துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்புகள் (தமிழ்)

துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்புகள்

  • earth மொழி
    (தமிழ்)
  • earth தொகுப்பு:
    اللجنة العلمية برئاسة الشؤون الدينية بالمسجد الحرام والمسجد النبوي
PHPWord

 

 

فَضْلُ عَشْرِ ذِي الحِجَّةِ

 

துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்புகள்

 

 

 

 

اللَّجْنَةُ العِلْمِيَّةُ

بِرِئَاسَةِ الشُّؤُونِ الدِّينِيَّةِ بِالمَسْجِدِ الحَرَامِ وَالمَسْجِدِ النَّبَوِيِّ

 

மஸ்ஜிதுல் ஹராம் மற்றும் மஸ்ஜிதுன் நபவியின் மத விவகாரங்களுக்கான தலைமைத்துவத்தின் கல்விக் குழு

 


بِسْمِ اللهِ الرَّحمَنِ الرَّحِيمِ

முன்னுரை

புகழனைத்தும் அகிலங்களின் இரட்சகனான அல்லாஹ்வுக்கே உரித்தாகட்டும். ஸலாத்தும் ஸலாமும் உலகங்களுக்கு இரக்கமாக அனுப்பப்பட்டவரான எமது நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும், அவர்களின் வழிமுறைகளைப் பின்பற்றியோர் மற்றும் அவர்களின் வழிகாட்டல்களைப் பின்பற்றியோர் மீதும் மறுiமை நாள் வரை உண்டாவதாக. பிறகு,

இது ஒரு சுருக்கமான நூலாகும், இதில் துல்ஹஜ் மாத முதல் பத்து நாட்களின் சிறப்புகள் பற்றிய முஸ்லிம்களுக்கு தேவையான முக்கியமான விடயங்கள் அடங்கியுள்ளன. இதனை இரு ஹரம் புனித தலங்களை பார்வையிடும் ஆண், பெண்கள் அனைவரும் அவர்களின் மார்க்க விஷயங்களில் அறிவும் தெளிவும்பெறுவதற்காக தொகுத்துள்ளோம். அல்லாஹ் இதனை பயனுள்ளதாக்கி, தூய்மையானதாகவும், அவனுக்கே அர்ப்பணிக்கப்பட்டதாகவும் ஆக்குவானாக. நிச்சயமாக கேட்கப்படுபவர்களில் அவனே சிறந்தவன், நம்பிக்கை வைக்கப்படுபவர்களில் கண்ணியமானவன்.

பல்மொழிகளில் இஸ்லாமிய உள்ளடக்கத்திற்கு சேவை செய்வதற்கான சங்கத்தின் கல்விக் குழு.

துல்ஹஜ் மாதத்தின் பத்து நாட்களின் சிறப்புக்கள் :

துல்ஹஜ் பத்து நாட்களின் சிறப்பு மகத்தானது. அல்லாஹ் தனது குர்ஆனில் இதனை விளக்கியுள்ளான். நபி முஹம்மது (ஸல்) அவர்களும் தமது நபிமொழிகளில் இதனை விளக்கியுள்ளார்கள். இவையே அல்லாஹ் தனது குர்ஆனில் சத்தியமிட்டுக் கூறிய நாட்களாகும்:

﴿وَٱلۡفَجۡرِ 1 وَلَيَالٍ عَشۡر2

விடியற்காலையின் மீதும், சத்தியமாக!

பத்து இரவுகள் மீது சத்தியமாக! (அல்-ஃபஜ்ர்: 1-2) இந்த வசனத்தில்பத்து இரவுகள் என்பது துல்ஹஜ் மாதத்தின் பத்து நாட்கள் என இப்னு அப்பாஸ், இப்னு அஸ்ஸுபைர், முஜாஹித், இப்னு கஸீர், இப்னு கய்யிம் மற்றும் பல அறிஞர்கள் கூறியுள்ளனர். 1

இந்த நாட்களில் அமல் செய்வது, அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவும் சிறந்ததாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக :இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

«مَا مِنْ أَيَّامٍ الْعَمَلُ الصَّالِحُ فِيهِنَّ أَحَبُّ إِلَى اللَّهِ مِنْ هَذِهِ الْأَيَّامِ الْعَشَرِ»، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ! وَلا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَلا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ، إِلَّا رَجُلٌ خَرَجَ بِنَفْسِهِ وَمَالِهِ فَلَمْ يَرْجِعْ مِنْ ذَٰلِكَ بِشَيْءٍ».

