ அவர்கள் ஹம்னா பின்த் ஜஹ்ஷ் அவர்களுக்கு: 'நீர் பருத்தித் துணியை பயன் படுத்துவீராக. அது இரத்தத்தை உறிஞ்சிக் கொள்ளும்' அப்பொழுது அப்பெண், 'அதை விட மிக அதிகமாக வருகின்றதே' எனக் கூறினார். 'அவ்வாறாயின் (பெரிய அளவிலான) துணியை வையுங்கள்.' என்றார்கள். 'அப்பொழுதும் அதைவிட அதிகமாக வருகின்றதே எனக் கூறினார் அந்தப் பெண். 'அவ்வாறாயின் உமது மறைவான இடத்திலிருந்து வரும் இரத்தத்தைக் கட்டுப்படுத்தி வைத்துக் கொள்ளும் வகையில் ஒரு துணியை வைத்து, இருக்கமாக கட்டிக்கொள்ளவும் என்று கூறினார்கள். ஹதீஸ், அவ்வாறு இருகக் கட்டியதன் பின் வெளிவரும் எதுவும் எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பாதிமா பின்த் அபீ ஹுபைஷ் அவர்களுக்கு இவ்வாறு கூறினார்கள்:

«اجْتَنِبِي الصَّلَاةَ أَيَّامَ حَيْضِكِ، ثُمَّ اغْتَسِلِي وَتَوَضَّئِي لِكُلِّ صَلَاةٍ، ثُمَّ صَلِّي، وَإِنْ قَطَرَ الدَّمُ عَلَى الْحَصِيرِ».

உனது மாதவிடாய் நாட்களில் தொழ வேண்டாம், பிறகு குளித்துக்கொள், விரிப்பில் இரத்தத் துளிகள் பட்டாலும் ஒவ்வொரு தொழுகைக்கும் வுழூ செய்துகொள்.' (ஆதாரம் : அஹ்மத், இப்னு மாஜா).65

மூன்றாவது : உடலுறவு கொள்ளுதல் : இதற்கான அனுமதி பற்றி அறிஞர்கள் கருத்து முரண்பாடு கொண்டுள்ளார்கள். இதனை விட்டுவிடுவதால் விபச்சாரம் நிகழும் என்று பயந்தால் உடலுறவு கொள்வதற்கு அனுமதியுள்ளது. என்றாலும் இந்த சட்டப்பிரச்சினையில் சரியான கருத்து விபச்சாரம் நிகழும் என்று பயந்தாலும் பயப்படாமல் இருந்தாலும் உடலுறவு அனுமதிக்கப்ட்டது என்பதாகும். ஏனெனில் நபியவர்களின் காலத்தில் வாழ்ந்த பெண்கள் பத்து அல்லது அதற்கு மேற்பட்ட பெண்கள் (இஸ்திஹாழா) தொடர் உதிரப்போக்கு ஏற்படுவோராக இருந்துள்ளனர். என்றாலும் அல்லாஹ்வோ அவனின் தூதரோ இதனைத் தடுக்கவில்லை. மேலும், அல்லாஹ் கூறுகிறான்:

﴿...فَاعْتَزِلُواْ النِّسَاء فِي الْمَحِيضِ...﴾

ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள். (ஸூரா அல்பகரா : 222) ஏனைய காலங்களில் அவர்களை விட்டும் விலகி இருப்பது கட்டாயமில்லை என்பதற்கு இது ஆதாரமாகும். மேலும், அவளுக்குத் தொழுவதற்கு அனுமதியிருப்பதால், உடலுறவு கொள்வது அதை விட எளிதான சிக்கலற்ற விடயமாகும். அவளுடன் உடலுறவு கொள்வதை, மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணுடன் உடலுறவு கொள்வதோடு ஒப்பிடுவது சரியல்ல. ஏனெனில், அதனைத் தடைசெய்யப்பட்டது என்று கூறுபவர்களிடத்தில் கூட அவ்விரண்டும் சமமானவை அல்ல. மேலும், வித்தியாசம் இருக்கும்போது கியாஸ் செல்லுபடியாகாது.

ஆறாவது பகுதி: நிபாஸும் (பேறுகால உதிரப்போக்கும்) அதன் சட்டங்களும்

நிபாஸ் என்பது ,பேறு காலத்தின் போதோ, பிரசவத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களளுக்கு முன்போ அல்லது பின்போ பெண்ணின் கர்ப்பப்பையில் இருந்து வலியுடன் வெளியாகும் இரத்தத்தைக் குறிக்கும்.

ஷெய்ஹூல் இஸ்லாம் இப்னு தைமியா கூறுகிறார்: ஒரு பெண் பிரசவ வேதனை ஆரம்பமாவதுடன் இரத்தம் வெளிவரக் கண்டால் அது நிஃபாஸ் ஆகும். அது இரண்டு அல்லது முன்று நாட்களுக்கென வரையறுக்கப்படவில்லை. இதன் கருத்தாவது : பிரசவ வேதனையைத்தொடர்ந்து பிரசவம் நிகழ்ந்தால் அது நிபாஸ் இரத்தமாகும். இல்லாவிடில் அது நிபாஸ் இல்லை. அதன் நாட்களுக்கு எல்லை இருக்கின்றதா என்பதில் அறிஞர்கள் கருத்துவேறுபட்டுள்ளனர். ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது நூலில் 'நிஃபாஸ் வெளிவரும் காலத்தை பொறுத்த வரையில் குறைந்த பட்ச காலம் கூடிய காலம் என்ற வரம்பு கிடையாது. ஒரு பெண்ணுக்கு நாற்பது, அறுபது அல்லது எழுபது நாட்களுக்கு மேலாக இரத்தம் வந்து பின்பு நின்றுவிடுகின்றது என்றால் அது நிபாஸுடைய இரத்தமாகும். சிலவேளை இவ்விரத்த வெளியேற்றம் தொடருமாயின் அப்பொழுது நிஃபாஸ் என்பதற்கான உச்சகட்ட வரம்பு நாற்பது நாட்களாகக் கொள்ள வேண்டும் இதுவே அதிகமான பெண்கள் காணும் சாதாரண கால எல்லையாகும். அத்துடன் இக்கால எல்லை குறித்து சில சான்றாதாரங்களும் (ஸஹாபாக்கள் தாபிஈன்களின் கூற்றுக்களும்) வந்துள்ளன'

எனது நிலைப்பாட்டைப் பொறுத்தவரை 'மேற் குறிப்பிட்டவற்றின் அடிப்படையில் ஒரு பெண்ணுக்கு நாற்பது நாட்களுக்கு மேல் இரத்தம் தொடர்ந்தும் வருகிறது என வைத்துக் கொள்வோம். முன்னைய கால வழமையின் படி அதற்குப்பின் நின்றுவிடுமென்றிருப்பின் அல்லது, நிற்பதற்கான அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் அது நிற்கும் வரை எதிர்பார்த்திருப்பாள். இல்லாவிடில் நாற்பது நாட்களைப் பூரணப்படுத்தி, குளித்து தன்னை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். மறுபுறம், அந்த நாற்பது நாட்களையும் பூரணப் படுத்தியதைத் தொடர்ந்து அவளுக்கு மாதவிடாய் காலம் நேர்படுமாயின் அக்காலம் முடியும் வரை பொறுத்திருக்க வேண்டும். அதன் பின்பு அது நின்றுவிடுமானால் அதனை வழமையாக ஆக்கி எதிர்காலத்தில் அதனடிப்படையில் கணித்துக்கொள்ள வேண்டும். எனினும், அவளது வழக்கமான மாதவிடாய் காலத்தையும் கடந்து இரத்த வெளியேற்றம் இருக்குமாயின் அப்பொழுது அதனை இஸ்திஹாழாவாகக் கருதி அதன் சட்டங்களை அவள் கடைப்பிடிப்பாள். அதே வேளை, நாற்பது நாற்களுக்கு முன்னரே நிபாஸ் நின்று சுத்தமடைந்து விட்டால் அவள் குளித்து தொழுவதற்கும் நோன்பு நோற்பதற்கும் உடலுறவு கொளவதற்கும் அனுமதி உண்டு. இரத்தம் நின்று விடுவது ஒரு நாளைக்கும் குறைவாக இருந்தால் அதற்கு எந்த சட்டமும் கிடையாது. இது அல் முஃனி; என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.66

ஒரு பெண் தெளிவான மனித உருவை பெற்றெடுக்காத வரையில் அவளது நிபாஸை உறுதிப்படுத்த முடியாது. விழுகட்டியை பெற்றெடுத்து அது நன்கு வளர்ச்சியடைந்த மனித உருவின் அமைப்பைத் தெளிவாகக் காட்டாத நிலையில் அதனுடன் வெளிவந்த இரத்தத்தை நிபாஸ் எனக் கொள்ள முடியாது. மாறாக அது இரத்த நாலத்திலிருந்து வெளிவந்த இரத்தம் என்றே கருத வேண்டும். ஒரு மனித உரு கருவில் உருவாகி வளர்ச்சியடைவதற்கு அது கருத்தரித்த தினத்திலிருந்து மிகக் குறைந்தபட்சம் என்பது நாட்கள் ஆகும்; கூடியபட்சம் தொண்ணூறு நாட்களாகும்.

