فَضَائِلُ وَآدَابُ المَسْجِدِ النَّبَوِيِّ
وَأَحْكَامُ زِيَارَةِ قَبْرِ النَّبِيِّ ﷺ
وَقَبْرَي صَاحِبَيْهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا
மஸ்ஜிதுன் நபவியின் சிறப்புகளும் ஒழுங்குகளும், நபி ﷺ அவர்களின் கப்ர் மற்றும் அவர்களின் இரு தோழர்களின் கப்ருகளை ஜியாரத் செய்வது தொடர்பான சட்டங்களும்
اللَّجْنَةُ العِلْمِيَّةُ
بِرِئَاسَةِ الشُّؤُونِ الدِّينِيَّةِ بِالمَسْجِدِ الحَرَامِ وَالمَسْجِدِ النَّبَوِيِّ
மஸ்ஜிதுல் ஹராம் மற்றும் மஸ்ஜிதுன் நபவியின் மார்க்க விவகாரங்களின் தலைமையகத்தின் கல்விக் குழு
بِسْمِ اللهِ الرَّحمَنِ الرَّحِيمِ
மஸ்ஜிதுன் நபவியின் சிறப்புகளும் ஒழுங்குகளும், நபி ﷺ அவர்களின் கப்ர் மற்றும் அவர்களின் இரு தோழர்களின் கப்ருகளை ஜியாரத் செய்வது தொடர்பான சட்டங்களும்.
முன்னுரை
புகழ் அனைத்தும் அகிலங்களின் இறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானது. அவனின் அருளும், சமாதானமும் உலக மக்களுக்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட முஹம்மது ﷺ அவர்கள் மீதும், அவரின் குடும்பத்தார்கள், தோழர்கள், மறுமை நாள் வரை அவரின் வழிமுறைப்படி யாரெல்லாம் வாழ்வார்களோ அவர்கள் அனைவருக்கும் உண்டாவதாக.
இந்நூலானது மஸ்ஜிதுன் நபவியின் முக்கிய சிறப்புகள், அதனை தரிசிப்பதில் உள்ள ஒழுங்குகள், நபி ﷺ அவர்களின் மண்ணறை மற்றும் அவர்களின் இரு தோழர்களின் மண்ணறைகளைத் தரிசிப்பதன் ஒழுங்குகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு சுருக்கமான தொகுப்பாகும். இதனை மஸ்ஜிதுன் நபவிக்கு வருபவர்கள், இந்த உம்மத்தின் தூதரான முஹம்மது ﷺ அவர்களின் பள்ளிவாசலின் சிறப்பு, அதனை ஜியாரத் செய்வதன் (தரிசித்தல்) ஒழுங்குகள் மற்றும் அதில் தொழுவதன் ஒழுங்குகள் பற்றி அறிவும் தெளிவும் பெறுவதற்காக தொகுத்துள்ளோம். இதன் மூலம் அல்லாஹ் பயன் அளித்து, இதனை நல்லதாகவும், அவனுக்கே உகந்ததாகவும் ஆக்குவானாக. நிச்சயமாக நம் பிரார்த்தனையை முன்வைக்க அவனே மிகச் சிறந்தவனாகவும், ஆதரவு வைக்கப்படுவோரில் மிகத் தயாளனாகவும் உள்ளான்.
கல்விக் குழு
முதலாவது : மஸ்ஜிதுன் நபவியின் சிறப்புகள்
அல்லாஹு கூறுகிறான்:
﴿وَرَبُّكَ يَخۡلُقُ مَا يَشَآءُ وَيَخۡتَارُۗ مَا كَانَ لَهُمُ ٱلۡخِيَرَةُۚ سُبۡحَٰنَ ٱللَّهِ وَتَعَٰلَىٰ عَمَّا يُشۡرِكُونَ68﴾
மேலும், உம்முடைய இறைவன், தான் நாடியதைப் படைக்கிறான்; (தூதராகத் தான் நாடியோரைத்) தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். (எனவே இத்தகு) தேர்ந்தெடுத்தல் இவர்களு(க்கு உரிமையு)டையதல்ல; அல்லாஹ் மிகத் தூய்மையானவன்; இவர்கள் இணை வைப்பதை விட்டும் அவன் மிகவும் உயர்ந்தவன். (சூரா அல்கஸஸ் : 68). அல்லாஹ் இந்த இடத்தை தமது நபி ﷺ அவர்களின் பள்ளிவாசல் அமைய தேர்ந்தெடுத்து, அதனைப் பல சிறப்புகளைக் கொண்டு சிறப்பித்துள்ளான். உதாரணமாக,
அது, புனிதப் பயணம் மேற்கொள்ளப்படும் மூன்று பள்ளிவாசல்களில் ஒன்றாக உள்ளமை
நபி ﷺ அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
«لَا تُشَدُّ الرِّحَالُ إِلَّا إِلَى ثَلَاثَةِ مَسَاجِدَ: مَسْجِدِي هَذَا، وَمَسْجِدِ الحَرَامِ، وَمَسْجِدِ الأَقْصَى».
"மூன்று மஸ்ஜித்களைத் தவிர (அவற்றின் சிறப்பிற்காக) வேறு எதற்கும் (வழிபாட்டு நோக்குடன்) பயணம் மேற்கொள்ளப்படாது. அவை: என்னுடைய இந்த மஸ்ஜித் (மஸ்ஜிதுன் நபவி), மஸ்ஜிதுல் ஹராம், மற்றும் அல் மஸ்ஜிதுல் அக்ஸா."1
அதில் தொழுவது, மஸ்ஜிதுல் ஹராத்தைத் தவிர ஏனைய பள்ளிகளில் தொழும் தொழுகையை விட ஆயிரம் மடங்கு சிறப்பாகும் :
நபி ﷺ அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
«صَلَاةٌ فِي مَسْجِدِي هَذَا خَيْرٌ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ، إِلَّا المَسْجِدَ الحَرَامَ».
"என்னுடைய இந்த மஸ்ஜிதில் (மஸ்ஜிதுன் நபவியில்) ஒரு தொழுகை, அல்-மஸ்ஜித் அல்-ஹராமைத் தவிர, மற்ற மஸ்ஜிதுகளில் தொழும் ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும்.".2
ஆரம்ப தினத்திலேயே (அல்லாஹ்வின்) இறையச்சத்தின் மீது (பரிசுத்தமான எண்ணத்துடன்) அமைக்கப்பட்ட மஸ்ஜிதாக உள்ளமை
அபூ ஸயீத் அல்குத்ரீ ரலி அவர்கள் கூறினார்கள்:
"நான் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் தமது மனைவியரில் ஒருவரின் வீட்டில் இருந்தபோது அவர்களிடம் சென்று, 'அல்லாஹ்வின் தூதரே! இரண்டு பள்ளிவாசல்களில் (மஸ்ஜிதுல் குபா மற்றும் மஸ்ஜிதுன் நபவி ஆகிய இரண்டில்) எது இறையச்சத்தின் மீது நிறுவப்பட்டது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஒரு கைப்பிடி சரளைக்கற்களை எடுத்து அதனால் தரையில் அடித்து,
«هُوَ مَسْجِدُكُمْ هَذَا» لِمَسْجِدِ المَدِينَةِ.