''“வேறு நாட்களில் செய்யும் நற்செயல், இந்த (துல்ஹஜ் முதல்) பத்து நாட்களில் செய்யும் நற்செயலைவிடச் அல்லாஹ்விற்கு மிக விருப்பானதல்ல' என்று நபி (ஸல்) கூறினார்கள். 'ஜிஹாதை விடவுமா?' என்று நபித் தோழர்கள் கேட்டனர். 'தன் உயிரையும் பொருளையும் பணயம் வைத்துப் புறப்பட்டு இரண்டையும் (இறைவழியில்) இழந்துவிட்டவன் செய்த ஜிஹாதைத் தவிர' எனப் பதிலளித்தார்கள்.2

 


துல்ஹிஜ்ஜா பத்து நாட்களில் செய்யும் நற்காரியங்களின் சிறப்புக்கள்:

1. ஹஜ் மற்றும் உம்ரா செய்வது இந்த பத்து நாட்களில் செய்யப்படும் மிகச் சிறந்த நற்செயல்களில் ஒன்றாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

«مَن حَجَّ هَذَا الْبَيْتِ فَلَمْ يَرْفُثْ وَلَمْ يَفْسُقْ رَجَعَ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ».

யார், இந்த வீட்டை நாடி வந்து, உடலுறவில் ஈடுபடாமலும், பாவங்களில் ஈடுபடாமலும் ஹஜ் செய்கின்றாரோ, அவர் அன்று பிறந்த குழந்தை போன்று வீடு திரும்புவார். முஸ்லிமின் அறிவிப்பு இவ்வாறு உள்ளது:

«مَن أَتَى هَذَا الْبَيْتِ فَلَمْ يَرْفُثْ وَلَمْ يَفْسُقْ؛ رَجَعَ كَيَوْمٍ وَلَدَتْهُ أُمُّهُ».

யார், இந்த வீட்டிற்கு வந்து, உடலுறவில் ஈடுபடாமலும், பாவங்களில் ஈடுபடாமலும் இருக்கின்றாரோ, அவர் அன்று பிறந்த குழந்தை போன்று வீடு திரும்புவார். (3) 3 (யார் இந்த வீட்டிற்கு வருகின்றாரோ) என்ற நபியவர்களின் வார்த்தை, ஹஜ் மற்றும் உம்ரா ஆகிய இரண்டையுமே உள்ளடக்கிக்கொள்ளும். (புகழ் அனைத்தும்அல்லாஹ்வுக்கே) . மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

«الْعُمْرَةُ إِلَى الْعُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا، وَالْحَجُّ الْمَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلَّا الْجَنَّةُ».

ஒரு உம்ரா மற்றொரு உம்ராவிற்கு இடைப்பட்ட பாவங்களுக்கு குற்றப்பரிகாரமாகும். ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சுவனத்தைத் தவிர கூலி கிடையாது.” 4

2. ஒன்பது நாட்களுமோ அல்லது இயலுமான நாட்களிலோ நோன்பு நோற்றல்; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

«مَا مِنْ أَيَّامٍ الْعَمَلُ الصَّالِحُ فِيهِنَّ أَحَبُّ إِلَى اللَّهِ مِنْ هَذِهِ الْأَيَّامِ الْعَشَرِ».

இந்தப் பத்துத் தினங்களிலும் செய்யப்படும் நல் அமல்கள், ஏனைய நாட்களில் செய்யப்படும் அமல்களை விட அல்லாஹ்வுக்கு விருப்பமானவையாகும்.” நோன்பு மிகச் சிறந்த நற்செயல்களில் ஒன்றாகும். நபி (ஸல்) அவர்கள் அதனை ஊக்குவித்து, அதில் ஆர்வம் ஊட்டியுள்ளார்கள். உதாரணமாக, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

«مَا مِنْ عَبْدٍ يَصُومُ يَوْمًا فِي سَبِيلِ اللَّهِ إِلَّا بَاعَدَ اللَّهُ بِذَٰلِكَ الْيَوْمِ وَجْهَهُ عَنِ النَّارِ سَبْعِينَ خَرِيفًا».