அல் மஜ்த் இப்னு தைமிய்யா அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்: 'ஒரு பெண் எப்போது பிரசவவேதனைக்கு முன் இரத்தம் வரக் கண்டால் அதை பொறுட்படுத்த வேண்டியதில்லை. பிரசவ வேதனையின் பின் இரத்தம் வரக்கண்டால் அவள் தொழுகை நோன்பு என்பவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும். என்றாலும் அவள் தனது குழந்தையைப் பிரசவித்ததன் பின் பிரசவ வேதனைக்கு முன் வந்த இரத்தம் நிபாஸாக இருந்ததை அறிந்தால் அவள் அக்காலப்பகுதியில் விட்ட தொழுகைகளையும் நோன்பையும் மீண்டும் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு இல்லாதிருந்தால் வெளிரங்கமான சட்டத்தையே கடைப்பிடிக்க வேண்டும். ஆகவே தொழுகை மற்றும் நோன்புகளை மீண்டும் கழாச் செய்ய வேண்டியதில்லை' இக்னாஃ என்ற நூலின் விரிவுரையில் மஜ்த் இப்னு தைமியா கூறியாதக குறிப்பிடப்பட்டுள்ளது67

நிபாஸுக்குரிய (பேறு காலத்தில் ஏற்படக்கூடிய இரத்தத்தின்) சட்டங்கள்:

நிபாஸுக்குரிய சட்டங்கள் யாவும் மாதவிடாய்க்கான சட்டங்களைப் போன்றதுதான். ஆனால் பின்வரும் விடயங்களில் வித்தியாசப்படுகின்றன:

முதலாவது: இத்தா நிஃபாஸுடன் அல்லாது விவாகரத்தின் மூலமே கணிக்கப்படுகிறது. அதாவது:தலாக் (விவாகரத்து) பிரசவத்திற்கு முன்னர் செய்யப்பட்டால் இத்தாவானது பிரசவத்துடன் முடிவடைகின்றது. அன்றி, அதற்கும் நிபாஸுடைய காலத்திற்கும் எதுவிதத் தொடர்புமில்லை. சிலவேளை பிரசவத்தின் பின் தலாக் சொல்லப்பட்டால் அவள் தனது மாதவிடாய் வரும்வரை காத்திருந்து முன்னறே விவரித்தபடி அவளது இத்தாவை கணிக்க வேண்டும்.

இரண்டாவது 'ஈலாவுடைடைய காலம் மாதவிடாய் காலத்தை வைத்தே தீர்மானிக்கப்படுமே தவிர நிபாஸுடைய காலத்தை வைத்து தீர்மானிக்கப்டுவதில்லை.

'அல் ஈலாஉ' என்பது ஒரு கணவன் நிரந்தரமாக அல்லது நான்கு மாதத்திற்கு மேல் தனது மனைவியுடன் உடலுறவு கொள்வதில்லையென சத்தியம் செய்வதைக் குறிக்கும்.-இத்தகைய கட்டத்தில் குறித்த மனைவி, உடலுறவு கொள்ள வேண்டும் என உரிமையுடன் கேட்பாளாயின் அக்கணவனுக்கு சத்தியம் செய்த நாளிலிருந்து நான்கு மாதங்கள் அதற்காக கால அவகாசம் வழங்கப்படும்;.இக்கால எல்லை நிறைவடைந்ததும் ஒன்றில் உடலுறவில் ஈடுபட அல்லது மனைவியை பிரிவதற்கு (நீதிபதியால்) கட்டாயப்படுத்தப்படுவார். எனவே, இக்கால எல்லைக்குள் மனைவிக்கு நிபாஸ் ஏற்பட்டால் அது கணவன் மீது கணிக்கப்படமாட்டாது. அவள் சுத்தமாவதற்கு சமமான காலத்தைக் கணித்து ஈலாவுடைய காலத்துடன் சேர்க்கப்படும். இது மாதவிடாயிலிருந்து வித்தியாசமானது. மாதவிடாய்குரிய கால கணவன் மீது கணிக்கப்படும்.

மூன்றாவது : ஒரு பெண்ணின் பருவமடைதல் என்பது மாதவிடாய் ஏற்படுதலின் மூலமே நிகழ்கிறது. மாற்றமாக நிபாஸ் ஏற்படுவதைக்கொண்டல்ல. அவளைப் பொருத்தவரை ஒரு வகை நீர் வெளிப்படும் வரையில் கருத்தரிப்பது நிகழமாட்டாது. ஆகவே பருவமெய்தல் என்பது கருத்தரிப்பதற்கு முன்னர் வெளிப்படும் நீரின் மூலம் ஏற்படும் ஒரு விடயமாகும்.

நான்காவது : மாதவிடாய் இரத்தமானது இடையில் நின்றுவிட்டு பின்னர் மீண்டும் வழமையான சுழட்சி முறைப்படி வந்தால் அது உண்மையான மாதவிடாயாகும். உதாரணமாக ஒரு பெண்ணின் வழமையான மாதவிடாய் காலம் எட்டு நாட்களாக இருந்து, அது நான்காவது நாளில் நின்று விடுகிறது எனக் கொள்வோம். பின் தொடர்ந்து இரண்டு தினங்கள் ஐந்தாம் ஆறாம் நாட்களிலும் அதே நிலையில் இருப்பதைக் காண்கிறாள். பின் ஏழாம் எட்டாம் நாட்களில் மீண்டும் இரத்தம் வெளிப்படுவதைக் கண்டால் அது மாதவிடாயாகவே கருதப்படும் அப்போது அதற்குரிய சட்டங்களைப் அவள் பின்பற்ற வேண்டும். ஆனால் நிஃபாஸுடைய இரத்தம் நாற்பது நாட்களுக்கு முன் நின்று, மீண்டும் நாற்பதாவது நாள் வெளிவருகின்றதெனில் அது சந்தேகத்திற்குரியது. அப்போது அவள் உரிய வேளையில் தொழுகை, நோன்பு ஆகிய கடமைகளை நிறைவேற்ற வேண்டும். கட்டாயக் கடமைகளைத் தவிர வேறு எவையெல்லாம் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளனவோ அவை இவளுக்கும் தடையானவையே. மாதவிடாய் ஏற்பட்ட ஒரு பெண் எவற்றையெல்லாம் கழா செய்கிறாளோ அவற்றை இவளும் கழாச்செய்ய கடமைப்பட்டவளாவாள். இதுவே ஹன்பலி மத்ஹப் சட்ட அறிஞர்களின் பிரபல்யமான நிலைப்பாடாகும்68

இதில் சரியான நிலைப்பாடு யாதெனில் 'நிபாஸுடையதாக இருக்கும் என்று கருதக்கூடிய காலப்பகுதியாகியில் இரத்தம் வெளிப்படுமாயின் அது நிபாஸுடைய இரத்தமாகவும் அவ்வாறு இல்லாவிட்டால் அது மாதவிடாயாகவும் கருதப்படும். அது தொடர்ந்தும் ஏற்பட்டால் இஸ்திஹாழா இரத்தமாகும்.'

இக்கூற்றானது இமாம் மாலிகின் மூலமாக குறிப்பிடபட்ட கருத்துக்கு மிக நெருக்கமான கூற்றாக உள்ளது. அக்கூற்றையே (இமாம் இப்னு குதாமா அல் மக்திஸி அவர்கள்) முஃனி என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். இமாம் மாலிகின் கருத்து வருமாறு :69 இரத்தம் வெளிவருவது நின்று இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப்பின் மீண்டும் வரக்கண்டால் அது நிஃபாஸுடைய இரத்தமாகும். அவ்வாறில்லையாயின் அது மாதவிடாயுடைய இரத்தமாகும். என்று குறிப்பிடுகிறார். இதையே ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமியா அவர்களின் தேர்வுமாகும்.