'அது உங்களின் இந்தப் பள்ளிவாசல் தான்' (மதீனா பள்ளிவாசல் - மஸ்ஜிதுன் நபவி) என்று கூறினார்கள்.".3
அங்கு கல்வியைத் தேடுபவரின் கூலியானது, அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிபவரின் கூலிக்குச் சமமாக உள்ளமை.
அல்லாஹ்வின் ﷺ அவர்கள் கூறியதை தான் செவிமடுத்ததாக அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
«مَنْ جَاءَ مَسْجِدِي هَذَا، لَمْ يَأْتِهِ إِلَّا لِخَيْرٍ يَتَعَلَّمُهُ أَوْ يُعَلِّمُهُ، فَهُوَ بِمَنْزِلَةِ المُجَاهِدِ فِي سَبِيلِ اللهِ، وَمَنْ جَاءَ لِغَيْرِ ذَلِكَ، فَهُوَ بِمَنْزِلَةِ الرَّجُلِ يَنْظُرُ إِلَى مَتَاعِ غَيْرِهِ».
'எனது இந்த மஸ்ஜிதுக்கு, (மார்க்க) நன்மையை கற்பதற்காக அல்லது கற்றுக்கொடுப்பதற்காக மட்டுமே யார் வருகிறாரோ, அவர் அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்பவரின் அந்தஸ்தில் இருப்பவர் ஆவார். வேறு நோக்கத்திற்காக (உலக ஆதாயத்திற்காகவோ அல்லது வீண் பேச்சுக்களுக்காகவோ) வருபவர், மற்றவர்களின் உடைமைகளைப் பார்க்கும் ஒரு மனிதரைப் போன்றவராவார் (அவருக்கு எந்த நன்மையும் இல்லை).'4
மஸ்ஜிதுன் நபவியில் ரவ்ழா ஷரீஃப் அமைந்துள்ளமை
நபி ﷺ அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
«مَا بَيْنَ بَيْتِي وَمِنْبَرِي رَوْضَةٌ مِنْ رِيَاضِ الجَنَّةِ، وَمِنْبَرِي عَلَى حَوْضِي».
"எனது இல்லத்திற்கும் எனது மிம்பருக்கும் இடைப்பட்ட பகுதியானது, சொர்க்கப் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும், மேலும் எனது மிம்பர் எனது ஹவ்ழ்(தடாகத்தின்) மீது அமைந்துள்ளது"5.
இரண்டாவது: கண்ணியமிகு மஸ்ஜிதுன் நபவியை ஜியாரத் செய்வது ஸுன்னாவாகும்.
இது போன்ற சிறப்புகளின் காரணமாக, மஸ்ஜிதுன் நபவியில் தொழுது, இபாதத் நோக்கத்திற்காக அங்கு செல்வது முஸ்தஹப்பாகும்.
ஹஜ் செய்பவருக்கும் மற்றவர்களுக்கும் நபி ﷺ அவர்களின் பள்ளிவாசலுக்கு ஹஜ்ஜுக்கு முன்போ, பின்போ செல்வது ஸுன்னத்தாகும். இந்தப் பயணம் ஹஜ்ஜின் நிபந்தனையோ, அதன் அர்கானோ அல்லது அதன் வாஜிபோ அல்ல; அதற்கும் ஹஜ்ஜுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
நபி ﷺ அவர்களின் பள்ளிவாயிலை தரிசிப்பதற்கு, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தொழுகைகளை நிறைவேற்ற வேண்டும் என்றோ, அல்லது மதீனாவில் குறிப்பிட்ட காலம் தங்கியிருக்க வேண்டும் என்றோ எந்த நிபந்தனையும் கிடையாது. மாறாக, ஃபர்ளான அல்லது நபிலான தொழுகை ஒன்றினை அங்கு நிறைவேற்றுவதன் மூலமே, அதனை தரிசித்த காரியம் நிறைவேறிவிடுகிறது. எனினும், அங்கு தொழுகைகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, நன்மைகளும் அதிகரிக்கும்.
மஸ்ஜிதுன் நபவியை தரிசிக்க வருபவர், அனைத்து கடமையான தொழுகைகளையும் அவ்வாறே உபரியான தொழுகைகளையும் அதிலேயே நிறைவேற்றுவது விரும்பத்தக்கதாகும். ஏனெனில், ஏற்கனவே கூறியது போன்று, மஸ்ஜிதுல் ஹராம் தவிர்ந்த ஏனைய பள்ளிகளில் ஆயிரம் தொழுகைகள் தொழுவதை விட இங்கு தொழப்படும் ஒரு தொழுகை சிறந்ததாகும்.
மூன்றாவது: மஸ்ஜிதுன் நபவியை தரிசிப்பதற்கான ஒழுங்குகள்.
ஒரு முஸ்லிம் மஸ்ஜிதுன் நபவிக்கு வரும் போது, பொதுவாக மற்ற மஸ்ஜித்களிலும் குறிப்பாக மஸ்ஜிதுன் நபவியிலும் கடைபிடிக்க வேண்டிய மார்க்க ஒழுக்கங்களைப் பேணி நடத்தல் வேண்டும். அவை :
பள்ளிவாசலுக்கு அமைதியுடனும், கண்ணியத்துடனும், தூய்மையுடனும், அழகான தோற்றத்துடனும், நறுமணத்துடனும் வருதல். அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது, அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள் :
«إِذَا ثُوِّبَ لِلصَّلَاةِ فَلَا تَأْتُوهَا وَأَنْتُمْ تَسْعَوْنَ، وَأْتُوهَا وَعَلَيْكُمُ السَّكِينَةُ، فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا، وَمَا فَاتَكُمْ فَأَتِمُّوا، فَإِنَّ أَحَدَكُمْ إِذَا كَانَ يَعْمِدُ إِلَى الصَّلَاةِ فَهُوَ فِي صَلَاةٍ».
“நீங்கள் இகாமத் (சொல்லப்படுவதைக்) கேட்டால், தொழுகைக்கு நடந்து செல்லுங்கள்; அமைதியையும் கண்ணியத்தையும் கடைப்பிடியுங்கள்; அவசரப்பட வேண்டாம். (இமாமுடன்) உங்களுக்குக் கிடைத்ததைத் தொழுங்கள்; நீங்கள் தவறவிட்டதை நிறைவு செய்யுங்கள்.”6، நபி ﷺ அவர்கள் கூறியதாக அபூ ஸஈத் அல்குத்ரீ (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
«الغُسْلُ يَوْمَ الجُمُعَةِ وَاجِبٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ، وَأَنْ يَسْتَنَّ، وَأَنْ يَمَسَّ طِيبًا إِنْ وَجَدَ».
'பருவவயதை அடைந்து ஒவ்வொருவரும் ஜும்ஆ தினத்தில் குளிப்பதும், பல் துலக்குவதும், வாசனைத் திரவியம் பூசுவதும் கடமையாகும்'7, ஒரு பெண் பள்ளிவாசலுக்கு வரும்போது, அவள் ஹிஜாப் அணிந்து மறைவாக இருப்பது அவசியமாகும். மேலும், அவள் நறுமணம் பூசுவது அனுமதிக்கப்பட்டதல்ல. இது குறித்து நபி ﷺ அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள்:
«إِذَا شَهِدَتْ إِحْدَاكُنَّ المَسْجِدَ فَلَا تَمَسَّ طِيبًا».