"யாராவது ஒரு அடியான் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் நோன்பு நோற்கிறானோ, அவனது முகத்தை நரகிலிருந்து எழுபது வருடங்கள் அல்லாஹ் தூரப்படுத்துகிறான்".5

3. நஹ்ர் தினத்திலும் (பிறை 10) தஷ்ரீக் நாட்களிலும் (பிறை 11,12,13) உழ்ஹிய்யா கொடுப்பது மார்க்கம் காட்டிய ஒன்றாகும். நபி (ஸல்) அவர்கள்,

«ضَحَّى بِكَبْشَيْنِ أَمْلَحَيْنِ، أَقْرَنَيْنِ، ذَبَحَهُمَا بِيَدِهِ، وَسَمَّى وَكَبَّرَ وَوَضَعَ رَجْلَهُ عَلَى صِفَاحِهِمَا».

கொம்புள்ள, வெள்ளை நிறமான இரண்டு ஆடுகளை தன் கையால் அல்லாஹ்வின் பெயரை கூறி, அவனைப் பெருமைப்படுத்தி, அவற்றின் பக்கவாட்டில் தனது கால்களை வைத்த நிலையில் அறுத்தார்கள்.6

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள் :

«مَا عَمِلَ ابْنُ آدَمَ مِنْ عَمَلٍ يَوْمَ النَّحْرِ أَحَبُّ إِلَى اللَّهِ مِنْ إِهْرَاقِ الدَّمِ، وَإِنَّهُ لَيُؤْتَى يَوْمَ الْقِيَامَةِ بِقُرُونِهَا وَأَشْعَارِهَا وَأَظْلافِهَا، وَإِنَّ الدَّمَ لَيَقَعُ مِنَ اللَّهِ بِمَكَانٍ قَبْلَ أَنْ يَقَعَ فِي الْأَرْضِ، فَطَيِّبُوا بِهَا نَفْسًا».

ஆதமுடைய மகன் (மனிதன்) யௌமுன் நஹ்ரில் (குர்பானி நாளில்) செய்யும் கிரியைகளில் அல்லாஹ்விற்கு மிகவும் பிரியமானது இரத்தத்தைச் சிந்துவதாகும். மறுமை நாளில் அவற்றின் கொம்புகளும், ரோமங்களும், நகங்களும் கொண்டு வரப்படும். நிச்சயமாக இரத்தம் பூமியில் விழுவதற்கு முன்பே அல்லாஹ்வின் அருகில் விழும். ஆகவே இதனை மனமகிழ்ச்சியுடன் செய்யுங்கள்.”7

துல் ஹஜ் மாதத்தின் பத்து நாட்கள் ஆரம்பித்துவிட்டால், உழ்ஹிய்யா கொடுக்க விரும்புபவர் தமது தலைமுடியையும், உடல் ரோமங்களையும், களையவேண்டாம் என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக உம்மு ஸலமா ரழி அவர்கள் அறிவிக்கிறார்கள்.

«إِذَا رَأَيْتُمْ هِلَالَ ذِي الْحِجَّةِ وَأَرَادَ أَحَدُكُمْ أَنْ يُضَحِّيَ؛ فَلْيُمْسِكْ عَنْ شَعْرِهِ وَأَظْفَارِهِ».

நீங்கள் துல்ஹஜ் பிறையை கண்டால், உங்களில் ஒருவர் உழ்ஹிய்யா கொடுக்க நாடியிருந்தால், அவர் தனது உடல் ரோமங்களைக் களைய வேண்டாம். மற்றும் நகங்களை வெட்ட வேண்டாம்.” இன்னொரு அறிவிப்பில்:

«... فَلَا يَأْخُذَنَّ مِنْ شَعْرِهِ وَلَا مِنْ أَظْفَارِهِ شَيْئًا حَتَّى يُضَحِّيَ».

அவர் உழ்ஹிய்யா கொடுக்கும் வரை, தனது முடிகளைக் களைய வேண்டாம். மற்றும் நகங்களை வெட்ட வேண்டாம்” என்று உள்ளது.8

4. இந்த பத்து நாட்களிலும், தஷ்ரீக்குடைய நாட்களிலும் தக்பீர், தஹ்லீல், திக்ர் ஆகி அமல்களை செய்ய வேண்டும்; நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

«مَا مِنْ أَيَّامٍ أَعْظَمَ عِندَ اللَّهِ وَلَا أَحَبُّ إِلَيْهِ مِنَ الْعَمَلِ فِيهِنَّ مِنْ هَذِهِ الْأَيَّامِ الْعَشَرِ، فَأَكْثِرُوا فِيهِنَّ: مِنَ التَّهْلِيلِ، وَالتَّكْبِيرِ، وَالتَّحْمِيدِ».