அதாவது நடை முறை ஒழுங்கில் இரத்தத்தில் எதுவும் சந்தேகத்திற்கிடமானவை என்பது இல்லை. சந்கேம் என்பது ஒரு ஒப்பீட்டளவிளான விடயமாகும். அது மனிதர்களின் அறிவு, புரிதல் ஆகியவற்றின் அடிப்படையில் வித்தியாசப்படும். அல்லாஹ் அருளிய குர்ஆனிலும், தூதர் முஹம்மத் அவர்களுடைய ஸுன்னாஹ்விலும் அனைத்துக்குமான தெளிவு இருக்கிறது. நோன்பு, தவாஃப் போன்ற கடமைகளை நிறைவேற்றும் பொழுது முதல் தடவையாக ஏதும் தவறுகள் நடந்தாலன்றி அவற்றை இருமுறை நிறைவேற்றும்படி அல்லாஹ் எவருக்கும் பணிக்கவில்லை. ஒரு அடியானுக்குரிய பணிகள் அல்லது கடமைகள் யாவும் அவனின் சக்திக்குட்பட்ட வகையில்தான் நிறைவேற்றப்பட வேண்டும். அவ்வாறு அவன் நிறைவேற்றும் போது அவன் மீதுள்ள பொறுப்பு நீங்கி விடுகிறது. அல்லாஹ் இது குறித்து குறிப்பிடுகையில் :

﴿لَا يُكَلِّفُ ٱللَّهُ نَفۡسًا إِلَّا وُسۡعَهَا...﴾

அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை (ஸூரா அல்பகரா : 286). மேலும் அல்லாஹ் கூறுகிறான் :

﴿فَٱتَّقُواْ ٱللَّهَ مَا ٱسۡتَطَعۡتُمۡ...﴾

"ஆகவே, உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்". (ஸூரா அத்தஃகாபுன் : 16).

மாதவிடாய்க்கும் நிபாஸுக்குமிடையிலான ஐந்தாவது வித்தியாசம் : ஒரு பெண் வழமையான மாதவிடாய் காலத்திற்கு முன்னர் சுத்தமடைந்து விடுவாளாயின் அவளது கணவர் அவளுடன் உடலுறவு கொள்வதற்கு அனுமதியுண்டு. நிபாஸைப் பொறுத்தவரையில் ஹன்பலி மத்ஹபின் பிரபல்யமான கருத்தின் படி நாற்பதுக்கு முன் அவள் சுத்தமானால் உடலுறவு கொள்வது மக்ரூஹ் (வெறுக்கப்பட்டது) ஆகும். என்றாலும் இது வெறுக்கப்பட்டதல்ல என்பதே சரியான கருத்தாகும். அதுவே (நிபாஸ் நின்று விட்டால் உடலுறவு கொள்வது அனுமதிக்கப்பட்டது என்பதே) பெரும்பாலான இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துமாகும். ஏனெனில் விரும்பப்படவில்லை (மக்ரூஹ்) என்பது இஸ்லாமிய சட்டமாகும். எனவே, அவ்வாறு சொல்வதற்கு மார்க்க ஆதாரம் அவசியமாகும். இது தொடர்பாக இமாம் அஹ்மத் அவர்கள் உஸ்மான் இப்னு அபில் ஆஸ் அவர்கள் மூலம் அறிவிக்கும் ஒரு விடயத்தைத் தவிர வேறு ஆதாரமில்லை. அந்த சான்று பின்வருமாறு 'அபில் ஆஸின் மகன் உஸ்மானை அவரது மனைவி தனது (நிஃபாஸின்) நாற்பது நாட்களுக்குரிய கால எல்லை முடிவடையும் முன்னர் நெருங்கினார். அப்பொழுது அவர் (கணவரான உஸ்மான்) 'என்னிடம் நெருங்கவேண்டாம்' என்றார்.'70

இந் நிகழ்வு நிபாஸின் போது உடலுறவு கொள்வது மக்ரூஹ் என்பதை வேண்டி நிற்காது. மாறாக அவர் அவ்வாறு சொல்வதற்கு, அவள் நிபாஸிலிருந்து சுத்தமாகிவிட்டாளா என்பதில் உறுதி இல்லாமல் இருக்கலாம் என நினைத்திருக்கலாம்; அல்லது அவளுடன் உடலுறவு கொள்வதால் மீண்டும் இரத்தம் வர ஆரம்பித்து விடலாம் என நினைத்திருக்கலாம்; அல்லது வேறு காரணங்களும் இருக்கக்கூடும். அல்லாஹ் மிக அறிந்தவன்.

 


விரிவாக்கம் ஏழு: மாதவிடாய் வராது தடுக்கின்ற அல்லது அதனை வரவழைக்கத்தக்க, அல்லது கருவுறாது தடுக்கக்கூடிய அல்லது கருக்கலைப்பை ஏற்படுத்தக்கூடியவற்றை பயண்படுத்தல்.

ஒரு பெண் மாதவிடாயை தடுப்பதற்குரிய மாத்திரை அல்லது அது போன்றவற்றை பின்வரும் இரண்டு நிபந்தனைகளின் அடிப்படையில் பயன்படுத்த அனுமதியுள்ளது.

முதலாவது : அதனைப் பயன் படுத்துவதால் எவ்விதப் பாதிப்பும் ஏற்படக் கூடாது. அவ்வாறு பாதிப்பு ஏற்படுமாயின் அதனை பயன்படுத்தக் கூடாது. அல்லாஹ் கூறுகின்றான் :

﴿...وَلَا تُلۡقُواْ بِأَيۡدِيكُمۡ إِلَى ٱلتَّهۡلُكَةِ...﴾

இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள் (அல் பகரா : 195)

﴿...وَلَا تَقۡتُلُوٓاْ أَنفُسَكُمۡۚ إِنَّ ٱللَّهَ كَانَ بِكُمۡ رَحِيمٗا﴾

நீங்கள் உங்களையே கொலை செய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான். (ஸூரா அந்நிஸா : 29)

இரண்டாவது :மாதவிடாயை தடுக்கின்வற்றை பயன் படுத்துவதால் அது கணவரைப் பாதிக்குமாயின் அப்பொழுது அவரது அனுமதியைப் பெறுவது பிரதானமாகும். உதாரணமாக, ஒரு பெண் விவாகரத்துக்கான இத்தாவில் இருப்பதாக வைத்துக் கொள்வோம், அப்பொழுது அவளுக்கான செலவை கணவரே பொறுப்பேற்றிருப்பார்;. அவள் தனது இத்தா காலத்தை நீடிக்க மாதவிடாய்த் தடுப்புகளைப் பயன்படுத்துகிறாள். இவ்வேளை கணவன் அவளுக்காக அதிகம் செலவு செய்யவேண்டியிருக்கும். எனவேதான், அவள் தனது கணவரிடம் அனுமதியைப் பெறாமல் அவற்றைப்பயன்படுத்துவது கூடாது. அதேபோல், மாதவிடாய்த் தடுப்புக்களை பயன்படுத்துவதால் ஒரு பெண் கருத்தரிக்காது விடலாம் என்ற அச்சம் இருக்குமாயின், அப்பொழுதும் கணவரின் அனுமதியின்றி அத்தகைய தடுப்பு முறைகளைப் பயன்படுத்துவது கூடாது. இவ்வாறு தடுப்புகளை உபயோகிப்பது அனுமதிக்கப்பட்டதாக இருப்பினும் அதனை பயன்படுத்தாது இருப்பதே மிகவும் சிறந்தது. இயற்கையாக வெளிவரும் இந்த இரத்தத்தை அவ்வாறே விட்டுவிடுவது ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பிற்கும் நல்லதாகும்.

அதே போன்று மாதவிடாயை வரவழைக்கின்றவற்றை பயன்படுத்துவதும் பின்வரும் இரண்டு நிபந்தனைகளின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

முதலாவது : ஒரு கடமையிலிந்து விலகிச்செல்வதற்கான உபாயமாக இருக்கக் கூடாது. அதாவது ரமழான் நெருங்கி வரும் வேளையில் நோன்பு நோற்காமலும், தொழாமலும் இருப்பதற்காக பயன்படுத்துதல்.

இரண்டாவது: மாதவிடாய் ஏற்படுவதற்கான மருந்துகளைப் பயன்படுத்த தனது கணவனின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும். ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்படுவதற்கான மருந்து உபயோகிப்பதன் மூலம் அவளுக்கு மாதவிடாய்உண்டாகி, அவளது கணவன் அவளுடன் முழு இன்பத்தையும் அனுபவிக்க அது தடையாக இருக்கிறது. எனவேதான் அதனை பயன்படுத்துவதற்கான அனுதியைப் அவள் தனது கணவனிடம் பெறவேண்டும். மேலும், அவள் விவாகரத்து செய்யப்பட்டிருந்து, அது மீட்டெடுப்புக்குரிய காலமாக இருப்பின் அவளது கணவன் அவளை மீட்டெடுக்கும் இத்தா காலம் துரிதமாக முடிவடைந்துவிடுவதற்கு காரணமாக அமையும். அதாவது இஸ்லாமிய ஷரீஆ வரையறுத்த கால எல்லைக்கு முன்னறே மீட்டெடுத்துக்கொள்வதற்கான காலம் முடிவடையும் அபாயம் உள்ளது.