உங்களில் (பெண்களில்) எவரேனும் பள்ளிவாசலுக்கு (தொழுவதற்காக) வரும்போது, அவர் நறுமணம் பூசக் கூடாது.8.
மஸ்ஜிதுன் நபவிக்கு வருகை தந்தவர், ஏனைய பள்ளிவாயில்களைப் போன்றே உள்ளே நுழையும் போது தனது வலது காலை முன்வைத்து, பின்வரும் துஆவைக் கூறுவது விரும்பத்தக்கதாகும் :
«بِسْمِ اللَّهِ، وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ، اللَّهُمَّ اغْفِرْ لِي ذُنُوبِي وَافْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ».
பிஸ்மில்லாஹி வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ், அல்லாஹும்மக் ஃபிர்லீ துனூபீ வஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மதிக.
பொருள் : "அல்லாஹ்வின் திருப்பெயரினால், ஸலாமும் அல்லாஹ்வின் தூதர் மீது உண்டாவதாக! யா அல்லாஹ்! என் பாவங்களை மன்னித்து, உனது அருளின் வாயில்களை எனக்காகத் திறந்து விடுவாயாக!"9 மேலும் பின்வருமாறு கூற வேண்டும் :
«أَعُوذُ بِاللَّهِ العَظِيمِ، وَبِوَجْهِهِ الكَرِيمِ، وَسُلْطَانِهِ القَدِيمِ، مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ».
அவூதுபில்லாஹில் அழீம், வபிவஜ்ஹிஜல் கரீம், வஸுல்தானிஹில் கதீம், மினஷ் ஷைதானிர்ரஜீம்.
பொருள் : மகத்துவமிக்க அல்லாஹ்வைக் கொண்டும் அவனது சங்கைமிகு திருமுகத்தைக் கொண்டும் அவனது நிலையான மேலாதிக்கத்தைக் கொண்டும் விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டு பாதுகாப்புத் தேடுகிறேன்.10
தஹிய்யத்துல் மஸ்ஜித் தொழுதல் : மஸ்ஜிதுன் நபவிக்குள் தொழுவதற்காகப் செல்பவர், அமர்வதற்கு முன் தஹிய்யத்துல் மஸ்ஜித் இரண்டு ரக்அத்துக்களைத் தொழுது கொள்வது ஸுன்னாவாகும். அபூ கதாதா அல்ஹாரிஸ் இப்னு ரிப்ஈ அல்அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
«إِذَا دَخَلَ أَحَدُكُمُ المَسْجِدَ، فَلَا يَجْلِسْ حَتَّى يُصَلِّيَ رَكْعَتَيْنِ».
""உங்களில் ஒருவர் பள்ளியினுள் நுழைந்தால் இரண்டு ரக்அத்கள் தொழாமல் அமர வேண்டாம்."11"
முதல் வரிசைகளில் தொழுவதில் ஆர்வம் காட்டுதல் : ஏனெனில், அவற்றில் மகத்தான சிறப்புகள் உள்ளன. மேலும், அதனைத் தொழுகைக்கு நேரகாலத்துடன் செல்வதன் மூலமே அடைந்து கொள்ள முடியும். அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:
«لَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي النِّدَاءِ وَالصَّفِّ الأَوَّلِ، ثُمَّ لَمْ يَجِدُوا إِلَّا أَنْ يَسْتَهِمُوا عَلَيْهِ لَاسْتَهَمُوا».
"பாங்கு சொல்வதிலும் முதல் வரிசையிலும் என்ன (சிறப்பு) இருக்கிறது என்பது மக்களுக்குத் தெரிந்திருந்து, சீட்டுக் குலுக்கிப் போடுவதன் மூலமேயன்றி அவற்றை அடைய முடியாத நிலை ஏற்பட்டால், நிச்சயமாக அவர்கள் அதற்காகச் சீட்டுக் குலுக்கியிருப்பார்கள்.”12 மேலும் நபி ﷺ அவர்கள் தமது தோழர்களிடம் கூறினார்கள் :
«تَقَدَّمُوا فَأْتَمُّوا بِي، وَلْيَأْتَمَّ بِكُمْ مَنْ بَعْدَكُمْ، لَا يَزَالُ قَوْمٌ يَتَأَخَّرُونَ حَتَّى يُؤَخِّرَهُمُ اللهُ».
"முன்னால் வாருங்கள், என்னைப் பின்பற்றுங்கள். உங்களுக்குப் பின்னால் வருபவர்கள் உங்களைப் பின்பற்றட்டும். மக்கள் (நன்மைகளில்) தொடர்ந்தும் பின் தங்கியே இருப்பார்கள், அல்லாஹ் அவர்களை (தனது அருளிலிருந்தும், நன்மைகளிலிருந்தும்) பின்னுக்குத் தள்ளும் வரை."13
பெண்களைப் பொருத்தவரை, அவர்கள் பிந்திய ஸஃப்புகளில் தொழுவதும், ஆண்களை விட்டும் தூரமாக இருப்பதுமே சிறந்ததாகும். ஏனெனில், அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:
«خَيْرُ صُفُوفِ الرِّجَالِ أَوَّلُهَا، وَشَرُّهَا آخِرُهَا، وَخَيْرُ صُفُوفِ النِّسَاءِ آخِرُهَا، وَشَرُّهَا أَوَّلُهَا».
“ஆண்களின் வரிசைகளில் சிறந்தது முதல் வரிசையாகும், அவற்றில் மிக மோசமானது கடைசி வரிசையாகும் . பெண்களின் வரிசைகளில் சிறந்தது கடைசி வரிசையாகும் ; அவற்றில் மிக மோசமானது முதல் வரிசையாகும்.”14 ஆனால், அவர்கள் தனியாகத் தொழும்போது, அல்லது மஸ்ஜிதுன் நபவியில் இருப்பது போல அவர்களுக்கும் ஆண்களுக்கும் இடையில் ஒரு தடுப்பு இருந்தால், அவர்களின் சிறந்த வரிசை முதல் வரிசையாகும். ஏனெனில் அதற்கான காரணம் நீங்கிவிடுகிறது.
இமாமுக்குப் பின்னால் தொழுதல், மேலும் அவரை முந்துவதை விட்டும் எச்சரிக்கையாக இருத்தல். அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
«إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ».
"இமாம் பின்பற்றப்படுவதற்காகவே நியமிக்கப்பட்டுள்ளார்"15.
தொழுபவர் இமாமுக்கு முன்னால் நிற்பது கூடாது. ஆனால், பள்ளிவாயில் தொழுவோரால் நிரம்பி, இமாமுக்கு முன்னால் உள்ள இடத்தைத் தவிர வேறு இடம் கிடைக்காத நிர்ப்பந்த நிலையில் மாத்திரம் இதற்கு அனுமதியுண்டு.