இந்தத் தினங்களில் அமல் செய்வது அல்லாஹ்விடத்தில் விருப்பமாகவும், முக்கியமானதாகவும் இருப்பது போன்ற அளவு, வேறு தினங்கள் இருப்பதில்லை. ஆகவே இத்தினங்களில் தஹ்லீல், தக்பீர், தஹ்மீத் ஆகியவற்றை அதிகம் கூறுங்கள்.

தஹ்லீல்: லா இலாஹ இல்லல்லாஹ்

தக்பீர் : அல்லாஹு அக்பர்

தஹ்மீத் : அல்ஹம்து லில்லாஹ் 9

தக்பீர் இரண்டு வகைப்படும்: அவை

பின்வருமாறு :

முதல் பகுதி: பொதுவான தக்பீர். அதாவது, தொழுகை நிறைவடைந்த பின்னர் மாத்திரம் என்று இல்லாமல், எல்லா நேரங்களிலும் வலியுறுத்தப்படும் தக்பீர்.

இவ்வாறான பொதுவான தக்பீர், துல்ஹஜ் மாதத்தின் முதல் நாள் தொடக்கம், தஷ்ரீக்குடைய நாட்களின் இறுதி நாள் வரை, இரவு, பகல் என அனைத்து நேரங்களிலும், பாதையிலும், சந்தைகளிலும், பள்ளிவாசல்களிலும், வீடுகளிலும், அல்லாஹ்வின் நினைவு கூறுவதற்கு அனுமதிக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் வலியுறுத்தப்படும்.

இரண்டாம் வகை: வரையறுக்கப்பட்ட தக்பீர்: இது குறிப்பாக ஹஜ் பெருநாளில் தொழுகைகளின் முடிவில் செய்யப்படும் தக்பீர் ஆகும். அதன் நேரம் மற்றும் விதிமுறைகள் பின்வருமாறு:

முதலில்: இவ்வகையான தக்பீர், அறஃபா தினம் அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு ஆரம்பித்து, தஷ்ரீக்குடைய நாட்களின் மூன்றாவது நாளில் அஸ்ர் தொழுகைக்குப் பிறகு முடிவடைகிறது. இது ஹஜ் செய்யாதவர்களுக்கானது. ஹஜ் செய்யும் நபரைப் பொறுத்தவரை, யௌமு நஹ்ரின் (10 ஆம் நாள்)ழுஹ்ர் தொழுகைக்குப் பிறகு ஆரம்பிக்கிறது.

2- தக்பீரின் வடிவம்:

 

(اللَّه أكبر، اللَّه أكبر، لا إله إلا اللَّه، واللَّه أكبر اللَّه أكبر ولله الحمد)

 

(அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லா இலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், வலில்லாஹில் ஹம்து)10.

5. ஹஜ் செய்யாதவர்கள் பெருநாள் தொழுகையில் கவனம் செலுத்தி, அதற்காக நேரகாலத்தோடு சென்று, குத்பாவை கவனமாகக் கேட்க வேண்டும்; ஏனெனில் இது இஸ்லாத்தின் மிகப் பெரிய சின்னங்களில் ஒன்றாகும்; இதன் மகத்துவத்தின் காரணமாகவே, மணமாகாத இளம் கன்னி பெண்கள், மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் உட்பட, எல்லாப் பெண்களும் வருமாறு உத்தரவிடப்பட்டார்கள்; உம்மு அத்தியா (ரழி) அவர்கள் கூறினார்கள்:

«كُنَّا نُؤْمَرُ أَنْ نَخْرُجَ يَوْمَ الْعِيدِ حَتَّى نَخْرُجَ الْبِكْرَ مِنْ خِدْرِهَا، حَتَّى نُخْرِجَ الْحُيَّضَ فَيَكُنَّ خَلْفَ النَّاسِ، فَيُكَبِّرْنَ بِتَكْبِيرِهِمْ، وَيَدْعُونَ بِدَعَائِهِمْ، وَيَرْجُونَ بَرَكَةَ ذَٰلِكَ الْيَوْمِ وَطَهَارَتِهِ».