கருத்தரிப்பதை தடுக்கக் கூடியவற்றைப் பயன்படுத்தல். இது இரண்டு வகைப்படும்.

முதலாவது வகை : கருத்தரிப்பை முற்றாகத் தடுப்பவை. இவ்வாறனவற்றை உபயோகிப்பதற்கு அனுமதியில்லை, (இவற்றை பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டதாகும்) காரணம் அது கருவுருதை தடுத்து சந்ததிகளைக் குறைத்துவிடுகிறது. இது முஸ்லிம்கள் பெருக வேண்டும் என்ற இஸ்லாமிய ஷரீஆவின் இலக்கிற்கு முரணான விடயமாகும். அத்துடன் இவ்வாறான நிரந்தர கருத்தடை மருந்துகளை உபயோகிப்பதால் ஒரு பெண் தனக்கிருக்கும் பிள்ளைகள் எல்லோரும் மரணமடையாது இருப்பர் என்று உறுதி கூற முடியாது. இக்கட்டத்தில் நிரந்தர கருத்தடை செய்து பிள்ளைப் பெறுவதை தடை செய்து கொண்டால் அவளது பிள்ளைகள் மரணித்து சந்ததியற்றவளாக இருக்கும் நிலை ஏற்படலாம்.

இரண்டாவது வகை: தற்காலிகமாக கருத்தரிப்பை தடுத்து கொள்ளல். இந்த வகையைப் பொருத்தவரை ஒரு பெண் அதிகம் கருத்தரிப்பவளாக இருக்கிறாள், அவ்வாறு அவள் அடிக்கடி ஒவ்வொரு வருடமும் கருத்தரிப்பது அவளைப் பலவீனமடையச் செய்கிறது. ஆதலால் அவள் தனது கருத்தரித்தலை இரண்டு வருடத்திற்கு ஒரு முறை அல்லது அது போன்று ஒழுங்குபடுத்திக் கொள்ள விரும்புகிறாள். இவ்வாறு செய்வதில் எவ்விதப் பிரச்சினையும் கிடையாது., அவளது கணவனும் அனுமதியளித்து, அந்த கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்துவதில் எவ்விதப்பாதிப்பும் இல்லை எனக் கண்டால் இக்கட்டத்தில் தற்காலிக கருத்தடை சாதனங்களை மருந்துகளை பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டதே! இதற்கு ஆதாரமாக பின் பின்வரும் செய்தி உள்ளது. நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் காலத்தில் நபித்தோழர்கள் தமது பெண்கள் கருவுராமல் இருப்பதற்காக விந்து பெண்ணை சென்றடைவதை 'அzஸ்ல்' தடை செய்தார்கள்! இதனை அவர்களுக்கு நபியவர்கள் தடைசெய்யவில்லை. 'அzஸ்ல்' என்பது ஒருவர் தன்னுடைய மனைவியுடன் பாலுறவு கொண்டு விந்து வரும் கட்டத்தில் தனது ஆணுறுப்பைப் பெண்ணுறுப்பிலிருந்து எடுத்து விந்தை வெளியில் விடுவதையே குறிக்கும்.71

கருக்கலைப்பு செய்வதற்கான மருந்துகளைப் பயன்படுத்துவது இருவகைப்படும்.

முதலாவது வகை: ஒரு பெண்ணின் கருப்பையில் உள்ளதை அழித்துவிட நாடுதல். இந்த வகையைப் பொருத்த வரை அந்த கருவானது உயிரூட்டப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாறு செய்ய நாடினால் அது தடைசெய்யப்ட்டதாகும்- ஹராமாகும் என்பதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. ஏனெனில், அது எவ்வித நியாயமான காரணமுமின்றி ஓர் உயிரைக் கொலைசெய்யும் கொடிய குற்றச் செயலாகும்' இவ்வாறு செய்வது அல் குர்ஆன் ஸுன்னா, இஜ்மா போன்ற அடிப்படைகளின் படி ஹராமானதாகும். உயிர் ஊதப்படுமுன் கருவை கலைப்பதை பொருத்தவரை அறிஞர்களிடம் இரு வேறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன. சில அறிஞர்கள் 'அனுமதிக்கத்தக்கது' எனவும் மற்றும் சிலர் அனுமதிக்கத்தக்கதல்ல எனவும் கூறுகின்றனர். சில அறிஞர்கள் அது 'அலகா' (இரத்தக் கட்டி) என்ற நிலையில் இல்லாமலிருந்தால் அனுமதிக்கப்படலாம் என்று கூறுகின்றனர். அதாவது கருத்தரித்து நாற்பது நாட்களுக்குக் குறைவாக இருக்கும்போது அது அனுமதிக்கப்படலாம் என்பது அவர்கள் கருத்தாகும். எனினும் மற்றும் சிலரின் கருத்துப்படி கரு மனித உருவின் அமைப்பைப் பெறாத நிலை வரை இது அனுமதிக்கப் படலாம் எனக் கூறுகின்றனர்.

எவ்வாறாயினும், நியாயமான எவ்விதக் காரணமுமின்றி கருவை கலைக்காமல் இருப்பதில் கவனம் செலுத்துவதே பேணுதலுக்குரிய காரியமாகும். உதாரணமாக ஒரு தாய் கருவை சுமக்க முடியாத அளவுக்கு சுகயீனமுற்று இருப்பாளாயின் அவளது அந்தக் கரு மனித உருவமைப்பை பெற்றில்லாவிட்டால் அதை கலைப்பது அனுமதிக்கப்படும். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

இரண்டாவது வகை :கருவை அழிக்கும் நோக்கம் இன்றி அதனை வெளியே எடுத்தல்.

அதாவது ஒரு பெண் கர்பகாலம் முடிவுற்று பிரசவம் அன்மித்த வேளையில், தாய்க்கும் அவளின் பிள்ளைக்கும்; எவ்விதத் தீங்கு ஏற்படாதவாறு, சத்திரசிகிச்சை இல்லாது மிகக் கவணமாகக் காரியமாற்றி பிள்ளையை வெளியே எடுப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது. என்றாலும் சத்திர சிகிச்சை மேற்கொண்டு கருவை அகற்றுவதாக இருந்தால் அதற்கு பின்வரும் நான்கு வழி முறைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

வழிமுறை (1) தாயும் சேயும் உயிருடன் இருக்கும் போது பிள்ளையைப் பெற்றெடுப்பதில் சிக்கல்கள் ஏதும் இருப்பின் இத்தகைய கட்டத்தில் மாத்திரம் சத்திர சிகிச்சை மூலம் பிள்ளையை வெளியே எடுப்பது அனுமதிக்கப்பட்டதாகும். இதுவும் நிர்ப்பந்த நிலையில் அனுமதிக்கப்படுவதற்கான காரணம் யாதெனில் மனித உடல் அமானிதமாகும். அதனை மிகப்பெரும் நலனை முன்னிருத்தாது ஓர் ஆபத்தான நிலைமைக்கு உட்படுத்திவிடக் கூடாது. சில வேளை சத்திரசிகிச்சையினால் எவ்விதப்பாதிப்பும் கிடையாது என நினைத்து அதனை மேற்கொண்டு விடுவதனால் பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்புண்டு.

வழிமுறை (2) தாயும் சேயும் இறந்திருக்கும் போது சத்திரசிகிச்சை மேற்கொள்வதால் எத்தகைய பயனும் கிடையாது என்பதால் இது அனுமதிக்கப்படவில்லை.

வழிமுறை (3) தாய் உயிருடன் இருக்க. சேய் இறந்தபோது தாய்க்கு ஏதும் ஆபத்து நேரும் என்ற அச்சம் இல்லாதிருந்தால் இறந்திருக்கும் சேயை அகற்றுவதற்கு சத்திரசிகிச்சை செய்ய அனுமதியுண்டு. காரணம் இறந்த சேயை சத்திர சிகிச்சை மேற்கொள்ளாது அகற்ற முடியாது என்பது தெளிவான விடயமாகும். மேலும் மரணித்த அந்த சிசுவானது கருப்பையில் தொடர்ந்தும் வைத்திருப்பது அவளுடைய எதிர்கால பிரசவங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதுடன் பாதிப்பை ஏற்படுத்தலாம். அத்துடன்,அவளது முந்திய கணவனிடமிருந்து விவாகரத்து பெற்று இத்தாவில் இருக்கும் பொழுது அந்நிலை இருந்தால் அவளை ஒரு துணையற்ற விதவையாகவே மாற்றிவிட இடமுண்டு. ஆகையால் இவ்வாறான நிலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்வதில் எவ்விதத்தடையும் கிடையாது.

வழிமுறை (4) தாய் இறந்து சேய் உயிருடன் இருந்தும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்று இருந்தால் அப்பொழுது அதனை சத்திர சிகிச்சையின் மூலம் அகற்றுவது அனுமதிக்கப்பட்டதல்ல.

ஆனால், உயிர் பிழைக்க வாய்ப்பிருந்து, அதன் சில பகுதிகள் வெளிவந்திருந்தால் அப்பொழுது –வயிற்றைப் பிளந்து-சத்திர சிகிச்சை மூலம் அதனை வெளியே எடுப்பது அனுமதிக்கத்தக்கதாகும். இதற்கு மாறாக சிசுவின் எதுவும் வெளிவராத கட்டத்தில் வயிற்றைப் பிளந்து சிசுவை வெளியே எடுப்பது அந்த உடலை வதைத்து 'சித்திரவதை செய்தல் என்பதற்கு உட்படும் என்பதால் அதனை எமது ஹன்பலி மத்ஹபை சேர்ந்த சில சட்ட வல்லுனர்கள் அனுமதிக்க வில்லை. ஆனால் சத்திர சிகிச்சையின் மூலமே சிசுவை வெளியே எடுக்கலாம் என்றிருந்தால் அதனை மேற்கொள்வதில் எவ்விதத் தடையும் கிடையாது. இதுவே சரியான நிலைப்பாடுமாகும். இதுவே இமாம் இப்னு ஹுபைராவின் தெரிவுமாகும். இது குறித்து அவர் தனது இன்ஸாப் என்ற நூலில் தேவையேற்படுமென்றிருந்தால் வயிற்றை பிளந்து எடுப்பது என்பதே பொருத்தமான கருத்தாகும் என்று குறிப்பிடுகிறார்.72

குறிப்பபாக, இந்த சட்டப்பிரச்சினை தொடர்பாக எனது கருத்து (ஸாலிஹ் இப்னுல் உஸைமீன்நிலைப்பாடு) என்னவென்றால், வயிற்றை சத்திர சிகிச்சை மூலம் திறந்து உள்ளேயுள்ள பிள்ளையை வெளியே எடுப்பது குறிப்பாக இக்கால கட்டத்தில் அத்தியாவசியமானதாகும். அது சித்திரவதை என்று கூற முடியாது. காரணம், வயிற்றைத் திறந்து மீண்டும் முன்பிருந்தது போல் அதைத் தைத்து விடும் அளவுக்கு மருத்துவத்துறை வளர்ந்துள்ளது. அதே போல் இறந்து விட்ட ஒருவரை விடவும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவரை பாதுகாப்பது மிகவும் புனிதமானது. மேலும் ஒன்றுமே அறியாத ஒரு ஜீவனை அழிவிலிருந்து பாதுகாப்பது மிகப்பெரும் கடமையாகும். ஆகவே கருப்பையில் இருக்கும் உயிருள்ள ஜீவன் பாதுகாக்கப்படவேண்டியது அதனை மீட்டெடுப்பது கட்டாயக் கடமையாகும். அல்லாஹ்வே நன்கறிந்தவன்

குறிப்பு: கருவை கலைப்பதற்கு அனுமதிக்கப்பட்ட நிலைகளில் அதற்குச் சொந்தக்காரரான கணவனின் அனுமதியைப்பெருவது அவசியமாகும். இறுதியாக

நான் எடுத்துக் கொண்ட இந்த முக்கிய தலைப்பில் நான் எழுத விரும்பிய என் கருத்துக்களை உங்கள் முன் சமர்ப்பித்து விட்டேன். இங்கு நான், இது தொடர்பான அடிப்படை விடயங்களையும் வரையறைகளையும் மாத்திரமே குறிப்பிட்டுள்ளேன். இத்தலைப்போடு தொடர்பான கிளையம்சங்களும், அதன் உட்பிரிவுகளும், பெண்களுக்கு நிகழ்கின்ற விடயங்களும் கடல் போன்று மிகவும் விசாலமானவை. என்றாலும் இத்துரை பற்றி அறிவுள்ளோருக்கு கிளையம்சங்களை அடிப்படை அம்சங்களோடும் உட்பகுதிகளை பொதுவானவற்றுடனும் அதன் வரையறைகளுடன் ஒப்பிட்டு விளங்கி மிகச் சிறந்த முடிவுகளை அவர்களால் பெறமுடியும்.

மார்க்கத்தீர்பு வழங்கும் முப்தி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கொண்டு வந்ததை மக்களுக்கு எத்திவைப்பதில் அல்லாஹ்வுக்கும் அவனின் அடியார்களுக்கு மத்தியில் மத்தியஸ்தராக உள்ளார் என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் அவர் அல்லாஹ்வின் வேதமான அல்குர்ஆனிலும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களது ஸுன்னாஹ்விலும் வந்துள்ளவற்றை பின்பற்றி நடக்கும் பொறுப்புக்குரியவர். ஏனெனில் அந்த இரண்டு மூலாதாரங்களில் உள்ளவற்றை விளங்கி அதன் படி ஒழுகவே அடியார்கள் பணிக்கப்பட்டுள்ளனர். அல்குர்ஆனுக்கும் ஸுன்னாவுக்கும் முரணானவை தவறுகளாகும். அந்த முரணான கருத்தை கூறியவரிடமே அதனை விட்டு விடுவதுடன் அத்தகைய தவறுகளை நடைமுறைப்படுத்தவோ பின்பற்றவோ கூடாது. அவற்றைத் தனது இஜ்திஹாத் மூலம் மன்னிக்கப்படக்கூடிய ஒரு முஜ்தஹித் முன்வைத்தாலும் சரியே. எனினும் அவரது தவறை அறிந்த பிற ஆலிம் அவரது கருத்தை ஏற்றுக்கொள்வது கூடாது.

ஒரு முஃப்தி இஹ்லாஸ் எனும் அல்லாஹ்வுக்கென்ற தூய எண்ணத்தை கொண்டிருப்பது கடமையாகும். ஏற்படும் எல்லா நிகழ்வுகளுக்கும் (சட்டப்பிரச்சினைக்கும்) அவனிடமே உதவி தேட வேண்டும். மேலும் மிகச் சரியான முடிவுகளின் பால் வழிகாட்டப்படவும் உறுதியாக இருக்கவும் அவனிடமே பிரார்த்திக்க வேண்டும்.

மேலும் மார்க்கத்தீர்ப்பு வழங்கும் அறிஞர் (முப்தி) அல்குர்ஆனிலும் ஸுன்னாவிலும் வந்தவற்றையே கருத்திற்கொள்ள வேண்டும். அதில் அவதானம் செலுத்தி பிரச்சினைகளுக்கான தீர்வுகளை தேட வேண்டும். அல்லது அவ்விரண்டையும் விளங்குவதில் அறிஞர்களின் கருத்துக்களை துணையாகக் கொள்வது அவசியமாகும்.

ஏதாவது சட்டப்பிரச்சினை ஒன்று தோன்றும் போது அது குறித்த தீர்வுகளை முன்வைப்பதற்காக அறிஞர்களின் கருத்துக்களைத் தேடிச் செல்வது அதிகம் நிகழும் விடயமாகும். பின்பு, அத்தீர்ப்புக்களில் திருப்திகரமான ஒன்றை பெற்றுக்கொள்ளமாட்டார். சில வேளை அது தொடர்பான விடயத்தை கண்டுகொள்ளவே முடியாது போகும். எனவே, அவர்களின் தூய எண்ணம், அறிவு, புரிதல் ஆகியவற்றினூடாக அல்குர்ஆனையும் நபிகளாரின் ஸுன்னாவையும் அணுகினால், தெளிவானதும் மிக நெருக்கமானதுமான தீர்வுகளை பெற்றுக்கொள்வார்கள் என்பதே யதார்த்தமாகும்.

மார்க்கத்தீர்ப்பு வழங்கும் அறிஞர் (முப்தி) கருத்திற் கொள்ள வேண்டிய முக்கிய விடயங்களில், மார்க்கத் தீர்ப்பு வழங்குவதில் அவர் அவசரப்படாமலிருப்பதாகும். ஆய்வின்றி அவசரமாக வழங்கப்பட்ட எத்தனையோ தீர்ப்புகள் குறுகிய காலத்தில் ஆய்வுக்குப் பிறகு அத்தீர்ப்பு பிழையென முடிவு கிடைக்கும். அதனால் பிழையான தீர்ப்பினை வழங்கி, அதன் விளைவுகள் காரணமாக பின்னர் வருந்த நேரிடலாம். சில வேலை அத்தீர்ப்பை அதிகமானோர் பின்பற்றும் நிலை தோன்றினால் அதனை மீளப்பெறவும் முடியாத துரதிஷ்ட நிலை உருவாகலாம். ஆகவே மார்கத்தீர்ப்பு வழங்குபவர் அவசரப்படக் கூடாது.

ஒரு குறிப்பிட்ட முப்தியிடம் (மார்க்கத்தீர்ப்பு வழங்கும் அறிஞர்) தீர்ப்புக் கோரி முன்வைக்கப்படும் விவகாரங்கள் தொடர்பாக மிகுந்த நிதானத்துடனும் குறித்த தகவல்களை திட்டப்படுத்திக் கொண்டும் தீர்ப்பு வழங்குவாராயின், அவரை மக்கள் நம்புவதோடு அவரது தீர்ப்புக்களை ஆர்வத்துடன் கருத்தில் கொள்வர். அவ்வாறில்லாது, தீர்ப்பு வழங்குவதில் அவர் அவசரப்பட்டால், அவர் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை இல்லாது போய்விடும். அது மாத்திரமின்றி அவரிடம் காணப்படும் அறிவு மற்றும் சரியான தீர்வுகளை மக்கள் அறிந்து பயன்பெறும் நிலையும் அற்றுப் போய்விடும்.

உயர்ந்தோனாகிய அல்லாஹ்விடம் எமக்கும் எமது முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கும் நேரான வழியை காட்டுமாறும் பிரார்த்திப்பதோடு, மேலும், அவனுடைய அருளினால் எம்மை பொருப்பேற்க வேண்டுமெனவும்; அவனின் விசேட பாதுகாப்பின் மூலம் எம்மை தவறுகளிலிருந்து காத்தருள வேண்டுமெனவும் அவனிடம் நாம் பிரார்த்திக்கின்றோம். அவன் மிகப்பெரும் கொடையாளனும், தாராளத்தன்மையுடையனுமாவான். எமது தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீதும் அவரக்ளின் குடும்பத்தினர் மற்றும் அனைத்து தோழர்கள் மீதும் அல்லாஹ்வின் ஸலவாத்தும் ஸலாமும் உண்டாவதாக.

புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. அவன் அருள் மூலமே நற்காறியங்கள் யாவும் நிறைவுபெறுன்கிறன.

அல்லாஹ்வின் ஆசியை வேண்டி நிற்கும்

முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) அவர்களால்

ஜும்ஆத் தின முற்பகலில்

ஷஃபான் மாதம் 14ம் திகதி, ஹிஜ்ரி 1392 ம் வருடம் எழுதிமுடிக்கப்பட்டது.

 

 

***

பொருளடக்கம்

 

மாதவிடாய் என்பதன் கருத்தும் அதன் நுட்பமும். 7

மாதவிடாய்க் காலமும் தவணையும் 10

மூன்றாம் பகுதி : மாதவிடாய் மாற்றங்கள்/ வித்தியாசங்கள் 35

நான்காம் பகுதி: மாதவிடாய் தொடர்பான சட்டங்கள் 47

பகுதி: 5 : (இஸ்திஹாழா) தொடர் உதிரப்போக்கும் அது தொடர்பான சட்டங்களும். 93

இஸ்திஹாழா (தொடர் உதிரப்போக்கு) வின் நிலைகள் : 96

தொடர் உதிரப்போக்கு ஏற்பட்ட பெண்களுக்கு ஒப்பானவர்களின் நிலை : 106

(இஸ்திஹாழாவின் ) தொடர் உதிரப்போக்கின் சட்டங்கள்: 110

ஆறாவது பகுதி: நிபாஸும் (பேறுகால உதிரப்போக்கும்) அதன் சட்டங்களும் 116

நிபாஸுக்குரிய (பேறு காலத்தில் ஏற்படக்கூடிய இரத்தத்தின்) சட்டங்கள்: 121

விரிவாக்கம் ஏழு: மாதவிடாய் வராது தடுக்கின்ற அல்லது அதனை வரவழைக்கத்தக்க, அல்லது கருவுறாது தடுக்கக்கூடிய அல்லது கருக்கலைப்பை ஏற்படுத்தக்கூடியவற்றை பயண்படுத்தல். 130

 

***


புஹாரி - அத்தியாயம் : ஹைழ் தலைப்பு : மாதவிடாயுள்ள பெண் கஃபாவை தவாஃப் செய்வதைத் தவிர மற்ற அனைத்து கிரியைகளையும் நிறைவேற்றுவது, ஹதீஸ் எண் : 305. முஸ்லிம் - ஹஜ் அத்தியாயத்தில், தலைப்பு : இஹ்ராமின் வகைகள் பற்றிய விளக்கம், ஹதீஸ் எண் : 1211.

புஹாரி - பாடம் : உம்ரா தலைப்பு : சிரமத்தின் அளவிற்கு உம்ராவின் கூலி, ஹதீஸ் எண் : 1662. முஸ்லிம் - பாடம் : ஹஜ், தலைப்பு : இஹ்ராமின் வகைகள் பற்றிய விளக்கம், ஹதீஸ் எண் : 1211.

மார்க்கம் சட்டங்களd தொடர்பான பெயர்கள் பற்றிய சிறுநூல் (பக்கம் : 35)

முன் குறிப்பிடப்பட்ட ஆதார நூல் (பக்கம் 36)

முன் குறிப்பிடப்பட்ட ஆதார நூல் (பக்கம் : 38).

புஹாரி - அத்தியாயம் : ஈமான், பாடம் : மார்க்கம் மிகவும் எளிதானது, அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரழி), ஹதீஸ் எண் : (39).

ஆதாரம் : புஹாரி - அத்தியாயம் : நபி ﷺ அவர்களின் சிறப்புகள் - பாடம்: நபி ﷺ அவர்களின் உருவ அமைப்பு - ஹதீஸ் எண்: 3560.முஸ்லிம் - அத்தியாயம் : சிறப்புகள், பாடம்: நபி ﷺ அவர்கள் பாவங்களை விட்டு தூரமாக இருந்தது, ஹதீஸ் எண்: 77/2327.

மஜ்மூஉல் ஃபதாவா (மார்க்கத் தீர்ப்புகளின் தொகுப்பு) பாகம்: 19 பக்கம் 238-239.

அல்அவ்ஸத் (356/2).

அல் முஃனி (பாகம் : 1 பக்கம் : 405).

மர்வஸி அவர்களின் இக்திலாபுல் புகஹா (பக்கம் 193), அல் அவ்ஸத் (பாகம்: 2 பக்கம்: 239).

அல்முதவ்வனா - பாகம்:1, பக்கம்:155. அந்நவாதிர் வஸ்ஸியாதாத் - பாகம்:1 பக்கம்:136.

மஜ்மூஉல் பதாவா (மார்க்கத் தீர்ப்புகளின் தொகுப்பு) பாகம்: 19 பக்கம்: 238-239.

(அல்உம் : 1/82).

அல் முக்னி (1/396)

அபூதாவுத்- நூல் : தஹாரா, பாடம்: சுத்தத்திற்குப் பின் பெண் காணும் கலங்கல் மற்றும் மஞ்சள் நிறம், ஹதீஸ் எண்: 307.

ஆதாரம் : புஹாரி- அத்தியாயம்: மாதவிடாய், பாடம் : மாதவிடாய் அல்லாத நாட்களில் ஏற்படும் மஞ்சள் மற்றும் கலங்கல் நிறம், ஹதீஸ் எண்: 326.

ஃபத்ஹுல் பாரி - பாகம்: 1 பக்கம்: 426.

ஸஹீஹுல் புஹாரி (1/71)

புஹாரி - கிதாபுல் ஹைழ் (மாதவிடாய்), பாடம்: மாதவிடாயின் ஆரம்பம் மற்றும் முடிவு. ஹதீஸ் எண் : 320.

நூல் : அல்அஸ்ல் (19/2- 20).

அல் இன்ஸாஃப் நூலில் அவர்களிடமிருந்து பதிவு செய்யப்பட்டுள்ளது.

நூல் : அல்உம் - பாகம்: 1 பக்கம் : 83-84.

அல் முக்னி (1/226).

அல்முக்னீ (1/257).

ஆதாரம் : புஹாரி - அத்தியாயம் : தொழுகையின் நேரங்கள் - பாடம்: தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைந்தவர் - ஹதீஸ் எண்: 580, முஸ்லிம் - அத்தியாயம் : பள்ளிகளும் தொழும் இடங்களும் - பாடம்: தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைந்தவர் அந்தத் தொழுகையை அடைந்து கொண்டார் - ஹதீஸ் எண்: 607.

ஆதாரம் : புஹாரி - அத்தியாயம் : தொழுகை நேரங்கள் - பாடம்: ஃபஜ்ர் தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைந்தவர் - ஹதீஸ் எண்: 579, முஸ்லிம் - அத்தியாயம் : பள்ளிகளும் தொழும் இடங்களும் - பாடம் : ஒரு ரக்அத்தை அடைந்தவர் அந்தத் தொழுகையை அடைந்து கொண்டார் - ஹதீஸ் எண்: 608.

அல் மஜ்மூ ஷர்ஹுல் முஹத்தப் (பாகம்: 3 பக்கம்: 70).

ஆதாரம்: புஹாரி - அத்தியாயம் : ஹைழ் - பாடம்: மாதவிடாயில் இருக்கும் மனைவியின் மடியில் கணவன் ஓதுவது - ஹதீஸ் எண்: 297, முஸ்லிம் - அத்தியாயம் : ஹைழ் - பாடம்: மாதவிடாயில் இருக்கும் மனைவியின் மடியில் கணவன் சாய்ந்து கொண்டு குர்ஆன் ஓதுவது - ஹதீஸ் எண்: 301.

புஹாரி - அத்தியாயம் : (மாதவிடாய்), பாடம்: மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் இரு பெருநாட்களிலும் முஸ்லிம்களின் பிரார்த்தனையிலும் கலந்து கொள்வதும், தொழுமிடத்தை விட்டு ஒதுங்கியிருப்பதும், ஹதீஸ் எண்: 324. முஸ்லிம் - பிரிவு: இரு பெருநாள் தொழுகை, பாடம்: பெண்கள் இரு பெருநாட்களில் ஆண்களை விட்டும் பிரிந்து தொழுமிடத்திற்குச் செல்வதும், குத்பாவில் கலந்து கொள்வதும் ஆகுமானது என்பது பற்றிய குறிப்பு, ஹதீஸ் எண்: 890.

அல்மஜ்மூஉ (2/ 357).

அல்முஃஜமுல் அவ்ஸத் (2/223).

ஃபத்ஹுல் பாரி- பாகம்: 1 பக்கம்: 408.

ஸஹீஹுல் புஹாரி : ஹைழ் அத்தியாயத்தில், 'மாதவிடாய் ஏற்பட்ட பெண் கஃபாவை தவாப் செய்வதைத் தவிர, ஏனைய அனைத்து கிரியைகளையும் நிறைவேற்றுவது' என்ற பாடம், மற்றும் ஃபத்ஹுல் பாரி (1/ 407-408).

பத்ஹுல் பாரி - பாகம்: 1 பக்கம்: 408.

அல் மஜ்மூஉ - பாகம் : 2 பக்கம் : 356.

புஹாரி- அத்தியாயம் : ஹைழ் , தலைப்பு : மாதவிடாயுள்ள பெண் கஃபாவை வலம் வருவதை தவிர்த்து ஏனைய அனைத்து கிரியைகளையும் நிறைவேற்றுவது, ஹதீஸ் எண் : 305. முன்னர் முஅல்லக்காக இது பதிவு செய்யப்பட்டுள்ளது.

திர்மிதி - அத்தியாயம் : அப்வாபுத் தஹாரா , பாடம் : குர்ஆனை ஜுனுப் நிலையில் உள்ளவர்களும் மாதவிடாய் நிலையில் உள்ளவர்களும் ஓதக்கூடாது என்பது பற்றி வந்துள்ளவை, ஹதீஸ் எண் : 131.

நூல் : அல்இலல் லித்திர்மிதி பக்கம் : 69. இமாம் பைஹகியின் அஸ்ஸுனனுல் குப்ராவில் பாகம் : 1 பக்கம் : 309.இப்னு அப்தில் ஹக்கின் அல்அஹ்காமுஷ் ஷரஇய்யாவில் பாகம் : 1 பக்கம் : 504. ஸைலஈயின் நஸ்புர் ராயாவில் பாகம் : 1 பக்கம் : 195.

மஜ்மூஉல் பதாவா (மார்க்கத்தீர்ப்புகளின் தொகுப்பு) பாகம் 26 பக்கம் 191.

புஹாரி: அத்தியாயம்: மாதவிடாய், பாடம்: மாதவிடாய் ஏற்பட்ட பெண் தொழுகையை கழா செய்யமாட்டாள், ஹதீஸ் எண் : 321. முஸ்லிம்: அத்தியாயம்: மாதவிடாய், பாடம்: மாதவிடாய் ஏற்பட்ட பெண் தொழுகையை விடுத்து நோன்பை கழா செய்வது கடமை, ஹதீஸ் எண் : 335. இந்த ஹதீஸின் வாசகம் முஸ்லிமுடையதாகும்.

புஹாரி - அத்தியாயம் : இல்ம் (கல்வி), தலைப்பு : மார்க்க) கல்வி கற்கும்போது வெட்கப்படுவது, ஹதீஸ் எண் : 130.முஸ்லிம் - அத்தியாயம் : மாதவிடாய், தலைப்பு : பெண்கள் திரவத்தை வெளியிட்டால் குளிப்பது (குஸ்ல்) அவர்களுக்கு கடமையாகும், ஹதீஸ் எண் :313.

புஹாரி, அத்தியாயம் : நோன்பு, தலைப்பு : நோன்பாளி குளிப்பது, ஹதீஸ் எண் : 1931. முஸ்லிம், அத்தியாயம் :நோன்பு, தலைப்பு : ஜுனுப்பான நிலையில் ஃபஜ்ருடைய நேரத்தை அடைந்தவரின் நோன்பு செல்லும், ஹதீஸ் எண் :1109.

புஹாரியில் ஹைழ் அத்தியாயத்தில், மாதவிடாய் கண்ட பெண் தவாஃபைத் தவிர மற்ற கிரியைகளை நிறைவேற்றுவது என்ற தலைப்பில், ஹதீஸ் எண் : 305. முஸ்லிமில் ஹஜ் அத்தியாயத்தில், இஹ்ராமின் வகைகள் பற்றிய விளக்கம் என்ற தலைப்பில், ஹதீஸ் எண் : 1211.

ஆதாரம் : புஹாரி ஹஜ் அத்தியாயத்தில், விடைபெறும் தவாஃப் என்ற பாடத்தில், ஹதீஸ் எண் 1755, முஸ்லிமில் ஹஜ் அத்தியாயத்தில், விடைபெறும் தவாஃப் கடமையும் மாதவிடாய்ப் பெண்ணுக்கு அது தளர்த்தப்படுதலும் என்ற பாடத்தில், ஹதீஸ் எண் :1328.

புஹாரியின் ஹஜ் என்ற அத்தியாயத்தில், தவாஃபுல் இஃபாளா செய்த பின் ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் என்ற பாடத்தில், ஹதீஸ் எண் 1757 லும், முஸ்லிமின் ஹஜ் என்ற அத்தியாயத்தில், தவாஃபுல் வதாஃ கடமை என்ற பாடத்தில், ஹதீஸ் எண் 1211 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புஹாரி- அத்தியாயம் : மாதவிடாய், பாடம்: மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் இரு பெருநாட்களிலும், முஸ்லிம்களின் பிரார்த்தனையிலும் கலந்து கொள்வதும், தொழுமிடத்தை விட்டு ஒதுங்கியிருப்பதும், ஹதீஸ் எண் (324). முஸ்லிம் - அத்தியாயம் : இரு பெருநாள் தொழுகை, பாடம்: பெண்கள் இரு பெருநாட்களில் ஆண்களை விட்டும் பிரிந்து தொழுமிடத்திற்குச் செல்வதற்கும், பிரசங்கத்தில் கலந்து கொள்வதற்கும் உள்ள அனுமதி, ஹதீஸ் எண்:890.

ஆதாரம் : முஸ்லிம், மாதவிடாய் பற்றிய பாடம், மாதவிடாய் ஏற்பட்ட பெண் தன் கணவனின் தலையைக் கழுவுவது கூடும் என்பது பற்றிய பகுதி, ஹதீஸ் எண் (302).

ஆதாரம் : புஹாரி - அத்தியாயம் : மாதவிடாய் - பாடம்: மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணுடன் நெருக்கமாக இருத்தல் - ஹதீஸ் எண்: 301, முஸ்லிம் - அத்தியாயம் : மாதவிடாய் - பாடம்: மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணுடன் இடுப்பு ஆடைக்கு மேல் பகுதியில் நெருக்கமாக இருத்தல் - ஹதீஸ் எண்: 293.

ஆதாரம் : புஹாரி, அத்தியாயம் : தலாக் (விவாகரத்து), ஹதீஸ் எண் :5251. முஸ்லிம், அத்தியாயம் : தலாக் (விவாகரத்து), மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணை அவளது சம்மதமின்றி விவாகரத்து செய்வது தடை செய்யப்பட்டுள்ளது, (அதை) மீறினால் தலாக் ஏற்பட்டுவிடும், அவளை மீள அழைத்துக் கொள்ளுமாறு ஏவப்படுவார் என்ற பாடத்தில், ஹதீஸ் எண் : 1471, இப்னு உமர் (ரழி) அவர்கள் மூலம் பதிவு செய்துள்ளார்கள்.

ஆதாரம் : புஹாரி, அத்தியாயம் : தலாக், பாடம் : குல்உ, ஹதீஸ் எண் : 5273. அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரழி).

ஆதாரம்: புஹாரி - அத்தியாயம் : மாதவிடாய் - பாடம்: மாதவிடாய் ஆரம்பிப்பதும் முடிவடைவதும், ஹதீஸ் எண்: 320. முஸ்லிம் - அத்தியாயம் : மாதவிடாய் - பாடம்: தொடர் உதிரப்போக்குள்ள பெண் குளிப்பதும் தொழுவதும் - ஹதீஸ் எண்: 333.

புஹாரி - அத்தியாயம் : மாதவிடாய், தலைப்பு : மாதவிடாய்க் குளிப்பு, ஹதீஸ் எண் : 315. முஸ்லிம் - அத்தியாயம் : மாதவிடாய், தலைப்பு : மாதவிடாயிலிருந்து குளிப்பவர் கஸ்தூரி கலந்த துண்டை இரத்தம் பட்ட இடத்தில் பயன்படுத்துவது விரும்பத்தக்கது, ஹதீஸ் எண் : 332. அறிவிப்பாளர் : ஆயிஷா (ரழி).

ஆதாரம் : முஸ்லிம் - அத்தியாயம் : மாதவிடாய், தலைப்பு : குளிப்பவரின் பின்னல் பற்றிய சட்டம், ஹதீஸ் எண் : 330, அறிவிப்பாளர் : உம்மு ஸலமா (ரலி).

புஹாரி - அத்தியாயம் : வுழூ , தலைப்பு : இரத்தத்தைக் கழுவுதல், ஹதீஸ் எண் : 228. முஸ்லிம் - அத்தியாயம் : மாதவிடாய், தலைப்பு : தொடர் உதிரப்போக்குள்ள பெண் குளித்தல் மற்றும் தொழுதல், ஹதீஸ் எண்: 333, அறிவிப்பாளர் : ஆயிஷா (ரழி) .

அஹ்மத் (6/349) அவர்களும், அபூதாவூத் அவர்கள் 'சுத்தம்' எனும் அத்தியாயத்தில், 'மாதவிடாய் ஆரம்பமானால் தொழுகையை விட்டுவிட வேண்டும் எனக் கூறுவது' என்ற பாடத்தில், ஹதீஸ் எண் (287), திர்மிதி அவர்கள் 'சுத்தத்தின் பாடங்கள்' எனும் அத்தியாயத்தில், 'தொடர் உதிரப்போக்குள்ள பெண் ஒரே குளியலுடன் இரு தொழுகைகளை சேர்த்துத் தொழுவது' என்ற பாடத்தில், ஹதீஸ் எண்128, அறிவிப்பாளர் : ஹம்னா பின்த் ஜஹ்ஷ் (ரழி).

ஸுனனுத் திர்மிதி: சுத்தம் பற்றிய அத்தியாயம், 'தொடர் உதிரப்போக்குள்ள பெண் ஒரே குளிப்பின் மூலம் இரு தொழுகைகளை ஒன்று சேர்ப்பது' என்ற பாடம், ஹதீஸ் எண் 128க்குப் பின்.

புஹாரி - அத்தியாயம் : மாதவிடாய், பாடம் : மாதவிடாய், தலைப்பு : மாதவிடாய் மற்றும் கர்ப்பம் குறித்து பெண்களின் கூற்று ஏற்கப்படுவது, அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) , ஹதீஸ் எண் : 325.

முஸ்லிம் - ஹைழ் (மாதவிடாய்) பற்றிய அத்தியாயத்தில், முஸ்தஹாளா (தொடர் உதிரப்போக்குள்ள பெண்), அவளின் குளிப்பு மற்றும் தொழுகை பற்றிய பாடத்தில், ஆயிஷா (ரழி) அவர்கள் மூலம் ஹதீஸ் எண் 334ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆதாரம் அபூதாவூத்: அத்தியாயம் : சுத்தம், 'மாதவிடாய் ஆரம்பமானால் தொழுகையை விட்டுவிட வேண்டும் எனக் கூறுவோர்' எனும் பாடம், ஹதீஸ் எண் (286); நஸாஈ : அத்தியாயம் : சுத்தம், 'இரத்தப் போக்கு தொடர்வதற்கு முன்னர் தனது மாதவிடாய் நாட்களை அறிந்திருந்த இஸ்திஹாழா உடைய பெண்' எனும் பாடம், ஹதீஸ் எண் (211); இப்னு மாஜஹ்: அத்தியாயம் : சுத்தம் மற்றும் அதன் வழிமுறைகள், 'இரத்தப் போக்கு தொடர்வதற்கு முன்னர் தனது மாதவிடாய் நாட்களை அறிந்திருந்த இஸ்திஹாழா உடைய பெண்' எனும் பாடம், ஹதீஸ் எண் (620); இப்னு ஹிப்பான் தனது ஸஹீஹ் நூலில் (1348); மற்றும் ஹாகிம் தனது அல்-முஸ்தத்ரக் நூலில் (618) ஆஇஷா (ரழி) அவர்களின் வாயிலாக அறிவித்துள்ளனர்.

ஸுனனுத் திர்மிதி: சுத்தம் பற்றிய பாடங்கள், 'இஸ்திஹாழாவுடைய பெண் ஒரே குஸ்லைக் கொண்டு இரு தொழுகைகளை ஜம்உ செய்வது' எனும் பாடம், ஹதீஸ் எண் : 128.

அஹ்மதில் (6/439) லும்; அபூதாவூதில் 'சுத்தம்' எனும் அத்தியாயத்தில், 'மாதவிடாய் ஆரம்பமானால் தொழுகையை விட்டுவிட வேண்டும் எனக் கூறுவது' என்ற பாடத்தில், ஹதீஸ் எண் (287) லும்; திர்மிதியில் 'சுத்தத்தின் அத்தியாயங்கள்' என்ற பகுதியில், 'தொடர் இரத்தப்போக்குள்ள பெண் ஒரே குளியலைக் கொண்டு இரு தொழுகைகளை சேர்த்துத் தொழுவது' என்ற பாடத்தில், ஹதீஸ் எண் (128)லும் ஹம்னா பின்த் ஜஹ்ஷ் (ரழி) அவர்களிடமிருந்து அறிவிக்கப் பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

புஹாரியில் வுழூ பற்றிய அத்தியாயத்தில், இரத்தத்தைக் கழுவுதல் பற்றிய பாடத்தில், ஹதீஸ் எண் (228), முஸ்லிமில் ஹைழ் பற்றிய அத்தியாயத்தில், இஸ்திஹாழா ஏற்பட்ட பெண், அவள் குளிப்பது மற்றும் அவளது தொழுகை பற்றிய பாடத்தில், ஹதீஸ் எண் (333), ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்.

அஹ்மத் (6/204) மற்றும் இப்னு மாஜாஹ்வில், தூய்மை மற்றும் அதன் வழிமுறைகள் என்ற பாடத்தில், 'தொடர் உதிரப்போக்கு ஏற்படுவதற்கு முன்னர் தனது மாதவிடாய்க் காலத்தை கணித்த இஸ்திஹாழா உடைய பெண்' என்ற தலைப்பில், ஹதீஸ் எண் (624), ஆயிஷா (ரழி) அவர்களிடமிருந்து பதிவு செய்யப்பட்டுள்ளது.

அல் முஃனி (1/252-253).

கஷ்ஃபுல் கினாஃ (1/219)

அல் முஃனி (1/253).

அல் முஃனி (1/253).

அல்முஃனீ (2/252), உஸ்மான் இப்னு அபில் ஆஸ் அவர்களின் கூற்றை அப்துர் ரஸாக் தனது முஸன்னஃபில் (1202), இப்னு அபீ ஷைபா தனது முஸன்னஃபில் (17450), தாரிமீ தனது சுனனில் (990), இப்னுல் ஜாரூத் தனது முன்தகாவில் (118) ஆகியோர் பதிவு செய்துள்ளனர்.

புஹாரி: அத்தியாயம் : நிகாஹ், பாடம் : தாம்பத்திய உறவின் போது விந்தை வெளியே விடுதல், ஹதீஸ் எண் (5209), முஸ்லிம்: அத்தியாயம் : நிகாஹ், தாம்பத்திய உறவின் போது விந்தை வெளியே விடுதல், ஹதீஸ் எண் (1440). அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி).

அல் இன்ஸாஃப் (2/556).

மாதவிடாய் தொடர்பான குழப்பத்தில் இருக்கும் பெண்களின் சட்டங்கள். தாரமீ (பக்கம் : 17).