வரிசைகளுக்கு இடையில் உள்ள வெற்றிடங்களையும், இடைவெளிகளையும் நிரப்பி, அவற்றைச் சீர் செய்வதில் அக்கறை கொள்ளுதல் வேண்டும். ஆனால், மக்களுக்கு நெருக்கடி கொடுப்பது, அவர்களைத் தொந்தரவு செய்வது, அவர்களைத் தாண்டிச் செல்வது, தொழுபவர்களுக்கு முன்னால் கடந்து செல்வது ஆகியவற்றிலிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் இச்செயல்கள் ஒருவரைப் பாவத்தில் ஆழ்த்திவிடும்.
வாய்ப்புப் பெற்றவர் ரௌழா ஷரீஃபில் தொழுவது விரும்பத்தக்கது. நபி ﷺ அவர்கள் கூறியதாக, அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
«مَا بَيْنَ بَيْتِي وَمِنْبَرِي رَوْضَةٌ مِنْ رِيَاضِ الجَنَّةِ، وَمِنْبَرِي عَلَى حَوْضِي».
"எனது இல்லத்திற்கும் எனது சொற்பொழிவு மேடை(மிம்பர்)க்கும் இடைப்பட்ட பகுதியானது, சொர்க்கப் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும், மேலும் என் மிம்பர் என் ஹவ்ழ் மீது (மறுமையில் எனக்குரிய தடாகத்தின் மீது) அமைந்துள்ளது."16.
ரௌழாவில் தொழுவதன் சிறப்பு குறித்து குறிப்பிட்ட சிறப்பு எதுவும் வரவில்லை. ஆயினும், அது சுவனப் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும் என்பது மேலே கூறப்பட்ட அபூ ஹுரைரா (ரலி) அவர்களின் ஹதீஸின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வணக்க வழிபாடுகள், அவற்றின் காலம் மற்றும் இடத்தின் சிறப்பின் காரணமாக மேன்மை அடைகின்றன.
* மஸ்ஜிதுன் நபவியில் உள்ள ரவ்ழாவில் தொழுவதற்கு, கூட்டம் குறைவாக இருக்கும் பொருத்தமான நேரங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அங்கே தொழுவதற்காக மற்றவர்களுக்கு நெருக்கடி கொடுப்பதோ, அவர்களைத் தாண்டிச் செல்வதோ, அல்லது தொழுபவர்களுக்கு முன்னால் கடந்து செல்வதோ கூடாது. ஏனெனில் ரவ்ழாவில் தொழுவது நஃபில் ஆகும். எனவே, ஒரு ஹராமான காரியத்தைச் செய்து அதை அடைய முற்படக்கூடாது. அவ்வாறே, ரவ்ழாவிற்குள் நுழைவதற்கான சிறப்பு விதிமுறைகளையும், ஏற்பாடுகளையும் கடைபிடிப்பதிலும், பொருத்தமான நேரங்களைத் தேர்ந்தெடுப்பதிலும், நுழைவை ஒழுங்குபடுத்தும் பொறுப்பாளர்களுடன் ஒத்துழைப்பதிலும் கவனம் காட்ட வேண்டும்.
தொழுகை, குர்ஆன் ஓதுதல், திக்ர், துஆ, திக்ர் சபைகளில் கலந்துகொள்ளுதல், கல்வி வகுப்புகள், திருக்குர்ஆன் கல்வி அமர்வுகள் போன்ற, அல்லாஹ்விடம் நெருக்கமாக்கும் நற்செயல்களை அதிகப்படுத்துவதன் மூலம் நேரங்களைச் சிறப்பான முறையில் கழிக்க வேண்டும்.
கண்ணியமிக்க அல்லாஹ்வின் வேதமான குர்ஆனை மதிக்க வேண்டும் அதன் தாள்களை சேதப்படுத்துவது, அதன் மீது எழுதுவது, அல்லது காலணிகளை அதன் அருகில் வைப்பது, அதனைத் தரையில் வைப்பது போன்றவற்றின் மூலம் அதனை இழிவுபடுத்துவதிலிருந்தும், அவமதிப்பதிலிருந்தும் கவனமாக இருக்க வேண்டும். அல்லாஹ் கூறுகிறான் :
﴿ذَٰلِكَۖ وَمَن يُعَظِّمۡ شَعَٰٓئِرَ ٱللَّهِ فَإِنَّهَا مِن تَقۡوَى ٱلۡقُلُوبِ32﴾
இதுதான் (இறைவன் வகுத்ததாகும்,) எவர் அல்லாஹ்வின் சின்னங்களை மேன்மை படுத்துகிறாரோ நிச்சயமாக அது உள்ளச்சத்தால் (ஏற்பட்டது) ஆகும். [சூரா அல்-ஹஜ்:32]
அல்லாஹ் தடை செய்தவற்றை விட்டும் பார்வையைத் தாழ்த்துதல் : மஸ்ஜிதுன் நபவிக்கு செல்பவர், தனக்கு பார்ப்பதற்கு அனுமதியில்லாதவற்றை விட்டும் தனது பார்வையைத் தாழ்த்திக் கொள்வது அவசியமாகும். இந்த புனித இடங்களில் பாவம் செய்வதன் கடுமையையும், அதனால் ஏற்படும் தண்டனைகளையும் அவர் அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் காலம் மற்றும் இடத்தின் புனிதத்திற்கேற்ப பாவங்களின் கடுமையும் தன்மையும் அதிகரிக்கும், அவ்வாறே நற்செயல்களும் அதிகரிக்கும். மேலும் முஸ்லிமான பெண் ஹிஜாபை கடைப்பிடிப்பதிலும், ஆண்களுக்கு சோதனையாக அமையாதவாறு அலங்காரங்களை வெளிப்படுத்தாமல் இருப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் இது மிகப்பெரிய பாவமாகும்.
கைபேசியில் புகைப்படம் எடுப்பதிலோ அல்லது படங்களையும் காணொளிகளையும் பார்ப்பதிலோ மூழ்கியிருப்பதை விட்டும் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும்; குறிப்பாக அப்படங்களும் காணொளிகளும் தடைசெய்யப்பட்டவையாக இருப்பின், இவ்விஷயம் மேலும் விபரீதமானதாகும்.
மஸ்ஜிதுன் நபவியில் சச்சரவுகள், சப்தத்தை உயர்த்துதல், காணாமல் போன பொருளைத் தேடி சப்தமிடுதல், வியாபாரம் செய்தல் போன்ற அதற்கும் ஏனைய பள்ளிவாசல்களுக்கும் தகுதியற்ற காரியங்களிலிருந்து தூய்மையைப் பேணுவது அவசியமாகும்; ஏனெனில் அபூஹுரைரா (ரலி) அவர்கள் நபி ﷺ அவர்கள் கூறியதாக அறிவிக்கின்றார்கள்:
«إِذَا رَأَيْتُمْ مَنْ يَبِيعُ أَوْ يَبْتَاعُ فِي المَسْجِدِ، فَقُولُوا: لَا أَرْبَحَ اللَّهُ تِجَارَتَكَ، وَإِذَا رَأَيْتُمْ مَنْ يَنْشُدُ فِيهِ ضَالَّةً، فَقُولُوا: لَا رَدَّ الله عَلَيْكَ».
«அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'பள்ளிவாசலில் ஒருவர் விற்பனையிலோ அல்லது வாங்குவதிலோ ஈடுபட்டிருப்பதைக் கண்டால், 'லா அர்பஹல்லாஹு திஜாரதக்க' (அல்லாஹ் உமது வியாபாரத்தை இலாபகரமானதாக ஆக்காமல் இருப்பானாக!) என்று கூறுங்கள். மேலும், தொலைந்து போன ஒரு பொருளைப் பற்றி ஒருவர் (சத்தமிட்டு) அறிவிப்பதைக் கண்டால், 'லா ரத்தல்லாஹு அலைக்க' (அல்லாஹ் அதை உமக்குத் திருப்பிக் கொடுக்காமல் இருப்பானாக!) என்று கூறுங்கள்.'»17.
தனிப்பட்ட சுத்தத்தைப் பேணுவதுடன், பூண்டு, வெங்காயம், புகை, வியர்வை போன்று, தொழும் மற்றவர்களுக்கு தொந்தரவை ஏற்படுத்தும் துர்நாற்றங்களிலிருந்து விலகி இருத்தல் வேண்டும்; ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:
«مَنْ أَكَلَ ثُومًا أَوْ بَصَلًا، فَلْيَعْتَزِلْنَا - أَوْ قَالَ: فَلْيَعْتَزِلْ مَسْجِدَنَا - وَلْيَقْعُدْ فِي بَيْتِهِ».
«யார் பூண்டு அல்லது வெங்காயம் சாப்பிட்டாரோ, அவர் நம்மை விட்டும் விலகி இருக்கட்டும், அல்லது நமது பள்ளிவாசலை விட்டும் விலகி இருக்கட்டும்; மேலும் தனது வீட்டிலேயே அமர்ந்திருக்கட்டும்.»18.
மஸ்ஜிதுன் நபவியின் சுத்தத்தைப் பேணுவதிலும், குறிப்பாக ரமழான் மாதத்தில் உணவு மிச்சங்கள், இஃப்தார் விரிப்புகள் போன்ற கழிவுகளை மஸ்ஜிதிற்குள்ளும் அதன் வளாகங்களிலும் எறியாமல் இருப்பதிலும், அதன் நடைபாதைகளிலும் முற்றங்களிலும் எச்சில் துப்பாதிருப்பதிலும், மேலும் இது போன்ற செயல்களைத் தவிர்த்துக் கொள்வதிலும் அக்கறை செலுத்த வேண்டும்.
பாதைகளை அடைத்தல், முஸ்லிம்களுக்குத் தொந்தரவளித்தல் ஆகிய தீங்குகள் ஏற்பட வாய்ப்புள்ளதால்,நடைபாதைகள், வாசல்களின் நுழைவாயில்கள் மற்றும் நெரிசலான இடங்களில் தொழுவதைத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
ஆண்களும் பெண்களும் மஸ்ஜிதுந் நபவிக்கு உள்ளேயோ அல்லது அதன் வளாகங்களிலோ, தமக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே தொழ வேண்டும். ஒரு ஆண் ஒரு பெண்ணுக்கு அருகிலோ, ஒரு பெண் ஒரு ஆணுக்கு அருகிலோ தொழக் கூடாது. மேலும், இயன்றவரை இமாமுக்கு முன் நிற்பதை தவிர்ந்துகொள்ள வேண்டும்.
பள்ளியிலிருந்து வெளியேறும் போது இடது காலை முற்படுத்தி பின்வரும் துஆவை ஓத வேண்டும் :
«اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ».
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க மின் ஃபழ்லிக்க
பொருள்: யா அல்லாஹ்! நிச்சயமாக நான் உனது அருளை வேண்டுகிறேன்.19 அல்லது நபி ﷺ அவர்களின் மீது ஸலாவாத் கூறி, இவ்வாறு கூறவேண்டும் :
«رَبِّ اغْفِرْ لِي ذُنُوبِي، وَافْتَحْ لِي أَبْوَابَ فَضْلِكَ».
ரப்பிக் ஃபிர்லீ துனூபீ, வஃப்தஹ்லீ அப்வாப ஃபழ்லிக்க.
பொருள் : «என் இரட்சகனே! என் பாவங்களை மன்னிப்பாயாக, உன் அருளின் வாசல்களை எனக்குத் திறப்பாயாக»20.
நான்காவது: நபி ﷺ அவர்களின் கப்றையும், அவரது இரு தோழர்களின் (ரழியல்லாஹு அன்ஹுமா) கப்றுகளையும் தரிசிக்கச் செல்லும்போது பேணவேண்டிய சட்டங்களும் ஒழுக்கங்களும்.
*மதீனாவாசிகளும், அங்கு வருகை தருபவர்களும் நபி ﷺ அவர்களின் கப்ரையும், அவர்களின் இரு தோழர்களான அபூபக்ர், உமர் ஆகியோரின் கப்ருகளையும் சந்திப்பது விரும்பத்தக்கதாகும். ஏனெனில் கப்ருகளைத் தரிசிப்பது மார்க்கம் காட்டியுள்ள ஒன்று என்பதற்குப் பல பொதுவான ஆதாரங்கள் இருப்பதுடன், நபி ﷺ அவர்களின் பின்வரும் கூற்றும் அவற்றில் ஒன்றாகும்:
«نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ القُبُورِ، فَزُورُوهَا».
«கப்ருகளைத் தரிசிப்பதை நான் உங்களுக்குத் தடை செய்திருந்தேன், ஆனால் இப்போது நீங்கள் அவற்றைத் தரிசிக்கலாம்»21.
நபி ﷺ அவர்களின் மரணத்திற்குப் பின் அவர்கள் மீது ஸலாம் கூறுவதன் சிறப்புக்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக உள்ளது :
«مَا مِنْ أَحَدٍ يُسَلِّمُ عَلَيَّ، إِلَّا رَدَّ اللهُ عَزَّ وَجَلَّ إِلَيَّ رُوحِي حَتَّى أَرُدَّ عَلَيْهِ السَّلَامَ».
«யார் ஒருவர் என்மீது ஸலாம் கூறினால், அவருக்கு பதில் கூறுவதற்காக கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் எனது உயிரை மீண்டும் திருப்பித்தருகிறான்»22.
*பெண்கள் நபி ﷺ அவர்களின் கப்றையோ அல்லது மற்ற கப்றுகளையோ தரிசிக்க ஷரீஆவில் அனுமதிக்கப்படவில்லை. ஏனெனில், கப்ருகளைத் தரிசிப்பது ஆண்களுக்கே ஷரீஆவில் அனுமதிக்கப்பட்டதாகும். பெண்களைப் பொருத்தவரை, அவர்கள் கப்ருகளைத் தரிசிப்பதை விட்டும் தடுக்கப்பட்டுள்ளார்கள். இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியதாவது :
«لَعَنَ رَسُولُ اللَّهِ ﷺ زَائِرَاتِ القُبُورِ، وَالمُتَّخِذِينَ عَلَيْهَا المَسَاجِدَ وَالسُّرُجَ».
''அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கப்ருகளை தரிசிக்கும் பெண்களையும், அதன் மீது பள்ளிவாசல்கள் மற்றும் விளக்குகள் அமைப்பவர்களையும் சபித்துள்ளார்கள்23'' அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள் :
«أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ لَعَنَ زَوَّارَاتِ القُبُورِ».
''அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கப்ருகளை - மண்ணறைகளை - அதிகம் தரிசிக்கும் பெண்களை சபித்துள்ளார்கள்24''.
* நபி ﷺ அவர்களின் கப்ரை மாத்திரம் தரிசிக்கும் நோக்கத்தில் புனிதப் பயணம் மேற்கொள்வது கூடாது. மாறாக, பள்ளிவாசலை தரிசிப்பதையும் அதில் தொழுவதையும் நோக்கமாகக் கொண்டே பயணம் செய்ய வேண்டும். அவர் மதீனாவில் தங்கிய பின், மதீனாவாசிகளுக்கு கப்ரை தரிசிப்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டிருப்பதைப் போன்றே அவருக்கும் அது அனுமதிக்கப்பட்டதாகும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
«لَا تُشَدُّ الرِّحَالُ إِلَّا إِلَى ثَلَاثَةِ مَسَاجِدَ: مَسْجِدِي هَذَا، وَمَسْجِدِ الحَرَامِ، وَمَسْجِدِ الأَقْصَى».
"மூன்று மஸ்ஜித்களைத் தவிர (அவற்றின் சிறப்பிற்காக) வேறு எதற்கும் (வழிபாட்டு நோக்குடன்) பயணம் மேற்கொள்ளப்படாது. அவை: அல்-மஸ்ஜித் அல்-ஹராம், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மஸ்ஜித் மற்றும் அல்-மஸ்ஜித் அல்-அக்ஸா.”25
நபி (ஸல்) மற்றும் அவர்களது இரு தோழர்களது கப்ருகளைத் தரிசிப்பதன் மார்க்க ஒழுங்குகள்.
தரிசிப்பவர் நபியவர்களின் கப்ரை முன்னோக்கி, ஒழுக்கத்துடனும் குரலைத் தாழ்த்தியும் நின்று, "அஸ்ஸலாமு அலைக்க யா ரஸூலல்லாஹ், வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு" என ஸலாம் கூற வேண்டும். இதற்கு மேலதிகமாக, "நீங்கள் தூதுத்துவத்தை எடுத்துரைத்தீர்கள் என்பதற்கும், அமானிதத்தை நிறைவேற்றினீர்கள் என்பதற்கும், சமூகத்திற்கு நற்போதனை செய்தீர்கள் என்பதற்கும், அல்லாஹ்வுக்காக உரிய முறையில் ஜிஹாத் செய்தீர்கள் என்பதற்கும் நான் சாட்சி கூறுகிறேன்" என்று கூறினால், அதில் தவறில்லை; ஏனெனில் இவை அனைத்தும் உண்மையானவையே.
பிறகு வலது புறம் சற்று நகர்ந்து அபூபக்கர் சித்தீக் (ரழி) அவர்களுக்கு ஸலாம் கூற வேண்டும்.
السَّلَامُ عَلَيْكَ يَا أَبَا بَكْرٍ الصِّدِّيقُ، السَّلَامُ عَلَيْكَ يَا خَلِيفَةَ رَسُولِ اللَّهِ ﷺ
رَضِيَ اللَّهُ عَنْكَ وَأَرْضَاكَ، وَجَزَاكَ عَنْ أُمَّةِ مُحَمَّدٍ ﷺ خَيْرًا
(அஸ்ஸலாமு அலைக்க யா அபா பக்ர் அஸ்ஸித்தீக், அஸ்ஸலாமு அலைக்க யா கலீஃபதர்ரஸூல், ரழியல்லாஹு அன்க வஅர்ளாக, வஜஸாக அன் உம்மதி முஹம்மத் ஃகைரா)
என்று கூற வேண்டும்.
இதன் பொருள்: அபூபக்கர் சித்தீக்கே! அல்லாஹ்வின் தூதரது கலீஃபாவே! உங்கள் மீது சமாதானம் உண்டாகட்டும். அல்லாஹ் உங்களைப் பொருந்திக்கொள்ளட்டும். மேலும் முஹம்மது நபியின் உம்மத்திற்கு நீங்கள் செய்த நற்காரியங்களுக்காக நல்ல வெகுமதிகளை அவன் உங்களுக்கு வழங்கட்டும்.
பிறகு வலது புறம் ஒரு அடி எடுத்து வைத்து, உமர் இப்னுல் கத்தாப் (ரழி) அவர்களது கப்ரை முன்னோக்கி, பின்வருமாறு ஸலாம் கூற வேண்டும்.
السَّلَامُ عَلَيْكَ يَا عُمَرُ الْفَارُوقُ، رَضِيَ اللَّهُ عَنْكَ وَأَرْضَاكَ، وَجَزَاكَ عَنْ أُمَّةِ مُحَمَّدٍ ﷺ خَيْرًا
(அஸ்ஸலாமு அலைக்க யா uமர் அல்ஃபாரூக், ரழியல்லாஹு அன்க வஅர்ளாக, வஜஸாக அன் உம்மதி முஹம்மத் ஃகைரா)
என்று கூற வேண்டும்.
இதன் பொருள்: உமர் ஃபாரூக் அவர்களே ! உங்களுக்கு சமாதானம் உண்டாகட்டும். அல்லாஹ் உங்களைப் பொருந்திக்கொள்வானாக. மேலும் முஹம்மத் நபி ﷺ அவர்களின் உம்மத்திற்கு நீங்கள் செய்த நற்காரியங்களுக்காக நல்ல வெகுமதிகளை அவன் உங்களுக்கு வழங்கட்டும்.
இப்னு உமர் (ரழி) அவர்கள், பயணத்திலிருந்து வரும்போது, நபி ﷺ அவர்களின் கப்ருக்கு வந்து இவ்வாறு கூறுவார்கள்: «அஸ்ஸலாமு அலைக யா ரஸூலல்லாஹ், அஸ்ஸலாமு அலைக யா அபா பக்கர், அஸ்ஸலாமு அலைக யா அபதாஹ் (என்னுடைய தந்தையே!), பின்னர் சென்று விடுவார்»26.
கப்ரின் சுவர்களையும், அதன் சுற்றுவேலியையும் தொடக்கூடாது, அவற்றை முத்தமிடவும் கூடாது :
இமாம் மாலிக் அவர்கள் கூறுகின்றார்கள்: நபி ﷺ அவர்களுக்கு ஸலாம் கூறும்போது, கிப்லாவை முன்னோக்காது கப்ரை முன்னோக்கி நின்று, அதன் அருகில் சென்று ஸலாம் கூற வேண்டும்; ஆனால் கப்ரைத் தமது கையால் தொடக்கூடாது27.
நபியவர்களின் கப்றைக் கையால் தொடுவதோ, அதனை முத்தமிடுவதோ கூடாது என்பதில் இமாம்கள் ஒன்றுபட்ட கருத்தில் உள்ளனர்.
கப்ர் அருகில் நீண்ட நேரம் நிற்காமல், ஸலாம் கூறிய பின் திரும்பி விட வேண்டும்.
இமாம் மாலிக் அவர்கள் கூறுகின்றார்கள்: "நபி ﷺ அவர்களின் கப்ருக்கருகில் நின்று பிரார்த்தனை செய்வதை நான் சரி காணவில்லை, மாறாக, ஸலாம் கூறிவிட்டுச் சென்றுவிட வேண்டும்"28.
நாஃபிஃ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: "இப்னு உமர் அவர்கள் கபுருக்கு ஸலாம் கூறுவார்கள். நான் அவர்களை நூறு தடவைக்கும் அதிகமாகக் கண்டிருக்கிறேன்; அவர்கள் கப்ரிடம் வந்து, 'நபி ﷺ அவர்கள் மீது ஸலாம் உண்டாவதாக. அபூபக்ர் மீது ஸலாம் உண்டாவதாக. என் தந்தை மீது ஸலாம் உண்டாவதாக' என்று கூறுவார்கள். பின்னர் திரும்பிச் சென்று விடுவார்கள்"29.
நபியவர்களின் கப்ரை தரிசிக்கும் சிலர் அதனருகில் சப்தங்களை உயர்த்துவதும், நீண்ட நேரம் அங்கு நிற்பதும் அனுமதிக்கப்படாத செயலாகும்.
தூதர் ﷺ அவர்களிடமோ அல்லது மற்ற படைப்பினங்களிடமோ நன்மையைப் பெற்றுத்தருமாறோ, தீங்கைப் போக்குமாறோ, தேவையை நிறைவேற்றுமாறோ, துயரத்தைப் போக்குமாறோ, நோயாளியைக் குணப்படுத்துமாறோ, பரிந்துரை செய்யுமாறோ, வேதனையிலிருந்து ஈடேற்றம் தருமாறோ, அல்லது இதுபோன்ற பிற பிரார்த்தனைகளையோ கேட்பது கூடாது. ஏனெனில், அல்லாஹ்வால் மாத்திரம் முடியுமான விடயங்களில் அல்லாஹ் அல்லாதோரை அழைப்பது ஹராமானதும் பெரும் இணைவைப்பும் ஆகும். அல்லாஹ் கூறுகின்றான்:
﴿وَقَالَ رَبُّكُمُ ٱدۡعُونِيٓ أَسۡتَجِبۡ لَكُمۡۚ إِنَّ ٱلَّذِينَ يَسۡتَكۡبِرُونَ عَنۡ عِبَادَتِي سَيَدۡخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ60﴾
உங்கள் இறைவன் கூறுகிறான்: “என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.” (ஃகாபிர் : 60), மேலும் அல்லாஹ் குறிப்பிடுகிறான் :
﴿إِنَّ ٱلَّذِينَ تَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِ عِبَادٌ أَمۡثَالُكُمۡۖ فَٱدۡعُوهُمۡ فَلۡيَسۡتَجِيبُواْ لَكُمۡ إِن كُنتُمۡ صَٰدِقِينَ194﴾
நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே; நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் - அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்! (ஸூரா அல் அஃராப் : 194) மேலும் அல்லாஹ் கூறுகின்றான் :
﴿وَأَنَّ ٱلۡمَسَٰجِدَ لِلَّهِ فَلَا تَدۡعُواْ مَعَ ٱللَّهِ أَحَدٗا18﴾
அன்றியும், நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றன, எனவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள் (ஸூரா அல்ஜின் : 18).
கப்ருக்கு அருகில் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யக் கூடாது. பிரார்த்தனை செய்ய நாடினால், கப்ரை விட்டும் நகர்ந்து, கிப்லாவை முன்னோக்கிப் பிரார்த்திக்க வேண்டும். பிரார்த்தனை செய்யும் போது கப்ரை முன்னோக்கக் கூடாது.
இமாம் மாலிக் அவர்கள் கூறினார்கள் : "நபியவர்களின் கப்ருக்கருகில் நின்று பிரார்த்தனை செய்வதை நான் சரியெனக் காணவில்லை."
பள்ளிவாசலுக்குள் நுழையும் போதும் அல்லது அங்கிருந்து வெளியேறும் போதும், கப்ருக்கு அடிக்கடி சென்று வருவது மதீனாவாசிகளுக்கோ அல்லது வெளியூரிலிருந்து வரும் தரிசிப்பவர்களுக்கோ மார்க்கத்தில் அனுமதிக்கப்படவில்லை. ஏனெனில், அச்செயல் கப்ரை கொண்டாடும் இடமாக ஆக்கிவிடும் என்று அஞ்சப்படுகிறது.
அதனை அல்லாஹ்வின் தூதர் அவர்கள் தடைசெய்துள்ளார்கள். நபி ﷺ கூறினார்கள் :
«لَا تَتَّخِذُوا قَبْرِي عِيدًا، وَلَا تَجْعَلُوا بُيُوتَكُمْ قُبُورًا، وَحَيْثُمَا كُنْتُمْ فَصَلُّوا عَلَيَّ، فَإِنَّ صَلَاتَكُمْ تَبْلُغُنِي».
"எனது கப்ரை கொண்டாடும் இடமாக ஆக்கிவிடாதீர்கள், உங்களது வீடுகளை மண்ணறைகளாக ஆக்கிக் கொள்ள வேண்டாம், நீங்கள் எங்கிருந்தாலும் என் மீது ஸலவாத் கூறுங்கள், ஏனெனில் உங்களது ஸலவாத் என்னிடம் வந்தடைகிறது"30.
"எனது கப்ரை திருவிழாக்கொண்டாடும் இடமாக ஆக்கிவிடாதீர்கள்” என்பதன் விளக்கம் : குறிப்பிட்ட நேரங்களிலோ அல்லது குறிப்பிட்ட நிலைகளிலோ அதனை தரிசிப்பதற்காக மீண்டும் மீண்டும் செல்வதாகும். உதாரணமாக, ஒவ்வொரு நாளும் அல்லது ஒவ்வொரு வாரமும் அல்லது ஒவ்வொரு மாதமும் தரிசிப்பதை வழக்கமாக்கிக் கொள்வதைப் போன்று, அல்லது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நிலை ஏற்படும் போது தரிசிப்பது. அல்லது, நீங்கள் ஒன்று கூடும் ஒரு திருவிழா காலமாக அதனை ஆக்க வேண்டாம் என்றும் விளக்கப்பட்டுள்ளது31.
இமாம் மாலிக் அவர்கள் கூறுகின்றார்கள்: "மதீனாவாசிகள் பள்ளிவாசலுக்குள் நுழைந்து வெளியேறும் போது கப்ருக்கருகில் நிற்க வேண்டிய அவசியமில்லை; அது வெளியூர்வாசிகளுக்கு மட்டுமே உரியது.32"
இமாம் மாலிக் அவர்களின் கூற்றான ‘இது வெளியூர்வாசிகளுக்கு’ என்பதன் விளக்கம், ஒரு முறை தரிசிப்பதேயன்றி, உள்ளே நுழையும்போதும் வெளியேறும்போதும் திரும்பத் திரும்ப தரிசிப்பதல்ல.
தொழுகையில் நிற்பது போன்று, ஒரு கையை மற்றொன்றின் மீது வைத்து மார்பின் மீதோ அல்லது அதற்குக் கீழோ வைத்து கப்ருக்கு முன்னால் நிற்கக் கூடாது; ஏனெனில் இந்த நிலை தொழுகைக்கே உரியதாகும். மேலும் இது, அல்லாஹ்வுக்கு மாத்திரமே செய்யப்பட வேண்டிய பணிவும் அடக்கமும் கொண்ட ஒரு நிலையாகும்.
சிலர் செய்வது போன்று நபி ﷺ அவர்களுக்கு ஸலாம் கூறுவதற்காக தூரத்திலிருந்து கப்ரை முன்னோக்குவது கூடாது. ஏனெனில் இந்தச் செயலை ஸஹாபாக்களோ , நான்கு இமாம்கள் மற்றும் ஏனைய ஸலஃபுஸ் ஸாலிஹீன்களோ செய்ததில்லை.
மண்ணறையை முன்னோக்கி எந்தத் திசையிலிருந்தும் பிரார்த்தனை செய்வதோ, அல்குர்ஆன் ஓதுவதோ கூடாது. இவை முன்னர் கூறிய நூதனங்களில் உள்ளவையாகும். அல்லாஹ் அனுமதிக்காததை அவனது மார்க்கத்தில் புதிதாகச் சேர்ப்பது முஸ்லிமுக்கு ஏற்றதல்ல. இம்மாதிரியான செயல்களை இமாம் மாலிக் (ரஹ்) கண்டித்து, இவ்வாறு கூறினார்கள் : "இந்த சமுதாயத்தின் ஆரம்பத்தில் வந்தவர்களை சீர்திருத்தியவையே, இறுதியில் வருபவர்களையும் சீர்த்திருத்தும்."33"
நபி ﷺ அவர்களுக்கு ஸலாம் கூறும் போது, புகைப்படம் எடுப்பதிலும், நேரடி ஒளிபரப்பு செய்வதிலும் ஈடுபடுவது கூடாது.
நபி முஹம்மது ﷺ அவர்களின் மீதும், அவர்களின் குடும்பத்தார் தோழர்கள் அனைவர் மீதும் அல்லாஹ்வின் ஸலாத்தும், ஸலாமும் உண்டாவதாக.
***
பொருளடக்கம்
முன்னுரை 2
முதலாவது : மஸ்ஜிதுன் நபவியின் சிறப்புகள் 3
இரண்டாவது: கண்ணியமிகு மஸ்ஜிதுன் நபவியை ஜியாரத் செய்வது ஸுன்னாவாகும். 8
மூன்றாவது: மஸ்ஜிதுன் நபவியை தரிசிப்பதற்கான ஒழுங்குகள். 9
நான்காவது: நபி ﷺ அவர்களின் கப்றையும், அவரது இரு தோழர்களின் (ரழியல்லாஹு அன்ஹுமா) கப்றுகளையும் தரிசிக்கச் செல்லும்போது பேணவேண்டிய சட்டங்களும் ஒழுக்கங்களும். 24
***
ta492v1.0 - 02/11/2026
ஆதாரம் : புஹாரி (1190), முஸ்லிம் (1395), இவ்வார்த்தை புஹாரியிலிருந்து பெறப்பட்டதாகும்.
முஸ்லிம் : 1398 .
இப்னு மாஜா ஹதீஸ் எண் 227ல் ஸஹீஹான அறிவிப்பாளர் தொடருடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புஹாரி ஹதீஸ் எண் : 1195, முஸ்லிம் ஹதீஸ் எண் : 1390.
ஆதாரம் : புஹாரி ஹதீஸ் எண் 636, முஸ்லிம் ஹதீஸ் எண் 602.
புஹாரி ஹதீஸ் எண் : 846, முஸ்லிம் ஹதீஸ் எண் 858.
முஸ்லிம் ஹதீஸ் எண் : 443.
இப்னு மாஜா : 771 (ஆதாரப்பூர்வமானது)
அபூதாவூத் : 466 (ஆதாரப்பூர்வமானது)
புஹாரி : 1171, முஸ்லிம் : 714.
புஹாரி ஹதீஸ் எண் : 615.முஸ்லிம் ஹதீஸ் எண் : 437.
முஸ்லிம் ஹதீஸ் எண் : 438.
முஸ்லிம் : 440.
புஹாரி : 722, முஸ்லிம் : 417.
புஹாரி : 1195, முஸ்லிம்: 1390.
திர்மிதி ஹதீஸ் எண் : 1321, இப்னு ஹுஸைமா ஹதீஸ் எண் : 1305. ஸஹீஹான அறிவிப்பாளர் தொடருடன் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.
புஹாரி ஹதீஸ் எண் : 7359, முஸ்லிம் ஹதீஸ் எண் (564).
முஸ்லிம் ஹதீஸ் எண் : 713.
திர்மிதி, ஹதீஸ் எண்: 314. ஸஹீஹான அறிவிப்பாளர் தொடருடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முஸ்லிம், ஹதீஸ் எண் 977.
முஸ்னத் அஹ்மது : 10815.ஹஸனான அறிவிப்பாளர் தொடருடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அபூ தாவூத் ஹதீஸ் எண் 3236, திர்மிதி ஹதீஸ் எண் 320, நஸாஈ ஹதீஸ் எண் 2043.
திர்மிதி ஹதீஸ் எண் 1056, இப்னு மாஜா ஹதீஸ் எண் 1576. இதன் அறிவிப்பாளர் தொடர் ஹஸனாகும்.
ஆதாரம் : புஹாரி 1189, முஸ்லிம் : 1397, இவ்வார்த்தை முஸ்லிமிலிருந்து பெறப்பட்டதாகும்.
ஆதாரம்: பைஹகி - அஸ்ஸுனனுல் குப்ரா (10271), ஸஹீஹான அறிவிப்பாளர் தொடருடன் வந்துள்ளது.
காஜி இயாழ் அவர்களின் அஷ்ஷிஃபா பாகம் : 2 பக்கம் : 199.
காழி இயாள் அவர்களின் அஷ்ஷிஃபா பாகம் : 2 பக்கம் : 199.
ஆஜுர்ரீயின் கிதாபுஷ் ஷரீஆவில் பாகம் : 5 பக்கம் : 2374ல் ஹதீஸ் எண் : 1853 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆதாரம் : முஸ்னத் அஹ்மத் (8804). இதன் அறிவிப்பாளர் தொடர் ஹஸனாகும்.
அர்ராகிப் அல்அஸ்பஹானீயின் 'அல்முஃப்ரதாத்' பக்கம் 594, ஷவ்கானீயின் 'ஷரஹுஸ் ஸுதூர் பிதஹ்ரீமி ரஃப்இல் குபூர்' பக்கம் 16 பார்க்கவும்.
காழி இயாழ் அவர்களின் அஷ்ஷிஃபா (பாகம் 2 பக்கம் 204), இப்னுல் ஹாஜ் அவர்களின் அல்மத்ஃகல் (பாகம் 1 பக்கம் 262)
மஜ்மூஉ ஃபதாவா பின் பாஸ் (ரஹ்) (16/110)
ஆதாரம் : புஹாரி (1189), முஸ்லிம் (1397), இவ்வார்த்தை முஸ்லிமிலிருந்து பெறப்பட்டதாகும்.