நாங்கள் பெருநாள் அன்று (திடலுக்கு) வெளியேறுமாறு கட்டளையிடப்பட்டோம், இளம் கன்னிப் பெண்களையும், மாதவிடாய் ஏற்பட்ட பெண்களையும் கூட அவர்களின் திரைமறைவிலிருந்து வெளியே கொண்டு வருமாறு பணிக்கப்பட்டோம். அவர்கள் மக்கள் பின்னால் இருக்க வேண்டும். அவர்கள் மக்களுடன் சேர்ந்து தக்பீர் கூற வேண்டும், மக்களுடன் சேர்ந்து பிரார்த்தனை செய்ய வேண்டும், அந்த நாளின் பாக்கியத்தையும் தூய்மையையும் அவர்கள் எதிர்பார்க்க வேண்டும். இன்னொரு அறிவிப்பில்:

«وَأَمَرَ الْحُيَّضَ أَنْ يَعْتَزِلْنَ مُصَلَّىٰ الْمُسْلِمِينَ».

மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் முஸ்லிம்களின் தொழுகை நடக்கும் இடத்தை விட்டு ஒதுங்கி இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.” என்று உள்ளது.11

6. உபரியான வணக்கங்களான தொழுகை, தர்மம், அல்குர்ஆன் ஓதுதல், நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தல், உறவுகளை சேர்ந்து நடத்தல் போன்ற நற்கருமங்களை அதிகம் செய்தல். ஏனெனில் நபியவர்களின் பின்வரும் ஹதீஸ் பொதுவாகவே உள்ளது:

«مَا مِنْ أَيَّامٍ الْعَمَلُ الصَّالِحُ فِيهِنَّ أَحَبُّ إِلَى اللَّهِ مِنْ هَذِهِ الْأَيَّامِ الْعَشَرِ»، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ! وَلا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : «وَلا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ، إِلَّا رَجُلٌ خَرَجَ بِنَفْسِهِ وَمَالِهِ فَلَمْ يَرْجِعْ مِنْ ذَٰلِكَ بِشَيْءٍ».

''(துல்ஹஜ்) பத்து நாள்களாகிய இத்தினங்களை விட வேறு எந்தத் தினத்தில் செய்யக் கூடிய நற்செயல்களும் அல்லாஹ்விற்கு மிக விருப்பானதல்ல'' என்று நபி (ஸல்) கூறினார்கள். 'ஜிஹாதை விடவுமா?' என்று நபித் தோழர்கள் கேட்டனர். 'ஜிஹாதை விடவும் தான்; ஆனால், தன் உயிரையும் பொருளையும் பணயம் வைத்துப் புறப்பட்டு இரண்டையும் (இறைவழியில்) இழந்துவிட்டவன் செய்த ஜிஹாதைத் தவிர' எனப் பதிலளித்தார்கள். 12

பயனளிக்கும் அறிவை எமக்கு கற்றுத்தரவும், எமக்கு கற்றுத்தந்த அறிவால் எமக்கு பயன் அளிக்கவும் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றோம். அவன் மிகப்பெரும் கொடையாளனும், தாராளத்தன்மையுடையனுமாவான். எமது நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் அல்லாஹ் ஸலாதும், ஸலாமும் அதிகம் உண்டாவதாக.

***

பொருளடக்கம்

 

துல்ஹஜ் மாதத்தின் பத்து நாட்களின் சிறப்புக்கள் : 3

துல்ஹிஜ்ஜா பத்து நாட்களில் செய்யும் நற்காரியங்களின் சிறப்புக்கள்: 5

 

***

 


ஆதாரம் : புகாரி, திர்மிதி. இந்த வாசகம் திர்மிதிக்குரியது.

ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்.

ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

புஹாரி, முஸ்லிம்

புஹாரி, முஸ்லிம்

ஆதாரம் : திர்மிதி

ஆதாரம் : முஸ்லிம்

ஆதாரம் : அஹ்மத்.

இப்னு குதாமாவின் அல் முஃனி (பாகம் 3 பக்கம் 290) மற்றும் 'அஷ்ஷர்ஹுல் கபீர்' உடன் 'அல்முக்னி' மற்றும் 'அல்இன்ஸாஃப்' (பாகம் 5 பக்கம் 380) பார்க்கவும்.

ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்

ஆதாரம் : புஹாரி, திர்மிதி. இவ்வறிவிப்பு திர்மிதி உடையதாகும்.

இப்னு கஸீரின் தப்ஸீரில் பாகம் 4 பக்கம் 106 லும், ஸாதுல் மஆதில் பாகம் 1 பக்கம் 56 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது.